Monday, 6 June 2011

என்ன நடக்கிறது இந்தியாவில் ஜனநாயக நாடா இது??

  கடந்த இரண்டு நாட்களில் நம் சுதந்திர இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு இந்தியனாய்  என்னை வேதனையடையச்செய்கிறது, ஆங்கிலேயே ஆட்சியில் கூட இத்தனை கொடுமைகள் நடந்திருக்குமா என்பது சந்தேகமே ,ஒரு அறப்போராட்டத்தை இத்தனை உக்கிரமாய் இந்த அரசு கையாளவேண்டிய அவசரம் என்ன ? அவசியம் என்ன ?

பாபா ராம் தேவினால் தொடங்கப்பட்ட இந்த உண்ணாநிலை போராட்டம் எதற்கு தனிநாடு  கோரியா?? 
மக்களை கொன்று அழித்த தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கோரியா??   

          இந்த நாட்டின் வளங்களையும் , அரசுக்கு வரவேண்டிய வருமானத்தையும் சுரண்டி தன் சுய நலத்துக்காக நம் செல்வத்தை அந்நிய நாட்டில் கருப்பு பணம் என்ற பெயரில் பதுக்கி வைத்திருக்கும் துரோகிகளை அடையாளம் காட்டவும் அவர்களின் சொத்துக்களை முடக்கவும், நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய அரசின் மெத்தன போக்கையும் கண்டித்து ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட உண்ணாநிலை போராட்டத்தை
இத்தனை கொடூரமாய் அதில் கலந்து கொண்டவர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் , லத்தியடி வீசியும் கலைக்க வேண்டிய அவசியம் என்ன ???

அதுவும் நள்ளிரவில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் ஈவு இரக்கமின்றி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் காரணம் என்ன ??

நியாயமே இல்லையா இந்த நாட்டில்?,

தன் கருத்துக்களை கூறவும் தவறுகளை தட்டிக்கேக்கவும் உரிமை இல்லாத நாடா இது ?

சர்வாதிகாரம் ஆட்சி செய்கிறதா இந்த நாட்டை ??

இந்த செயல் யாரை காப்பாற்ற??

கீழே உள்ள படங்களைப்பாருங்கள் 

       
யார் இவர்கள் பிரிவினை வாதிகளா? 
மருத்துவமனையில்  குண்டு வைத்தவர்களா? 
பாலியல் பலாத்காரம் செய்தவர்களா ?
வழிப்பறி செய்தவர்களா ?
மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்களா ?

ஏன் இந்த அடி, உதை, காயம், அவமானம், இழிநிலை, இவர்களுக்கு , இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த முயற்சித்ததற்குதான் இந்த கையாலாகாத அரசின் பரிசு. 

நம்மை காப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்த அரசியல் வாதிகள் அந்நிய நாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தின் மொத்த மதிப்பு எழுபது லட்சம் கோடி , என்ன கொடுமை பார்த்தீர்களா ?? இந்த ஊழல் பணம் வந்தால் எத்தனையோ பல நல்ல திட்டங்கள் செயல் படுத்த முடியும் , இந்தியாவின் பொருளாராதாரத்தையே தூக்கி நிறுத்த முடியும் 

ஒரே நாளில் , ஒரே நாட்டில் ஒரு பக்கம் வெள்ளமும் இன்னொரு பக்கம் வறட்சியையும் சந்திக்கும் அவல நிலை போக்க நதி நீர் இணைப்பை செயல் படுத்த முடியும் , இதன் மூலம் விவசாயம் வளரும் , அண்டை மாநிலங்களிடையே பகமை குறையும் , விவசாயிகளின் நிலை உயரும், உலக நாடுகளிடம் வாங்கிய கடனை ஒரே நாளில் அடைக்க முடியும். நம் நாட்டின்  கல்வி தரத்தை மிக நல்ல நிலையில் உயர்த்த முடியும் ,நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40%  க்கும் மேலானவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே ஒரு வேலை உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதாக புள்ளிவிவரம் சொல்லுகிறது , இவர்களுக்கு நல்ல நிலையை அமைத்து தரமுடியும் இது போன்ற பல நல்ல காரியங்களை செய்ய இந்த பதுக்கல் பணம் பயன்படும்.

  இந்த மாதிரியான பயனை தரும் அந்த கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டதற்கு தான் இந்த அராஜகம், அடாவடி செயல் , இது எல்லாவற்றையும் விட கொடுமை இந்த அறப்போராட்டத்தை நம் தமிழகத்தில் எந்த பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரிக்கவில்லை .

ஒரே இடத்தில் குவிந்திருக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரமும் சர்வாதிகாரம் தான், அந்த அடிப்படையிலேயே இந்த செயல் சர்வாதிகார செயலாகவே என்னால் பார்க்கபடுகிறது.

அன்பன் 
ARR          

32 comments:

Unknown said...

நியாமான கேள்விகள் .....
யாரிடம் பதில் தேடுவது ....
ஒவ்வொன்றையும் அரசியலாக்க தெரிந்த எதிர்கட்சிகளிடமா ?
எல்லாத்தையும் நியாயப்படுத்தும் ஆளும் கட்சியிடமா ?
இல்லை சுப்ரீம் கோர்டில்லா?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கேள்விகள்... விடைதான் தெரியவில்லை.

உரிமை மீறல் அது இது என்று பக்கம் பக்கமாக பேசதான் முடிகிறது இந்த அரசியல் கட்சிகளால்....

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
எப்படி இத்தனை விரைவான கருத்து ரியாஸ்
மிக்க நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

வெங்கட் நாகராஜ்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
உங்களின் கருத்து முழு உண்மை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்தியாவில் விரைவில் பிரபலமடைய விரும்புவோம் செய்யும் செயல்தான்....


ஏன் என்றால் இதை முறைப்படி அனுகாது இதுபோன்ற நடந்துக் கொள்வதுதான்...

ஒரு வேளை ஊழல் நேற்றுதான் ஆரம்பித்ததா..

இல்லை கருப்பு பணம் நேற்றுதான் பதுக்கப்பட்டதா..?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனசாட்சியையும் சேர்த்து உங்கள் கேள்விகளுக்கும் விடையைத் தேடட்டும் அக்கிரமம் இழைத்த கொடுங்கோலர்கள்.

RVS said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்....
ஆவேசமான பதிவு கோப்லி. ;-))

ஷர்புதீன் said...

இது குறித்தே நிறையவே எழுதலாம்., பேசலாம். ஆனால் கடைசியில் வாதம் வேறு ஒரு இடத்திருக்கு போய்விடும் நண்பரே., அதுதான் பயமாக இருக்கிறது!

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்


"ஏன் என்றால் இதை முறைப்படி அனுகாது இதுபோன்ற நடந்துக் கொள்வதுதான்..."

சரியான வாதம் நண்பரே

"ஒரு வேளை ஊழல் நேற்றுதான் ஆரம்பித்ததா..

இல்லை கருப்பு பணம் நேற்றுதான் பதுக்கப்பட்டதா..?"

எப்போது தொடங்கினாலும் , தொடக்கம் என்பது மிக முக்கிய தேவை இல்லையா நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி
மிக்க நன்றி அண்ணா

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மிக்க நன்றி வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்
"இது குறித்தே நிறையவே எழுதலாம்., பேசலாம். ஆனால் கடைசியில் வாதம் வேறு ஒரு இடத்திருக்கு போய்விடும் நண்பரே., அதுதான் பயமாக இருக்கிறது!"


உங்களின் கருத்தை யாராலும் தடை செய்ய முடியாது நண்பரே
பகிரங்க படுத்துங்கள் உங்களின் வலிமையான எண்ணங்களை

வை.கோபாலகிருஷ்ணன் said...

கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செய்கைகளில் இறங்குவது மிகவும் பயங்கரமான போக்கு தான்.

உங்களின் நியாயமான கொதிப்பு அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது.

இதற்கான விலை விரைவில் மக்களால் தரப்படும் என்பது நிச்சயம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தான் சொல்லப்பட்டு வருகிறது.

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
"இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தான் சொல்லப்பட்டு வருகிறது."

உண்மைதான் ஐயா சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

அமுதா கிருஷ்ணா said...

எரிச்சல் தான் வருகிறது.

rajamelaiyur said...

Rompa koduma sir . . .

A.R.ராஜகோபாலன் said...

@அமுதா கிருஷ்ணா
உண்மைதான்
கருத்திற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
very true
thanks for your visit and comment
Mr.Raja

சென்னை பித்தன் said...

உண்மையிலேயே ஆயுத எழுத்துதான்!

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
மிக்க நன்றி ஐயா
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான வாழ்த்திற்கும்
முழு நன்றி

நிரூபன் said...

சகோ, உண்ணாவிரதம் இருந்த பாபாராம் வீட்டிலும் கறுப்பு பணம் உள்ளது என்று இப்போது ஓர் புதிய நியூஸ் உலவுகிறதே சகோ, யாரை ந்மபுவது?
எதை நம்புவது சகா.

நிரூபன் said...

அதிகார வர்க்கத்தின் உண்மை முகம் அம்பலமாகப் போகிறது எனும் நிலையில் அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுத் தடை செயப்பட்ட போராட்டமாகத் தான் இவ் உண்ணா நோன்புப் போராத்தைச் சொல்ல முடியும்.

எல் கே said...

இரண்டாம் ஜாலியன் வாலாபாக் . மீண்டும் ஒரு "quit india" போராட்டம் வேண்டும் காங்கிரசிற்கு எதிராக

Yaathoramani.blogspot.com said...

ஊழலையும் கறுப்புப்பணத்தையும்
காப்பாற்றத்தான் இந்த அரசு
எவ்வளவு கஷ்டப்படுகிறது
ஊழலை ஒழிக்கும் மந்திரக்கோல்
எங்களிடம் இல்லை என்கிறார் பிரதமர்
ஆனால் அவர்களை மாற்றிவிடும் மந்திரக்கோல்
மக்களிடம் உள்ளது என்பதை அவர்
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
சகோ, உண்ணாவிரதம் இருந்த பாபாராம் வீட்டிலும் கறுப்பு பணம் உள்ளது என்று இப்போது ஓர் புதிய நியூஸ் உலவுகிறதே சகோ, யாரை ந்மபுவது?
எதை நம்புவது சகா.

இது உண்மையா இல்லை பொய்யா என உறுதி செய்யாப்படாத செய்தி , இருப்பினும் அந்த நள்ளிரவில் அந்த அப்பாவி மக்களை இப்படி அராஜக முறையில் வெளியேற்றியதன் காரணம் என்ன ?? அது தான் பிரச்சனை இப்போது சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
"அதிகார வர்க்கத்தின் உண்மை முகம் அம்பலமாகப் போகிறது எனும் நிலையில் அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுத் தடை செயப்பட்ட போராட்டமாகத் தான் இவ் உண்ணா நோன்புப் போராத்தைச் சொல்ல முடியும்."

கருத்திற்கு நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
அந்த காலம் வெகு விரைவில் இல்லை என்றே நினைக்கிறேன் திரு.எல் கே
நன்றி தங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ Ramani
மிகச்சரியான நெத்தியடி வார்த்தைகள் ரமணி சார்
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சார்

G.M Balasubramaniam said...

திரு.ராஜகோபாலன். உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு. எந்த பாவமும் அறியாத அப்பாவி மக்கள் அப்புறப்படுத்தப் படும்போது, அதிகப் படியான பலப் பிரயோகம் வருந்தப் படத்தக்கதே. கருப்புப் பணம் ஒழிக்க ஓரிரண்டு நாட்கள் போதாது. இன்றே இப்போதே பிள்ளை பெற்றுக் கொடு என்று கேட்பதுபோல் இருந்தது அவர்கள் அணுகு முறை. அமைதியாக நடத்தப் படும் என்று கூறி ஒரு பாரம்பரிய மசூதியையே தரை மட்ட மாக்கியவர்களின் ஆதரவோடு துவங்கப் பட்டது தான் இந்தப் போராட்டமும். ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்கும் ஆட்சியாளர்களையே குறை கூறுவோம். எந்த நல்ல காரியத்திலும் யார் பின்னே போகிறோம் என்பதும் முக்கியம் சொன்ன சொல்லை மீறியும், நிமிடத்துக்கு ஒரு முறை ஒவ்வொன்று கூறியும், தனக்கென்று வரும்போது வேஷம் மாற்றி தப்பிக்க முயலும் யோக பாபாவின் பின் செல்லும் மக்கள் அவதிக்குள்ளானது துரதிருஷ்டமே. அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் பற்றிய உண்மைகள் வெளிவரும் காலம் வரை , உணர்வுகளால் உந்தப்படுவதைவிட விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகுவதே அவசியமானது.

A.R.ராஜகோபாலன் said...

நியாயமான கருத்துக்கள் ஐயா மறுப்பதற்கு இல்லை , ஆயினும் இத்தனை பேரை அனுமதித்தது அவர்கள் செய்த முதல் தவறு , இரண்டாவது அவர்கள் மக்களை அப்புறபடுத்த எடுத்துக்கொண்ட நேரமும் ( நள்ளிரவு ஒரு மணி) முறையும் , எதையுமே ஒரே நாளில் நடந்து விட சொல்லவில்லை அதற்கான முயற்சியை தொடங்குவோம் என்று கூட சொல்ல மனமில்லாத அரசு தவறான அரசல்லாவா?. இத்தனை அடி பட்டவர்களிடமும், ஆடை கிழிக்க பட்டவர்களிடமும் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது , ஒரு நல்ல மாற்றத்திற்கு ஒன்று சேரும் மக்களை இப்படி அடித்து நொறுக்குவது அவர்களை மறுமுறை எந்த நல்ல காரியத்திற்கும் ஒன்று சேராவண்ணம் தடுக்கும் எச்சரிக்கை முயற்சி அல்லவா ??

எல்லாம் போகட்டும் இந்த கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர ஏன் இந்த தயக்கம் இந்த அரசுக்கு ??
எல்லோரும் ராம்தேவையே குறை சொல்லுகிறார்களே தவிர கருப்பு பணத்தை பற்றி வாய் திறக்க காணோமே , உண்மையில் ராம் தேவிடமும் கருப்பு பணம் இருந்தால் அதையும் பறிமுதல் செய்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை.

மசூதி இடிக்கப்பட்ட போதும் இந்த காங்கிரஸ் அரசுதான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது , அதை அன்று தடுத்திருந்தால் இன்று இந்தியாவில் பல பிரச்சனைகள் இல்லாமல் போயிருக்கும்.

நான் காங்கிரஸ்க்கோ பி ஜே பிக்கோ சாதகமாணவனோ, இல்லை எதிராணவனோ அல்ல , மக்களின் உரிமைகளுக்கு சாதகமானவன் ஐயா , நன்றி உங்களின் கருத்திற்கு .

Unknown said...

நச்சென்ற கேள்விகள்..பதில்கள் தான் இல்லை சகோ

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
மிக்க நன்றி சிவா
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்