Saturday 18 June 2011

மனதை பாதித்த சாலை விபத்துக்கள்



                                இன்று வளர்ந்து வரும் வாகன பெருக்கத்திலும் நமது அவசர போக்குவரத்திலும் , தகுதி இல்லாத வாகன ஓட்டிகளாலும், குடி போதைகளாலும் , கவனக் குறைவுகளாலும் , முறையற்ற பாதுகாப்பற்ற போக்குவரத்தாலும், அவசியமே இல்லாத அவசரங்களாலும் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?????
ஒரு லட்சத்து முப்பத்தையிந்தாயிரம் பேர் (1,35,000), இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

         தமிழகத்தில் 2006​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர். 2007 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006​ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013​ஆம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010​லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.  

            உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள்,என் மனதை என்னவோ செய்கிறது.ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர்.இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; பூகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை. ஒவ்வொரு விபத்திலும் உயிர்களை இழப்பவர்களது குடும்பங்கள், வேதனையில் துடிக்கின்றன. அவர்களது எதிர்கால வாழ்வு இருண்டு போகிறது.அவர்களிப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கிறோமா நாம் , எதற்கடுத்தாலும் அவசரம் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் புகுந்து வெளியே வர அவசரம், நாம் இல்லாது போனால் நம் குடும்பத்திற்கு யார் துணை என எண்ணிப்பார்த்தால் இப்படி கவனக்குறைவாக நடந்து கொள்வோமா??


                            இந்த விஷயத்தில் போக்குவரத்து காவலர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் , வேலையில் கவனமும் தேவை சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளை இவர்கள் கண்டு கொள்ளுவதே இல்லை , நேற்று தி.நகரில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த  நான் எனக்கான சிக்னல் விழுந்ததும் என் வண்டியை செலுத்திய வேளையிலே எதிர்புறத்தில் இருந்து வந்த ஒரு பைக் என்னை மின்னலென கடந்து சென்றது , நான் கொஞ்ச வேகமாக எடுத்திருந்தாலோ  இல்லை அவன் சற்றுமெதுவாக வந்திருந்தாலோ ஒரு விபத்து நடந்திருக்கும் என்பது நிச்சயம், அவனின் அஜாக்கரதைக்கு அவன் விழட்டும் சாலை விதிகளை பின்பற்றும் நான் ஏன் பாதிக்க படவேண்டும்.இதை தேமே என்று பார்த்து கொண்டிருந்த அந்த போக்குவரத்து காவலரை என்ன செய்வது, தவறு செய்தால் தண்டிக்க படுவோம் என்ற எண்ணம் எந்த வாகன ஓட்டிகளுக்குமே இல்லை, அப்படியே அவர்கள் பிடிப்பட்டாலும் ஐம்பதோ  நூறோ கொடுத்து சரிக்கட்டிவிடலாம் என்ற எண்ணம் தான் அவர்களை இப்படி பொறுப்பின்றி செயல்படச் செய்கிறது, அந்த பணம் அவர்களுக்கோ அல்லது ஏதோ ஒரு அப்பாவிக்கோ போடும் வாய்க்கரிசி என்பதை அவர்கள் உணர்ந்தால் தான் மாற்றம் வரும்.

        இது ஒருமாதிரியான கொடுமை என்றால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் இன்னும் மோசமானது, அதுவும் இரவு நேரப்பயணம் மிகவும் ஆபத்தானது , முன்னே செல்லும் வாகனம் கண்களுக்கு தெரியவேண்டி, எரிய விடவேண்டிய சிவப்பு விளக்குகள் எந்த லாரியிலுமே எரிவதில்லை , சில பஸ்களிலும் இருப்பதில்லை இதையெல்லாம் எந்த போக்குவரத்து காவலரும் கவனிப்பது இல்லை , நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் பணமே கண்ணாக இருப்பதால் இது மாதிரியான கொடுமைகள் நிகழ்கின்றன , அதுவும் சாலை திருப்பங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் தான் மிக அதிகமான விபத்துகள் நடக்கின்றன.

            
  

  இதற்கல்லாம் என்ன தீர்வு என்பது நாம் அறியாத தெரியாத விஷயம் எல்லாம் அல்ல , தனி மனித ஒழுக்கமும் , மற்றவர்களின் உயிரின்மீதும் உடமையின்மீதும் இருக்க வேண்டிய மதிப்பும் மிக அவசியம்.நம்முடைய பொறுப்பற்ற செயலாலும் நமக்கும் மற்றவருக்கும் ஏற்ப்படும் இழப்பை என்ன செய்தாலும் திருப்பி தர முடியாது என்பதை மக்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும், அரசாங்கமும் அதன் பொறுப்பை உணர்ந்து சட்ட திட்டங்களை சீர்ப்படுத்தி கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்தினால் இது மாதிரியான தேவை இல்லாத இழப்புகளை தடுக்கலாம், இது போன்ற சாலை விபத்தில் தன அமைச்சரவை சகாவையே இழந்த நம் முதல்வர் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் , அதே போல் நாம் நல்ல முறையில் வாகனத்தை ஓட்டினால் மட்டும் போதாது எதிரே , அருகே வருபவரும் எப்படி ஓட்டுகிறார் என்பதை பார்த்து யூகித்து வாகனத்தை செலுத்தி சாலை விபத்துக்களை தடுக்கவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்




         இந்த ஒரு படமே சாலை விபத்தின் கோரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் , ஆயிரம் வார்த்தைகள் சாதிக்காததை ஒரு படம் கொண்டு சேர்க்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இதை இணைத்துள்ளேன். இதை படித்த ஒருவராவது இனி நமக்கும் நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு வாகனம் ஓட்டுவேன் என முடிவு செய்தீர்களேயானால் அதுவே இந்த பதிவின் வெற்றி 
நன்றி

அன்பன்
ARR   


47 comments:

Unknown said...

சவுக்கடி ...அந்த படமும் உங்க வார்த்தையும் நெஞ்சில் அறையுதுங்கோ ...அம்மாடி முடியல ..
நான் வாகனம் ஓட்டும் காலத்தில் நல்லபடியா ஓட்டுறேன் சரியா ...

Unknown said...

இந்த மாதிரி நல்ல பதிவுகளுக்கு ஒட்டு படுவது கடமை ....நான் கடமையை செய்துவிட்டேன்

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
//நான் வாகனம் ஓட்டும் காலத்தில் நல்லபடியா ஓட்டுறேன் சரியா //

முதல் வெற்றி நண்பா உங்களின் உறுதிமொழி
நன்றி , என் பதிவை முழுமை அடைய செய்ததற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நன்றி உங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும்

G.M Balasubramaniam said...

டாக்டர் கந்தசாமியின் “ சாமியின் மன அலைகள் “-ல் அவர் எழுதியுள்ள பதிவைப் பாருங்கள். இந்த மாதிரியான புகைப் படங்களை ஹிந்து பேப்பர் பிரசுரிப்பதில்லை.

Suresh Bafna said...

If every one follows Discipline we can restrict to a major level.

Majorly it can be controlled at the time of issuing License. Many people doesn't have a valid license. Even if they have license they don't know the rules.

If at the time of license it self we educate & create the awarness to the public then the percentage can be minimum.

I like the way you have written your feelings....

The pictur you have publlished is really touching....

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
டாக்டர் கந்தசாமியின் “ சாமியின் மன அலைகள் “-ல் அவர் எழுதியுள்ள பதிவைப் பாருங்கள். இந்த மாதிரியான புகைப் படங்களை ஹிந்து பேப்பர் பிரசுரிப்பதில்லை.

மதிப்புக்கு உரிய ஐயா
உங்களின் கருத்து எனக்கு புரிய வில்லை
நான் என் பதிவில் ஏதேனும் தவறிழைத்து விட்டேனா
அல்லது படங்களை ஏதேனும் தவறா
விளங்க சொல்வீர்களேயானில் திருத்திக்கொள்ள எதுவாக இருக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@Suresh Bafna

Dear Suresh
thanks for your valid comments , its my pleasure to have you here, hope you do the same in future also.
and i too accept your opinion on this //at the time of license it self we educate & create the awarness to the public//

கிருபா said...

என்ன சொல்வது அன்பரே தெரிந்தே செயியும் தவறை
நாம் எவ்வளவு முயற்ச்சித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் உங்களை போன்று முயன்றால் சிறிதவேனும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு

A.R.ராஜகோபாலன் said...

@கிருபா
அந்த மாற்றம் நம்மில்லிருந்தே தொடங்கினால் நலம் அன்பரே
உங்களின் கருத்துக்கு நன்றி

சென்னை பித்தன் said...

படத்தைப் பார்க்க முடியவில்லை.நம் தவறு இல்லா மலே நாம் விபத்தில் மாட்டுகிறோம் பல நேரங்களில்,மற்றவரின் தவறால்;இது எனக்கும் நடந்திருக்கிறது.சாலை விதிகளைக் கடைப் பிடித்து,எச்சரிக்கையாக அனைவரும் வாகனம் ஓட்டினால் விபத்துகள் பெருமளவு குறையும்.

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
படத்தை மாற்றிவிட்டேன் ஐயா
நன்றி உங்களின் கருத்துக்கும், கவனத்திற்கும்

எல் கே said...

என்னவென்று சொல்ல ? இந்தியாவில் சாலை விபத்துகளில் தமிழகம் முதல் இடமாம் :( . பாதி சிக்னல்களில் போலிஸ் இல்லை என்றால் யாரும் சிக்னலை மதிப்பது இல்லை. ஹெல்மெட் போடுங்க அடிபடறது குறைக்கலாம்னு சொன்னா, சென்னை வெயிலுக்கு ஹெல்மெட் போட முடியுமா அப்படின்னு எதிர் கேள்விதான் கேக்கறாங்க

Madhavan Srinivasagopalan said...

பிஞ்சுக் குழந்தை கீழே விழுந்திருப்பது
நெஞ்சை பிழியும் உணர்ச்சி வருகிறது... அதென்னா தவறு செய்தது ?

ஒரே வரி... மூன்றே வார்த்தைகள்...
"சாலை விதிகளை மதிப்போம்"

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
மிக உண்மையான கருத்து சார்
எல்லாத்துக்கும் எதிர்க் கேள்வி கேட்டே
பல இன்னலுக்கு ஆளாகிறோம்
உங்களின் புதிய புகைப்படம் அம்சமாய் இருக்கு
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
என்னையும் அந்த படம் பாத்தித்தது
முத்தான மூன்று வார்த்தைகளை
வாக்கியமாய் சொன்ன விதம் அருமை
நன்றி தங்களின் கருத்துக்கு

தமிழ் உதயம் said...

மக்களுக்கு விபத்து பற்றின விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தமே.

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
ஆமாம் நண்பரே
விழிப்புணர்வு உள்ளவர்களும் அதன் படி நடப்பதில்லை என்பதும் உண்மை
நன்றி தங்களின் கருத்திற்கு

Unknown said...

பார்க்கவே முடியல பாஸ்...தவிர்க்கப்பட வேண்டும்!!

Unknown said...

ஹெல்மட் போடவேண்டியது கட்டாயமல்லவா ஏனைய நாடுகளில்! எத்தனை வருஷமா இதைப்பற்றி கதைச்சுட்டே இருக்கிறார்கள்?

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
உண்மைதான் அன்பரே
தவிர்க்க படவேண்டிய நிகழ்வுதான்
மக்களும் அரசும் மனம் வைக்க வேண்டும்
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஜீ...
இதற்கு ஹெல்மெட் போடுதல் மட்டுமே தீர்வல்ல நண்பரே
சாலை விதிகளை, மற்றவர் உயிர்களை மதிக்கவேண்டும்
நன்றி தங்களின் கருத்துக்கு
உங்களின் மறு வருகைக்கு நன்றி வணக்கம்

RVS said...

எப்போதும் சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலில் மக்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எல்லார் மீதும் தவறு இருக்கிறது. விழிப்புணர்வுப் பதிவு. நன்று கோப்லி. ;-))

A.R.ராஜகோபாலன் said...

@RVS
நன்றி நண்பா
உன் கருத்துக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

10 to 11 in INDLI
6 to 7 in Tamilmanam

மிகவும் அருமையான, யாவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அவசியமான பதிவு.

நிதானமாக வண்டி ஓட்டுவோம்.
சாலைவிதிகளை சரியே கடைபிடிப்போம்.
வேகத்தை விட விவேகமே இன்றைய தேவை.
நாமும் பாதுகாப்புடன் வாழ்ந்து
பிறரையும் வாழவைப்போம்

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின்
வருகைக்கும்
கருத்திற்கும்
வாக்கிற்கும்
மனம்
மகிழ்ந்த
வணக்கம் நன்றி ஐயா

சிநேகிதன் அக்பர் said...

எங்களது மனதில் இருக்கும் ஆதங்கத்தை உங்களது பதிவில் சொல்லிவிட்டீர்கள்.

உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விசயம்.

A.R.ராஜகோபாலன் said...

@சிநேகிதன் அக்பர்
ஆமாம் நண்பரே யோசித்து செயல்பட வேண்டிய விஷயம்
நன்றி தங்களின் கனிவான கருத்திற்கு

G.M Balasubramaniam said...

திரு.ஏ.ஆர்.ஆர். சாமியின் மன அலைகளில் சாலை விபத்துக்கான காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட தலைப் பாதலால் அதனை பார்க்கச் சொன்னேன். கோரமான புகைப் படங்களை பிரசுரிக்க வேண்டாம் என்பதையே மறைமுகமாக ஹிந்துவை மேற்கோள் காட்டிச் சொன்னேன். இப்போது அந்தப் புகைப்படம் நீக்கப் பட்டுள்ளது காண்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
உணர்ந்து கொண்டேன் ஐயா , இனி அந்த மாதிரியான தவறை செய்ய மாட்டேன் , நன்றி தங்களின் கவனத்திற்கு

ஸ்ரீராம். said...

எல்லோருக்கும் அவசரம்...சீக்கிரம் இலக்கு சேர வேண்டும். தன கைகளின் மீது நம்பிக்கை. ஒரு துடிப்பான வளைவில் கடந்து விடலாம் என்று...கணக்கு தவறும்போது காலம் தவறி விடுகிறது. தவிர்ப்பது கடினம். எஸ்கலேட்டர்கள் போல சாலைகள் உருவாக வேண்டும். வாகனங்கள் தவிர்க்கப் பட வேண்டும். வாகனங்களே இல்லாத, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சீரான வேகத்தில் நகரும் சாலைகள் வர வேண்டும். கூட்டமும், டிராஃபிக் ஜாமும், விபத்துகளும் குறையும்.

மனோ சாமிநாதன் said...

நல்ல விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு!

இதில் அர‌சாங்க‌த்தைக் குறை கூறுவ‌தை விட, நமக்கு நாமே கொள்ள‌ வேன்டிய விழிப்புணர்ச்சி மிக அவசியம்.
இர‌வு நேர‌த்தில் வ‌ண்டியைத் தாறுமாறான‌ வேக்த்துட‌ன் ஓட்டுவ‌து, சாலை விதிகளை இஷ்டத்திற்கு மீறுவது, ஓட்டுன‌ருக்கு சிறிது கூட‌ ஓய்வு த‌ராம‌ல் ப‌ய‌ணிப்ப‌து, இதெல்லாம் ப‌ய‌ங்க‌ர‌ விப‌த்துக்க‌ளில்தான் போய் முடிகின்ற‌ன‌.

அரசாங்கம் ஒன்றில் மட்டும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேன்டும். சாலை விதிக‌ளை மீறுப‌வ‌ர்க‌ளுக்கு க‌டுமையான‌ த‌ண்ட‌னை கொடுக்க‌ வேன்டும். இங்கே எல்லா முக்கிய‌ சாலைக‌ளிலும் 'ர‌டார்' உண்டு. வேகமாய்ப்போகும் காரை படம் பிடித்து விடும். உடனேயே அதன் உரிமையாளருக்கு தகவல் வந்து விடும் ஃபைன் கட்டச் சொல்லி. அவர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் கட்டவில்லையென்றால் கூடுதல் அபராதம்தான்! வேடிக்கை என்னவென்றால் இன்னும் சில சாலைகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தான் செல்ல வேண்டும். அதையும் விட குறைவாகச் சென்றால் பயணிகளுக்கு இடையூறு என்று அதற்கும் அபராதம் இருக்கிறது!

A.R.ராஜகோபாலன் said...

@ ஸ்ரீராம்.
நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு
உங்களின் இந்த யோசனை மிகவும் அற்புதமானது , இது நடை முறைப்படுத்தப்பட்டால்
எத்தனையோ விபத்துக்கள் குறையும்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@மனோ சாமிநாதன்
//நல்ல விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு!//

மனம் மகிழ்ந்த நன்றி மேடம்

சிவகுமாரன் said...

தினம் ஒரு சாலை விபத்தைப் பார்க்கிறேன்.
குடிபோதையும் , தேவையற்ற வேகமும் தான் பெரும்பாலான விபத்திற்கு காரணம்.
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
மனம் மகிழ்ந்த நன்றி நண்பரே

நிரூபன் said...

பத்திரிகையில் இப் பதிவு வர வேண்டும் சகோ, முடிந்தால் தமிழகத்தில் அதிகம் பேர் பார்க்கும் பத்திரிகைக்கு இப் பதிவினை அனுப்பி வைக்க முடியுமா?
காரணம் விபத்துக்கள் பற்றி முன்னெச்சரிகையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைத் தொகுப்பினைத் தந்துள்ளீர்கள்.

காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு.

இன்னும் பல பேரிடம் இப் பதிவு சென்று சேரும் வண்ணம் யாராவது ஆவண செய்தால், நாளாந்தம் விபத்தின் மூலம் உயிரிழக்கும் உறவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கேற்ற ஒரு சிறு வழியாக இப் பதிவு இருக்கும்.

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
அன்பான சகோ
நன்றி உங்களின் கருத்திற்கும் ஊக்கத்திற்கும்

வெங்கட் நாகராஜ் said...

விழிப்புணர்வு தரும் பகிர்வு. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாலை விதிகளை யாருமே மதிப்பதில்லை. அதனை கவனித்து மாற்றம் செய்ய வேண்டிய போக்குவரத்து காவலாளிகளும் தனக்குக் கிடைக்க வேண்டிய கிம்பளம் கிடைத்தால், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று இருந்து விடுகிறார்கள். ஹெல்மெட் உங்கள் நல்லதற்குத் தானே என்று சொன்னால், ”எனக்கு எது நல்லது என்று எனக்குத் தெரியும், நீ என்ன சொல்வது” என்று விட்டேத்தியாய் இருக்கிறார்கள்.

சென்ற வாரம் கூட திருப்பராய்துறை நெடுஞ்சாலையில் எனது கசின் ஒருவன் சாலைவிபத்தில் அடிபட்டு ஒரு நாள் கஷ்டப்பட்டு நடு இரவில் இறந்து போனான். அவன் ஹெல்மெட் போடாமல் சென்று தலையில் அடிபட்டு அதுவே இறப்பதற்கும் காரணமாய் இருந்தது...

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே
உங்களின் உறவினர் மறைவுக்கு என் ஆழ்த்த அனுதாபங்கள்
அவர் ஆத்மா இறைவனடியில் சாந்தி கொள்ளட்டும்

ராஜ நடராஜன் said...

//இந்த விஷயத்தில் போக்குவரத்து காவலர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் , வேலையில் கவனமும் தேவை சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளை இவர்கள் கண்டு கொள்ளுவதே இல்லை , //

சமூகப் பொறுப்பான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.காவலர்களைக் குறை சொல்வதை விட டுர்...டுர்...என முறுக்கிக்கொண்டிருக்கும் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்குப் பொறுப்பு தேவை.முன்வரிசையில் பொறுமையாக நின்றாலும் பின் வரிசையில் இருப்பவர்கள் பேசியோ முட்டி நெம்பி விடுவதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

இரு சக்கர வாகனங்களே விபத்துக்களை அதிகம் ஏற்படுத்துகின்றன.

மொத்த தமிழகத்துக்குமே ரயில் பாதையில் அதிகம் கவனம் செலுத்தாமையும்,மெட்ரோ திட்டங்கள் இன்னும் வலுப்படுத்தாமையும்,டாஸ்மாக்,தனி மனித ஒழுங்கு என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனாலும் இவ்வளவு நெரிசலிலும் வாழ்தல் என்ற அடிப்படையை மட்டும் குறிக்கோளாக மக்கள் தம்மை சமரசம் செய்து கொள்வதும் வியப்புக்குரியது.

ராஜ நடராஜன் said...

முதல் படமும்,குழந்தையும்.... வேறு விழிப்புணர்வு வாசகங்களே வேண்டாம்.

A.R.ராஜகோபாலன் said...

@ராஜ நடராஜன்
மிக்க நன்றி உங்களின் கருத்தாயிந்த பின்னூட்டத்திற்கு
சமரசம் மக்களின் சகிப்புத்தன்மையின் உச்சம்

Anonymous said...

நல்லதொரு பதிவு சகோ. இங்கு போக்குவரத்துக் காவலரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, ஏனெனில் வாகன ஓட்டும் நாகரிகமே நம்மில் பலருக்குத் தெரியாது, யாருமில்லாத ரோடு என்றாலும், சிக்னலில் நின்று தான் போகின்றார்கள் அயல்நாடுகளில், நம் நாட்டில் அது என்றைக்கு நடக்குதோ,, அன்றைக்குத் தான் விமோசனம் .... !!!!

குறிப்பாக குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி டுவீலரில் போகும் கணவன், மனைவி என்னக் கொடுமை. தவறி குழந்தை விழுந்தால் என்னவாகும்...

இங்கே என்னவென்றால் காரில் குழந்தையைக் கொண்டு போனாலும், பேபி சீட் வைக்க சொல்லுகின்றால் ..மீறினால் ஆயிரக் கணக்கில் தண்டம் கட்டவேண்டி வரும் ...

குடித்துவிட்டு ஓட்டுவோரே இங்கு பெரும் பிரச்சனை, ஆனால் இந்தியாவிலோ, கவனமின்றி ஓடுவதாலும், போதிய சாலை வசதிகள் இல்லாமல் இருப்பதுமே விபத்துக்களுக்கான முக்கிய காரணம் ...

A.R.ராஜகோபாலன் said...

@இக்பால் செல்வன்
தங்களின் கருத்தாயிந்த
மொழிக்கு மிக்க நன்றி சகோ

niyas said...

ஒரு சிறந்த விழிப்புனர்வு பகிர்வு

Riyas said...

ஒரு சிறந்த விழிப்புனர்வு தரக்கூடிய பகிர்வு.. முதல் படம் உண்மையிலேயே மனதை பாதித்தது,,