கடந்த ஏப்ரல் மாதம் இருபத்தி நாலாம் தேதி தனது எண்பத்து ஐந்தாவது வயதில் காலமான ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் மறைவுக்கு பின்னே நடக்கும் நிகழ்வுகள் பக்தர்களின் மனதிற்கு நல்லவைகளை சேர்ப்பதாக இருக்கவில்லை .பொதுவாகவே ஆண்டவனுக்கும் பக்த்தனுக்கும் இடையே யாரும் இருக்க முடியாது, இருக்க கூடாது என்று நினைப்பவன், ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை , அதற்காக அந்த செயல்களை நான் தவறென்றும் நினைப்பதில்லை அவற்றை விமர்சனமும் செய்வதில்லை,ஆன்மீகத்தை, அதன் போதனைகளை தாண்டி சாய்பாபா மக்களுக்கு பல நல்ல சேவைகளை செய்து வந்துள்ளார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை சரி இப்பொழுது விஷயம் அதுவல்ல .,
இந்த பதிவு சத்ய ஸ்ரீ சாய்பாபாவின் மறைவுக்கு பிறகு அங்கு நடக்கும் நிகழ்வுகள் ஒரு ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவனாக பார்க்கும் போது என் மனதில் சில நெருடல்கள் ஏற்படுகின்றன அதைப் பற்றியது.ஒரு துறவறம் பூண்ட மனிதரின் அறையில் ஏன் இவ்வளவு பணமும் , தங்கமும் வைரங்களும், இது உண்மையிலேயே அவர் உ யிரோடிருக்கும் பொது இருந்தனவா இல்லை அவர் இறந்தவுடன் வைக்கப் பட்டனவா?. எது எப்படி இருப்பினும் ஒரே இடத்தில் இவ்வளவு பணத்தை கொட்டி குவித்து வைப்பதா ஆன்மிகம்?, துறவறம்? .இவர்களுக்கும் தானியங்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்து வீணாக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ??
ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் செல்வம் மக்களிடத்தில் என்ன மாற்றத்தை உண்டாக்கமுடியும், ஒரு தனி மனிதனால் மக்களுக்கு அருளை தர முடியாது அதிக பட்சமாக ஆறுதலைத்தான் தரமுடியும், அந்த ஆறுதலைத் தேடி வந்த மக்களுக்கு தன்னுடைய பேச்சால் , செயலால் ஸ்ரீ சத்ய சாய்பாபா தந்தார் என்பதை மறுக்க முடியாது , ஆயினும் அவர் இப்படி ஒரே இடத்தில் பொன்னையும் பொருளையும் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் என்ன , துறவறத்தில் பணத்திற்கு என்ன தேவை வந்தது ???
இன்னும் பட்டவர்த்தனமாக சொல்லுவதென்றால் இவரிடம் இருக்கும் செல்வத்தில் நூறில் பத்து பங்கு கூட மக்களுக்கு செலவழித்ததாக சொல்லமுடியாது , இவரிடத்திலே உள்ள பணத்தில் பெரும் பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் கருப்பு பணம் என்ற வாதத்தின் சாரத்தை இந்த மாதிரியான செயல்கள் உறுதிபடுத்தவே செய்கின்றன
கடந்த 1993 ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகளுக்கும் நடத்தப்பட்ட கொலைகளுக்கும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை, அதற்கான காரணமும் இன்றுவரை தெரியவில்லை , மக்களுக்கு நல் வழி போதிக்கும் இது மாதிரியான ஆசிரமங்கள் ஒரு திறந்த புத்தகம் போல இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, இது மாதிரியான நிகழ்வுகளே நாத்தீகவதிகளுக்கு ஒரு வலுவான வாதமாக ஆகிவிடுகிறது.
சமீபத்தில் பிடிபட்ட முப்பத்தைந்து லட்ச ரூபாய் பற்றிய கேள்விகளுக்கு கூட அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பதிலளிக்கையில் இது சாய்பாபா அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் அல்ல , பிடிபட்டவரும் பாபாவின் பக்தர் அல்ல என்று பொதுவாகவே பதில் அளித்துள்ளனர்,இதன் மூலம் இன்னும் அந்த மர்மம் விலகாமலே உள்ளது , என்னை பொறுத்தவரையில் அவர்கள் சொல்லியுள்ள பணத்தின் அளவு கம்மியாகவே இருக்கும் என நினைக்கிறேன்,முப்பத்தைந்து லட்ச ரூபாய் அளவு பணத்தை எடுத்துப் போவதெல்லாம் இந்த காலத்தில் வெகு சாதாரணம் , ஒரு பெரும் தொகையே இப்படி குறைவாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.
எது எப்படி இருப்பினும் இது பக்தர்களின் பணம் இது பக்தர்களுக்காகவே செலவிடப்பட வேண்டும்,இந்த பணம் அனைத்தும் மற்றுமொரு சுவிஸ் வங்கி முதலீடாக ஆகிவிடக்கூடாது ,இந்த பணம் அனைத்தும் பக்தர்களுக்கும் ஏழை மக்களுக்கும், உணவிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக செலவிடப்பட்டால் அதுவே ஆன்மீகத்தின் முழு அர்த்தத்தை மற்றவர்களுக்கு பிரமாண்டமாய் பிரகடனப்படுத்தும்.ஏனெனில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
இந்த பதிவு ஸ்ரீ சத்யா சாய்பாபாவின் பக்தர்களை வருத்தப்பட செய்திருக்குமாயின் அதற்காக என் வருத்தங்களை தெரிவித்துகொள்கிறேன்
இந்த பதிவு ஸ்ரீ சத்யா சாய்பாபாவின் பக்தர்களை வருத்தப்பட செய்திருக்குமாயின் அதற்காக என் வருத்தங்களை தெரிவித்துகொள்கிறேன்
அன்பன்
ARR
38 comments:
உங்கள் வாதம் எல்லாம் சரி தான் பாஸ்!!!
உண்மை அதுவாக கூட இருக்கலாம்..
சத்திய சாயி பாபாவின் நல்ல பக்கத்தை பார்க்கட்டாம்....
எத்தனை வீதம் நன்மை செய்தார் தன் சொத்தில்??
இன்னும் தமிழ்மணம் காணவில்லையே பாஸ்
உண்மை தான். அது பக்தர்களின் வியர்வையில் வந்த பணம். மக்களுக்காக செலவழிக்கப் படவேண்டும்.
//இந்த பணம் அனைத்தும் பக்தர்களுக்கும் ஏழை மக்களுக்கும், உணவிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக செலவிடப்பட்டால் அதுவே ஆன்மீகத்தின் முழு அர்த்தத்தை மற்றவர்களுக்கு பிரமாண்டமாய் பிரகடனப்படுத்தும்.ஏனெனில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.//
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!
Voted 3 to 4 in Indli
உங்கள் கருத்தோடு நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன்.
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னவோ நடக்குது
மர்மமாய் இருக்குது என்கிற
சந்திர பாபுவின் பாடல்தான்
நினைவுக்கு வருகிறது வருத்தத்துடன்...
பணத்தில் தினம் படுத்து கொள்வார்கள் போல் இருக்கிறது.செத்ததும் ஆசை அடங்குமா தெரியவில்லை.
@மைந்தன் சிவா
நான் கூட அவரின் சேவைகளை தவறாக சொல்லவில்லையே தலைவா , நன்றி தங்களின் கருத்துக்கு
@மைந்தன் சிவா
தமிழ் மணம் வந்திட்டுதே
வந்தா வாக்களியுங்கள்
@வை.கோபாலகிருஷ்ணன்
அன்பான ஐயா
உங்களின் என் மீதான கவனத்திற்கும் கருத்திற்கும் நன்றி
@சந்ரு
நன்றி தங்களின் கருத்துக்கு
@Ramani
மனம் நிறைந்த மகிழ்ந்த நன்றி ரமணி சார்
தங்களின் கருத்துக்கு
@அமுதா கிருஷ்ணா
உண்மையான கருத்து சகோதரி
நன்றி உங்களின் கருத்திற்கு
//ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை ,//
மீண்டும் ஒத்து போகிறோம் நண்பா ,,நன்றி ..நல்ல பதிவு
சரி சரி ..சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பதிவுலும் தொடருதோ புகை பட மாற்றத்தை தான் சொல்லுறேன் ...ஹி ஹி வாழ்த்துகள் ...சந்தோசம் என்றும் தொடர மீண்டும் மாஷா அல்லா ஞாபகம் இருக்கா நண்பா
@ரியாஸ் அஹமது
நன்றி நண்பா உங்களின் கருத்துக்கு
@ரியாஸ் அஹமது
இல்லை நண்பா இது முன்னமே எடுத்தது
அத்தனை சீக்கரம் மறந்து விடுவேனா என்ன??
@தமிழ் உதயம்
மனம் நிறைந்த நன்றி உங்களின் கருத்துக்கு
ஆதாரமான நம்பிக்கைகள் உடையும் காலம் இது...என்னவோ போங்க....
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
அருமை யான எடுத்துக்காட்டு சகோ
விருப்பு வெறுப்பின்றி எதையும் ஆய்ந்து
பதிவு செய்யும் கரம் கூப்பி வணங்குகிறேன்
வளரட்டும் தங்கள் தொண்டு
புலவர் சா இராமாநுசம்
@ஸ்ரீராம்.
நன்றி உங்களின் உண்மையான கருத்திற்கு
@புலவர் சா இராமாநுசம்
ஐயா மிகப் பெரிய வார்த்தை
நன்றி உங்களின் கருத்துக்கு
கனிவிற்கு, கருத்திற்கு
பக்தர்களின் பணம் பக்தர்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும் என்பதனை எத்தனை சாமியார்கள் சகோ பின்பற்றுகிறார்கள்?
மதத்தை வியாபாரமாக்கி, ஆளாளுக்கு இன்று தனிப் பெயரில் ஒவ்வோர் ஆச்சிரம் தொடங்கிப் பணம் புரட்டுவதில் தானே குறியாக நிற்கிறார்கள்.
@நிரூபன்
நன்றி சகோ தங்களின் கருத்துக்கு
மக்களை ஆன்மீகத்தின் பெயரால் முதலீட்டுப் பொருளாக்கிப் பிழைக்கும் இந்தப் போலிச் சாமியார்களை உணர்ந்து, கடவுளுக்கும் மனிதனுக்கும் குறுக்கே தூதுவர்களாக யாரும் நிற்க முடியாது என்பதனை என்று நாம் உணர்கிறோமோ, அன்று தான் இவ் ஏமாற்றுப் பிழைப்புக்காரர்களும் திருந்துவார்கள்.
அவர் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட ட்ரஸ்டின் செயல்பாடுகளை அவர் இற்ந்த பிறகு அவாரால் பதில் சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் விமரிசிப்பது சரியா.?அவருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ட்ரஸ்டிடம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிக்கப் பட வேண்டும்.
@@"G.M Balasubramaniam"
மதி நிறை ஐயா
வணக்கம்
என்னுடைய பார்வை உங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்
1. துறவறத்தில் இருப்பவருக்கு ஏன் இவ்வளவு பணம், தங்கம் வைரம் எல்லாம் ( இது எல்லா மத குருமார்களையும் குறித்து எழுப்பிய கேள்வி )
2. சமீபத்தில் பிடிக்கப்பட்ட பணத்திற்கான கேள்வியும் இன்றைய டிரஸ்டிகளிடம் கேட்கப்பட்டதுதான்.
நன்றி உங்களின் கருத்திற்கு
இதுவ்ரைகூட அவர் நிறைய பொதுக் காரியங்கள் செய்து வந்தார். இனி இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்க முடியும்?
@சாகம்பரி
அந்த ஆசிரமத்திற்கு பொறுப்பேற்றவர்கள்தானே இந்த கேள்விகளுக்கு பொறுப்பாக வேண்டும் சகோ.
நன்றி தங்களின் கருத்திற்கு
@நிரூபன்
தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு நன்றி சகோ
சம்சாரிகளுக்கு இல்லாத பேராசைகளும்,பொருள் சேர்ப்பதில் உள்ள தில்லு முல்லும் சாமி(யார்)களுக்கு
அதிகம் போல் தெரிகிறது.
அன்புடன்..
ரஹ்மான்
என்ன நடக்கிறது என்பது புரியாத புதிர்... வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை நண்பரே..
Comparing to the Services he has done & doing tom the people of India....what we hear about him is nothing... When he visited Karunanidhi's House sometime back revealed to every one that he have
Black Money of all Policians and IAS & IPS Officials who hesitate going to Swiss Banks.
Not only Sai Baba almost all Madam's are hiding place for ILLEGAL MONEY in INDIA.
We may request our ANNA HAZARE to into this...
We poor Indians, we Simply Talk today
will forget & forgive Tomorrow.
@Anonymous
நன்றி தங்களின் கருத்திற்கு
@வெங்கட் நாகராஜ்
தங்களின் கருத்திற்கு நண்பரே..
@Jagath
Thanks for your comment
ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை ,//
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா ,,நன்றி
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர் எதற்கு......
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
Post a Comment