Tuesday, 14 June 2011

சமச்சீர் கல்வி உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழக அரசு சாதித்தது என்ன ??

          

               திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாய் சமச்சீர் கல்வியை செயல்படுத்த உத்தவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம், இன்று விசாரணை நடத்திய விடுமுறை கால நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வி இந்த ஆண்டும் 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு அமலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்த தனிக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தக் குழு 2 வாரத்துக்கு ஆய்வுக்கு பின் உச்சநீதிமன்றத்திடம் அறிக்கை ஒப்படைக்க உள்ளது. இதன் படி மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

         இந்த சமச்சீர் கல்வி தடையாலும்,  உச்ச நீதி மன்ற முறையீடுகளாலும் நம் தமிழக அரசு சாதித்தது என்ன?, ஏன் இந்த மாதிரியான அவசரம்?  மாநிலத்தில் உடனடியாக மாற்றவேண்டிய எத்தனையோ மக்கள் நலப்பணிகள், தடுக்க வேண்டிய எத்தனையோ மக்கள் விரோத செயல்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்கும் பொது நம் மாணவர்களின் வாழ்வில் விளையாட வேண்டிய அவசியம் என்ன? மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்த விதமாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர போகும் இந்த கல்வி முறையால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எத்தனை குழப்பங்கள்?? இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறது இந்த அரசு.

 தன் வருங்காலத்தை வளமாக்கி கொள்வதற்காக பள்ளி விடுமுறையிலும் அடுத்த வருட வகுப்பிற்காக படித்து கொண்டிருந்தவர்களை நிறுத்த முடியாமலும் , தொடர முடியாமலும் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்க விட்ட அரசு இந்த சமச்சீர் கல்வி தடையால் என்ன பெரிதாய் சாதித்து விட்டது??


இந்த விடுமுறையில் தன் மகனோ/மகளோ நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதற்காக தாங்களும் அந்த வேள்வியில் பங்கேற்று தன் உறவினர் வருகையையும் தவிர்த்த அந்த பெற்றோரின் நிலை அறியுமா இந்த அரசு??. 

கடந்த பல நாட்களாய் படித்து வந்த பாடத்தை இந்த அரசின் குழப்பத்தால் தங்களின் படிப்பை  நிறுத்தி வைத்த மாணவர்கள் அதை திரும்பவும் தொடர்வதினால் ஏற்ப்படும் பின்னடைவை உணருமா இந்த அரசு ?      

தன் வழக்கறிஞரின் மூலமாகவே இந்த பாடத்திட்டத்தில் சுயவிளம்பரம் அதிகமாக இருக்கிறது  என்று சொன்ன அரசு வேறு எந்த பாடங்களையும் குறை சொல்ல (முடிய) வில்லையே , அப்படியானால் அந்த பக்கங்களை மட்டும் பிரித்தெடுத்து புத்தகங்களை தந்திருக்கலாமே ??

இப்போது புதிதாக அச்சடிக்க  பட்டுள்ள பழைய பாட புத்தகங்களை என்ன செய்யப்போகிறது இந்த அரசு ??

இந்த பாட புத்தகங்கள் அடுத்த ஆண்டிற்கும் பயன் பட போவதில்லை ஏனெனில் இவர்களும் புதிய முறையிலான சமச்சீர் கல்வியைத்தான் நடை முறைப்படுத்த போகிறார்கள்??

இதற்கு பதிலாக இன்னும் பாட புத்தகங்களை அச்சடித்து எத்தனையோ வசதியில்லாத மாணவர்களுக்கு இலவசமாகவே தந்திருக்கலாமே ??

இந்த மாதிரியான இழப்புகளை தவிர்த்தால் எத்தனையோ ஏழை  குடும்பங்களில் ஒளியேற்றலாமே??இந்த அரசிடம் பல மாற்றங்களை எதிர்ப்பார்த்தவர்களில் நானும் ஒருவன் ஆனால் கிடைத்து ஏமாற்றம் தான் 

இந்த முறை ஜெயலலிதா மாறிவிட்டார் என்றார்கள், ஆமாம் உண்மைதான் தேர்தல் முடிவு வந்த போது இருந்த ஜெயலலிதா இப்போதில்லை அவர் மாறித்தான்விட்டார்

  
அன்பன்
ARR            

32 comments:

Anonymous said...

உச்ச நீதிமன்றம் அதிலும் ஒரே முடிவை சொல்லாமல் விட்டது..ஒரு குழப்பம்..இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாம் என சொல்லியிருந்தால் பிரச்சனை ஓவர்

Unknown said...

//இந்த முறை ஜெயலலிதா மாறிவிட்டார் என்றார்கள், ஆமாம் உண்மைதான் தேர்தல் முடிவு வந்த பொது இருந்த ஜெயலலிதா இப்போதில்லை அவர் மாறித்தான்விட்டார்////
அருமையான பஞ்ச் முடிவு ....
அடுத்து அடுத்து என்ன பண்றாங்கன்னு பாப்போம்

Unknown said...

எங்க பாஸ் நீங்க சொல்லி கேக்கவா போறாங்க....
முற்றும் முழுதான மீள் கட்டுமானம் தேவை!

rajamelaiyur said...

Very deep analysis

சிநேகிதன் அக்பர் said...

மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதவாறு விரைவில் நல்ல முடிவு எட்ட வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாணவர்கள் நிலை, தாங்கள் சொல்லுவதுபோல திரிசங்கு சொர்க்கமாகத்தான் உள்ளது.

ஏதாவது நல்லதொரு தீர்வு விரைவாக ஏற்பட்டால் தான் எல்லோருக்குமே நல்லது.

சென்னை பித்தன் said...

அம்மாவிடம் நானும் அதிகம் எதிர்பார்த்தேன்.இதில் ஏதோ குழப்பம்.பார்ப்போம் .இனி வருவது நல்லதாக இருக்கிறதா என.

நல்ல அலசல்!

RVS said...

மக்கள் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்தால் பாராட்டலாம். இவர்களின் பொறுப்பற்ற தன்மை மறையும் வரை நாம் பொறுக்கலாமா? கூடாதா? ;-)

சுதா SJ said...

சமசீர் புத்தகங்களில் உள்ள கருணா நிதியின் சுய தம்பட்ட பக்கங்களை நீக்குவதுதான் சிறந்தது

சுதா SJ said...

ஜெயா மாறிவிட்டாரா என்று முடிவெடுக்க இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாமே நண்பா, இப்போதானே வந்து இருக்கார்.

எல் கே said...

பாஸ் சமச்சீர் கல்வித் திட்டத்தில் எனக்குத் தெரிந்து சரியான தெளிவு இல்லை. கொஞ்சம் பொறுப்போம்

vidivelli said...

nalla aayvu....

அமைதி அப்பா said...

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நிலையை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள்.
நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
பொறுத்து தான் பார்க்கணும் நண்பா
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ மைந்தன் சிவா

உண்மைதான் பாஸ்
இருந்தாலும் ஒரு வடிகாலுக்காக
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா
Thank you

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
உண்மைதான் ஐயா
தீர்வு காணப்படவேண்டியது மிக அவசியம்
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ சென்னை பித்தன்
உண்மை ஐயா
ஆனால் இன்று பள்ளிகள் திறந்திருப்பதே நல்ல மாற்றம் தான்
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ சிநேகிதன் அக்பர்
உண்மை நண்பரே
அதுதான் எல்லோரின் விருப்பமும்
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@RVS
பொறுத்துதான் ஆகவேண்டும் வெங்கட் நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@துஷ்யந்தன்
உண்மை நண்பரே
அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தில்லை
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@துஷ்யந்தன்


நீங்க சொன்னா சரிதான்
பொறுத்திருப்போம்
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ எல் கே
உண்மைதான் சார்
அனால் தீர்வு காணப்படவேண்டியது மிக அவசியம்
நன்றி தங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ vidivelli
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ அமைதி அப்பா
ஆமாம் சார் என் அண்ணன் பையனும் இப்போது பத்தாம் வகுப்புதான் போகிறான், அவர்களின் மனநிலையை சார்ந்தே பதிவிட்டேன்
நன்றி தங்கள் கருத்திற்கு

Unknown said...

போகப் போகத் தெரியும்-இந்த
பூவின் வாசம் புரியும்
ஆகப் போவ தில்லை-வரும்
ஆன மட்டும் தொல்லை
சாகப் பிறந்தோம் நாமே-இதை
சகிக்க வேண்டும் ஆமே
நோக வேண்டாம் சகோ-நன்கு
நோக்கு மங்கே ஈகோ

புலவர் சா இராமாநுசம்

Agape Tamil Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பாடங்கள் நடத்தப்படாது கதைகளோடும் நீதிபோதனை மற்றும் விளையாட்டோடு கழிய இருக்கிற இந்த முதல் மூன்று வாரங்களில்தான் நிஜமான கல்வி போதிக்கப்பட இருப்பதாக நான் உணர்கிறேன் ராஜு.

அரசியல்வாதிகளையும் அரசையும் மீறி இப்படி அபூர்வமாகச் சில நன்மைகள் நிகழ்ந்துவிடுகின்றன.

கடவுளுக்கும் காலத்துக்கும் நன்றி குழந்தைகள் சார்பில்.

A.R.ராஜகோபாலன் said...

மிக்க நன்றி ஐயா
உங்களின் கருத்துக்கும் கவிதைக்கும்

A.R.ராஜகோபாலன் said...

உண்மை அண்ணா
யாருமே பார்க்காத கோணம்
நன்றி

G.M Balasubramaniam said...

தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப் பட்டே ஆக வேண்டும்.LET US HOPE FOR THE BEST AND BE PREPARED FOR THE WORST.