நேற்று நடந்த மந்திரிசபை மாற்றத்தின் படி அ.தி.மு.க., அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக எம்.எல்.ஏ.,க்கள் சிவபதி, முக்கூர் சுப்ரமணியன் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்று கிழமை , 30 நாளுக்கு ஒருமுறை அம்மாவாசை மாதிரி மாற்றப்படும் செல்வி.ஜெயலலிதாவின் அமைச்சரவை மக்கள் மனதில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைவிட, இந்த மாதிரியான மாற்றங்கள் அமைச்சர்களை எப்படி மக்கள் பணியாற்ற வைக்கும், துறை ரீதியான ஞானம் பெற எத்தனை காலம் பிடிக்கும் , ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் நிர்வாக ரீதியாக இந்த அரசு இன்னும் நிலைபெறாமல் இருப்பது தமிழகத்தின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்கிற கவலையோ, எண்ணமோ துளியும் இன்றி இப்படி துக்ளக் தர்பார் போல மந்திரிகளை மாற்றுவது ஏன் என்று யாருக்கும் தெரிவதில்லை, அதை பற்றிய அறிவிப்பும் அரசு வெளியிடுவதில்லை. ஆனால் இங்கு நடப்பது மக்களாட்சி.
ஏற்கனவே இதுமாதிரியான நிர்வாக நிலையின்மையால் தாண்டவமாடிய தானே புயலின் பாதிப்பிலிருந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கடலூர் பண்ருட்டி , நெய்வேலி மக்கள் மீளமுடியாமலும் அடிப்படை வசதியின்றியும் தவிதவித்து வருகின்றனர். இந்த பாதிப்பின் தன்மையையும் கோரத்தையும் முப்பது நிமிட பயணத்தில் அறிந்து கொண்டார் (?) நம் முதல்வர் .
இதில் இன்னுமொரு விஷேச செய்தி இப்போது அமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் திரு.சிவபதி ஏற்கனவே, அமைச்சராக இருந்து பின் நீக்கப்பட்டவர் , அவர் நீக்கப்பட்டதன் தகுதி குறைவென்ன ? சேர்க்கப் பட்டதென் தகுதி நிறை என்ன? யாரும் அறியார் . மாற்றம் ஒன்றே மாறாதது சரிதான் ஆனால் மாறிக்கொண்டே இருப்பது ஒரு நிலையான நல்லாட்சியின் அறிகுறியல்லவே ?
களை எடுத்தல் அவசியம்தான் ஆனால் களைஎடுத்தலே விவசாயம் (நிர்வாகம்) அல்ல , இன்னும் இதில் விதைதவரின் தவறும் இருக்கிறது. சிறந்த விதையை விவசாயி தேர்ந்தெடுப்பதைப் போலே நல்ல அமைச்சரவை சகாக்களை தெர்தெடுப்பதும் முதல்வரின் முதல் கடமை , இனியாவது இவர்களாவது நிலைத்திருக்கட்டும்.
அன்பன்
ARR
19 comments:
மந்திரிகளை நீக்கினால் செய்தி என்கிற காலம் போய், நீக்காமல் இருந்தால் தான் செய்தி என்கிற ஆச்சர்யம் வந்துள்ளது.
உண்மை சார், நகைக்க வைக்கும் வேதனை இது. நன்றி உங்களின் விரைவான வருகைக்கும்,கருத்திற்கும்.
முதல்வர் மட்டுமே நிலையாவார்
மற்றவர் அனைவரும் இலையாவார்!
சா இராமாநுசம்
கருத்தை கவிதையாய் பதிந்தமைக்கு
மிக்க நன்றி அய்யா.........
துக்ளக் தர்பாரே சிரமம்.இதில் துக்ளக் ஆலோசகராக வேறு வந்து விட்டால்:)
இவ்வளவு நாளும் துக்ளக்கை கேட்டுத்தான் ஜெ செயல்பட்டாரா என்ற கேள்வியும் கூடவே வருகிறது.
எப்படியோ தாத்தா கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்:)
வாழ்க்கையில் மாறுதல் தான் நிஜம் என்றாலும், மாறுதல் மட்டுமே நிஜம் என்ற ‘உயர்ந்த’ கொள்கைகளோடு நடக்கும் ‘மக்களாட்சி’யைப் பார்க்கும்போது, பாரதியின் ‘பேய் ஆட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ வரிகள் நினைவுக்கு வருகின்றது! இந்த வாராந்திர மாற்றல்களைப் பார்க்கும் போது ‘அதிமுகவில் அத்தனை எம் எல் ஏக்களும் திறமையானவர்களா அல்லது யாருமே திறமை யில்லாதவர்களா?’ என்ற சந்தேகம் எழுகிறது - முடிந்தால் யாராவது பதில் சொல்லுங்களேன்!
நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி அர்த்தம் மிக்கது. 'அதிமுகவில் அத்தனை எம்எல்ஏக்களும் திறமையானவர்களா அல்லது யாருமே திறமை இல்லாதவர்களா?' இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பு ஜெயலலிதா குறித்த அடிப்படையான கேள்விக்கு நமக்கு விடை கிடைத்துவிட்டால் எல்லாச்சிக்கலுக்குமே விடை கிடைத்துவிடும்.
@ ராஜ நடராஜன்
பதிவின் உள்ளர்த்தம் புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி சார், தாத்தா கனவோடு மட்டுமே இருக்கட்டும், கூடவே இளைஞர்களுக்கும் வழிவிடட்டும்.
@ R.S.KRISHNAMURTHY
தங்களின்
முதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்,
முழு நன்றி அய்யா.
உங்களின் கேள்வி விடை சொல்ல முடியாத கேள்வி.ஆனாலும் பொதுவாக சொல்லுவதென்றால், திறமையில்லாதவர்கள் அமைச்சராக்கியதும், திறமைசாலிகளாகிவிடுவது பிடிக்காமல் கூட இருக்கலாம்.
@ Amudhavan
சார் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மனம் மகிழ்ந்த நன்றி. இப்படி விடை தெரியாத கேள்விகள் பல இருக்கிறது சார். என்னமோ நடக்குது மர்மமா இருக்குது, காலம் எல்லா கேள்விகளுக்கும் விடை தரும்
இது ஒரு தொடர்கதை...
ஆனால் நமக்கு சோகமான முடிவுதான்..
வாக்களித்த பிறகு இவை எவற்றிலும் கேள்வி கேட்க முடியாமல் இருப்பது சோகம்தான். கேள்வி கேட்கலாம்...அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். மக்களின் வாக்குகள் அவர்களை அந்த உயரத்தில் வைத்து விடுவதால் கீழே நடப்பதை அவர்கள் பார்ப்பதும் இல்லை, உணர்வதும் இல்லை. அவ்வளவு உயரத்திலிருந்து விழும்போது அடியின் பலம் தெரியும். ஒரு துறையில் ஐந்தாண்டுகள் நீடித்தாலே எவ்வளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியாமலிருக்கும்போது மாதமிருமுறை மியூசிகல் சேர் விளையாடினால் என்ன ஆகும்..!
All the AIADMK members know that only Jayalalitha is the permanent leader and others are just dummies making hay while the Sun shines, or the uthayasuriyan dims and dissappears.
எப்போதும் துக்ளக் தர்பார் தான் ! நன்றி sir !
கழகங்களைப் பற்றிக் காமராஜ் சொன்னதாக நினைவு: இதெல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைனேன்..
ஊழல் செய்யவோ சுய செல்வாக்கைப் பெருக்கவோ நேரம் கிடைக்காமல் போவதற்காக அதிகாரிகளை அடிக்கடி மாற்றும் வழக்கம் எத்தனையோ நூற்றாண்டுகளாக நடைபெறுவது தான். அதிலும் சர்வாதிகாரிகள் அத்தனை பேரைப் பற்றியக் குறிப்புகளிலும் இந்தப் பழக்கம் இருந்ததை அறியலாம்.
//இனியாவது இவர்களாவது நிலைத்திருக்கட்டும். //
no chance!!
துக்ளக்கை கேவலப்படுத்தாதீர்கள்......
ஜெயாவின் போக்கு புரியவில்லை என பலர் கருதுகின்றனர்.இதைப்பற்றி நான் நினைப்பது இதுதான்:
1.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெளிப்படையில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள் ஜெ யும் க வும்.
2.அதே சமயம் தன் ஆட்சிக்காலத்தில், மற்றவர் அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற, கடுமையாக உழைப்பவர்களும் இவர்களே!
உதாரணத்திற்கு 1991,2001,2011 தேர்தல்களில் கருணாவிற்கு எதிரான ஒட்டு ஜெயாவை ஆட்சிபீடத்தில் அமர்த்தியது.அதேபோல 1995,2006 தேர்தல்களில் ஜெயாவிற்கு எதிரான ஒட்டு கருணாவை ஆட்சிபீடத்தில் அமர்த்தியது.
3.எனவே இவர்களுக்கு இடையே இருக்கும் விரோதம் போலியானது.
கோகோகோலா,பெப்சிகோலா;
சரவணா ஸ்டோர்ஸ்,ஜெயச்சந்திரன் போன்ற நிறுவனங்களுக்குள் இடையே உள்ள போட்டி போன்றது.ஒரு வியாபார யுக்தி; அம்புட்டுதேன்!
இவர்கள் நோக்கம் மூன்றாவது போட்டியாளர் உள்ளே வராமல் தடுத்து தாங்கள் இருவரும் மாறி மாறி கொள்ளை அடிப்பதே ஆகும்.
4.இந்த மாயைக்கு தமிழக மக்களும் வீழ்ந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.இப்போவே பேச்சு "இதற்கு கருணா ஆட்சியே தேவலை!" என்பதுதான்!
Why not Ramdass,Vijayakanth,
Vai.Ko or Nalla Kannu as alternate?
5.கருணாவிற்கோ,ஜெயாவிற்கோ கிடைக்கும் வெற்றி தமிழக மக்களுக்கு கிடைக்கும் தோல்வி!!
நன்றி.
Post a Comment