Saturday, 14 January 2012

சொல்லாமல் செல்கிறேன்





காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


கடக்கும் வினாடியும்
நடக்கும் நிகழ்வும்
பழையதாகிப் போக
பழுதாகாத காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


பறக்கும் பறவையும்
கறக்கும் பசுவையும்
பழக்கினாலும்
பழுக்காத  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


கம்பனின் எழுத்தையும்
கர்ணனின் வீரத்தையும்
விளக்கினாலும்
விளங்காத  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


ஞாபகப்படுத்தினாலும்
நியாயப்படுத்தினாலும்
நீக்கமற 
நிறைந்த  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


கடைந்த அமிர்தம் போல
அன்னையின் அன்பை போல
தூய்மையான
துகிலுரியாத  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன் - ஆனாலும்
உன்னை வெட்கத்தால் வெல்கிறேன்!


அன்பன்
ARR



14 comments:

Madhavan Srinivasagopalan said...

// கம்பனின் எழுத்தையும்
கர்ணனின் வீரத்தையும்
விளக்கினாலும்
விளங்காத காதலை
சொல்லாமல் செல்கிறேன் //

Super..

ஸ்ரீராம். said...

அருமை ஏ ஆர் ஆர்.
உங்களுக்கு எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.
நட்புக்கும் காதலுக்கும் நடுவே சிறிய கோடுதான்....
'வெட்கத்தால்' வெல்கிறேன்?

G.M Balasubramaniam said...

இதைப் புரியாது நீயும் அறியாமல் அவதிப் படுவாய் காதலா நட்பா என.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அனுஷ்யா said...

எதையும் அவ்ளோ லேஸ்ல மறச்சுட முடியாது பாஸு...முக்கியமா காதல..:)

அனுஷ்யா said...

அப்டியே நம்ம கடைக்கு வந்துட்டு போங்க ....

இராஜராஜேஸ்வரி said...

ஞாபகப்படுத்தினாலும்
நியாயப்படுத்தினாலும்
நீக்கமற
நிறைந்த காதலை
சொல்லாமல் செல்கிறேன் - காதலை
மறைத்து நட்பென சொல்கிறேன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்..

திண்டுக்கல் தனபாலன் said...

// அன்னையின் அன்பை போல
தூய்மையான
துகிலுரியாத காதலை
சொல்லாமல் செல்கிறேன் //
வித்தியாசமான பதிவு! சூப்பர் சார்! நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

கீதமஞ்சரி said...

நட்பு காதலாய் உணர்தலில் அழகாய் பரிணமிக்கப்பட்டுவிட்டது. அதை அதுவென உரைத்தலில் மட்டும் மனம் பக்குவப்படவில்லை போலும். மனமெழுதிய சங்கடக்கவிதையிலும் சதிராடும் தமிழ் அழகு. பாராட்டுகள்.

Unknown said...

// பறக்கும் பறவையும்
கறக்கும் பசுவையும்
பழக்கினாலும்
பழுக்காத காதலை
சொல்லாமல் செல்கிறேன் - காதலை
மறைத்து நட்பென சொல்கிறேன்//


அருமை!நல்ல மரபுக் கவிதை
யாக மலர்ந்துள்ளது!
இன்னும் தொடர வேண்டுகிறேன்!

புலவர் சா இராமாநுசம்

RAMA RAVI (RAMVI) said...

அருமை.எல்லா வரிகளுமே அருமை.அதிலும் கடைசிவரிகள் சிறப்பாக இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான வரிகள் நண்பரே....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

vimalanperali said...

சொல்லாமலேயே செல்லுகிற காதலின் வலிமை இனிக்கும் நின்னைவுகளாக உருவெடுக்கையில் வருகிற இனிமை ,,,,,,,/

ADHI VENKAT said...

அருமையாய் இருந்தது. பொங்கல் வாழ்த்துகள்.

ரிஷபன் said...

Nice