

அதிலும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒரே திரையை பகிர்ந்து , படர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது மலையாள ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவரவர் நடிப்பிற்கு ஏற்ற கதாப் பாத்திரங்களை அமைத்திருந்தார்கள், இந்த நல்ல முன்மாதிரி படங்கள் ஹிந்தியிலும் வருகின்றன., .
இதே போல் இங்கு தமிழ்நாட்டில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால் எப்படி இருந்திருக்கும் , இருவரையும் ஒருங்கே ஒரே திரையில் பார்க்கும் போது தமிழ் ரசிகனின் உணர்வுகள் எப்படி இருக்கும், இருவருக்குமான , கதையை எழுதவோ தயாரிக்கவோ முடியாதவர்களா என்ன ? நம் கதாசிரியர்களும் தயாரிப்பாளர்களும். தியாகராஜ பாகவதர் , பி யு சின்னப்பாவில் தொடங்கி , எம் ஜி ஆர்/ சிவாஜி , ரஜினி/கமல் , அஜித்/விஜய் இன்று வந்த தனுஷ் /சிம்பு வரை தொடரும் இந்த உருவாக்கப் பட்ட கலாச்சாரம் என்று மாறும், நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் சினிமாவும் காலமும் எப்போது வரும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . இரு ரசிகர்களும் பரம்பரை பகை கொண்டவர்களா என்ன?, ஒரே குடும்பத்தில் அண்ணனும் தம்பியும், ஒரே தெருவில் நண்பர்களும் வேறு வேறு நடிகர்களை ரசிப்பதனால் அவர்களுக்குள் பிரச்சனை, விரோதம் என அர்த்தமா என்ன , ரசிகர்களை வெறியர்களாக சித்தரிக்கும் இவர்களின் செயல் எப்படிப் பட்டது என்று ரசிகர்கள் உணரவேண்டும். நடிகர்களும் தங்களின் ஈகோவை விட்டுவிட்டு இதுமாதிரியான படங்களில் இணைந்து நடிக்கவேண்டும், இவர்கள் நடிக்க தயார் என்றால் இயக்குனர்கள் தரமான கதையுடன் வரிசைகட்டி நிற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, அது ரசிகர்களுக்கும் விருந்தாகும் என்பது ஓர் ரசிகனாய் என் கருத்து.
அன்பன்
ARR
69 comments:
அது சரி மலையாள படம் பார்க்க ஆரம்பிச்சாசா அப்ப கூடிய விரைவில் என் மருமகளுக்கு ஒரு தம்பி பாப்பா வந்திடும் ...ஹி ஹி அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
நல்ல ஆதங்கம் தான் நண்பா ...ஆனால் இப்ப இளம் தலைமுறை நடிகர்களிடம் ஒரு மாற்றம் வந்திருக்கு ..அவன் இவன் ,வானம் இனி வரபோற வேட்டை மாதவன் ஆர்யா நடிக்கிறாங்க ,நண்பன் படத்தில் விஜய் ஜீவா,ஸ்ரீகாந்த் ,மங்காத்த படத்தில் அஜித் பலருடன் ,ஜெயம் ரவி ஜீவா கூட சேர்ந்து ஒரு படம் நடிக்க போறாங்கலாம் ...
இல்லை ரஜினி கமல் தான் சேர்ந்து நடஈக வேண்டும் என விரும்பினால் எனக்கு ஒரு நல்ல டைரக்டர் தெரியும் ....அவர் கிட்ட தான் சொல்லணும் !!!16
அது யாரு கேட்ட ...ஹி ஹி நான் தான்
கொஞ்ச கொஞ்சம்மா மக்களுக்கு சினிமா மோகம் குறைஞ்சிட்டு வருது. அது நல்லதற்கு தானே. இனி இணைந்து நடிப்பது குறித்தான கேள்வி, எதிர்பார்ப்பு - தமிழர்களுக்கு அவசியமில்லையோன்னு தோணுது.
ஒரு படம் ஹிட்டானால் இங்குள்ளவர்களுக்கு முதலமைச்சர் பதவி ஆசை வருகிறது .ஐந்து படம் ஹிட்டானால் ஐ நா சபையையே கேட்பார்கள் .இவர்கள் தானும் கெட்டு தயாரிப்பாளர்களையும் தெருவுக்கு கொண்டு வருகிறார்கள் .இது கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும் .
நியாயமான ஆதங்கம் நண்பரே.... இங்கே இவர்களுக்கு மட்டுமல்லாது இவர்களின் ரசிகர்களுக்கும் ஈகோ நிறையவே இருக்கிறது.... மாறவேண்டிய விஷயம்....
நீண்ட நாட்களுக்கு முன்பே இணைந்து நடிப்பதில்ல என்று முடிவெடுத்தவர்கள் ஆயிற்றே!
இங்கு இதெல்லாம் மாறாது!
நடக்குமா? எனக்கு நம்பிக்கை இல்லை,,,,!!
இருந்தாலும் உங்களுக்கு குசும்பு சார்..
அறுபது வயசு தாத்தா.. அதுவும் ரெண்டு பேரு சேர்ந்து..
நாடு தாங்குமா ?
@ரியாஸ் அஹமது
குடும்பத்துல இப்படி குண்டு வைக்கலாமா நண்பா.............
நன்றி கருத்துக்கு
@ரியாஸ் அஹமது
இல்லை நண்பா நான் சொன்னது உச்ச நடிகர்களை, அவ்ர்கள் இணைந்து வந்தாலே கலக்கல் அல்லவா
நன்றி கருத்திற்கு.
@ரியாஸ் அஹமது
வருங்கால இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@தமிழ் உதயம்
உன்மைதான் சார் ஆனாலும் ரஜினி கமல் இருவருக்கும் இருக்குற ரசிகர் சக்திக்கு இது விருந்தல்லவா
நன்றி நண்பரே கருத்துக்கு.
@ koodal bala
120% உண்மையான கருத்து சார்
ஆனாலும் மக்களின் மூடத்தனம் குறையலையே, எதிர் கட்சி பதவி இல்ல கொடுத்துருக்கொம்
நன்றி கருத்துக்கு
@வெங்கட் நாகராஜ்
அந்த ஈகோ தான் அன்பரே இவர்களின் மார்கெட்டே.
நன்றி உங்களின் கருத்துக்கு
@ சென்னை பித்தன்
வளரும் நடிகர்களாவது நடிக்கலாமே சார்
விஜய் அஜித் போன்றவர்கள்
நன்றி உங்களின் கருத்துக்கு
@கந்தசாமி
நடக்காது சார்.
நன்றி சார்.
@Madhavan Srinivasagopalan
தனியா நடிக்கும் போது தாங்குதே மாதவன். இந்த பதிவுல யாரையும் நான் தொடர் கூப்புடலையே, இன்னும் கோவம்
போலையா??/
நன்றி உங்களின் கருத்துக்கு
ஆம் ராஜகோபாலன்,மமூட்டி,மோகன் லால்,சுரேஷ் கோபி போன்ற பிரபலமானவர்கள் நடிக்கும் படங்கள் மிகவும் சிறப்பான கதையம்சம் கொண்டதாக இருக்கும்.தமிழ் நடிகர்களிடம் இருக்கும் போட்டியுணர்வு ஆரோக்கியமானதாக இருந்தால் இந்த மாதிரி இரண்டு மூன்று நடிகர்கள் நடிக்கும் நல்ல படங்கள் எடுக்கமுடியும்.
@RAMVI
உண்மையான கருத்தை நயம்பட நவின்றதர்க்கு நன்றி சார்
உங்களின் தொடர் ஊக்கம் என் எழுத்தை வளப்படுத்தும்
சம்பளம்தான்னே மேட்டர்., தமிழ்ல டாப் நாலு ஸ்டாரோட சம்பளம் 20 கோடி, அங்கே நாலு ஸ்டாரோட சம்பளம் 3 கோடிக்குள் அடங்கும். இந்த மாதிரி இன்னும் டீட்டைல சொல்லலாம்., எல்லாம் பணம் சம்பந்தபட்டதுனே ...
@ஷர்புதீன்
ரொம்ப சரியா சொன்னீங்க சகோ , இருந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி இங்கே கலக்ஷனும் ஆகுதில்லே , இங்கேதான் ஒரு டிக்கட் நானுறு ரூபாய் விக்கிறாங்களே
நன்றி உங்களின் கருத்துக்கு
சினிமா ஒரு பொழுது போக்கு வியாபார
சாதனம். யார் யாருடன் நடித்தால் நமக்கென்ன.?நடிக்காவிட்டால் நமக்கென்ன. ?இது அவர்கள் செய்யும் துரோகம் என்பது சற்று கூடுதலான கண்டனம் போல் தெரிகிறது. தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது மனசு மலரச் செய்கிறார்களா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
@G.M Balasubramaniam
சரியான கருத்து தான் ஐயா, அவர்களை இவ்வளவு உயரத்தில் அமர்த்தி இருப்பவர்களின் ரசனையின் தரத்தை உயர்த்துவது அவர்களின் கடமை என்று நினைத்ததாலும் , தலைப்புக்கு ஒரு சுவாரஸ்சியம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படி ஒரு வார்த்தையை உபயோகப் படுத்தினேன்
நன்றி உங்களின் கருத்திற்கு
அவர்கள் அவர்களுக்கான ரசிகர்களை அப்படியே பராமரிக்கவும்
அதன் மூலம் தங்கள் மார்கெட்டை நிலை நிறுத்திக்கொள்ளவும் தான்
சேர்ந்து நடிக்காமல் பில்டப் கொடுக்கிறார்கள்
வேறு பெரிய காரணமில்லை
இப்போது வருகிற கதை அம்சமுள்ள படங்கள் மட்டும் ஓடுவது
அவர்களது ஈகோவை விரைவில் சரிசெய்து விடும்
@Ramani
மிக உண்மையான கருத்து சார்
காலம் எல்லாவற்றையும் மாற்றும்
நன்றி உங்களின் கருத்துக்கு
சரி, சின்ன விளக்கமாகவே சொல்லுறேன்.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சம்பளம் = 7+5+4+3+3+3+3 = 28 அப்புறம் நடிகைகள் மற்றும் தயாரிப்பு செலவு ஒரு 100 கோடி., பின்னே பிரமாண்டம் வேணுமில்லே, ஆக தோரயமாக 125 கோடி !! ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்பர்வர்கள் 2 கோடி! அதன் மூலம் வசூல் தோரயமாக 100 கோடி??! அப்புறம் வெளிநாட்டு உரிமை மற்றும் டிவி உரிமை 20 KODI! - இது எனக்கு தெரிந்த தமிழ்நாட்டு கணக்கு
இப்ப மலையாளம் - மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, பிரித்விராஜ், திலீப், ஜெயராம் = 75 + 75+ 50+ 40+ 40+ 25+ = 3 கோடி! அப்புறம் நடிகைகள் மற்றும் தயாரிப்பு செலவு ஒரு 20 கோடி., பின்னே அங்கே இதே பிரமாண்டம்தானே,, ஆகா தோரயமாக 25 கோடி !! ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்பர்வர்கள் 50 லட்சம் அதன் மூலம் வசூல் தோரயமாக 20 கோடி??! அப்புறம் வெளிநாட்டு உரிமை மற்றும் டிவி உரிமை 5 கோடி !
இப்ப பாருங்க கணக்க!
அது மட்டுமில்ல, கலைதான் முக்கியம் என்றால் ரஜினி அமிதாப் மாதிரி கேரக்டர் ரோல் தானே செய்துகிட்டு இருப்பாரு, அவரே பாலச்சந்தர் கிட்டே மிக சமீபத்தில் அமிதாப் குறித்து கேட்டதற்கு , கமெர்சியல் படம் பண்ணுறதுதான் எனக்கு பிடிக்கும் என்றார்! அப்புறம் எப்படியண்ணே இவங்ககிட்ட இதெல்லாம் எதிர்பார்க்கமுடியும்!
@ஷர்புதீன்
கலக்கிட்டிங்க சகோ. இந்த ஞானத்தை வச்சி ஒரு படமே எடுக்கலாமே, நன்றி விரிவான விளக்கத்திற்கு
தலப்பு கெளப்புது.. ஆவலா உள்ள வந்தா மேட்டரே வேறவா இருக்கு..!
அங்கே சாத்தியப்படுவது இங்கே சாத்தியப்படாமல்போக பட்ஜெட் முதல், ஈகோ வரை பல காரணங்களுண்டு.. இதனால்தான் கிளி கூண்டுக்குள்ளேயே இருந்துடுச்சு.. அதுக்குமேல பறக்கல..
தட்ஸ் தமிழ்ல ரஜினி, கமல் யாரையாவது பற்றி ஒரு செய்தி வந்தா அதுக்கு விழற மறுமொழிகளைப் படிச்சுப்பாருங்க.. வெளங்கிடும்..!
@நகைச்சுவை-அரசர்
பதிவர்களை கவரும் நோக்கில் தலைப்பிடப் பட்ட பதிவு இது , உங்களின் சிலேடையான கூண்டுகிளியும் புரிந்தது , நன்றி உங்களின் கருத்திற்கு
சாமி, ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படங்களை பார்த்தது இல்லையா?? தலைப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவர்
@எல் கே
//////தலைப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவர் //////
ஹி ஹி ஹி
நன்றி எல் கே சார்
நியாயம்மான கேள்வி பாஸ்...
இதை தான் பலரும் கேட்கிறார்கள் ஆனா அவங்க சொல்றாங்க எப்பவோ போட்டுகிட்ட ஒப்பந்தமாம்!!ம்ம்
இங்கே நடிகர்கள் அவரவர் வீட்டு விருந்தில் கலந்து கொள்வது அட்வைஸ் கேட்பது இன்ன பிற ஜாலக்குகள் காட்டிக் கொண்டே தம் ரசிகர்களை ஒன்று சேர விடவே மாட்டார்கள். ரசிகர்களும் அதே போலவே வெறித்தனமாய் எவ்வித யோசனைக்கும் இடம் கொடுப்பதில்லை.அட்லீஸ்ட் புதுசாய் வருகிற நடிகர்களாவது இந்த பிரமையை உடைத்தால் சரி.
சரியாய் சொன்னீங்க,,,,
பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா!!!!!
பாஸ் உங்களின் ஆசைதான் நம் ஆசையும்
நடந்தால் சந்தோசம் நடக்கோனுமே
நம் தமிழ் சினிமாவில் இப்போது கொஞ்சம் மாற்றம் தெரிகிறது
இது இன்னும் நீண்டு வளர்ந்தால் நீங்கள் ஆசைப்படுவது எல்லாம் நடந்து விடும் பாஸ்
@மைந்தன் சிவா
ரொம்ப நன்றி சகோ கருத்திற்கு
@ரிஷபன்
உண்மை சார் அவர்கள் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் நடித்து ரசிகர்களை எமாற்றுகிரார்கள்
நன்றி உங்களின் கருத்துக்கு
@vidivelli
மிக்க நன்றி சகோதரி
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நடக்காது தலைவா
பணமே எல்லாத்துக்கும் காரணம்
@@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நன்றி தலைவா கருத்துக்கு
எதேச்சையாக நான் கூட அந்தப் படம் பாதியிலிருந்து பார்த்தேன். ரசித்தேன். மல்டி ஸ்டார் படங்கள் ஹிந்தியில் கூட உண்டு. தமிழில்தான் அரிது.
:)
ஏனென்றால் இவர்கள் நடிகர்கள்!!
திரையில் மட்டுமல்ல
வெளிஉலகிலும் அழகாக நடிக்கக்கூடியவர்கள்.
!!! என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?
நல்ல கருத்து தான்! எப்போது ஈகோ பின்னுக்குப்போய் கலைத்தாகம் முன்னுக்கு வருமோ, அப்போது தான் மலையாளப்படங்களில் பார்ப்பது போல முன்னணிக் கதாநாயகர்கள் எல்லாம் இங்கேயும் சேர்ந்து நடிக்கும் காலம் வரும்!
@ஸ்ரீராம்.
நானும் பாதியில் இருந்துதான் பார்த்தேன் சார் , அமர்க்களமான படம்.
நன்றி உங்களின் கருத்துக்கு
@முனைவர்.இரா.குணசீலன்
ஆமாம் நண்பரே இவர்கல் நிஜத்திலும் நடிப்பவர்கள்
நன்றி உங்களின் கருத்துக்கு
@ vidivelli
அந்த காணொளியை கண்டேன் சகோதரி
மனம் நொந்தேன்
@மனோ சாமிநாதன்
இது ஈகோ மட்டும் சம்மந்தபட்டது இல்லை அம்மா, பணமும் புகழும் சம்மந்தபட்டது , கலையை மதிக்காதவர்கள் இவ்ர்கள் வெறென்ன சொல்ல
நன்றி உங்களின் கருத்துக்கு
ஹிந்தி திரையுலகில் கூட பல முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் இங்கு அவ்வாறு நடிப்பதை ஏதோ நடக்கக் கூடாத ஒன்று போல ஆக்கி வைத்துள்ளனர். இதற்கு கமலஹாசன் சொன்ன காரணம், 1. படத்தின் பட்ஜெட்டில் முழுதும் எங்க ரெண்டு பேரின் சம்பளமாகக் கொடுத்துவிட்டால், தயாரிப்பாளர் எதை வைத்து படமெடுப்பார்? 2. நங்கள் முன்பு சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த போது படங்கள் வெற்றி பெற்றால், புகழ், பணம் எல்லாமே பாதி பாதிதான் கிடைத்தது, ஆகையால் இனி ஒன்றாக நடிப்பதில்லை என்ற முடிவை இருவருமே சேர்ந்து எடுத்தோம். இந்தக் காரணங்கள் சரியா தப்பா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் நடிப்பதே பெரிய விஷயம், வேண்டுமானால் கிராபிக்ஸ் பண்ணி படம் எடுக்கலாம். [அது சரி, அவன்-இவன் ரெண்டு நாயகர்கள் சேர்ந்து நடிச்ச படம்தானே, அதைப் பாத்து சமாதானம் ஆகிக் கொள்ளுங்களேன்!!]
உங்களின் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,பணத்திற்காகத்தான் இவர்கள் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது தவறு,இவர்கள்
நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம்
என்று ஒரு வார்த்தை சொல்லட்டும், எந்திரனைக் காட்டிலும் அதிக செலவு செய்ய இங்கே தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்,ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிறச்சனை ஒரு தடையே,இரண்டாவது காரணம் ரசிகர்களின் ஈகோ பிறச்சனை,நீங்கள் சொல்வது போல்
தமிழ்நாட்டு ரசிகன் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை,ரஜினியை கிண்டல்
செய்த அண்ணனை தன் சக ரசிகனோடு சேர்ந்து உதைத்த தம்பியை என்க்கு தெரியும்
தங்கள் எண்ணம் ஈடேறட்டும்
தமிழ்நாடு மகிழட்டும்.
நன்றி
உங்கள் ஆதங்கமும் வரவேற்க தக்கதே....முன்பு போல் அல்ல.............. தமிழ் சினிமாவில் மாற்றம் வந்து விட்டது நண்பரே.... மேலும் நீங்கள் விரும்புவது போல் முழுமையாக மாறும் காலம் இந்த கால கட்டம் தான்... பொருத்திருந்து பாருங்கள்....
.
உங்களைப்போல் ஆதங்கத்துடன்,
rajeshnedveera
@சிவ.சி.மா. ஜானகிராமன்
நன்றி உங்களின் கருத்துக்கு
@ Jayadev Das
நன்றி உங்களின் கருத்துக்கு
@moulefrite
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
முழு நன்றி
@மாய உலகம்
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
முழு நன்றி
உங்களின் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,பணத்திற்காகத்தான் இவர்கள் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது தவறு,இவர்கள்
நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம்
என்று ஒரு வார்த்தை சொல்லட்டும், எந்திரனைக் காட்டிலும் அதிக செலவு செய்ய இங்கே தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்,ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிறச்சனை ஒரு தடையே,இரண்டாவது காரணம் ரசிகர்களின் ஈகோ பிறச்சனை,நீங்கள் சொல்வது போல்
தமிழ்நாட்டு ரசிகன் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை,ரஜினியை கிண்டல்
செய்த அண்ணனை தன் சக ரசிகனோடு சேர்ந்து உதைத்த தம்பியை என்க்கு தெரியும்
அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . //
வணக்கம் பாஸ்,
உண்மையில் தமிழ் கலை இலக்கிய உலகோடு அல்லது தமிழர்களின் இரத்தத்தோடு ஒட்டிய ஒரு விடயம் தான் ஈகோ, இந்த ஈகோ இருக்கும் வரை கலைஞர்கள் வளர்ந்து கொண்டிரிப்பார்கள். ஆனால் காத்திரமான கலைப் படைப்புக்களோ, கதையம்சம் கொண்ட படங்களோ வரப் போவதில்லை.
ரசிகர்கள் சண்டை போடுவார்கள் என்பதெல்லாம் சுத்த பம்மாத்து, உண்மையில் இரண்டு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கும் போது, நிச்சயம் வெற்றி வாய்ப்புக்கள் வந்து குவியும் எனும் உங்கள் கருத்தோடு நானும் ஒன்றித்துப் போகின்றேன்.
:)
சகோ
என்னைப் பொறுத்த வரையில் இந்த சினிமா பற்றிய ஈடுபாடே எனக்கு
கிடையாது
காரணம் நமது பண்பாடு
கெட்டுப் போனதற்கு சினிமா முதல்
காரணம் ஆகும்
ஆனால் நீங்கள் சுட்டியுள்ள
தன்முனைப்பு(ஈகோ)நீக்கப்பட வேண்டிய ஒன்றே
புலவர் சா இராமாநுசம்
எனது எண்ணமும் இதுதான்
இன்று எனது வலையில் ...
மூன்று… மூனு… திரி(Three)… தீன்..
சினிமா சினிமா சினிமா. அண்ணா. இவ்வுலகில் எல்லாமே மயாம் அதிலும் சினிமாவை சொல்லனுமா.. உங்க ஆதங்கம் வரிகளில் தெறிக்கிறது. எனக்கு இதப்பத்தி தெரியாதுண்ணா அதனால் எஸ்கேப் ஆகிடுறேன்..
இன்னொரு 16வயதினிலே வந்தால் நல்லாத் தானிருக்கும்.
உங்களின் ஆசைதான் நம் ஆசையும்
நடந்தால் சந்தோசம் நடக்கோனுமே
ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . வேறு எங்காவது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கோவில்கட்டுவது பார்த்திருக்கிறோமா
தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக அடித்துகொள்வார்கள். நம்மவர்கள் ஒன்றும் அத்தனை அறிவு முதிர்ச்சி கொண்டவர்கள் அல்ல. செண்டிமெண்டல் பூல்ஸ்
Post a Comment