Friday, 1 July 2011

பால்ய விவாகம் தவறில்லை ....

  சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி என் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியதை போல இருந்தது, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள்(அதிக பட்சமாக அவர்களுக்கு 14 வயதிருக்கலாம் ) மூன்று பேர் தன் ஆண் நண்பர்களுடன் பாண்டிசேரி போனதாகவும் அங்கு நேரமானதால் அவர்களை அப்படியே விட்டுவிட்டு அவர்களின் ஆண் நண்பர்கள் ஓடிவிட்டதாகவும் , அங்கேயே சுற்றி திரிந்து இரண்டு நாட்கள் கழித்து வீடு வந்து சேர்ந்ததாக செய்தியப் படித்தவுடன், எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை, மனம் வேதனையிலும் வெறுப்பிலும் நொந்து போனது.


        இதெற்கெல்லாம் முக்கிய காரணியாக நான் பார்ப்பது பெற்றோர்களையும், கலாச்சாரங்களை சீரழிக்கும்  சினிமாவும் தான். தன் மகன், மகள்களின் நடவடிக்கைகளை கண்காணிக்காமல் , கண்டிக்காமல் பணம் சேர்ப்பது ஒன்றே குறியாக இருக்கும் இக்கால பெற்றோர்கள்,  பணம் சம்பாதிக்கும் மிஷினாக மட்டும் இன்றி பொறுப்புள்ள மனிதர்களாகவும் நடந்து  கொள்ளவேண்டும் எனபது என் அவா .       இன்று இணையங்களில் பார்த்தோமேயானால் பள்ளி மாணவ மாணவியர்களின் பாலியல் பற்றிய தவறான சிந்தனைகளும் செயல்பாடுகளும் வருங்கால இளைய சமுதாயத்தினரை எப்படியெல்லாம் சீரழித்து இருக்கிறது என்று தெரிய வரும் ,இந்த மாதிரியான பாலியல் உறவு காட்சிகளை அந்த மாணவிக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ எடுக்கப்பட்டு தன் நண்பர்களிடம் பெருமையாக காட்டவும் அதை  பின் பணத்திற்காக இணையத்தில் இணைக்கும் செயலையும் செய்கின்றனர்   இந்த மாதிரியான சீரழிவுகளுக்கும் , கலாச்சார சீர்கேடுகளுக்கும் பெற்றோரின் மனதை எப்படி எல்லாம் பாதிக்கும், அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி  பாதிக்கப்படும் என்பதை  இருவருமே நினைத்துப் பார்ப்பதில்லை இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாலய விவாஹங்களே தவறில்லை என்ற எதிர் சிந்தனைக்கு தயாராகிறோம்.        
                                
                     பள்ளி படிக்கும் வயதில் இது மாதிரியான காதலும் காமமும் கொள்ள முக்கிய காரணம் இன்றைய   சினிமாக்களே என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

               சமீப காலங்களில் வந்த படங்களில் பெரும் வெற்றி பெற்ற படங்களில் பள்ளிப் பருவ காதலே முக்கியமாக இருக்கிறது, பள்ளி சீருடை அணிந்து கதாநாயகி காதலனுடன் சுற்றும் போதும் , உரசும் போதும் தன்னையே கதாநாயகிகளாக உருவகப்படுத்தி கொள்ளுகிற மாணவிகள் அதற்கான வடிகாலை தேடுகிறார்கள் அல்லது அதுமாதிரியான வலையில் விழ வைக்க படுகிறார்கள், இரண்டுமே தவறான செயல்கள்தான்,


                       இது மாதிரியான படங்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் நாமும் அந்த தவறுக்கு உடந்தையாகிறோம், அவர்களை இந்த வெற்றியின் மூலம் ஊக்குவித்தவர்களாகிறோம், உடனே எல்லா சேனலும் அந்த இயக்குனரை பேட்டி எடுக்க அவரும் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி உலகத்திற்கு ஒரு மிகப் பெரிய கண்டு பிடிப்பை கொடுத்தவர் போல கதா நாயகி சகிதமாய் பேட்டி கொடுக்க அதையும் நான் கண் கொட்டாமல் பார்க்கிறோம்.


  சரி இதற்கெல்லாம்  தீர்வு தான் என்ன?. இப்படி இளம் வயதினரை மனம் கிளர்ச்சி கொள்ளும் வகையில் சினிமா தயாரிப்பதை தடுக்க  வேண்டும் , பள்ளி சீருடை அணிந்து காதல் செய்யம் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவ மாணவிகளுக்கு சினிமா, டிவி தவிர்த்து ஆன்மீக போதனைகளை சொல்லி கொடுக்கவேண்டும் , ஒழுக்கம் என்பதன் முக்கியத்துவம் உணரவைக்க படுவது  மிக முக்கியம்  பெற்றோர்கள் அவர்களுடன் நல்ல நண்பராக பழகவேண்டும், கட்டுபாடுடன் கூடிய சுதந்திரம்  மட்டுமே தரவேண்டும். மாணவ, மாணவிகளும் தங்களின் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படவேண்டும்.

         இதுமாதிரி பாதை தவறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் அது கூட தவிர்க்க படவேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம் .

அன்பன் 
ARR

49 comments:

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ், இருங்கள் படித்து விட்டு வாறேன்.

நிரூபன் said...

காத்திரமான காலத்திற்கேற்ற பதிவினைத் தந்திருக்கிறீங்க.

உண்மையில் பெற்றோரின் பிள்ளைகள் மீதான கவனம் குறைகின்ற போது தான், பிள்ளைகள் பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வெளியே பறக்கின்றார்கள்.

இளசுகள்- டீன் ஏஜ் வயதில் உணர்ச்சிகளுக்குத் தூண்டுகோளாக இருப்பதால் தான் பள்ளி மாணவர்களின் சல்லாபங்களைத் தாங்கிய படங்களை- அவர்களைக் குறிவைத்து எடுக்கிறார்கள். காரணம் இளைஞர்களைக் குறி வைப்பதால் வியாபாரமும் கூடும் என்பதால்,

இன்றைய காலத்தில் சினிமாவில் மட்டுமல்ல, சின்னத்திரைகளிலும் இடம் பெறும் நடன நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களினை வைத்து குலுக்கல் ஆட்டம் காண்பித்து அவர்களை கொண்டு தமது வியாபாரத்தைப் பெருக்குவதில் தான் முனைப்புடன் விளங்குகின்றார்கள் ஊடகத் துறையினரும்,

சகோ ஒரு கேள்வி,
மாணவர்களின் பொது அறிவுப் போட்டி, தர்க்க ரீதியான விவாதங்கள், அறியிவற் போட்டிகளுக்கு இன்றைய தினத்தில் எத்தனை ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன?

இவர்கள் எல்லோரும் மாணவர்களைத் தூண்டி விடும் செயற்பாடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்,

இவ் நிலமையினைத் திரைது துறையினரோ, தணிக்கைக் குழுவினரோ புறக்கணிக்கத் தயக்கம் காட்டுவார்கள்- காரணம் இளசுகள் மூலம் வியாபாரம் பெருகுவதாகும்.

மக்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் சினிமாக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விடயங்களால் சீரழிகின்றது என்பதை உணர்ந்தும்,
தொழில் நுட்ப விடயங்களில்(கணினி, அலைபேசி)
பிள்ளைகளினை கண்டிப்புடன் வளர்த்தாலும் தான் மாணவர்களினை தவறான வழிக்குச் செல்ல விடாது வளர்க்க முடியும்.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
உங்களின் விசால அறிவின் பார்வையின் வழியே பல கருத்துக்களை தந்துளீர்கள் சகோ ,
உண்மைதான் தொலைக்காட்சியிலும் போது அறிவு சம்பந்தமான நிகழ்சிகள் மிகக் குறைவுதான்

நன்றி உங்களின் திடமான கருத்திற்கு

தமிழ் உதயம் said...

பெரும்பாலான தவறுகளுக்கு பெற்றோர்களின் அஜாக்ரதையே காரணம். சுறறுப்புறம் - நல்லது மற்றும் கெட்டவைகளின் சங்கமம். அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள பழக வேண்டும். பெற்றோர் பழக்க வேண்டும்.

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
உண்மையான கருத்திற்கு நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
இனிய மாலை வணக்கம் சகோ

Madhavan Srinivasagopalan said...

தெள்ளத் தெளிவாக..
வெட்ட வெளிச்சமாக்..
சொல்லப்பட்டுள்ள கருத்து..
உண்மை.. முற்றிலும் உண்மை..
பெற்றோம் சரிவர கவனிக்க வேண்டும்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இன்று பின்னூட்டமுடிகிறது ராஜு. உங்கள் டெம்ப்ளேட் மாறியது ஒரு காரணமாக இருக்கலாம்.

இதற்கு பெற்றொரின் முதிர்ச்சி-ரசனை-ஊடகங்களின் பொறுப்பு-கல்விக் கூடங்களின் தரம் மூன்றுக்குமே பெரிய பங்கிருக்கிறது.

குழந்தைகளின் ஆதர்சமாக பெற்றோரும் ஆசிரியர்களும் இருக்கவேண்டியது அவசியம். இந்தக் கூட்டணி ஊடகங்களைத் தேர்வு செய்யும் பக்குவத்தை அவர்களுக்கு அளித்துவிடும்.

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
தெள்ளத் தெளிவாக..
வெட்ட வெளிச்சமாக்..
சொல்லப்பட்டுள்ள கருத்து..
நன்றி.. நன்றி ... நன்றி ....

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி

//இன்று பின்னூட்டமுடிகிறது ராஜு. உங்கள் டெம்ப்ளேட் மாறியது ஒரு காரணமாக இருக்கலாம்.///

மிக்க நன்றி அண்ணா உங்களின் கருத்துக்கு
உங்களின் பின்னூட்டம் எனது சக்தி

Unknown said...

///இப்படி இளம் வயதினரை மனம் கிளர்ச்சி கொள்ளும் வகையில் சினிமா தயாரிப்பதை தடுக்க வேண்டும் , பள்ளி சீருடை அணிந்து காதல் செய்யம் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், ///
எனக்கும் ஆசை தான் ஆனா இருக்கிற சென்சார் போர்டே வேணாம் என்னும் சினிமாக்காரர்கள் இதை நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க ...மேலும் சினிமாவை மட்டும் சென்சார் பண்ணிட்டு நடுவீட்ல BREAKING NEWSன்னு போட்டு காட்டுகிற பரபரப்பு காட்சிகள் கூட சென்சார் செய்ய வேண்டிய ஒன்று தான் ,,,அடுத்து கலை எடுக்க வேண்டியது INTERNET

Unknown said...

மாணவ மாணவிகளுக்கு சினிமா, டிவி தவிர்த்து ஆன்மீக போதனைகளை சொல்லி கொடுக்கவேண்டும் ///

இதை தான் அவசியம் செய்யணும் நண்பா ...
எளிய தமிழில் வேதங்கள் என்னும் புத்தங்கள் மூலம் நம் நமது வேர்களை படித்தும் படிபித்தும் பெரிய புரட்சி செய்யலாம் ...

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
உங்களின் கருத்து என் வாதத்திற்கு வலு சேர்க்கும் நண்பா

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது

நன்றி நண்பா உங்களின் கருத்திற்கு

Yaathoramani.blogspot.com said...

பெற்றோர்களும் தங்களுக்கும் குழந்தைகளுக்குமான
இடைவெளியில் அதிக கவனம் கொள்ள வேண்டும்
அந்த இடைவெளியில்தான் இப்படிப்பட்ட
நபர்களும் நிகழ்வுகளும் உட்புகுந்து விடுகின்றன
சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய விதத்தில்
மிகச் சரியாகச் சொல்லிப்போகும் தரமான பதிவு

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மிக்க நன்றி ரமணி சார்
உங்களின் ஊக்கம் என்னை வளமாய் வழி நடத்தும்

சென்னை பித்தன் said...

பெற்றோர்களின் பொறுப்பு மிக அதிகம்.பிள்ளைகளின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டியதுதான்.பெற்றோர்-பிள்ளைகளின் இடையே தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் மிக அவசியம்.
சரியான கோனத்தில் பார்த்து விரிவாக எழுதியிருக்கிறீர்கள்!

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
மிக நல்ல கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

ஸ்ரீராம். said...

குடும்பத்தில் உள்ள அனைவரும் தொலைகாட்சி, செல் போன்றவற்றை அணைத்து விட்டு இரவு உணவைச் சேர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது எல்லோரும் சேர்ந்து மனம் விட்டு பேசிக் கொள்ளும்பழக்கம் வர வேண்டும்.

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
மிக அற்புதமான கருத்து எல்லோரும் ஒத்துக்கொள்ளவேண்டிய , பின்பற்ற வேண்டிய கருத்து
நன்றி தங்களின் கருத்துக்கு

rajamelaiyur said...

மிக நல்ல கருத்து

rajamelaiyur said...

அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டிய பதிவு

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி உங்களின் கருத்துக்கு

ஷர்புதீன் said...

//குடும்பத்தில் உள்ள அனைவரும் தொலைகாட்சி, செல் போன்றவற்றை அணைத்து விட்டு இரவு உணவைச் சேர்ந்து சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது எல்லோரும் சேர்ந்து மனம் விட்டு பேசிக் கொள்ளும்பழக்கம் வர வேண்டும். //

i strongly agreed this only than YOUR ARTICLE!!

சிவகுமாரன் said...

\\\இது மாதிரியான படங்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் நாமும் அந்த தவறுக்கு உடந்தையாகிறோம், அவர்களை இந்த வெற்றியின் மூலம் ஊக்குவித்தவர்களாகிறோம்,///

மிகவும் சரி. இந்த மாதிரி படங்களை என் மனைவி மிகவும் வெறுக்கிறாள். காதல். மைனா போன்ற படங்கள் தடை செய்யப்பட வேண்டியவை என்பது என் மனைவியின் வாதம். சரி தானே

A.R.ராஜகோபாலன் said...

@@ஷர்புதீன்
தேங்க்ஸ் நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
உங்கள் கருத்துக்கு நன்றி
சகோதரிக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

அண்ணா தங்களின் இப்பதிவு மிகவும் அவசியமானது.இன்றைய காலத்தில் வளரும் தலைமுறையினரை கெடுப்பதே இதுபோன்ற சிறுவயது மற்றும் பள்ளிக்கூட காதல் கதைகள்தான். அதை எடுப்பதை தடுக்கவேண்டும் அதைவிட இதை பிரபலபடுத்தும் விதமாக இமாலய வெற்றியாக்கும் மா[ம]க்களும் திருந்தவேண்டும்.அதைவிட பெற்றோர்களின் பங்கு தங்களின் குழந்தைகளை மிக அக்கரையோடு அதே சமயம் அனுசரனையான கண்டிப்போடு கண்கானிக்கவேண்டும். அனைத்து தரப்பிலும் சரியாக இருந்தால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

//இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாலய விவாஹங்களே தவறில்லை என்ற எதிர் சிந்தனைக்கு தயாராகிறோம்.//

நிச்சயமாக தவறேயில்லை தற்காலதில்..

பாராட்டுகள் அண்ணா.

இப்பதிவை முகநூலில் இணைத்து விடுகிறேன் அண்ணா அனைவரும் படித்தறிந்துகொள்ள ஏதுவாக.இணைப்பதில் தவறில்லையே!அண்ணா

இராஜராஜேஸ்வரி said...

காலத்திற்கேற்ற கருத்துள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@அன்புடன் மலிக்கா
தங்களின் விசாலமான கருத்திற்கு நன்றி சகோதரி
உங்களின் மூலம் முகநூலில் அறிமுகமாவதற்கு பாக்கியம் செய்திடல் வேண்டுமே சகோதரி , நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்

சாகம்பரி said...

இது போன்ற சினிமாக்களை ஜெயிக்க வைப்பதே இளைய வயதினர்தானே. முந்தைய வருடங்களில் வேறு வடிவங்களில் இது போன்ற ஆணிவேரை பிடுங்கும் விசயங்கள் இருந்தனவே. எல்லாவற்றையும் தாண்டி நம்மை ஜெயிக்க வைத்த, நம் பெரியவர்களின் அன்பு இன்றைய குழந்தைகளுக்கு கிட்டவில்லை என்பது என் கருத்து. பொறுப்பில்லாமல் , பொருளாதார சர்க்கஸில் ஏறி கோமாளிபோல ஆகிவிடும் பெரியவர்களையும் ஒரு வார்த்தை (சாடி) சேர்த்திருக்கலாம் சார்.

A.R.ராஜகோபாலன் said...

@சாகம்பரி
//எல்லாவற்றையும் தாண்டி நம்மை ஜெயிக்க வைத்த, நம் பெரியவர்களின் அன்பு இன்றைய குழந்தைகளுக்கு கிட்டவில்லை என்பது என் கருத்து///

இபோதெல்லாம் செல்லம் என்பது கேட்டவற்றை வாங்கி கொடுக்கும் பொருளாதார இணைப்பகிவிட்டது , செல்லம் என்பது நல்ல கதைகளை சொல்லி , நேரத்தை செலவிட்டு விளையாடி
ஒழுக்கத்தை கற்று தரும் செயலாக இருக்கவில்லை
நன்றி உங்களின் கருத்துக்கு

குணசேகரன்... said...

நீங்கள் சொல்வது சரி. ஆனா அவங்க பொழப்பத்தான் பார்க்கிறாங்களே ஒழிய சமூக அக்கறை இல்லையே..அவர்கள் மாறினால் சமூகம் மாற்றப்படும்.
என் பதிவு பக்கமே வர்ற தில்லை போல..பிசியா?

A.R.ராஜகோபாலன் said...

@குணசேகரன்
நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு
அப்படியெல்லாம் இல்லை
இனி விடாது கருப்பு

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாக ஆராய்ந்து பார்த்து மிகச்சரியாகவே எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

The last but one para is Superb.
It will give solution for this problem.

Voted 5 to 6 in Indli

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி ஐயா
உங்களின் வருகையும்
வாக்கும்
கருத்தும்
என்னை பெருமை கொள்ளச் செய்கிறது

Unknown said...

தேடிப்போய் பார்த்ததே பெரியதிரை-நம்மைத்
தேடிவந்து பார்க்கிறதே சின்னத்திரை
வீடுதேடி வந்ததாலே வந்த இழிவே-இவை
விளங்கவில்லை என்றாலே மேலும் அழிவே
பாடுபட்டு பொருள்தேடும் பெற்றோர் இங்கே-தம்
பார்வையிலே குழைந்தைகளை காணல் எங்கே
கேடுகெட்டுப் போயிற்றே இந்த நாடே-சொன்னால்
கேட்பதற்கு ஆளுண்டா ?அழியும் பீடே

புலவர் சா இராமாநுசம்

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ராஜகோபால்.மிகவும் அருமையான பதிவு.இதை படித்தவுடன் அந்தகாலத்தில் பெரியவர்கள் சரியாகத்தான் பால்யவிவாகம் செய்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது...

வெங்கட் நாகராஜ் said...

சரியான கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை.... எங்கே போய்க் கொண்டு இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்....

நெல்லி. மூர்த்தி said...

நம் ஊடகங்கள் குறித்து நீண்ட நாட்களாகவே எனக்கும் ஒரு ஆதங்கம் தான். வணிக நோக்கிற்காக சமூகத்தையே சீரழிக்கும் இவர்களுக்கு எப்படி மணி கட்டுவது என்று தான் இன்னமும் புரியவில்லை. நம்மை நாமே பொத்தாம் பொதுவாகக் குறைக் கூறிக்கொள்வதிலும் உடன்பாடில்லை. இது போன்ற விழிப்புணர்வு எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் இருந்தாலொழிய இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இயலாது.

A.R.ராஜகோபாலன் said...

@நெல்லி. மூர்த்தி
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
நன்றி
உங்களின்
உன்னத கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@RAMVI
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு

ஊசி said...

சமூக அக்கறையுள்ள பதிவுக்கு முதலில் சலாமும், சபாஷும்..!

நம் குழந்தை அப்படியெல்லாம் கெட்டுப்போகாது என்ற நம்பிக்கையும், தப்பித்தவறி தப்பு செய்யாத பிள்ளையை சந்தேகித்துவிட்டால் அதன் மனம் கசங்கிவிடுமே என்ற பாச உணர்வும் பெற்றோரை கட்டிப்போட்டுவிடுகிறது.

வளர் தலைமுறை சீரழிய ஊடகங்களும், அலைபேசி உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிகளும் ஊக்கிகளாக உள்ளன. இவற்றினிடையே தன் குழந்தைகளை நெறிப்படுத்துவது நிச்சயமாக பெற்றோருக்கு கயிற்றின்மேல் நடக்கும் வித்தைதான்..!

குழந்தையின் நட்புவட்டத்தைக் கண்காணித்தாலே பல விடயங்கள் பிடிபட்டுப்போகும். குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்து விவரம் புரிந்துகொள்ளும் அகவையில் பெற்றோரின் கடமை துவக்கப்படவேண்டும். சீரழிவுச்செய்திகளை கேள்விப்படும்போது, தன் குழந்தைகளைப் பார்வையாளராக வைத்து, இச்செய்தி தொடர்பான குடும்பம் அடையவிருக்கும் அவமானங்கள் குறித்து பெற்றோர் வருத்தம் தெர்வித்து தங்களுக்குள் பேசிக்கொள்ளுதல்கூட‌ பிள்ளைக்கு அறிவுரையாக இருக்கும்.

அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள்கூட சில குழந்தைகளை தடம்புரள வைக்கும் ; குழந்தைகளின் நியாயமான ஆசைகளுக்கு தடைநில்லாப் பெற்றோர் வளர்ப்பு வீண்போகாதென்பது என் சொந்த அனுபவம்..!

A.R.ராஜகோபாலன் said...

@ஊசி
மிக்க நன்றி, உங்களின் எழுத்தும் அதன் நடையும் என் மூத்த சகோதரரை ஒத்து இருக்கிறது.
உங்களின் முதல் வருகைக்கும், முத்தான கருத்திற்கும், முழு நன்றி