Saturday, 4 June 2011

அநியாய அராஜக ஆட்டோ கட்டணக் கொள்ளை            சென்னையில் மத்திய தர வர்க்கத்தினரின் அவசர போக்குவரத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த ஆட்டோ , இப்போதெல்லாம் வழிப்பறி கொள்ளையாக ஆகிவிட்டது, எந்த ஆட்டோகாரராக இருந்தாலும் அவர் கேக்கும் கட்டணம் உடனடியாக நம் ரத்தத்தை கொதிக்க வைக்கிறது.அந்த ஆட்டோவை தவிர்த்து வேறு ஆடோ காரரிடம் சென்றாலும் அதே கட்டணம் தான், ஒரே ஸ்டாண்டில் இவர்கள் சிண்டிகேட் போல அமைத்து கொண்டு அவர்தான் முதல் வண்டி என்று சொல்லி நம்மை அலைக்கழிக்கும் கொடுமை சொல்லி மாளாது அப்படியும் நாம் வேறு எங்கோ செல்ல எத்தனிக்கையில் அவர்களின் மறை முக அல்லது நேரடியான வசவு வார்த்தைகள் குடும்பத்துடன் செல்லும் நம்மை கூனி  குறுக வைக்கிறது, இப்படி ஒரு சம்பவத்தில் ஆத்திரப்பட்ட நான் அந்த ஆடோ டிரைவரிடம் சண்டைக்கு போக , அதே ஸ்டாண்டில் இருந்த ஒரு பெரியவர் (அவரும் ஆட்டோ டிரைவர் தான் ) ஹலோ குடும்பத்தோட இருக்க , அவங்க நெறையா பேர் இருக்காங்க பேசாம போ என்றார், அப்படியானால் பெரும்பான்மை அநியாயம் கூட நியாயமா ? இது தான் ஜனநாயகமா?. அப்போதுதான் எனக்கு திருமணம் ஆன புதிது என்பதால் என் புது மனைவி முன் மேலும் அசிங்க பட வேண்டாம் என அங்கிருந்து நகர்ந்தேன்.


               ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை என்றாலும், ஒரு சராசரி மனிதனின் மனதை உணர்த்த அதை சொன்னேன், சரி மேட்டருக்கு வருவோம், இந்த ஆட்டோ கட்டணங்களை பற்றி அரசின் நிலைப்பாடு என்ன அவர்களின் கொள்கைகள் என்ன? ஆட்டோ கட்டணங்கள் அரசு விதித்துள்ள படி  குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும், கி.மீ.ருக்கு ரூ.7 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது இது பெட்ரோல் விலை ரூ.50ஆக இருக்கும் போது நிர்ணயிக்கபட்டது  விலைவாசி உயர்வின் மிக முக்கிய காரணமாக இருக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலையை  கூட நிர்ணயிக்க வைக்கில்லாத மத்திய அரசு , அதன் பின் பல முறை பெட்ரோல் விலை ஏறியும் இந்த அடிப்படை போக்குவரத்து காரணியின் கட்டணங்களை நிர்ணயிக்காத மாநில அரசு இது போன்ற அரசின் ஆட்சியில் இருக்கும் நம் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்.

         சரி அடிக்கடி பாதை மாறுகிறேன் என நினைக்கிறேன், இப்போது உள்ள விலையின் படி பெட்ரோலும் ஆயிலும் 75 ரூபாய் என கொண்டாலும் முன்பு அரசு விகித்துள்ள கட்டணத்தின் படி குறைந்த பட்ச கட்டணமாக இருபது ரூபாயும் கிலோ மீட்டருக்கு பத்து ரூபாயும் விதிக்கலாம் அல்லது வாங்கலாம் ஆனால் இப்போதைய நிலை இப்படியா உள்ளது? குறைந்த பட்ச கட்டணம் முப்பது ரூபாய்,மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு குறைந்த பட்சமாக இன்றைய கட்டணம் எழுபது ரூபாய் அதுவும் நீங்கள் பேரம் பேசுவதில் கில்லாடியாகவும் அவர் சொல்லும் சுத்து வழிகளை கண்டு பிடிப்பவராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம், நீங்கள் ஊருக்கு புதிது என்றால் பல திடீர் ஒன்வேக்கள் முளைக்கும்.

             சென்னையை தவிர்த்து நம்மை சுற்றியுள்ள தென்மாநிலங்களில் மீட்டர் கட்டணம் உள்ளபோது இங்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. அங்கெல்லாம் இது போன்ற பேரம் பேசும் பிரச்சனைகளே இல்லை ஏறி உட்கார்ந்த உடனேயே மீட்டர் ஐ போட்டு விடுகின்றனர், அங்கிங்கு விதிவிலக்காக சில ஆட்டோ ஓட்டுனர்கள் இருந்தாலும் நம் சென்னையை போல எங்குமே மோசம் இல்லை ஏன் இந்த நிலைமை,

இது போன்ற பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாதா??  
இதற்கும் போராடினால் தான் விடிவு கிடைக்குமா ?? 
அரசுக்கு சுயமே இல்லையா ??         .                     

                       ஸ்டான்டிலேயே சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர நியாயமான கட்டணத்திற்கு  வருவதே இல்லை அப்படி கிடைக்கும்  ஒரு பயணியிடமே அந்த மொத்த நாளுக்கும் சேர்த்து சம்பாதிக்க நினைப்பது தவறு இல்லையா ??. இதை பற்றி சில ஆட்டோ நண்பர்களிடம் விசாரித்த போது சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பாதி  வட்டார போக்குவரத்து அலுவலர்களோடதும் காவல்துறையினரோடது என்று கூறினார் . அவர்களிடம் நியாயத்திற்காக செல்லும் போது பணம் பறிப்பது மட்டும் இல்லாமல் இப்படி மறைமுகமாகவும்  மக்களை உறிஞ்சுவது என்ன நியாயம் ??

இதற்கு ஒரு தீர்வே கிடையாதா?? 
நடுத்தர வர்க்கத்து மக்கள் இவர்களிடையே நசுக்க பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?   

இதில் இந்த அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் , குறைந்த பட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் , மீட்டர் ஐ நடைமுறைப்படுத்தவேண்டும் , மீறுபவர்களின் ஆட்டோ பெர்மிட் மற்றும் லைசென்ஸ் ஐ தகுதி இழக்க செய்யவேண்டும் 

செய்யுமா அரசு ??? 

அன்பன் 
ARR 

52 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசு இதை கவனித்தால் நன்றாக இருக்கும்...

MANO நாஞ்சில் மனோ said...

அம்மாவுக்கு இதை நகல எடுத்து அனுப்புங்க பாஸ்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஆட்டோ என்றாலே மனநிம்மதி இல்லை என்றுதான் அர்த்தமாகிப் போனது.

அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்காத வரை நிலைமை மாறாது.

அதே போல கட்டுப்பாடில்லாமல் எரிபொருளின் அர்த்தமற்ற விலையேற்றமும் ல்ட்டர் ரூ.20க்குக் கொடுக்க முடிந்த எத்தனாலை எரிபொருளாய் மாற்ற நடவடிக்கை எடுக்க முயற்சியெடுக்காததுமே மாபெரும் காரணம்.

sharfu said...

this is a very good post and i appreciate your effort.

i have a allergy to these auto.

i will rather walk or go by bus instead of taking an auto.

we will get bp, stress and all related items when we talk to the autos in chennai.

Anonymous said...

நிலைமை மாறுமா !!!

Unknown said...

இது காலங்கலாமாக இருக்கிற பிரச்சனை !இதற்கு தீர்வு சொல்ற அறிவு எனக்கு இல்லை ஆனா ஆட்டோவை சிறுதொழிலாக அறிவித்து எல்லா ஆட்டோ டிரைவர்களையும் முதலாளிகளாக ஆக்கி இடைத்தரகர்களிடம் மீட்டுவிட்டால் தீர்வு பிறக்குமா இல்லை பிரச்சனை இன்னும் அதிகமாகுமா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லா ஊரிலும் இதே அநியாய வசூல் தான் நடைபெற்று வருகிறது, சார்.

திருச்சியிலும் மீட்டர் கிடையாது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5 ஏறினால், இவர்கள் ஒவ்வொரு ட்ரிப்புக்கும், ஒவ்வொரு சவாரிக்கும் ரூபாய் 20 கூடுதலாகக்கேட்கிறார்கள்.

கேட்டால் பெட்ரோல் விலை ஏறி விட்டது என்பது தான் பதில்.

எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் தான் உள்ளது. அதிலும் விடியற்கால சவாரி, இரவு 10 மணிக்கு மேல் சவாரி என்றால் இன்னும் நிறைய கேட்கிறார்கள்.

ஒரு 2 வருடங்கள் முன்பு 50 ரூபாய்க்கு போன இடத்துக்கு இப்போது 100 ரூபாய் தர வேண்டியதாக உள்ளது.

அரசாங்கம் ஏதாவது துரித மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் ஆட்டோக்காரர்கள் மிகவும் நியாயமாக மீட்டர்படி வாங்கிக் கொள்கிறார்கள். குறைந்தபட்ச தூரத்திற்கு ரூ 20 கொடுத்தால் ரூ 14 போக மீதி 6 ரூபாய் கொடுத்து விடுகிறார்கள்.

இங்கு குறைந்தபட்ச தூரத்திற்கே ரூ 40 வசூலிக்கின்றனர்.

நல்ல பதிவு. ஏதாவது நல்லது நடக்க வேண்டும்.

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
நிச்சயமாக கவனிக்க வேண்டும் நண்பரே
உங்களின் கருத்திற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ MANO நாஞ்சில் மனோ
செஞ்சிடுவோம் அண்ணாச்சி
உங்களின் கருத்திற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி
நிதர்சனமான கருத்து அண்ணா
நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@sharfu
very true Sharfu
Thanks for your visit and comment

A.R.ராஜகோபாலன் said...

@கந்தசாமி
மாறினால் நல்லது தானே அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
ஆட்டோவை சிறுதொழிலாக அறிவித்து எல்லா ஆட்டோ டிரைவர்களையும் முதலாளிகளாக ஆக்கி இடைத்தரகர்களிடம் மீட்டுவிட்டால் தீர்வு பிறக்குமா


மிக நல்ல தீர்வு சகோதரரே
இதை ஏன் அரசு பரிசீலிக்க கூடாது??
நன்றி தங்களின் கருத்திற்கு

Anonymous said...

யாரும் சொல்லாத செய்தி..

Anonymous said...

தினசரி பெட்ரோல் விலை உயர்வால் அவர்களும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள்

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
மிக உண்மை ஐயா.,
திருவனந்தபுரத்திலும் மிக நல்ல முறையில் மீட்டர் பயன்படுத்தபடுகிறது , எட்டு கிலோமீட்டருக்கு மேலான பயணத்திற்கு 37 ரூபாய் மட்டு பெற்றுக்கொண்டு பாக்கி மூன்று ரூபாய் தந்த அதிசய ஊர் அது ஐயா
நன்றி தங்களின் தங்க கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

ஆர்.கே.சதீஷ்குமார்
யாரும் சொல்லாத செய்தி

நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
தினசரி பெட்ரோல் விலை உயர்வால் அவர்களும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள்

இருந்தாலும் இது அதிகம் இல்லையா தோழரே
நன்றி தங்களின் கருத்திற்கு

Madhavan Srinivasagopalan said...

குஜராத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலும் (ஏன்,, நான் பத்தாண்டுகளில் சந்தித்த அனைவருமே) மிகவு நேர்மையாக இருந்தனர்.. கேட்கப்பட்ட பணம் ஞாயமாக இருந்தது..
எதற்கெடுத்தாலும், குஜராத்தின் குற்ற செய்திகளையே பரப்பும், ஊடகங்கள் இதனை ஏன் பரப்பவில்லை..

நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வதே வாழ்வில் முன்னேற விழியாகும்..

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
குஜராத் இந்தியாவின் முன்னோ(மோ)டி
மாநிலம் என்பதில் சந்தேகம் இல்லை
நன்றி மாதவன் உங்களின் கருத்திற்கு

நிரூபன் said...

சகோ சமூக அக்கறை உள்ள பதிவு, இதற்கான ஒரே ஒரு தீர்வு, இப் பதிவினை அரசாங்கத்திற்கோ அல்லது போக்குவத்துத் துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்குத் தெரியப்படுத்த வேண்டும்,

Manual ஆக கைகளினால் இயக்கப்படும் மீட்டர்களிற்குப் பதிலாக Automatic Electronic மீட்டர்களை நாடு தழுவிய ரீதியில் ஓட்டோக்களுக்கு அறிமுகம் செய்ய வேஎண்டும், அப்போது தான் இப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு கிடைக்கும்.

ஆட்டோமெட்ரிக் மீட்டர்களைப் பொருத்துவது ஆரம்பத்தில் பொருட் செலவுகளையும், ஓட்டோ நடத்துனர்களுக்கு சிர்மத்தினையும் தந்தாலும்,
காலப் போக்கில் பயணிகளுக்கு நல்ல சேவையினை வழங்கவும், ஏமாற்றிப் பணம் பறிக்கும் வேலைகளை நிறுத்தவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...

பாஸ், நம்ம ஊர் ஆட்டோக்கள், புதிதாக ஒரு ஊருக்குப் போய், ஆட்டோ பிடித்து அட்ரஸ் இனைக் கொடுத்தால் போதும்,
ஆள் / பயணி வெளியூர் என்று தெரிந்தால் கோவிந்தா தான்.

ஊர் எல்லாம் சுற்றிப் போட்டு, பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தினை 35கிலோ மீட்டர் சுத்தி சுளையா காசு புடுங்கிப் போட்டுத் தான் வுடுவாங்க பாஸ்.

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
பாஸ், நம்ம ஊர் ஆட்டோக்கள், புதிதாக ஒரு ஊருக்குப் போய், ஆட்டோ பிடித்து அட்ரஸ் இனைக் கொடுத்தால் போதும்,
ஆள் / பயணி வெளியூர் என்று தெரிந்தால் கோவிந்தா தான்.

உண்மை உண்மை உண்மையை தவிர வேறில்லை சகோ
நன்றி தங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
"ஆட்டோமெட்ரிக் மீட்டர்களைப் பொருத்துவது ஆரம்பத்தில் பொருட் செலவுகளையும், ஓட்டோ நடத்துனர்களுக்கு சிர்மத்தினையும் தந்தாலும்,
காலப் போக்கில் பயணிகளுக்கு நல்ல சேவையினை வழங்கவும், ஏமாற்றிப் பணம் பறிக்கும் வேலைகளை நிறுத்தவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை".

இது சாத்தியமாககூடிய தீர்வுதான் சகோ
இந்த அதிக முதலீட்டுக்கு அரசாங்கம் மானியமும் தரலாமே

corpbank said...

A very good post and who ever be in Power they will do NOTHING in this. I am presently in Mumbai and earlier in Mangalore. After seeing both the States, whenever I land in Madras, my BP will shoot up once I board Auto. In Tamil Nadu they can only create DRUNKARDS by opening TASMAC. Both TASMAC and Auto Issue are to be seriously taken care. The entire generation is spoiled on account of opening LIQUOR and Auto rickshaw as pointed out will try to get the entire amount of the day from a single individual.

A.R.ராஜகோபாலன் said...

@corpbank

very true sir, its my pleasure that i hv you here, do post your comments here

Ahamed irshad said...

சாட்டைய‌டி க‌ட்டுரை..ஆட்டோக்கார‌ர்க‌ளிட‌ம் கேட்டால் அவ‌ர்க‌ள் பெட்ரோல்,டீச‌ல் விலையை கைக்காட்டுவார்க‌ள்.. இப்ப‌டி ஒவ்வொருத்த‌ரும் குறையை வேறொன்றின் மீது சாட்டுவ‌துதானே த‌ப்பிக்க‌ வழி.. :(

A.R.ராஜகோபாலன் said...

@அஹமது இர்ஷாத்
மிக்க நன்றி இர்ஷாத்
நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் கருத்து
தீண்ட பட்ட பதிவு

எல் கே said...

நம்ம படற கஷ்டத்தை நீங்க சொல்லிட்டீங்க அவங்களோட கஷ்டத்தை யார் சொல்றது ?

பெட்ரோல் ./ டீசல் விலை உயர்வு அவங்களுக்கும் உண்டு

போலிஸ் கேட்கும் மாமூல் கொடுத்தாகணும்

வேற ஒருத்தரிடம் ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் தினப்படி இவ்வளவு என்று கல்லா காமிச்சாகனும். இல்லாட்டி அடுத்த முறை வண்டிக் கிடைக்காது.

வங்கி லோன் எடுத்து ஆட்டோ வாங்கி இருந்தால் மாச மாச தவணை குடுத்தாகணும்

Unknown said...

ஆயுத கொள்ளைக் கூட்டத்தை விட
அராஜக ஆட்டோ கொள்ளை மிகவும்
கொடுமையானது தங்கள் கருத்தே
என்னுடைய கருத்தாகும்
வேண்டிய நேரத்தில் சொல்ல
வேண்டிய கருத்தை சொன்னதற்கு
நன்றி

புலவர் சா இராமாநுசம்

Radha N said...

pl forward to CM cell.

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
எல்லா மாநிலங்களிலும் இந்த பிரச்சனை உண்டுதானே ,
விவசாயத்தைவிடவா இந்த தொழில் கஷ்டமானது, அவர்களின் பக்கம் நியாயம் இருந்தாலும் அதை விட அநியாயம் அதிகம் அல்லவா?
எத்தனை நாட்கள் மழை நாட்களில் ஆட்டோ வராமல் கிடைக்காமல் தவித்திருப்போம்
தங்களின் நல்ல கருத்திற்கு நன்றி எல் கே

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
தங்களின் வலிமையான கருத்திற்கு நன்றி ஐயா

ஷர்புதீன் said...

பதினான்கு வருடம் சென்னை வாழ்க்கை என்பதால் "அது" குறித்து நன்றாக தெரியும், ஆனால் தற்பொழுது மூன்று வருடமாக வாழ்ந்துவரும் கோவையில் கால் டாக்சி மிக அளவான கட்டணம்., முதல் இரண்டு கிலோ மீட்டர் முப்பது ரூபாய், அதற்க்கு பிறகு ஒவ்வரு கிலோ மீட்டருக்கும் பத்திரண்டு ரூபாய். ( கோவையில் athigaஆறு பேர் தாராளமாக பயணிக்கலாம், டிரைவர்களின் தொந்தரவு கிடையாது, மிக சரியாக செயல்பட்டு வருகிறது இங்கே....

இதில் தாமசு என்ன என்றால் கோவையில் ஆட்டோ கட்டணம் சென்னையின் கால் டாக்சி கட்டணத்திற்கு இணையானது., கால் டாக்சி கட்டணம் சென்னையில் உள்ள ஆட்டோ கட்டணத்திற்கு இணையானது... ஹ ஹ ஹா

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
மிகச் சரியான கருத்து சில சமயம் கால் டாக்சியை விட மிக அதிகமாய் கேட்கிறார்கள் இங்கே
நன்றி தங்களின் கருத்துக்கு ஷர்புதீன்

மாலதி said...

ஆட்டோ என்றாலே மனநிம்மதி இல்லை என்றுதான் அர்த்தமாகிப் போனது.நிலைமை மாறுமா ?

A.R.ராஜகோபாலன் said...

@மாலதி
நம் அரசாங்கம் நினைத்தால் மாற்றமுடியும் மேடம்
மனது வைக்குமா அரசு

மதுரைக்காரன் said...

True one....

A.R.ராஜகோபாலன் said...

@ மதுரைக்காரன்
நன்றி நண்பரே

ராஜ நடராஜன் said...

ஆட்டோ பற்றி முன்பே சிலர் விவாதம் எழுப்பி பின்னூட்டமிட்டு விட்டு பின் மறந்து விட்டு அடுத்த பிரச்சினைக்கு தாவி விடுகிறோம்.

பெட்ரோல் விலையென்பது அனைத்துக் காலத்திலும் தொடரும் தொடர்கதையென்பதால் பெட்ரோல் விலையேற்றம் மட்டுமே காரணம் என கூறி விட முடியாது.

ஏனைய மாநிலங்களைப் பொறுத்த வரையில் தமிழகம் கட்டண வசூல் மட்டுமில்லாது பண்பாக பேசுவதிலும் மோசம்.முக்கியமாக தலைநகர் சென்னைவாசிகள்.

தனி மனிதனாக,நண்பனாக நான் ஆட்டோக்காரன்!ஆட்டோக்காரன் என்ற பாடலுக்கு தகுதியானவர்களே.ஆனால் பொதுவில் ஆட்டோ என்றால் பேஜார் புடிச்ச ஆளுக.புதிய ஆளாக இருந்தால் ஏமாற்றும் குணம்.Ethics காரணமா? முன்னாடி ஆட்டோவில்தான் போயாகணும் என்ற அவர்களின் கட்டுப்பாடு சங்கம் காரணமா?நியாயமா சம்பாதித்து பெரிய ஆளாக ஆனதாக பெரிசா யாரையும் காணோம்?சமூக கட்டமைப்பு காரணமா?நிலையற்ற ஊதியம் என்பதால் பேராசை காரணமா?

மொத்தத்தில் தமிழகத்தின் எதிர் பிம்பங்களில் ஒன்றாக ஆட்டோ.

A.R.ராஜகோபாலன் said...

@ராஜ நடராஜன்
"மொத்தத்தில் தமிழகத்தின் எதிர் பிம்பங்களில் ஒன்றாக ஆட்டோ"

மிகச்சரியான வார்த்தை விகிதங்களில் எழுதப்பட்ட கருத்து
நன்றி
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ நாகு
Thanks for your comments Mr.Nagu
pls keep post your comments here

என் நடை பாதையில்(ராம்) said...

குஜராத்தில் ஆட்டோக்கள் எல்லாம் CNG (compressed nature gas) இல் ஓடுவதால் இங்கு ஒரு கிலோ மீட்டற்கு ஒரு ரூபாய் தான்...

A.R.ராஜகோபாலன் said...

@ என் நடை பாதையில்(ராம்)
அந்த முறையை ஏன் இங்கே பயன் படுத்தகூடாது
ராம்
தங்களின் முத்த வருகைக்கும் கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. சென்னை ஆட்டோவில் ஏறுவது என்றாலே ஒரு வித பயம்தான். அவர்கள் பேசும் அநாகரிக வார்த்தைகளும், கேட்கும் விதமும் அச்சமூட்டுபவை.

தில்லியில் சி.என்.ஜி. ஆட்டோக்கள் ஓடுவதால் இந்த பிரச்சனை இல்லை. மீட்டர் போட்டால் செல்கிறோம் இல்லையெனில் இல்லை. குறைந்த பட்சம் ரூ.19/ பிறகு ஒவ்வொரு 0.1 கி.மீ.க்கு 65 பைசா அதாவது கி.மீக்கு 6.50.. தான்.

A.R.ராஜகோபாலன் said...

@ வெங்கட் நாகராஜ்
அது போல் இங்கு வரும் நாள் எந்நாளோ
காத்திருக்கிறோம் நண்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு

அமைதி அப்பா said...

//ஸ்டான்டிலேயே சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர நியாயமான கட்டணத்திற்கு வருவதே இல்லை அப்படி கிடைக்கும் ஒரு பயணியிடமே அந்த மொத்த நாளுக்கும் சேர்த்து சம்பாதிக்க நினைப்பது தவறு இல்லையா ??//

நானும் இந்த மாதிரி சிந்திப்பதுண்டு. இவர்கள் கொஞ்சம் நியாயமாக கட்டணம் வாங்கினால் அதிகளவில் மக்கள் ஆட்டோவை பயன்படுத்துவார்கள் எபது உண்மையே!

அமைதி அப்பா said...

//இதில் இந்த அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் , குறைந்த பட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் , மீட்டர் ஐ நடைமுறைப்படுத்தவேண்டும் , மீறுபவர்களின் ஆட்டோ பெர்மிட் மற்றும் லைசென்ஸ் ஐ தகுதி இழக்க செய்யவேண்டும//

பிரச்சினையை சொல்லியதோடு தீர்வும் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
"இவர்கள் கொஞ்சம் நியாயமாக கட்டணம் வாங்கினால் அதிகளவில் மக்கள் ஆட்டோவை பயன்படுத்துவார்கள் என்பது உண்மையே!"

மிகச்சரியான வார்த்தை,அமைதி அப்பா

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
மிக்க நன்றி அமைதி அப்பா

Venkatesan M.K. said...

we have issues in Bangalore also while travelling in auto.. all auto drivers will not come to the place where you need to go , eventhough that one is near to u. and one more thing all auto drivers are not giving the balance amt properly. I think the bloggers who all are already commented on this post were travlled in very few areas in Bangalore.. I am living here from past three years (additional info)

A.R.ராஜகோபாலன் said...

@Venkatesan M.K.
Thanks for your comment Sir, what you said is right but here the condition is day by day getting worse.