நேற்று தில்லியிலிருந்து சென்னைக்கு தன் மகள் கனிமொழியை திஹார் சிறையில் பார்த்து விட்டு வந்த தி மு க தலைவர் கருணாநிதி தன் மகள் சிறையில் வாடுவதாகவும் , அவரின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், ஒரு தந்தையின் மனநிலையிலிருந்து பார்த்தோமேயானால் மிகவும் வருந்ததக்க செய்திதான், ஆனால் போராட்டம் பலகண்ட , தனிமை சிறையிலும் மனம் கலங்காத தளபதியாய் களம் பல கண்ட மு.கருணாநிதியா இவர் ??
இது அவரின் உடல் தள்ளாமையால் வந்த கலக்கமா இல்லை குடும்ப பாசத்தை தள்ளமுடியாமையால் வந்த கஷ்டமா தெரியவில்லை, எது எப்படி இருப்பினும் இது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல. கடந்த ஒரு மாதத்தில் தன் மகளை பார்க்க இரண்டு முறை தில்லி சென்ற கலைஞர் , முதல்வராய் இருந்த போது நம் மாநில நலனுக்காக எத்தனை முறை சென்றார்
மீனவர்கள் தாக்கப்பட்டு,சுடப்பட்டு இறந்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தபோதெல்லாம் தில்லி செல்லாமல் இருந்ததேன்?
மாநில பாதுகாப்பை,நலனை உறுதிசெய்யும் முதல்வர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் சட்டத்துறை அமைச்சரையும், துணை முதல்வரையும் அனுப்பியதேன்?
சிறையில் இருக்கும் தன் மகளுக்காக இத்தனை துயரப்படும் கலைஞர், தன் கணவனை, தகப்பனை, சகோதரனை இன்னும் தன் மகனை இழந்த மீனவ தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இவர் முதல்வராக இருந்தபோது கடிதம் எழுதுவதை விட வேறு என்ன அதிகமாக செய்தார், இது அவர் தமிழர்களுக்கு செய்த துரோகம் அல்லவா?
தனகென்றால் ஒருநீதி மற்றவர்களுகென்றால் ஒருநீதியா, இவரின் ஆட்சியில் பெண்களே கைது செய்யப்படவில்லையா அவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ??அல்லது இவரின் ஆட்சியில் எல்லா சிறைகளும் குளிரூட்டப்பட்டு இருந்தனவா??
இது மாதிரியான செயல்கள் ஒரு முன்னாள் முதல்வருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களையும் கொண்ட பெரிய கட்சியின் தலைவருக்கு ஏற்புடையதா என்று பார்த்தோமேயானால் அவரை முதல்வராக தேர்தெடுத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்??
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு திருமதி கனிமொழியின் நிலையை பார்த்தோமேயானால் , ஏன் இந்த நிலை அவருக்கு எல்லாமே பதவியின் மீதுள்ள ஆசையால் விளைந்தது தானே, அவர் தானுண்டு தன் கவிதை, இலக்கியம் உண்டென்று இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காதே, தன் மகளும் பதவி, பட்டம், படாடோபம் பெறவேண்டும் என்ற திருமதி ராஜாத்தி அம்மாளின் எண்ணத்தில் தோன்றிய ஆசையின் விளைவுதானே இது ?? அரசியலில் ஆண் பெண் என்ற பேதமேது , அப்படி இருந்திருந்தால் கலைஞர் ஜெயலலிதாவை கைது செய்திருக்கவே கூடாதே ??
கலைஞரையும், அவரின் அரசியல் சாதுர்யத்தையும் , தமிழையும் என் தந்தையின் வழியே கேட்டு அவரை நேசித்தவர்களில் நானும் ஒருவன் ஆனாலும் இன்றைய காலக்கட்டத்தில் அவரின் மீதான இந்த கேள்விகளை என்னால் தவிர்க்கமுடியவில்லை.
அன்பன்
ARR
48 comments:
கலைஞரின் வாழ்க்கை அரசியல்வாதிகளுக்கு பாடமாகட்டும்.
///இதையெல்லாம் தவிர்த்துவிட்டு திருமதி கனிமொழியின் நிலையை பார்த்தோமேயானால் , ஏன் இந்த நிலை அவருக்கு எல்லாமே பதவின் மீதுள்ள ஆசையால் விளைந்தது தானே//////
தப்பா நினைக்காமல் எழுத்து பிழையை சரி செய்யவும்
மீண்டும் நடு நிலையாய் ஒரு ஆதங்கம் ...அருமை நண்பா
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
INDLI & TAMIL 10 VOTED TAMIL MANAN ?? NT WORKING
@தமிழ் உதயம்
உண்மையாக சொன்னிர்கள் நண்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு
@ரியாஸ் அஹமது
நட்பாய் சொன்னதில்
தப்பாய் நினைக்க என்ன இருக்கிறது நண்பா
நன்றி என் மீதான உங்களின் பரிவான கவனத்திற்கு
பிழையை திருத்தி விட்டேன்
@ரியாஸ் அஹமது
மனம் நிறைந்த நன்றி நண்பா
@ரியாஸ் அஹமது
நன்றி உங்களுக்கும்
இராஜராஜேஸ்வரி மேடத்திற்கும்
@ரியாஸ் அஹமது
மனம் நிறைந்த நன்றி, நண்பா நன்றி
இதை விடயெல்லாம் அவ்ர அடிச்சுக் காயப்போட்ட போதே 63 சீட்டக்கொடுத்த சில மணி நேரங்களிலே கூட்டணி அறிக்கை விட்ட சாணக்கியன் அவர்.விடுங்க ஓய்வெடுக்கட்டும்.
@ராஜ நடராஜன்
ஆமாம் சார் இப்பவெல்லாம் அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்
கூட்டாச்சி , சுயாட்சி முழக்கமெல்லாம் போயே போச்சி
நன்றி உங்களின் கருத்துக்கு
அவரின் தற்போதய நிலைமை பரிதாபமானது.
அவர் என்ன மனுநீதிச் சோழனா,சொந்த மகனையே தேர் ஏற்றிக் கொல்வதற்கு?தன் குடும்பமே நாடு என நினைக்கும் ஒரு சாமானியர்தானே!
நீங்கள் எழுதிய கருத்துக்கள் முற்றிலும் சரியே..
இன்றைய சூழ்நிலையில் உங்கள் தந்தையாரும் இப்படித்தான் யோசித்திருப்பார்..
அருமை அருமை...அதிலும் கடைசியாக நீங்கள் கூறி இருப்பது மெத்த சரி பாஸ்!
@ஸ்ரீராம்
இவை அனைத்தும் அவராகவே ஏற்படுத்திக் கொண்டதுதானே நண்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு
@சென்னை பித்தன்
மிக உண்மையான கருத்து அய்யா
நன்றி உங்களின் கருத்துக்கு
@Madhavan Srinivasagopalan
மிக உண்மையான கருத்து மாதவன்
நன்றி உங்களின் கருத்துக்கு
@மைந்தன் சிவா
மெத்த நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு
நாட்டு மக்களுக்கு ஒரு நீதி, சொந்த மக்களுக்கு தனி நீதி எனும் அடிப்படையில் தான் கலைஞரின் டில்லி விஜயம் அமைந்துள்ளது...
உங்கள் பதிவில் நியாயமான ஆதங்களை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
@நிரூபன்
உங்களின் கருத்துக்கு
மதி நிறைந்த நன்றிகள் சகோ
Voted 3 to 4 in Tamilmanam.
[Indli at present not working.
However, I shall try to Vote later]
நல்லதொரு பதிவு.
நியாயமான கேள்விகள்.
வயதான காலத்தில் அடுத்தடுத்து சோதனைகள் வரவேண்டாம் தான். போதாத காலம் தான்.
என்ன செய்வது!
வலைச்சரத்தில் தாங்கள் நம் அன்புத்தலைவியால் அறிமுகப்பட்டுள்ளதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது தான் முதல் அறிமுகமா?
தொடரட்டும். மீண்டும் மீண்டும் நீங்கள் அடையாளம் காட்டப்படலாம். வாழ்த்துக்கள்.
நல்லதோர் அலசல். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி ஐயா
உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும், வாக்கிற்கும்
@வை.கோபாலகிருஷ்ணன்
இரண்டாவது அறிமுகம் ஐயா
முன்பே அப்பாவி தங்கமணியால் அறிமுகப்படுத்தப் பட்டேன்
நீங்களும் நாரதர் மூலமாக அறிமுகப் படுத்தப்பட்டு இருப்பதற்கு வாழ்த்துக்கள் என பின்னூட்டம் இட்டீர்கள்.
நன்றி உங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
@வெங்கட் நாகராஜ்
உங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
கருத்திற்கும்
முழு மன நன்றி அன்பரே
சகோ
தாங்கள் எதையும் நடுநிலை தவறமல் எழுதும்
போக்குக்கு(இந்நாள, முன்னாள் பற்றி)வந்துள்ள
இரண்டு பதிவுகளே சான்று
இந்நிலைத் தொடர வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் - மறந்து விட்டிருப்பார். திஹார் ஞாபகப்படுத்துமா ?
@புலவர் சா இராமாநுசம்
தங்கள் மதி நிறைந்த வாழ்த்திற்கு
மனம் மகிழ்ந்த நன்றிகள் ஐயா
@thiru
தங்களின்
முதல் வருகைக்கும்
முதன கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே
\\மாநில பாதுகாப்பை,நலனை உறுதிசெய்யும் முதல்வர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் சட்டத்துறை அமைச்சரையும், துணை முதல்வரையும் அனுப்பியதேன்?\\ அன்று மாலை நடிகை ரம்பாவின் திருமண வரவேற்ப்பு சென்னையில் நடந்தது, அதில் பங்கு கொள்வதும் ரொம்ப முக்கியம், மக்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன, அது இவரது வழுக்கை தலையில் விழத் துடித்துக் கொண்டிருக்கும் ரோமங்களுக்குச் சமம்.
\\ தனிமை சிறையிலும் மனம் கலங்காத தளபதியாய் களம் பல கண்ட மு.கருணாநிதியா இவர் ??\\ இவரோ இவரது மகன்/மகளோ ஒருபோதும் நாட்டுக்காக உழைத்து சிறை சென்றதில்லை, அவரவரது கிரிமினல்,மொள்ளமாரித்தனமான வேலைகளுக்காகவே உள்ளே தள்ளப் பட்டனர். அப்படி போய் விட்டு வெளியே வந்து, வ.உ.சிதம்பரனார் லெவலுக்கு பீலா விடுவதே இவர்களுக்கு வேலையைப் போய் விட்டது.
\\தனகென்றால் ஒருநீதி மற்றவர்களுகென்றால் ஒருநீதியா, இவரின் ஆட்சியில் பெண்களே கைது செய்யப்படவில்லையா அவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ??அல்லது இவரின் ஆட்சியில் எல்லா சிறைகளும் குளிரூட்டப்பட்டு இருந்தனவா??\\ மானமுள்ளவன் இந்த கேள்விகளுக்கே நாக்கை பிடுங்கி கொண்டு சாவான். ஆனால் மஞ்சள் துண்டு, வெட்கம், மானம், சூடு சொரணை இதெல்லாம் எந்த கடையில் விற்கிறது என்று கேட்கும் ஆள், அதனால் மாற்றம் எதையும் எதிர் பார்க்க முடியாது. அந்தில் வளையாதது ஐம்பதில் வளாயாது என்பார்கள், அப்படியிருக்க தொன்நூரிலா வலையைப் போகிறது? பிறவி புத்தி போகவே போகாது.
\\அவருக்கு எல்லாமே பதவியின் மீதுள்ள ஆசையால் விளைந்தது தானே\\ அவரது பதவிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊழலை தனது தந்தையைப் போல, விஞ்ஞான முறையில் மாட்டிக் கொள்ளாமல் செய்வதேப்பது என்பதைத் தெரியாமல் செய்து சிக்கிக் கொண்டார் அவ்வளவுதான். மேலும் எப்படியாவது இந்தம்மாவை, ஒண்ணுமே தெரியாதவர் என்று நிரூபித்து வெளியே கொண்டுவந்து விடுவார்கள், அப்புறமென்ன, திகார் சிறையில் மக்களுக்காக கஷ்டப் பட்டவர், முதலைகள், டைனோசர் கூட படுத்து தூங்கிய தியாகி என்று சொல்லி ஓட்டு கேட்பார்கள் இந்த அயோக்கியர்கள். தூ....
அருமையாக எழுதுகிறீர்கள், தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே.
அவர் எப்போதுமே சுய நலம் மிக்கவர்தான்
குடும்பத்திற்காக எதையும்
விட்டுக்கொடுக்கக் கூடியவர்தான்
அவருடைய பேச்சுத்திறமையில் இத்துணை நாள்
மயங்கிஅவரை நம்பி ஏமாந்து கிடந்தோம் அவ்வளவே
அவருடைய தற்போதைய நடவடிக்கைகள்
எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை
யதார்த்தம் பேசும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
You are under estimating Mr.MK.
i believe 100% this is well written Drama. he knows how to move the coin, and how to cultivate more than one benefits (what ever comes against he will wisely play the game. until MK exist DMK will be in the Race.)
@Jayadev Das
கோபம் கொப்பளிக்கும் உங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே
@Jayadev Das
இப்படித்தான் அரசியல்வாதிகள் நம்மில் பலரை ஏமாற்றுகிறார்கள்
கருத்துக்கு நன்றி
@Jayadev Das
நன்றி உங்களின் உற்சாகமூட்டும் கருத்திற்கும் பாராட்டுக்கும்
@Ramani
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சார்
@Seshadri
சேஷாத்ரி சார் , நான் கலைஞரை குறைத்து மதிப்பிடவில்லை , அவரின் அரசியல் இப்படி குறையோடிருக்கிறதே என்ற ஆதங்கம் தான்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
ராஜு! இன்று முதல் அநேகமாக எல்லாத் தளங்களிலும் பின்னூட்டமிடமுடிகிறது என்பதே பெரிய ஆறுதலான செய்தி.
கருணாநிதியை ஏற்கெனவே எல்லோரும் பந்தாடி முடித்த பின் செத்த பாம்பை அடிக்கவா நான்?
அடுத்த பதிவிலிருந்து தொடர்ந்து சந்திக்கலாம்.
@சுந்தர்ஜி
இனி வரும் காலங்களில் உங்களின் கருத்துக்களால்
என் படைப்புகள் முழுமை பெரும்
@bala
தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு நன்றி சகோ
வணக்கம் இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்
Post a Comment