Wednesday, 22 June 2011

புதிய அரசின் நெருடும் சில செயல்கள்

செயல் 1.

                    
       ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு  காலில் சூடு தெரியாமல் இருக்க மினரல் வாட்டரை காவல்துறை அதிகாரி ஊற்ற இன்னொருவர் துணியால் துடைத்துக்கொண்டே செல்ல முதல்வர் நடந்து சென்றார்,பத்திரிகை செய்தி ,இது சென்ற ஜெயலலிதா அரசின் ஆடம்பர போக்கை மறுபடியும் ஞாபகபடுத்துகிறது , அந்த நாள் திரும்ப வந்து விட்டதோ என நினைக்க தோன்றுகிறது, இது மாதிரியான செயல்களை நல்ல ஆட்சி கொடுக்க போவதாக சொல்லும் முதல்வர் அனுமதிக்ககூடாது. இது காவல்துறையின் கண்ணியத்தை பாதிக்கும் செயல்.      

செயல் 2. 

                      
             டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது , அரசின் இந்த அறிவிப்பு மதுவிலக்கை  பற்றிய எண்ணமே இந்த அரசுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது, தினம் தினம் உழைக்கும் பணத்தில் முக்கால்வாசி பணத்தை மதுவிடமிழக்கும் ஏழை மக்கள் மிச்ச பணத்தையும் இழக்க வைக்கும் செயலாகவே எனக்கு படுகிறது , இது குடிகாரகளை இன்னும் ஊக்குவித்து குடியை அதிக படுத்த எடுக்க பட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது.இருக்கிற காசை பிடுங்கி இலவச அரிசி கொடுக்கும் செயல் ஏற்புடையது அல்ல. 

செயல் 3 

                      
          சென்ற ஆட்சியில் இலங்கை படையினரால் நம்  தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட போதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் என கண்டன அறிக்கைகள் பல தந்த இந்நாள் முதல்வர் நேற்று, கடத்தப்பட்ட மீனவர்களுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதியது ஆட்சிகள்  மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை எடுத்துக் கட்டியது, இது மாதிரியான கண்டனங்களும் கடிதங்களும் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது எனபது இவர்கள் இருவருக்குமே தெரியும்,  நம் மீனவர்கள் தான் பாவம்.    
  
அன்பன்
ARR

58 comments:

Unknown said...

செயல் 4
--------------
அன்பரே தொடர்ந்து இந்த மாதிரி பதிவுகள் போட்டால் நடுநிளர்கள் மகிழ்வார்கள் விழிப்புணர்வு பெறுவார்கல் ... வாழ்க உமது எழத்து பனி .

செயல் 5
-----------------
ஆட்டோ வரும் அபயம் உண்டாம் ...ஹி ஹி சும்மா நகைப்புக்கு

Unknown said...

செயல் 6
voted in tamil manam

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நியுட்டனின் முதல் விதியை நிரூபணம் செய்து
கருத்திட்ட நண்பனுக்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
வாக்கிட்ட அருமை நண்பனுக்கு நன்றி

Unknown said...

செயல் 6
voted in tamil 10
செயல் 6
voted in INDLI

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
செயல் 7
நன்றி தெரிவித்தல்

Yaathoramani.blogspot.com said...

இவைகள் குறைகள்
இவைகளை ஆரம்பத்திலேயே
சரிசெய்யவில்லை எனில்
குற்றங்களாக முன்புபோல்
பெருகி வளர சாத்தியம் உண்டு
நேர்மையான நடு நிலையான பதிவு

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
முழு உண்மை ரமணி சார்
நன்றி தங்களின் கருத்துக்கு

ஷர்புதீன் said...

என்னன்னே ..இவ்வளவு வெள்ளேந்தியா இருக்கீங்க.,
:-(

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
நம்ம மனசு பியூர் கோல்டு அண்ணாச்சி
நன்றி தங்கள் வருகைக்கு
கருத்திற்கு

rajamelaiyur said...

All news are super . . . Super political postAll news are super . . . Super political post

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
Thank you Raja
for your comment

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செயல் - 1

இது அம்மாவின் அதிகார செயல்களின் ஒரு முன்னோட்டம்...

இதை அவர்கள் திருத்திக் கொண்டால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்னும் கண்ணியமாக இடம்பெறலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செயல் :

டாஸ்மாக் கொண்டு வந்ததே அதிமுக ஆட்சிதான் இதில் எப்படி அவர்கள் மது விலக்கைபற்றி பேசுவார்கள்..

24 மணிநேரமும் திறந்திருக்க வேண்டும் என்று உத்திரவிட்டாலும் ஆச்சரிய படுவதிற்க்கில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செயல் - 3

மீனவர்களின் இந்த நிலை.. இலங்கையின் இந்த செயல் என்றுதான் முடிவுக்கு வருமோ...

Anonymous said...

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்-(குறள்)
இதனை உணர உரைத்துள்ளீர் சகோ
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
புலவர் சா இராமாநுசம்

தமிழ் உதயம் said...

விட்டு பிடிக்கலாம்.விட்டு பிடிக்கலாம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கருத்துக்கள் தான். சிந்திக்க மட்டுமே முடியும். செயல் வடிவம் கொடுப்பது இயலாது என்றே தோன்றுகிறது. [1] ஒருகால், நம் கால் போல அல்லாமல், முதல்வர் கால் மிகமுக்கியமான காலாக அங்கிருந்த காவலர்கள் நினைத்திருக்கலாம். [2] தடாலடியான இலவச அறிவிப்புக்களுக்கு இந்த டாஸ்மாக் ரெவின்யூ தான் மிகவும் கை கொடுப்பதாகத் தெரிகிறது. ஆபீஸ்களிலும், ஃபேகடரிகளிலும் ஓவர்டைம் செய்து உற்பத்தியைப் பெருக்கி இலக்கை அடைவதில்லையா, அதுபோலத்தான் டாஸ்மாக் வேலை நேர நீடிப்பும்.

[3] //இது மாதிரியான கண்டனங்களும் கடிதங்களும் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது எனபது இவர்கள் இருவருக்குமே தெரியும்//

இருவருக்கு மட்டுமா, நம் அனைவருக்குமே, அந்த மீனவர்களுக்குமே கூட நன்றாகத் தெரியும். எல்லாமே ஒரு கண் துடைப்பு வேலை தான். என்ன தான் பெரிதாக செய்துவிட முடியும்? இவர்களால்.

//நம் மீனவர்கள் தான் பாவம்.//
மிகச்சரியாகச்சொன்னீர்கள்.

[எப்படியும் வோட்டுப்போட்டு விடுகிறேன். தற்சமயம் வோட்டுப்போடலாம் என்றால் சர்வர் டாஸ்மாக் வரை போயுள்ளது.]

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted.
3 to 4 in Indli &
4 to 5 in Tamilmanam

vgk

எல் கே said...

first action is not govt action. its officials action. but anyway it should be stopped.

Madhavan Srinivasagopalan said...

mm.. why can't they use e-mail.. ?

அன்புடன் மலிக்கா said...

உண்மைகள் உரக்க உறைக்க ஆதங்கத்துடன் எழுத்துகளாய். நல்லதொரு பதிவு அண்ணா.

Mathuran said...

ஆட்சிக்கு வரும்மட்டும்தான் எல்லொரும் நல்லவர்கள்.. பதவி வந்துவிட்டால் பழைய பல்லவிதான்

ஸ்ரீராம். said...

உண்மை.

Mathuran said...

ஜெயலலிதாவின் முன்னைய ஆட்சி நினைவிருக்கிறதா.. அதே மீண்டும்

இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும் நண்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
உண்மை மிக உண்மை நண்பரே
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
உங்களின் தொடர் கருத்து என்னை பெருமை கொள்ள செய்கிறது நன்றி உங்களின் கருத்துக்கு

bandhu said...

நீங்கள் சுட்டிக்காட்டியது எல்லாமே கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை தான்! தவிர்ப்பார் என்று நம்புவோம்!

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
விட்டால் பிடிக்க முடியாது தலைவரே
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

வை.கோபாலகிருஷ்ணன்
எதார்த்தத்தை சரியாக சொன்னிர்கள் ஐயா
ஆனாலும் இது போன்றவைகளை நாம் கண்டிக்கவாவது செய்யவேண்டும்
உங்களின் நல்ல கருத்துக்கு நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி உங்களின் ஆதரவுக்கு

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
very true sir they should not entertain this kind of activities
thanks for your comment sir

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
I hope that they do have
thanks for the comment Madhavan

A.R.ராஜகோபாலன் said...

@அன்புடன் மலிக்கா
தங்களின் கருத்துக்கு நன்றி சகோதரி

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்

ரொம்ப சரியாகச் சொன்னிர்கள் மதுரன்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@@மதுரன்
//இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?//


கலக்கல் பதிவு நண்பா அது

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@bandhu
மனம் மகிழ்ந்த நன்றி உங்களின் கருத்துக்கு

Unknown said...

என்ன பாஸ் இது??ரெண்டாவது மேட்டர் ரொம்பவே சுடுகுது..

நிரூபன் said...

அம்மாவின் ஆடம்பரச் செயல்களால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான்,
ஆட்சி பீடம் ஏறியதும் அம்மா
தன் பழைய விஸ்பரூபத்தைக் காட்டினால்,
மக்களின் நிலை என்னாவது?

மக்கள் பணத்தினை விரயமாக்கும் முதலமைச்சர்,
மக்களுக்கு இன்று வேண்டியது என்ன என்பதை உணர்ந்து செயற்பட்டால் நன்றாக இருக்குமல்லவா.

நிரூபன் said...

செயல் 1& 2& உணர்த்துவது யாதெனில்,

மந்திரிகளின் வாக்குறுதிகள் எப்போதுமே காற்றில் பறக்கும் வல்லமை உடையது..

செயல் 3: நாம் நடத்திய நிகழ்வுகளைச் சொல்லிக் காட்டி இன்புறுவதிலும் பார்க்க,
மக்கள் அடிக்கடி நினைத்து மகிழும் செயல்களைச் செய்து விட்டு எலக்சனில் தோற்றிருந்தால் பயனாக இருக்குமே எனும் பாடத்தினையாகும்.

vidivelli said...

nalla alachal
vaalththukkal

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
உண்மை சுடும் என்று தெரியாதா பாஸ்
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மக்களை இவர்கள் மறந்தால் மக்க இவர்களை மறந்து விடுவார்கள்
ஆனாலும் அதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்
நன்றி சகோ தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
ஆடம்பரம் மறந்து, நல்லாட்சி நடத்த வேண்டும் என்பதே மக்களின் அவா சகோ
நன்றி உங்களின் கருத்துக்கு

RVS said...

மூன்றுமே ரொம்ப சரி கோப்லி. திருத்திக்கொள்ள வேண்டும். ;-)))

சென்னை பித்தன் said...

குட்டும் போது குட்ட வேண்டியதுதான்!

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
Thank you friend

A.R.ராஜகோபாலன் said...

@RVS
அன்பு நண்பனின்
ஆமோதித்த கருத்துக்கு மனம் மகிழ்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
நன்றி ஐயா உங்களின் கருத்துக்கு

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

ராஜ நடராஜன் said...

நேற்று என்னமோ சொல்ல வேண்டுமென்று வந்தேன்.பின்னூட்டப்பகுதியைக் காணாததால் திரும்ப போய் விட்டேன்.

சிதம்பரம் கோயிலில் வி.ஐ.பி ஒருவர் வரும்போதே கூடவே ஆயுதம் தரித்த காவலர்களைப் பார்க்கும் போது கோயிலின் தனித்துவமே போய் திகீர் என்று பட்டது.இப்ப துப்பாக்கியோட துர்பாக்கிய நிலையுமென்றால் சொல்லவே வேண்டாம்.

ARR!அடிச்சு ஆடுங்க.கைதட்டறதுக்கு நிறையப்பேர் இருக்காங்க:)

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
உங்களால் நான் இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதில் மிகுந்த பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன் , உங்களின் இந்த அங்கீகாரம் என்னை பண்படுத்தும் என் எழுத்தை பலப்படுத்தும் , சிரம் தாழ்ந்த நன்றியை உங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்

A.R.ராஜகோபாலன் said...

@ராஜ நடராஜன்
உங்களின் ஆதரவுக்கு நன்றி சார்
எங்கு எது மக்களுக்கு பாதகமாய் நடந்தாலும் அதை என் எழுத்தால் பகிரங்கப்படுத்துவேன் , வேறே எதும் செய்ய முடியாத சராசரி இந்தியன் நான் .உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்

G.M Balasubramaniam said...

அரசியல் வாதிகள் திருந்த விரும்பினாலும் அடிவருடிகள் திருந்த விட மாட்டார்கள். “மாற்ற முடியாததை அனுபவிக்கும் தெளிவும், மாற்றக் கூடியதை மாற்ற மனோதிடமும், ஒன்றீல் ஒன்றைப் பகுத்தறியும் அறிவையும் அருள்வாய் இறைவா.”

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
அடிவருடிகள் திருந்த விட மாட்டார்கள். “


மிகச் சரியான வார்த்தைகள் ஐயா
உண்மையை ஒளிக்காமல் சொன்னிர்கள்
நன்றி தங்களின் கருத்துக்கு