Sunday, 19 June 2011

ஏன் மக்கள் திருட்டு வி சி டி யில் படம் பார்க்கிறனர்

         

இன்று எல்லா தயாரிப்பாளர்களும் எதிர்க்கும் ஒரு விஷயம்,அவர்களை  பாதிக்கும் ஒரு விஷயம் என்றால் அது  திருட்டு வி சி டிதான் (இப்பெல்லாம் டி வி டி வந்தாலும் அது வி சி டி என்றே  அழைக்கபடுகிறது) இது அவர்கள் உழைப்பையும் பணத்தையும் விழலுக்கு இறைத்த நீர் போல பயனற்று ஆக்குகிறது  , படம் ரிலீசாகி  இரண்டாம் நாளே டி வி டி ரெடி, சில படங்கள் ரிலிசாவதற்கு முன்னமே திருட்டு டி வி டி வந்து விடுகிறது, இதற்கு காரணம் சரியான தேதியில் படங்கள் ரிலிசாகாமல்  இருப்பதுதான், குறிப்பிட்ட காலம் வரையே அவர்கள் டிவிடி வெளியிடாமல் இருப்பதற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள், இதுதான் பிரச்சனை என்றால் அவர்கள் ஏன் டி வி டிக்கு அனுமதி கொடுக்கிறார்கள் என தெரியவில்லை , இப்படி வெளிநாடுகளில் அனுமதிக்க பட்ட டி வி டிக்கள் தான் இந்தியாவில் இறக்குமதியாகிறது.

                     இது போன்ற டி வி டி தயாரிக்கும் கும்பல் நோகாமல் நொங்கு தின்ன கதையாக படத் தயாரிப்பாளர்களின் முதலீட்டை உறிஞ்சிவிடுகிறார்கள்.இந்த திருட்டு டி வி டியால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள்  எத்தனையோ பேர் இன்று தமிழ்நாட்டில் உண்டு , இதை தடுக்க எத்தனை முயற்சித்தாலும் முடிவதில்லை , இதற்கு காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் இந்த திருட்டு வி சி டி க்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதுதான். இந்த ஆதரவுக்கு  என்ன காரணம்??              

                       என்னை பொறுத்தவரை இதற்கு காரண காரணியாக இருப்பது திரைஅரங்குகள் தான், அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் தான் . இன்றைய கால கட்டத்தில் ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பம் சினிமாவுக்கு போகவேண்டும் என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டும், எங்கும் எதிலும் அநியாய விலை , பைக் நிறுத்த இருபது ரூபாய் , டிக்கெட் 150 ரூபாய் இது படத்திற்கு தகுந்தாற்போல் மாறும் , காபி இருபது ரூபாய் , பாப்கார்ன் ஐம்பதிலிருந்து இருநூறு வரை போகும் , பப்ஸ் நாற்பது ரூபாய் இப்படி எல்லாமே அநியாய விலை, அந்த படத்தை பார்க்க இந்த டிராப்பிகிலும் மனித கூட்டத்திலும் கடந்து செல்லவேண்டும்.இவை எல்லாம் நல்ல நிலையில் பராமரிக்கப்படும் நிலையில் உள்ள திரை அரங்குகள்.              சற்று சுமாரான திரைஅரங்குகள் என்றால் சுகாதாரத்திற்கு கேட்கவே வேண்டாம், அங்கே போய் வந்தால் அனைத்து தொற்று நோயும் நம்மை வந்து சேரும் , இப்படி அநியாய விலையும் , சுகாதார சீர்கேடும் இருந்தால் எப்படி மக்கள் அங்கு சினிமா செல்ல ஆசைப்படுவார்கள் , முன்பெல்லாம் பொழுபோக்க சினிமாவே கதி இன்று அப்படி அல்ல ஷாப்பிங் என்ற பெயரில் வெளியே வந்து பொழுதை கழிக்கலாம். இதையெல்லாம் தாண்டி அவர்கள் போனாலும் நம்ம கதாநாயகர்கள் சுயதம்பட்டம் அடிக்கும் காத்து குத்தும் வேலைகள் மக்களை வெறுப்படைய வைக்கிறது, கதைக்காக நாயகர்களை தேடாமல் கதாநாயகர்களுக்காக கதையை ஒட்டவைக்கும் வேலையை செய்வதால் மக்களும் என்ன செய்வார்கள்.


            இதை எல்லாவற்றையும் விட வசதியான காரணங்கள் நிறைய உள்ளன, ஒரு டி வி டி யின் விலை இருபது ரூபாய் மட்டுமே , இப்போதெல்லாம் நல்ல தரத்துடன் 5:1 வசதியுடன் கிடைக்கிறது , அதிக அலைச்சல் இல்லை , வீட்டிலேயே வசதியாக பார்க்க முடியும், பிடித்த பகுதிகளை பல முறையும் பார்க்க முடியும், பிடிக்காத பகுதிகளை பார்க்காமல் தவிர்க்க முடியும்.இதற்கெல்லாம் தீர்வு நியாயமான கட்டணங்களும் , நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் தான் ஓரளவுக்காவது நல்ல மாற்றத்தை கொண்டு வரும் , மக்களும் படம் பார்க்க தியேட்டர் வருவார்கள் இல்லாவிடில் திரை அரங்குகள் எல்லாம் மண்டபங்களாவதை  யாராலும் தடுக்க முடியாது.   

அன்பன்
ARR                 


58 comments:

Unknown said...

நியாயமான ஆதங்கம் பாஸ்!!!

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
மிக்க நன்றி பாஸ்

RVS said...

கரெட்டுதான்... ;-)))

A.R.ராஜகோபாலன் said...

@RVS
நன்றி நண்பா

Admin said...

நியாயமான ஆதங்கம்..

A.R.ராஜகோபாலன் said...

@சந்ரு
பிரியமான நண்பரே
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

நிரூபன் said...

இன்றைய கால கட்டத்தில் தியேட்டர்களின் உபரிச் செலவுகள் ஏன் அதிகமாகிறது என்பதனையும்,
திருட்டு வீசிடிக்களின் தாக்கத்தினால் திரை விரும்பிகளிற்கு ஏற்படும் செலவுகளையும், அவற்றினைத் தடுப்பதற்கான வழி முறைகளையும் உங்களின் பதிவு சொல்லுகிறது சகோ.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
பிரியமான சகோ
நன்றி உங்களின் கருத்திற்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு அலசல். நியாயமான ஆதங்கம். பதிவுக்கு நன்றி. VOTED 5 TO 6 IN INDLI & 3 TO 4 IN TAMILMANAM

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி ஐயா
உங்களின் வருகைக்கும்
கருத்திற்கும்
வாக்கிற்கும்

Unknown said...

ரொம்ப சரி ....நீங்க கூறியுள்ள தீர்வு அற்ப்புதம் ..நேர மின்மையும் ஒரு காரணம் நண்பா என் வீட்டில் இருந்து நான்கு அடியில் திரை அரங்குகள் உள்ளது நான் படம் பார்க்க போக முடிவதில்லை .இங்கே (மலேசியாவில் ) நியாமான டிக்கெட் விலை ,பராமரிப்பும் ஓகே தான் ...இங்கே ஒரிஜினல் dvd வெளியாகிவிடும் அதில் பார்க்கவே விருப்பம் உள்ளது ..நல்ல பதிவு

Unknown said...

tamil manam 6

எல் கே said...

பார்க்கிங் கொள்ளையை விட்டுட்டீங்க. எல்லா படமுமும் எப்படியும் இரண்டரை மணி நேரம்தான் ஓடும். ஆனால் பார்க்கிங் மக்கள் சார்ஜ் பண்றது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை

ஸ்ரீராம். said...

ஒரு நடிகர் எவ்வளவுதான் கஷ்டப் படுகிறார் என்று வைத்துக் கொண்டாலும், மார்க்கெட் உள்ளவரைதான் அவருக்கு சம்பாதனை என்று வைத்துக் கொண்டாலும் ஒரு கோடி, இருபது கோடி என்று சம்பளம் வாங்குவது, அதை அந்த மதிப்புக்காக விநியோகஸ்தர்கள் இலட்ச்சங்களையும் கோடிகளையும் கொட்டி வாங்குவது இதெல்லாமும்தானே காரணம்.......நடிகர்களின் சம்பளம் சாதாரணமாக இருந்தால் எல்லாமே நார்மல் லெவெலில் இருக்கும். திருட்டு வி சி டி பார்ப்பது சரியென்று சொல்லவில்லை. ஆனாலும் பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. திரையுலகை அரசுடைமை ஆக்கினால் எப்படி இருக்கும்?!!

Unknown said...

indli 10

தமிழ் உதயம் said...

மக்களுக்கு இயல்பாகவே சினிமாவின் மீதான மோகம் குறைந்து வருகிறது. அதுவும் சினிமா வீழ்ச்சியுற ஒரு காரணம்.

vidivelli said...

PURIKIRATHU UNKAL AATHANKAM....
UNKAL ITHU THODARPAANA ALASALIRKU VAALTHTHUKKAL"

Madhavan Srinivasagopalan said...

ஹி.. ஹி.. சேம் ப்ளட்.. (அனுபவத்த சொன்னேன்)

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது...

ப.கந்தசாமி said...

நான் முழு மனதுடன் ஆமோதிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

தோழர் Noun தோழமை verbஆ?

ராஜ நடராஜன் said...

முந்தைய பதிவு நேரத்துல இலக்கணம் வரல.இப்ப வந்துருச்சு:)

தோழர் பெயர்ச்சொல்.தோழமை வினைச்சொல்.

ராஜ நடராஜன் said...

//என்னை பொறுத்தவரை இதற்கு காரண காரணியாக இருப்பது திரைஅரங்குகள் தான், அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் தான் .//

சரியாகச் சொன்னீங்க!உள்ளூர் மட்டுமில்லை வெளியூருக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும்,கார் செலவு,பாப் கார்ன்,பெப்சி,வெளியே வந்தா ஹோட்டல் இவற்றோடு இதற்கான நேரம் ஒதுக்குதல் என்ற மொத்தத்தையும் ஒரு டிவிடி அடிச்சு நொறுக்கிடுது.

அப்புறம் தேர்ந்தெடுத்த தியேட்டர் மட்டுமே என்பதும் ரஜனி,கமல்,விஜய் படங்கள் தவிர படம் வருதான்னும் கூடத் தெரியல.எனவே மொத்த தேர்வாக பிடிச்சதை எடுத்துக்கொள்ளும் வசதி,விலை குறைவு,கொஞ்சம் பார்த்துட்டு அப்புறமா பார்க்கும் வசதியென்று டிவிடி முந்திக்கொள்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்... சென்னையிலேயே இப்படி என்றால் தில்லியில் இன்னும் மோசம்... ஒரு சில பி.வி.ஆர். திரையரங்குகளில் மட்டுமே தமிழ் திரைப்படம் வெளியிடப்படுகிறது... அதற்குச் சென்று வர ஆகும் செலவு ஒரு குடும்பத்திற்கு மிக அதிகம்... அதனால் நல்ல படமாயிருந்தால் டிவிடி எடுத்துப் பார்க்கிறார்கள் அல்லது “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” வரை காத்திருக்கிறார்கள்.....

சென்னை பித்தன் said...

நல்ல அலசல்.வீட்டில் அமர்ந்து படம் பார்ப்பது வசதியாகத்தான் இருக்கிறது!உங்களோடு உடன்படுகிறேன்!

Anonymous said...

very very bad in the status of theatre and their double rate game, recently i saw the movie kho in ambigaii theatre at Madurai, they took rs.80 per ticket and the ticket given to me is only Rs.40only, and it is mere day time robbery becuase they are cheating both government and the public. they pay the tax for rs.40 only to govt. and they take straight rs.40 in their black pocket. I could not digetst my action of going to movie that day and it was compulsion of my kids, i did it. I feel like someone cheated straight in front of me and taken the money from my pocket. It TN governemnt is going to be sincere in this matter, they can get a lot of revenue from this mafia gang.

Let us see the govt official action in this regard.

Jayadev Das said...

சனம் திருட்டு சி.டி வாங்க முக்கிய காரணம், அது கிடைக்குது, அவ்வளவுதான், சல்லிசா கிடைச்சா யாருக்குத்தான் விட மனசு வரும்? திருட்டு சி.டி.க்கள் இவ்வளவு இருந்தே ஒரு குடும்பம் படம் பார்க்க ஆயிரம் ரூபாய் தேவைப் படும் நிலை இருக்கு, இல்லைன்னா, ஐயாயிரம் ரூபாய் தேவைப்படும் நிலைக்கு கொண்டு போயி விட்டிருப்பாங்க போல.

பிரியா ச‌ங்க‌ர் said...

உண்மைதான்

ஷர்புதீன் said...

இதுவரையுளும் நான் VCD யில் பார்த்த படங்கள் மொத்தம் மூன்று கூட தாண்டாது., காரணம் படம் பார்த்தால், அது தேட்டரில்தான் , எனது வாழ்க்கைமுறை அந்த மாத்ரி, ஒருவேளை வேறு மாதிரியான குடும்ப அமைப்பை பெற்றிருந்தால் .... VCD / DVD - யில் இருக்கலாம்

நான் படம் பார்ப்பதை ஒரு சாதாரண நிகழ்வாக பார்ப்பதில்லை ( அபூர்வமாக வேறு வழியில்லாமல் - நண்பர்கள் கூப்பிட்டாளோ, பஸ் கிடைக்க நேரமானாலோ., கடமையே என்று பார்பதுண்டு.,) ஆனால் சினிமா பார்ப்பது எனக்கு ஒரு முக்கிய பிடித்த நிகழ்வு., ஆகவே பார்த்தால் நல்ல தேட்டரில்தான்...

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
படத்தைப் பொறுத்து 150 /200 வரை கூட
கட்டணம் வசூலிக்கிறார்கள்
அவர்கள் கொள்ளையை தடுக்கவேணும்
அனைவரும் திருட்டு கேசட்டில்
படம் பார்க்கவேண்டும் என எரிச்சல் வருகிறது
நல்ல் சமூக ந்லன் சார்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

சகோ
இதை விட இக்கருத்தை தெளிவா செல்ல
யாரும் தேவையில்லை.
புலவர் சா இராமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
மிக்க நன்றி நண்பா
உங்களின் தொடர் வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும்

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நன்றி தமிழ்மண வாக்கிற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நன்றி இன்ட்லி வாக்கிற்கு

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
மிக்க நன்றி நண்பா

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
thank you verymuch friend

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே


ரொம்பச் சரியாக சொன்னிங்க சார்
இதெல்லாம் அகல் கொள்ளை
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவன் சார்

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி அண்ணாச்சி

A.R.ராஜகோபாலன் said...

@DrPKandaswamyPhD
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@ராஜ நடராஜன்

சார் நமக்கும் இதுக்கும் ரொம்ப தூரம் சார்
இலக்கணம் தெரியாது எனக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ராஜ நடராஜன்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நினைத்து பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்

நல்ல யோசனைதான் சார்
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
நன்றி ஐயா உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@Anonymous said.
VERY TRUE SIR
tHANKS FOR YOUR COMMENT

A.R.ராஜகோபாலன் said...

@Jayadev Das
சரியாக சொன்னிங்க சார்
தங்களின்
முதல் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@பிரியா ச‌ங்க‌ர்
தங்களின்
முதல் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்

அன்பு ஷர்புதீன்
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
சரியாக சொன்னிங்க சார்
தங்களின்
கருத்துக்கு மனம் மகிழ்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
தங்களின்
கருத்துக்கு மதி நிறைந்த நன்றி அய்யா

Geetha6 said...

அருமயான பகிர்வு!

A.R.ராஜகோபாலன் said...

@Geetha6
மிக்க நன்றி சகோ

G.M Balasubramaniam said...

VALUE FOR THE MONEY IS NOT THERE. PEOPLE ARE THER TO SEE FILMS IN THEATRE.WHATEVER IT BE ,SEING A FILM IN A THEATRE IS FAR MORE ENJOYABLE. BUT THERE IS NO NECESSITY TO SPEND SO MUCH MONEY TO SEE MOSTLY THIRD GRADE FILMS. I DO NOT SEE MOVIES SHOWN IN TV ITSELF. SO LONG AS PEOPLE ARE FILM CRAZY, IT MATTERS LITTLE AS TO HOW THEY SEE IT. THEY WILL SEE IT SOMEHOW.

Mathuran said...

நல்லதொரு விடயம் பற்றி அலசியிருக்கிறீர்கள்..
உண்மையிலே திருட்டு விசிடிக்கு காரணம் திரையரங்க உரிமையாளர்களின் அநியாய பண வசூலிப்புதான்

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்
நன்றி தங்களின்
முதல் வருகைக்கு
முத்தான கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
Thank you for your valuable comments sir

Anonymous said...

migavum sariyaagha sonnirgal anna.....