ஒவ்வொரு வருடமும் தஞ்சையில் பொங்கல் விழாவை வெகு விமரிசையாக நடத்தும் நடராஜன் ஒன்று ஆளும் கட்சியாக இருப்பார் இல்லை என்றால் எதிர்க் கட்சியாக இருப்பார் ஆனால் இந்த முறைதான் எந்த கட்சியும் இல்லாத நொந்த கட்சிக் காரராக இந்த விழாவை நடத்தி முடித்திருக்கிறார்.
விழாவிற்கு சுவாரசியம் கூட்டவோ அல்லது தன் இருப்பை காட்டவோ வழக்கம் போலவே வாய் சொல்லில் வீரம் காட்டியிருக்கிறார், தன்னை முடிவெடு தலைவா, என தன் கோடிகணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்து கேட்பதாகவும், தான், எப்போது முடிவெடுக்காது இருந்தேன் என்றும் நான் (நடராஜன்) முடிவெடுத்ததால் தான் ஆட்சியே மாறியதென்றும் விட்டு விளாசி இருக்கிறார்.தன் மனைவி சசிகலா சம்பந்தமான வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால் அமைதியாக இருப்பதாகவும் இல்லையெனில் தன்னுடைய நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கும் என ஆவேசப்பட்டு இருக்கிறார்
இன்னும் உறுதி செய்யப்படாத செய்திகளின் படி இவரிடம் 90 எம் எல் ஏ கள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் பெங்களூரு வழக்கு அவருக்கு எதிராக அமையும் பட்சத்தில் அ தி மு க வை உடைத்து ஆட்சி அமைக்க போவதாக செய்தி உலவுகிறது. எனக்கு செல்வி ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அ தி மு கவின் ஒற்றை சொல் மந்திரம் அவர், யாராலுமே அவரை தவிர வேறுயாரையுமே நினைத்துப் பார்க்கமுடியாத தலைவி அவர், அவரை தவித்து அ தி மு க என்பது நிலைபெறாத நினைக்க கூட முடியாத நிகழ்வு. சசிகலாவும் சரி அவர்தம் உறவினர்களும் சரி, திரு நடராஜன் உட்பட ஜெயலலிதா என்கிற சூரியனால் மலர்கின்ற....... மணக்கின்ற மலர்களே அன்றி சுயம் இல்லாதவர்கள் என்பது என் கருத்து .
ஆகையால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகள் பத்திரிகை களுக்கும் , அவரை அண்டி பிழைப்பவர்களுக்கும் பயனளிக்குமே தவிர கதைக்கு உதவாது என்பது திண்ணம் .
அன்பன்
ARR
23 comments:
உங்களுடைய கருத்துதான் பெரும்பான்மையோர் கருத்து தோழர்..என்ன செய்ய போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்..
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-3)
@மதுமதி
அன்பு அன்பரே தங்களின் விரைவான கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
நடராஜனை இன்னுமா இந்த உலகம் நம்புது?
பவர் ஸ்டார், டி ஆர் லிஸ்டில் சீக்கிரம் இன்னொருவர் சேருவார் என்று எதிர்பார்ப்போம்...:))))
நடராஜன் மீது எப்போதுமே அவரது அடிவருடிகள் தவிர
யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை
என்வே அவரை பேசி அவரை பிரபலமாக்க்வேண்டியதில்லை
என்பது எனது கருத்து
அதைத்தான் நீங்கள் வேறு முறையில் சொல்லி இருக்கிறீர்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Tha.ma 4
சரியாச் சொன்னீங்க!த.ம.5
யார் சர், இந்த நடராஜன்.?மக்கள் தலைவரா, கட்சித் தலைவரா, பணக்காரரா, ?ஓ சசிகலாவின் கணவரா.? சசிகலாவையே ஓரங் கட்டிவிட்ட ஜெயலலிதா, இவரை ஒரு பொருட்டா மதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
கரெக்டு...நிச்சயம் இனி சசி நியூஸ்தான் பரபரப்பாக இருக்கும்
**88எனக்கு செல்வி ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அ தி மு கவின் ஒற்றை சொல் மந்திரம் அவர், யாராலுமே அவரை தவிர வேறுயாரையுமே நினைத்துப் பார்க்கமுடியாத தலைவி அவர், அவரை தவித்து அ தி மு க என்பது நிலைபெறாத நினைக்க கூட முடியாத நிகழ்வு.***
அண்ணே,
நீங்க ரொம்ப சீரியஸா காமெடி பண்ணுறீங்க, போங்க.
எ மு சி யாரு எமு சி யாருனு ஒருத்தர் இருந்தாரு, அவர் 1987 ல போனதுக்கப்புறம் அ தி மு க தலைவியாக ஆத்தாதான் வரும்னு எந்த ஜோஸ்யனும், இல்லை உங்கள மாரி உளறுகிற காமெடியனும் சொல்லல.
சும்மா ஒவ்வொரு பதிவிலும் பிள்ளையை கிள்ளுறாப்ப்பிலே பதிவுத் தலைப்பு போட்டுட்டு அப்புறம் ஏன் இப்படி ஜால்ரா வேற (தொட்டிலை ஆட்டுறாப்பிலே) செய்றீங்க!?????
அதென்ன "மன்னை"ல பொறந்தீங்களா? அங்கே பொறந்த யாருக்குமே முதுகிலும்பு கெடையாதா? ஒரு கருத்தை தைரியமா சொல்லத் தெரியாதா?
If you want to support sasikala, do it. or if you want to kiss jeya's brahmin ass, DO IT! Dont do BOTH- whoever hell you may be!
@வருண்
ரிலாக்ஸ் பிளிஸ்ன்னு ப்ளாக்கை வச்சிகிட்டு இப்படி டென்ஷனா தரம் தாழ்ந்து பின்னூட்டமிடும் வருண் வணக்கம் ( வணக்கத்திற்கு அர்த்தம் தெரியுமா?) இது என் பதிவு, என் கருத்து, என் சுதந்திரம் உங்களுக்கு விளக்கம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.அவசியமும் இல்லை. ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டாலும் அதன் நாராசம் குறையாது நண்பரே. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது ,உரிமையும் கிடையாது. இனி வரும் காலங்களில் வார்த்தைகளின் தடிமனை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு மிகவும் நல்லது. நன்றி உங்களின் வருகைக்கு, வருத்தம் உங்களின் தரம் தாழ்ந்த கருத்திற்கு.
//அ தி மு க வை உடைக்கும் (சசிகலா) நடராஜன் //
போகப் போகத் தெரியும்..
இந்த ஆளின் பவுசு புரியும்..
நல்லது நடந்தா சரிதான்.
அருமை நண்பரே வாழ்த்துகள்.
//ஆகையால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகள் பத்திரிகை களுக்கும் , அவரை அண்டி பிழைப்பவர்களுக்கும் பயனளிக்குமே தவிர கதைக்கு உதவாது என்பது திண்ணம்
//
இதுதான் உண்மை
தாங்கள் இறுதியில் சொல்லியதே
உண்மை!
சா இராமாநுசம்
வணக்கம் அண்ணா,
இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால் தான் வழக்கு முடிந்த பின்னர் முடிவு தெரியும்,
ஜெயாவின் நிலைப்பாட்டினை விட, நடராஜன் போடும் பந்தா நம்பமுடியாதவாறு இருக்கிறதே.
உண்மையில் நடராஜன் வசம் 90 எம்பிக்கள் இருந்தால் சசிகலா பக்கம் மழை என்பதில் ஐயமில்லை.
அரசியல்ல கலக்குற கோப்லி! வாழ்த்துகள். :-)
இனி அரசியல் பதிவுகள் மட்டும்தான் என்று முடிவெடுத்து விட்டீர்களா....! எப்படியோ வோட்டுப் போட்டுட்டேன்...!! :))
ARR!கட்சி உடைந்தால் கலைஞர் கருணாநிதிக்கு கொண்டாட்டமே.
கருணாநிதி கட்சியை ஏனையோருடன் இணைந்து அரவணைத்துப் போனது தி.மு.கவின் பலம்.வை.கோவுக்கு அருமையான சந்தர்ப்பம் இருந்தும் இநத அரசியல் சூத்திரம் தெரிந்தும் தனிமரமாகவே இருக்கிறார்.
A mission impossible for him!
சசிகலாவுக்கு இருக்கும் விவேகம் கூட சசிகலா நடராசனுக்கு இருக்காது போல தெரியுதே!
பல காரண காரியங்களால் ஜெயலலிதா இதுவரையிலும் அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமை.அவரது அவசர முடிவுகள் தி.மு.கவிற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
மாற்று அரசியலை வரவேற்கிறேன்.
சென்ற பின்னூட்டத்தின் இறுதி வரிகளை அ.தி.மு.க,தி.மு.க அல்லாத மாற்று அரசியலை வரவேற்கிறேன் என்று வாசிக்கவும்.இல்லையென்றால் சொல்லின் சித்தர் கருணாநிதி "பார்த்தாயா உடன்பிறப்பே!தமிழகம் மீண்டும் நம்மை அழைக்கிறது" என்று அறிக்கை விட்டு விடுவார்:)
எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார்கள் அம்மா அவர்கள் ! இவர் எல்லாம் ஒரு பொருட்டா ? பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று !
Post a Comment