இது எல்லோரும் எழுதி தீர்த்த விஷயம் தான் என்றாலும் எனக்கு இதில் மற்றவர்களைவிட சற்றே கூடுதலான உரிமை உண்டு காரணம் நான் மன்னையின் மகன் என்பதால்.............
சசிகலாவின் நீக்கத்தின் நோக்கம் இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது , அதன் காரணத்தை இன்றுவரை ஜெயலலிதா சொல்லவில்லை , அது அவசியமா இல்லை அவரின் தனிப்பட்ட விஷயமா என்று பார்த்தோமேயானால் ஜெ அவரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றி இருந்தால் அது அவரின் தனிப்பட்ட விஷயம் ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பாக சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சியை விட்டு வெளியேற்றும் போது அதற்கான காரணத்தை, அவர் அவரின் தொண்டர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் ஆனால் வழக்கம் போலவே இதிலும் மர்மம், மௌனம்
அதோடு சேர்த்து இதுவரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குற்றங்களுக்கும் , ஊழல்களுக்கும் , தவறுகளுக்கும் சசிகலாவே முழு பொறுப்பு என்பது மாதிரியான செய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக பரப்ப படுவது சரியல்ல என்பது என் கருத்து , அதே வேளையில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கமும் , அராஜகமும் அந்த கட்சியில் இல்லை என்று சொல்லவோ அதை நியாயப்படுத்தவோ இல்லை இந்த பதிவு , ஆனால் அந்த தவறுகளுக்கு ஜெயலலிதாவும் பொறுப்பு என்பதுதான் என் கருத்து.
இதில் ஜெயலலிதாவிற்கு பொறுப்பு இல்லை சசிகலாவே முழு காரணம் என சொன்னால், ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவி , மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பதவில் இருப்பவர் சசிகலா என்ற ஒற்றை மனுஷிக்கு அடிமையாக இருந்தார் என்றல்லவா அர்த்தம், இதற்கு முன் சசிகலாவை பற்றியும் அவர்தம் குடும்பத்தை பற்றியும் யாரும் குறை கூறவோ குற்றம் சொல்லவோ இல்லையா என்ன ? அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வந்ததென்றால் அதன் காரணம் என்ன ?. அதற்கான காரணம் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கும் அதன் பின் இடப்பட்ட திட்டங்களும் என்றால், மற்றவர்களுக்கு பங்கம் என்றால் அமைதியாக இருக்கும் ஜெயலலிதா தனக்கு ஆபத்து என்றால் ஆவேசப்படும் சுயநலவாதியா என்ன ?
இதுநாள் வரை சசிகலா பெற்ற பயன்களை அவரின் தவறுகளை சொல்பவர்கள் ஜெயலலிதா விற்காக அவர் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் பட்டியலிடாததேன்?என்னமோ சசிகலாதான் எல்லாக் குற்றங்களையும் செய்தவர்மாதிரியும் ஜெயலலிதா தவறே செய்யாதவர் மாதிரியும் மாயையை உருவாக்குவது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை , அப்படியே இது உண்மையாக இருந்தாலும் அவரின் தவறுகளை தடுக்காது இருந்த ஜெயலலிதாவும் குற்றம் செய்தவர்தானே ? அதை சசிகலா வை குறை சொல்பவர்கள் வசதியாக மறந்ததேன் ?

சசிகலா மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நீக்கத்தால் ஜெயலலிதாவின் தவறுகளை மறைக்க முடியாது, என்பதே என் கருத்து, இது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் மக்களுக்கு நிகழ்ந்து விடப்போவதில்லை. இதற்கு ஜெயலலிதாவின் புயல் நிவாரண கடலூர் ஹெலிகாப்டர் பயணமே சாட்சி , இதைப் பற்றி பின்னொரு பதிவில் .
இந்த பதிவை ஒரு மாற்று கருத்திற்காகவும், என்னுடைய மனதில் தோன்றிய கேள்விகளுக்காகவும் பதிந்தேனே அன்றி இன்றுவரை நான் மன்னார்குடியில் இருந்து வந்திருந்தாலும் அவரின் குடும்பத்தினருடன் ஒரு வினாடி தொடர்பும் இல்லாதவன் , இந்த பதிவை படித்து நான் அவர்தம் குடும்பத்தால் பயன் பெற்றவனாக நீங்கள் கருதினால் நான் பொறுப்பல்ல .
நன்றி !
அன்பன்
ARR
9 comments:
"மன்னையின் மகன்"....நன்றாக உள்ளது. இந்த உலகில் நீங்கள் ஒருவர் மட்டுமே மன்னையின் மகன்.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.............
லட்சகணக்கான மன்னையின் மகன்களில் நானும் ஒருவன்.சொல்லாதவர்கள் நிறைய........
அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க சார்
நானும் <a href="http://madhavan73.blogspot.com>மன்னையின் மைந்தருள் ஒருவன்தான்</a>..
இது பற்றிலாம் பேசி.. எதுக்கு நம்மளோட டயத்த வேஸ்ட் பண்ணனும்.. நா என்னோட பொழப்பப் பாத்துக்கறேன் சாமியோவ்..
நடுநிலைத் தவறாத நேர்மையான
அலசல்!
மிகவும் சரியானதே!
தமிழப் புத்தாண்டு, பொங்கல்
வழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
நீங்கள் சொல்வது உண்மை. ஆனாலும், தான் இது வரை செய்த தவறுகளை அழித்துவிட்டு மறுபடியும் முதலில் இருந்து தொடங்கும் அபூர்வ வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு. அடித்து ஆடினால் எல்லோருக்கும் பெரிய நன்மை.. பார்க்கலாம்.. என்ன செய்கிறார்கள் என்று!
என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது என்கிற
சினிமாப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது
தங்கள் கருத்துதான் நடு நிலையாளர்களின் கருத்தும்
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
கொஞ்சம் எச்சரிக்கையாவே இருந்துக்க தம்பி...சனிப்பெயர்ச்சி மன்னார்குடிக்கே சரியில்லையாம்...ஜாக்கிறத....
தாங்கள் எழுப்பிய இந்த கேள்விகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுநிலையாளர்களின் மனதில் ஏற்ப்பட்ட ஐயம்.மிக சரியான அலசல்.
Post a Comment