Wednesday 18 January 2012

அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???

                          சமீப காலமாக எல்லோராலும் உச்சரிக்கபடும் ஒரு பெயர் அல்லது நம்பிக்கை வார்த்தை அன்னா ஹசாரே, இந்தியாவின் தலை எழுத்தையே தலை கீழாக மாற்றும் சக்தி கொண்ட மாமனிதராக மீடியாக்களாலும் அவரது ஆதரவாளர்களாலும் உருவகப் படுத்தப் பட்டவர், இன்று மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை நிலைப் படுத்திக் கொண்டுள்ளாரா என்று பார்த்தால் அவர் அதில் தோல்வி அடைந்தவராகவே என்னால் அறியப்படுகிறார். 


                         தன்னை காந்தியவாதியாக மக்களின் முன் காட்டிக்கொள்ளும் அன்னா தன்னை முழுமையான காந்தியவாதியாக நிலை நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை என்பதே என் பதில் , தன் ஊரில் குடிப்பவர்களை மரத்தில் கட்டி அடிப்பேன் என்று கூறிய போதே அவரின் அகிம்சை அழிந்து போனது , இன்னும் சற்று விரிவாக அரசியல் ரீதியாக இவரின் செயல்பாடுகளைப் பார்த்தோமேயானால் , இத்தனை ஊழல்களுக்கு பிறகும் மக்கள் விரோத செயல்களுக்கு பிறகும் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கம் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு காரணங்கள் 
  • சுதந்திர போராட்டத்தின் காரணியான கட்சி 
  • கதராடையும் காந்தி குல்லாவும்
  • தேசியக்கொடி மாதிரியான கட்சிக் கொடி
  • காந்தியம்....................... இவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் தன் முழுமையான சொத்தாக பாதுகாத்து வருவதுதான்  
           இதை கைபற்ற முடியாமல் போனவர்களின் ஊதுகுழலாக இவர் செயல் பட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம் . நான் முன்னமே என் பதிவில் பதிந்த படி ஐரோம் ஷர்மிளாவிற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை அன்னா ஹசாரேவிற்கு கொடுப்பதன் வியப்பை வெளிப்படுத்தி இருந்தேன் , ஏனெனில் ஊழலை அழிப்பதை விட உரிமையை பெறுவது மிக முக்கியம் இன்னும் அவசியம்.  

         ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான், இதற்கு அடையாளமாக பல நிகழ்வுகளை சொல்லலாம். இதற்கு சாட்சியாக கீழ் உள்ள படத்தைக் கொள்ளலாம்.
  

         ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஊழல் என்பது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல லோக்பால் மசோதா முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு காரணம் அவர்களே, காங்கிரஸ் காரர்களே என் முதல் முழு எதிரி அவர்களை எதிர்த்து ஐந்து  மாநிலங்களிலும் களம் காணுவேன் என்று சொல்லியதும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கேள்விகளை தவிர்த்து புறக்கணித்ததும் பூனைக்குட்டி வெளியே வந்த கதையைத்தான் நினைவுப் படுத்தியது. 

        அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின்   ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும்.    

அன்பன் 
ARR

26 comments:

Mathuran said...

பார்த்தால் இவர் மாற்றுக்கட்சிகளின் ஊதுகுழலாகத்தான் செயற்படுகிறார் போல் இருக்கு... ஆரம்பத்தில் ஏற்பட்டுத்திய எதிர்பார்ப்பில் இருந்து நழுவிச்செல்ல ஆரம்பித்தபோதே இவரின் குட்டு வெளிப்பட்டது

rajamelaiyur said...

//அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின் ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும். ///

100 % உண்மை

rajamelaiyur said...

உங்களுக்காக ...


கைய வச்சுகிட்டு .......!!!

G.M Balasubramaniam said...

நோக்கம் சரியானதாக இருந்தாலும் செயல் முறை சீராக இருக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் நட்சத்திரம் என்றெல்லாம் ஆராதிக்கப் பட்டபோதே, சிலரது பதிவுகளின் பின்னூட்டங்களில் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன். ஊழலுக்கு நம் கலாச்சாரமே காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தேன். ஆணி வேரைக் களைய வேண்டும் . cosmetic treatment போதாது.

ரஹீம் கஸ்ஸாலி said...

புத்தக கண்காட்சிக்காக உங்களை சந்திக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், உங்கள் தொலைபேசி எண் தொலைந்துவிட்டது. அதான் தொடர்புகொள்ள முடியவில்லை.

தறுதலை said...

இந்த ஆளு ஒரு வெத்து வேட்டு.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன' 2012)

அப்பாதுரை said...

சுய விளம்பரமும் ஒரு நொடிப் புகழும் தேடிய இன்னொரு சாதாரணர் என்றாகி விட்டார். இவரைத் தலையில் தூக்கி வைத்ததும் நாம் தானே? ஊடகங்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஊருக்கு ஊர் உண்ணாவிரதம் என்று ஓடி கூட்டம் போட்டதும் நாம் தானே? இந்தியாவின் ஊழலை ஒரு தனிமனிதர் ஒழித்துக் கட்டுவார் என்ற மக்கள் எதிர்பார்ப்பே தவறானது; அந்த எதிர்பார்ப்பை வளர்த்ததும் அன்னாவின் தவறு. mismatched expectations result in mutual disappointment என்பது சரியாகத் தான் இருக்கிறது.

Unknown said...

காந்தி எனப் பெயர் வைத்துக் கொண்டவர் எல்லாம் காந்தியாக முடியாது.
அது போலவே கதர்க் குல்லாய்
போட்டுக் கொண்டதால் மட்டுமே இவர்
காந்தியாக முடியாது!
நல்ல பதிவு! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

தமிழ் உதயம் said...

சரியாக தான் ஆரம்பித்தார். ஆனால் சரிந்து விட்டார் - எங்கேயோ.

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்
முழு உண்மை நண்பரே, உங்களின் கருத்திற்கு மனமார்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா

மிக்க நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
உண்மை அய்யா........... நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்பால் எளிதில் புகழின் வெளிச்சத்திற்கு வந்தவர் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டார், நன்றி உங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

A.R.ராஜகோபாலன் said...

@ ரஹீம் கஸாலி

அதனாலென்ன நண்பரே அடுத்த முறை சந்திப்போம்.

A.R.ராஜகோபாலன் said...

@ தறுதலை

நன்றி நண்பரே உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

A.R.ராஜகோபாலன் said...

@அப்பாதுரை

அழகான கருத்தை அருமையாக தந்துள்ளிர்கள் சார். நன்றி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

A.R.ராஜகோபாலன் said...

@ புலவர் சா இராமாநுசம்

நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா, உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

A.R.ராஜகோபாலன் said...

@ தமிழ் உதயம்

மிக்க நன்றி உங்களின் வளமான கருத்திற்கு.

Madhavan Srinivasagopalan said...

அன்னா ஹசாரே பற்றி கமெண்டு அடிக்குற அளவுக்கு நா வளந்தேனா இல்லையா தெரியல..
ஆனா..

இன்று இருக்கும் ஐ.எண்.சி வேறு.. சுதந்திரத்திற்கு பாடுப்பட்ட காங்கிரெஸ் வேறு..
தேசியக் கொடி என்பதன் அமைப்பில் எந்த ஒரு மத / மொழி / கட்சி யின் கொடியும் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
தேசியம் (கொடி, விலங்கு, பறவை, கீதம்.. போன்றவை) அனைவருக்கும் விருப்பு வெறுப்பின்றி பொது.. சமம்.. உரிமை

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
""அன்னா ஹசாரே பற்றி கமெண்டு அடிக்குற அளவுக்கு நா வளந்தேனா இல்லையா தெரியல..
ஆனா..""

இது எல்லா இந்தியர்களுக்கும் உள்ள ஜனநாயக உரிமை மாதவன் இதில் வளர்ந்தவன் வளராதவன் என்பதெல்லாம் இல்லை.

Marc said...

உண்மையறியும் கண்ணை இழந்தவர்களில் நானும் ஒருவன்.

அருமை வாழ்த்துகள்

K.s.s.Rajh said...

மக்கள் பாவம் பாஸ்

நெல்லி. மூர்த்தி said...

இன்றைய சூழலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய உண்மை யாதெனில், கண்களை மூடிக்கொண்டு எவரையும் தலைவராக கருதாதே என்பது தான். தனித்தனி செயலற்பாடுகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாய் ஆதரவளிக்கும் நிலைக்கு எவரும் தகுதியில்லை என்பது தான் இன்றைய உண்மை! இவர் ஒரு காமெடி பீஸ் என்பது பலவிஷயங்களின் முன்னரே தெரியவந்து விட்டது. ஊடகங்களுக்கும் எவரையேனும் தலைமேல் தூக்கிவைத்து பரபரப்பாக்கினால் தான் கல்லா கட்ட இயலும் என்பதை அவர்கள் அறியாததா என்ன?!

சென்னை பித்தன் said...

மிகத் தெளிவான பார்வை.

Yaathoramani.blogspot.com said...

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற
மன நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்
எல்லோரையும் இப்போதைய சூழலில் கோளாறு
சொல்லி விடமுடியும்
இப்படியே சொல்லிக் கொண்டே போனால்
யார்தான் பூனைக்கு மணி கட்டுவது
சிந்திக்கத் தூண்டியது பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நல்லதோர் ஒப்பீட்டு அலசலைத் தந்திருக்கிறீங்க
அன்னஹாசாரே கட்சிகளின் ஊதுகுழலாகத் தான் இன்றளவில் இருக்கிறார்.
அவரின் செயற்பாடுகள் ஏதும் வீரியமானவையாக இடம் பெறவில்லை என்பது தான் என்னுடைய கருத்தும்.

ரிஷபன் said...

ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான்,

It haappens everywhere