Monday, 30 January 2012

தரமும் தகுதியும் தாழ்ந்து போன இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, மிகப்பெரும் தோல்வியையும் அவமானத்தையும் தந்திருக்கிறது நம் இந்திய அணி அல்லது பி சி சி ஐ அணி. ஒவ்வொரு இந்தியர்களின் ரத்தத்திலும், சித்தத்திலும் இரண்டற கலந்து விட்ட கிரிக்கெட் ரசனை ஒவ்வொரு இந்திய வீரரையும் உச்சத்தில் அமர வைத்து அழகு பார்த்தாலும் கொஞ்சமும் பொறுப்பின்றி கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாய் விளையாடிய இந்திய அணியை எவ்வளவு விளாசினாலும் தகும்.


இந்த பதிவில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங், பௌலிங் ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லி என்னையும் உங்களையும் வேதனை படுத்த விருப்பம் இல்லை, தனி வீரரைப் பற்றிய விமர்சனமாகவும் இது இருக்காது. தொடரின் துவக்கத்திலேயே இந்திய அணியை காகித புலிகள் என விமர்சனம் செய்திருந்த ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளின் தீர்க்கதரிசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் கொஞ்சம் வெறுத்தாலும் இப்போது அதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முழுமையான உண்மையாக்கிய பெருமை நமது வீரர்களையே சேரும்.

ஒவ்வொரு இந்தியனின் விளையாட்டு ஆர்வத்தை பல வழிகளில் பயன்படுத்தி அவனின் உழைப்பை உறிஞ்சி பணமாக்கி உலகத்திலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போர்டாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கும் பி சி சி ஐ, இந்த விளையாட்டை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த தோல்விக்கு காரணமாக அவர்கள் சொல்லப்போகும் காரணம் அரதபழசான ஆஸ்திரேலியாவின் ஆடுகளம், இது என்ன யாருமே அறியாத ரகசியமா என்ன?, ஒவ்வொரு முறையும் உதை வாங்கி வரும் போதும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், இந்திய அணியின் தரத்தை தாழ்த்தும் பி சி சி ஐ க்கு அறிவோ? அக்கறையோ இல்லாமல் இருப்பதுதான் இதன் காரணம்.


இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு அதேமாதிரியான ஒரு ஆடுகளத்தை உருவாக்கி இளம் வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கலாம், கூடுதலாக ஆஸ்திரேலியாவிலேயே ஒரு ஆடுகளம் அமைத்து அங்கு நம் வீரர்களை அழைத்து சென்று முன்னாள் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.பல நாட்டு சிறந்த ஆடுகளம் மாதிரியான ஆடுகளம் அமைத்து பயிற்சி அளிக்கலாம்,இதற்கு மெக்ராத், டொனால்டு, அக்ரம்,வால்ஷ்,போன்றோர்களை பயன் படுத்தலாம் அவர்கள் கேக்கும் தொகைக்கு அதிகமாகவே நம்மிடம் பணம் உண்டு. இது நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.


உள்ளூர் ஐ பி எல் மாதிரியான பிற நாட்டு 20 - 20 ஓவர் போட்டிகளில் நம் அணி வீரர்களை விளையாட அனுமதிக்கவேண்டும், இது அந்த நாட்டு ஆடுகளத்தை அறிய ஒரு வாய்ப்பாக அமையும், அப்படித்தானே நம் நாட்டு சுழலையும்,இந்திய வீரர்களின் பலகீனத்தையும் , மித வேக ஆடுகளத்தையும் ஐ பி எல் மூலமாக வெளி அணிவீரர்கள் அறிந்து கொள்கிறார்கள். 


என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்) இதே இந்திய அணி அடுத்து ஏதாவது ஒரு சிறு வெற்றி பெற்றாலும் கோபம் எல்லாம் வற்றி போய் அவர்களின் புகழ் பாடத்தான் போகிறோம் ஆனாலும் என்னில் பொங்கி வரும் ஆற்றாமையையாவது இந்த பதிவு குறைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.


அன்பன் 
ARR. 

19 comments:

ராஜ நடராஜன் said...

//என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்)//

கரடியென்ன!கொரிலாவே வந்து கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை இந்தியர்கள் விடப்போவதில்லை.ஹி.ஹி.நானும்தான்:)

K.s.s.Rajh said...

நல்ல பகிர்வு பாஸ்
வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடவேண்டும் ஒரு நாள் தொடரில் என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Madhavan Srinivasagopalan said...

அட.. ரெண்டு மாசம் பொறுங்க.. ஐ.பி.எல் வருதில்ல..
அப்போ நல்லாவே (பண விளையாட்டு) வெளாடுவோம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் என்ன சொல்லது..

தோல்வியை பொருத்துக்கொள்ளாலாம் ஆனால் அது படுகேவலமாக இருக்ககூடாது....

போராடும் குணம் குறைந்துவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்

selva said...

வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் தான்.ஆனால் எதிர்த்து கொஞ்சம் கூட போராடாமல் சரணடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை.எப்பேர்ப்பட்ட தனிப்பட்ட வீரராய் இருந்தாலும் சரி.அணிக்கு என்று விளையாடவில்லை என்றால் தூக்கி எறியும் தைரியம் தேர்வாளர்களுக்கு வரவில்லைஎன்றால் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் கேள்விக்குறி தான்........

ராஜ நடராஜன் said...

இந்தியா பலவிதமான ஆட்டங்களைக் கொடுத்திருந்தாலும் இறுதி விக்கெட் வரை நின்னு விளையாடுவதென்பது ஆட்ட வரலாற்றில் மிகக் குறைவே.ஓப்பனிங் விக்கெட் விழுந்துடுச்சா அடுத்து மிடில் மேன் வரைக்கும் ஏதோ தாக்குப் புடிக்கும்.பௌலர் மட்டையப் புடிச்சாரோ முடிஞ்சது கதை.இல்லைன்னா சச்சின் 96,08ல டக் அவுட் ஆகவரைக்கும் ஆடனும்.

விதிவிலக்கான ஆட்டங்கள் உண்டு.விதிவிலக்குகள் இங்கே சேர்த்தியில்லை.

ராஜ நடராஜன் said...

//பேச , பேச , நான் மட்டுமே பேச மற்றவர்கள் ஆர்வமாய் கேட்க பிடிக்கும், //

நம்ம கதை ரொம்பவே உல்ட்டா:)

ஸ்ரீராம். said...

என்ன கோபமான பதிவுகளே போடறீங்க...?

ராகுல் திராவிட் நிகழ்த்தியுள்ள புதிய உலக சாதனையைச் சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!! :))

சென்னை பித்தன் said...

வீட்டில புலி;வெளியில எலி.

இராஜராஜேஸ்வரி said...

ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளின் தீர்க்கதரிசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் கொஞ்சம் வெறுத்தாலும் இப்போது அதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முழுமையான உண்மையாக்கிய பெருமை நமது வீரர்களையே சேரும்.

பகிர்வுக்குப் பராட்டுக்கள்..

துரைடேனியல் said...

நான் இப்போது கிரிக்கெட் பார்த்தே ரொம்ப நாளாச்சு சார். ஆனால் ஸ்கோர் மட்டும் அப்பப்ப தெரிஞ்சுப்பேன். இந்த ஆஸ்திரேலியா சீரிஸ்ல அதுவும் இல்ல. ரொம்ப வெறுப்பா இருக்கு. என்ன செய்ய?. நீங்க சொல்றது சரிதான். சேவலும் கோழியும் கதைதான் போங்க.

தமஓ 4.

Admin said...

தோற்பது சகஜம்தான் அதற்காக அனைத்திலும் தோற்பது அவமானம்.

RAMA RAVI (RAMVI) said...

//என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்)/

உண்மைதான்.

கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்து சிறப்பாக இருக்கு.கட்டாயம் இது மாதிரி அவர்கள் முயன்று பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

என் மனதில் இருந்த ஆதங்கத்தை சொல்லி விட்டீர்கள் ! ஆஸ்திரேலியாக்கு எதிரான ஆட்டம் என்றால் அதற்கு ஏற்ற முறையான பயிற்சியும் இல்லை... முயற்சியும் இல்லை... தெனாவெட்டா போனா இப்படி உதை பட வேண்டியது தான் ! பகிர்வுக்கு நன்றி சார் !

ஷர்புதீன் said...

//என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை,//

vittu... naalu varusam aachchu,

ananthu said...

சரியாக அலசியுள்ளீர்கள் ! வாழ்த்துக்கள் ...

சென்னை பித்தன் said...

உங்களுக்கு Liebster Blog விருது வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு அதேமாதிரியான ஒரு ஆடுகளத்தை உருவாக்கி இளம் வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கலாம்,

அருமையான யோசனை!

Admin said...

தங்களுக்கு ஒரு விருதைத் தர விரும்புகிறேன்.வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி..