Wednesday, 1 June 2011

அரவான் மனைவிகள்சமூகம்  சாபமிட்ட 
சந்தன சக்கைகள் நாங்கள் 
முழுமை அடையாத 
இடையின நங்கைகள் நாங்கள்

பிறப்பால் நாங்கள் 
ஆணானோம் - பின் 
உணர்வால் பெண்ணாக 
ஆளானோம்   

ஆண்டவன் படைப்பில் 
முற்றுபெறாத பரிதாபம் 
யார் தருவார்
இதற்கோர் பரிகாரம்    

அவள் போல் அவன் 
கொண்ட அவதாரம் - பின்
அவனுமின்றி அவளுமின்றி 
அதுவாகிப்போன அலங்கோலம்


 தாயும் புரியவில்லை 
எங்கள் உணர்வு
அதற்கு பின்யார்தான்
எங்கள் உறவு 

குடும்பத்திலிருந்து
பிரிக்கபடவில்லை
குற்றமென 
பிய்க்கபட்டிருக்கிறோம்

நாங்கள் 
ஆண்டவனின் 
சமமான கலவை
அந்த சமமே 
எங்கள் கவலை 


உடலால் ஆணையும்
உள்ளத்தால் பெண்ணையும் 
சுமக்கும் 
சுழல் விளக்கு
அரவா 
எங்களை புரியாதார் 
உள்ள 
இருள் விலக்கு 

சமூக அங்கீகாரம் வேண்டி 
அங்குமிங்கும் 
அலைகிறோம்
புள்ளிஇட்ட கோலமாய் 
அலையடித்து 
கலைகிறோம்  

பாசம் வேண்டி 
நேசம் நாடி 
தவி தவித்து 
தவிக்கிறோம் -இதை எல்லாம் 
அறிந்தும்,புரிந்தும்
மீண்டும் மீண்டும் 
பெண்ணாகவே 
துளிர்க்கிறோம்  

உள்ளத்தில் சோகம்
தைத்து
உதட்டில் சிரிப்பை 
வைத்து 
ஆடுகிறோம்  
நாடகம்
அறிவீரா இந்த 
பூடகம்எங்களின் 
பெண்ணுணர்ச்சியை
வழிமொழிய
வன்புணர்ச்சியா 
வழிமுறை 

திருநங்கையராம் 
நாங்கள்,
பாருங்கள் 
அதிலிலும் முழுமை 
இல்லை 
பெயரிலாவது 
திருமதிநங்கை என 
அழையுங்களேன் 
பெயருக்காவது 
பெண்மையை 
அளியுங்களேன் ...............


நேற்று ரயிலில் பார்த்த இவர்களை பற்றி எண்ணியபோது எழுந்த விதை இது சக பயணியாக வரமுடிந்த இவர்களை நாம் (நான் உட்பட )சக மனிதர்களாக பாவிக்க  போவது எப்போது ????? 


அன்பன்
ARR 
   34 comments:

RVS said...

அற்புதம் கோப்லி. வாழ்த்துக்கள். ;-)

RVS said...

ஒரு உபரி தகவல்...
நேபாளத்தில் தான் நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்த்துள்ளார்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மிக்க நன்றி வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@RVS
உன் உபரி தகவலுக்கு அபரிதமான நன்றி
சேப்பாயி நலமா??

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசமான கவிதை சாடல்...!!!!

A.R.ராஜகோபாலன் said...

@ MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ சார்

Yaathoramani.blogspot.com said...

பெயரிலாவது திருமதி நங்கையென
அழையுங்கள்....
அவர்கள் குறித்த உண்மையான
அக்கறை கொண்டதனால்தான்
உங்கள் உள்ளத்தில் இந்த வார்த்தை
ஊற்றெடுத்திருக்கிறது
நல்ல சமூக சிந்தனையை
தூண்டிச்செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆண்டவன் படைப்பில்
முற்றுபெறாத பரிதாபம்
யார் தருவார்
இதற்கோர் பரிகாரம்//

மிகவும் வேதனை தரும் விஷயம் தான்.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் அருமையான முயற்சி.

பதிவுக்குப் பாராட்டுக்கள்.

குணசேகரன்... said...

இட்ஸ் ஃஃபேட்..என்ன செய்வது...?தெரியவில்லை...

Unknown said...

///அவள் போல் அவன்
கொண்ட அவதாரம் - பின்
அவனுமின்றி அவளுமின்றி
அதுவாகிப்போன அலங்கோலம்///

எங்க பிடிசிங்க நண்பரே இந்த வரியை ....அருமை

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
ரொம்ப நன்றி ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
ரொம்ப நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@குணசேகரன்..
ஏதாவது செய்யணும் நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
கருத்துக்கு நன்றி ரியாஸ்

ஷர்புதீன் said...

திருநங்கைகள் குறித்த பார்வைகள் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது -

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்
மாறினால் சந்தோஷம் தானே அன்பரே

தினேஷ்குமார் said...

அற்புதமா எழுதியிருக்கீங்க அண்ணே
கண்டிப்பா மற்றோர் எண்ணங்களை மாற்றணும் மாறனும் அண்ணே

நிரூபன் said...

சகோ, எங்கள் சமூகத்தின் பாராமுகத்தினைச் சுட்டியும், அரவாணிகள் மீதான விழிப்புணர்வினை வேண்டியும் இக் கவிதை பிறந்துள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

பெயருக்காவது
பெண்மையை
அளியுங்களேன் ......//
நல்ல சமூக சிந்தனை...
தொடர வாழ்த்துக்கள்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சமூகத்தின் கேலியும் கிண்டலும் ஒரு புறம்.

அரசின் சரியான அணுகுமுறை இல்லாததால் முறைகேடான வழிகளிலும் பிச்சை எடுப்பது மிகச் சிலரின் வீடுகளில் வேலை செய்வது என்று சோகம் தொடர்கிறது.

கூவாகம் போன்ற திருவிழாக்களே இவர்கள் தங்களின் அவலத்தை இந்தச் சமூகத்துக்குக் காட்டுவதற்கு மட்டுமோ என்றும் தோன்றுகிறது.

அக்கறையான பதிவு ராஜு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே...

A.R.ராஜகோபாலன் said...

@ தினேஷ்குமார்
மிக்க நன்றி நண்பரே
நீங்கள் சொல்லுவது போல் மாற்றம் வரணும் , நாமும் மாறணும் அவர்களும் மாறணும்

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
எங்கள் சமூகமா , என்ன சகோ என்னை தனியா பிரிக்கிரிங்க, நம்ம சமூகம்ன்னு சொல்லுங்க
உங்களின் கருத்துக்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ இராஜராஜேஸ்வரி
உங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றிங்க மேடம்

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி
அந்த மாற்றத்திற்கு அவர்களும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதானே அண்ணா
தங்களின் கருத்திற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ வெங்கட் நாகராஜ்
வட மாநிலங்களில் இத்தனை கொடுமை இல்லை என்றே நினைக்கிறன் , இல்லையா நண்பரே
தங்களின் கருத்துக்கு நன்றி

எல் கே said...

என்ன சொல்ல ஏ ஆர் ஆர் அட்டகாசம்

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
மனம் மகிழ்ந்த நன்றி எல் கே

G.M Balasubramaniam said...

திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்ச்சி, அவர்கள் பிறந்த இடங்களில் தொடங்க வேண்டும். பெற்றவர்களுக்கே இல்லாத பொறுப்பு சமூகத்திடம் எதிர்பார்க்கிறோம். திருநங்கை தன்னை பெண்ணாகப் பாவிக்கும் ஆண் என்றால் தன்னை ஆணாக பாவிக்கும் பெண்கலை என்னவென்பது. விழிப்புணர்ச்சி ஏற்படத்துவங்கும் நேரங்களை - சந்தப்பங்களை அவர்களும் சரியாக பயன்படுத்த வேண்டும். சில இடங்களில் நாம் சந்திக்கும் அர்த்த நாரீஸ்வரர்கள் மிகுந்தஅச்சத்தை விளைவிக்கிறார்கள்.
அவர்கள் சமூகத்திடம் எதிர்பார்க்கும் புரிந்துணர்வையும் சலுகைகளையும் அவர்களே விரும்ப மாட்டார்களோ என்ற சந்தேகம் என்னுள் சில சமயம் எழுவதுண்டு. உங்கள் கண்ணோட்டம் வரவேற்கத்தக்கது. காலங்கள் மாறக் காத்திருப்போம்.

A.R.ராஜகோபாலன் said...

மிகச்சரியான கருத்து ,
"சில இடங்களில் நாம் சந்திக்கும் அர்த்த நாரீஸ்வரர்கள் மிகுந்தஅச்சத்தை விளைவிக்கிறார்கள்.
அவர்கள் சமூகத்திடம் எதிர்பார்க்கும் புரிந்துணர்வையும் சலுகைகளையும் அவர்களே விரும்ப மாட்டார்களோ என்ற சந்தேகம் என்னுள் சில சமயம் எழுவதுண்டு"


எனக்கும் இதுபோன்று ஏற்பட்டதுண்டு, ஆனால் அதற்கும் நம் சமூகம்தான் காரணமோ என்ற ஐயமும் எனக்குண்டு

"திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்ச்சி, அவர்கள் பிறந்த இடங்களில் தொடங்க வேண்டும். பெற்றவர்களுக்கே இல்லாத பொறுப்பு சமூகத்திடம் எதிர்பார்க்கிறோம்."


முழுவதும் ஒத்துக்கொள்கிறேன் ஐயா , மறு பேச்சோ கருத்தோ இல்லை
நன்றி தங்களின் கருத்துக்கு

சுதா SJ said...

உண்மையில் நெஞ்சை தொடும் கவிதை

A.R.ராஜகோபாலன் said...

@துஷ்யந்தனின் பக்கங்கள்
மனம் மகிழ்ந்த நன்றி நண்பரே

Unknown said...

ஆண்டவன் ஆணான்
அர்த்தநாரி-ஏனோ
அறியா மக்கள்
அதை மீறி
வேண்டா தனவே
செய்கின்றார்-அதன்
வேதனை தன்னையே
உண ராதார்
ஈண்டதை எடுத்து
உரைத்திட்டீர்-
எழில்மிகு கவிதை
படைத்திட்டீர்
தாண்டமாட தமிழிங்கே-நானும்
தந்தேன் வாழ்தே
என்பங்கே
புலவர் சா இரமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இரமாநுசம்

பொய் தவிர்த்து சொன்னால்
மெய் சிலிர்த்துப்போனேன் ஐயா
புவியில் சிறந்த வாழ்த்து
கவிதையில் கவி சொன்னதால்
நவின்றேன் நன்றி கை
குவித்து .........