Sunday, 5 June 2011

என் மகள்


என் செல்ல குட்டி தேவதை - இவள் 
செய்யும் சுட்டியெல்லாம் தேன்வதை தாயை இழந்த எனக்கு - ஆண்டவன் 
தொடங்கிய புது கணக்கு பூப்போலே புன்னைகைக்கும் புதுமலர் - அவள் 
பிராத்தனையில் துளிர்விட்ட அன்புஅலர்என்வாழ்வுக்கு அவளே அர்த்தம் - தருவேனென் 
பாசத்தை அவளுக்கு மொத்தம் என் உயிரின் ஒளியவள் - என்னை 
நேசத்தால் செதுக்கும் உளியவள் மழலைபேசி மயக்கும் தந்திரம் - நான்
அறிந்தேவீழும் அன்பு மந்திரம் அச்சாய் என்அன்னையின் அம்சம் - அவளால்
பெருமைபெறட்டும் என் வம்சம்   

அன்பன் 
ARR  

38 comments:

Anonymous said...

அழகான போட்டோக்கள்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாசமுள்ள மகளின் மேல் நீங்கள் தொடுக்கும் பூப்போன்ற மிருதுவான, வாசம் மிக்க, அன்பைப் பொழியும் மலர் அம்புகளாகிய, அரும்புகளாகிய வரிகள் அனைத்தும் அருமையோ அருமை. குழந்தை எல்லா நலன்களும், எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழப்பிரார்த்திக்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@ கந்தசாமி
மிக்க நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின்
அன்பான கருத்திற்கும்
பாக்கியமான ஆசிக்கும்
மிக்க நன்றி ஐயா

சுதா SJ said...

போட்டோக்கள் போலவே அழகான அன்பு

A.R.ராஜகோபாலன் said...

@துஷ்யந்தனின் பக்கங்கள்
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே

சிவகுமாரன் said...

சந்தோசமாயும் , கொஞ்சம் பொறாமையாகவும் ( எங்கள் குடும்பத்தில் யாருக்கும் மகள் இல்லை ) உள்ளது. அருமை

நிரூபன் said...

அழகான புகைப்படங்கள் சகோ...

கவிவரிகளும் உங்கள் அன்பு மகள் மீதான உங்களின் பாசத்தினைச் சொல்லி நிற்கிறது.

எல் கே said...

பொண்ணுக்கு சுத்தி போடுங்க நண்பரே. பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தாலே வீடு கல கல என இருக்கும்

இப்படிக்கு
பெண்ணை பெற்ற இன்னொரு அப்பன்

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
ரொம்ப நன்றி அன்பரே
உங்கள் வாழ்த்திற்கு
ரொம்ப சந்தோஷம்
உங்கள் பதவிக்கு

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
எங்கள் குடும்பத்திலும் 35 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவள் தான் என் அண்ணன் மகள்
உங்கள் குடும்பத்திலும் மகாலட்சுமி அவதரிக்க வாழ்த்துகிறேன்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
மனம் மகிழ்ந்த
மதி நிறைந்த
நன்றி சகோ

Unknown said...

காத்திருகிறேன் உங்கள் அன்பு மகளின் கவிதை வரிகள் படிக்க ...பின்ன நீங்க கவிதையாய் அன்பை ஊட்டும் போது அவங்க தரும் பதிலும் கவிதையாக தானே இருக்கும் . ஆதலால் காத்திருக்கிறேன்

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
மிக்க நன்றி நண்பரே
உங்கள் வாக்கு பலிக்கட்டும்

Madhavan Srinivasagopalan said...

குட்டிக்கு, வாழ்வில் அனைத்து வளமும் பெற வாழ்த்துக்கள்..

மனோ சாமிநாதன் said...

"மழலைபேசி மயக்கும் தந்திரம் - நான்
அறிந்தேவீழும் அன்பு மந்திரம்"

அருமையான‌ வ‌ரிக‌ள்! ஒரு தந்தைக்கே உரிய‌ பாச‌மும் பெருமித‌மும் வ‌ரிக‌ளில் தெரிக்கிற‌து!
குழந்தையின் க‌ண்க‌ளில் புத்திசாலித்த‌மும் முக‌த்தில் துறுதுறுப்பும் நிறைய‌வே தெரிகின்ற‌‌ன‌! என் இனிய‌ வாழ்த்துக்க‌ள் உங்க‌ளின் அன்பு ம‌க‌ளுக்கு!!

வெங்கட் நாகராஜ் said...

புகைப்படங்களும் உங்கள் அழகிய கவிதைகளும் அருமை நண்பரே....

நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி மாதவன்

A.R.ராஜகோபாலன் said...

@ மனோ சாமிநாதன்
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மனம் நிறைந்த நன்றி அம்மா

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்

மிக்க நன்றி நண்பரே
உங்களின் கனிவான கருத்திற்கு

G.M Balasubramaniam said...

நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து, குறு முறுவல் காட்டும் முகம்;நினைவைப் பதித்து,நளினம் தெளிக்கும் இரு கண் விழிகள்.அமுதம் கடைந்து சுவை அளவில் கலந்த எழில்.
கண் பட்டு விடப் போகுதைய்யா..சுற்றிப் போடுங்கள். தீர்க்காயுசுடன் நலமாக, வளமாக வாழ ஆண்டவன் அருளட்டும்.

A.R.ராஜகோபாலன் said...

@ G.M Balasubramaniam
மிக்க நன்றி ஐயா
உங்களின் இந்த கவிதை வாழ்த்து
என் மகளின் நலனை காக்கும்

RVS said...

கோப்லி.. அம்மா ஜாடை இருக்கிறது.. கவிதையாய் தீட்டியிருக்கிறாய். வாழ்த்துக்கள். ;-))

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மிக்க நன்றி வெங்கட்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரொம்ப லேட் ராஜு.

அம்மாவின் உருவத்தை மொழிபெயர்த்த மகளும் அவளின் உருவத்தைத் தமிழால் மொழிபெயர்த்த அப்பனும் என்று மொத்தத்தில் நல்ல குடும்பம்.

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நன்றி அண்ணா

Anonymous said...

பெண் குழந்தை கடவுள் தந்த வரம்!
-பெண்ணை பெற்ற இன்னொரு தகப்பன்

Anonymous said...

அம்முகுட்டி பூரண உடல்நலம்,மனநலம்,நீண்ட ஆயுளுடன் வாழ்க..வாழ்க!!!

A.R.ராஜகோபாலன் said...

ஆர்.கே.சதீஷ்குமார்

"பெண் குழந்தை கடவுள் தந்த வரம்!
-பெண்ணை பெற்ற இன்னொரு தகப்பன்"

மிக உண்மை நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

ஆர்.கே.சதீஷ்குமார்
"அம்முகுட்டி பூரண உடல்நலம்,மனநலம்,நீண்ட ஆயுளுடன் வாழ்க..வாழ்க!!!"

மிக்க நன்றி
உங்களின் வாழ்த்து என் மகளின் பாக்யம்

அன்புடன் மலிக்கா said...

பாசம்கலந்த நேசக்கவிதை
அன்புகலந்த ஆத்மக்கவிதை.
உயிரும் உணர்வும் அருமை[புகைப்படமும் படைப்பும்]. வாழ்த்துக்கள்..

A.R.ராஜகோபாலன் said...

@ அன்புடன் மலிக்கா
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி சகோதரி

bandhu said...

வாழ்த்துக்கள் ராஜகோபாலன்!

A.R.ராஜகோபாலன் said...

@bandhu
மனம் மகிழ்ந்த நன்றி நண்பரே

ஷர்புதீன் said...

நீண்ட ஆயிலும், நிறைந்த அமைதியும் பெற்று வாழ்க வாழ்க !

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்
மிக்க நன்றி நண்பரே
உங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கு

நகைச்சுவை-அரசர் said...

உன் (க)விதைகளிலேயே இது மிக இனிய கவிதையாக இருக்கக்கூடும்..

ஒருவகையில், கவிஞர்கள்மீது எனக்கு பொறாமை உண்டு.. நமக்கு கைவராத மொழியில் அல்லது வகையில் அவர்களால் மேலதிகமாக குழந்தைகளை கொஞ்சி மகிழமுடிகிறதே என்று..!

வரிகளுக்கான படமா.. அல்லது படங்களுக்கான வரிகளா என்பதில் எனக்கு இன்னும் குழப்பம் நீடிக்கிறது..

வாழ்வாங்கு வாழட்டும் உன் செல்வி..!

A.R.ராஜகோபாலன் said...

@நகைச்சுவை-அரசர்
இதுவரை நீ அளித்த கருத்துக்களிலேயே இதைதான் நான் மிகச் சிறந்ததாய் கருதுகிறேன், ஏனெனில் நீ என் மகளை வாழ்த்திய கருத்தல்லவா