Sunday 26 June 2011

பரதன் பக்தி



ராம பக்தியில் விஞ்சிய விரதன்! 
ராம பாதுகை சுமந்த பரதன்!!

நீதிமான்  பட்டதெல்லாம் அவமானம்!
ராகவன் அன்பொன்றே வெகுமானம் !!

மேகத்தை ஒத்த வண்ணமுடையான்!
ராமநாமத்தை  ஓதும் எண்ணமுடையான் !!

அன்னையளித்த ஆட்சி அரியணை!
அதனையழித்த இவனுக்கு யாரிணை!! 

தயரதன் தவிர்த்த தனையன்!
பழிசுமந்து தவித்த தருமன் !!

தன்னலமில்லா தியாகத்  தூதுவன்! 
அரசமுடி துறந்த தூயவன்!!

அயோத்தியில் பெற்றதெல்லாம் நிந்தனை!
அத்தீயிலும் ராமநலனே சிந்தனை !!


ஆண்டுகள் பதினான்கும் தவக்கோலம்!
ஆர்க்கொள்வார் இதுபோல் ஒருக்கோலம்!! 

அண்ணன் போல் இவன்கொண்டான் வனவாசம்!
அதன்காரணம் அவன்மேல்கொண்ட விசுவாசம் !!

நாட்டை ஆட்கொள்ளா மன்னர்மன்னன்!
நாயகனை ஆட்கொண்டான் வருபிறவிக்கண்ணன்!! 


 பரதன் புகழ் பாடுவோம் 
சகோதரம் போற்றுவோம் 

அன்பன்
ARR

32 comments:

சென்னை பித்தன் said...

குகன் சொற்களில்”ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா”
நல்ல பதிவு ஏ.ஆர்.ஆர்!

நிரூபன் said...

பரதனின் பெருமைகள் கூறும் கவிதை....
இக் கால இளைஞர்களிடத்தே சகோதர பாசத்தின் மகிமையினை உணர்த்தும் வல்லமை மிகு படைப்பாக.

எல் கே said...

பரதனுக்கு ஓர் கவிதை. அருமை

Unknown said...

வாலியின் அவதார புருஷனுக்கு போட்டியா இங்க என் சகோ கிளம்பிட்டாரு ....
வாழ்த்துக்கள் சகோ .... நீங்கள் எனக்கு துரோணர் நான் உங்களை மானசிக குருவாய் நினைக்கும் ஏகலைவான் ....நன்றி சகோ

Madhavan Srinivasagopalan said...

பரதனின் பெருமை
சொல்லிய விதம் அருமை.

எல்.கே. அவர்களின்
கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளவில்லையே என நீங்கள் ஏங்கிய ஏக்கம் அப்பதிவின் பின்னூட்டத்தில் கண்டேன்.
கலந்து கொண்டிருந்தால் நீங்கள் வெற்றி பெற்றிருப்பீர்கள் என்பது --- இக்கவிதையின் மூலம் தெரிகிறது.. -- ம்ம்.. இது ஒரு சாம்பிள்தான் உமது கவித் திறமைக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 4 to 5 in Indli
Tamilmanam is not working

பரதனின் புகழை பறைசாற்றும் அருமையானதொரு கவிதை. பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
மிக உண்மை ஐயா
ஆயிரம் ராமரும் ஒரு பரதனுக்கு இணையாகார்
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மிக்க நன்றி சகோ
உங்களின் இந்த உண்மையான விளக்கம்
என் படைப்புக்கு வலு சேர்க்கும்

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவன்
உங்களின் கருத்துக்கும்
என் கவிதோயின் மீதான நம்பிக்கைக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி திரு.எல் கே

Unknown said...

கவிதையே பாடிவிட்டீர்கள் பக்தி...
அருமையான கவிதை பாஸ்!!

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
இதென்ன நண்பா புதுக்கதை
ஹ்ஹா ஹா ........................
அப்படியே இருந்தாலும் நான் குருதட்சணையாக கேட்பது உங்களின் உன்னதமான படைப்புகளை படிக்கும் பாக்கியத்தைதான் , வேறெதுவும் இல்லை
நன்றி உங்களின் கருத்துக்கு கனிவிற்கு

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மனம் மகிழ்ந்த நன்றி ஐயா
உங்களின் உன்னத கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
நன்றி தலைவரே உங்களின் வருகைக்கும்
கருத்திற்கும்
கார்த்திகா நாயர் சுகமா ?????

Admin said...

பரதனின் பெருமை கவிதையாக.... அருமை..

எல் கே said...

why cant you write abt bharatha from birth ???

G.M Balasubramaniam said...

இராம காதையில் பரதனின் பங்கு அதிகமாகப் பேசப் படுவதில்லை. அவர் புகழ் சொல்லப்படும்போது கூட
இராமனை முன் நிறுத்தியே கம்பனும் ஓரிடத்தில்
“ எம்பெருமான் பின் பிறந்தவர் இழைப்பரோ பிழைப்பு”
என்றே கூறுகிறான். பரதன் இராமனிடம் கொண்டது சகோதர பாசம் என்பதை விட ஒரு பக்தியே எனக் கூறலாம். பரதன் பெருமை கூறும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@சந்ரு
அருமையான நன்றி உங்களுக்கு நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே

உங்களின் என் மீதான நம்பிக்கைக்கு நன்றி
நான் அந்த அளவுக்கு தகுதியானவனான நினைக்கவில்லை
ஆயினும் காலமும் கடவுளும் அனுமதித்தால் உங்களின் ஆதரவுடனும் ஊக்கத்துடனும் எழுததயாராக இருக்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
உண்மைதான் ஐயா
பரதனிடம் சகோதர பாசத்தை விட விஞ்சி நிற்பது பக்திதான் , அந்த பக்திக்கு கட்டுப்பட்டுதான் பரதன் ராமனுடன் காட்டுக்கு செல்லவில்லை என்றே நினைக்கிறேன்

நன்றி உங்களின் ஆழமான கருத்துக்கு

Unknown said...

எப்போ எனக்கு போட்டியா கவிதை எழுத
ஆரம்பிசிங்களோ இனிமே உங்களுக்குப்
போட்டியா நான் கட்டுரை எழுதப் போறேன்
கவிதை எழுதர ஜோர்தான இந்தபக்கமே
வரல்லே
போகட்டும் சகோ உண்மையாவே
அருமையான கவிதை பாராட்டு வாழ்த்து நன்றி
புலவர் சாஇராமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
மதி நிறை ஐயா
உங்களுக்கு சமமாக
என்னை நீங்கள்
பொய்யாக நினைத்தாலும்
மெய்யாகவே பெருமை எனக்கு
மலை நீங்கள்
மடு நான்

அடுத்து...............
உங்களின் எல்லாப் படைப்புகளையும்
தவறாமல் படித்து, வாக்களித்து
பின்னூட்டமும் இடுகிறேனே ஐயா
ஏதாவது
தவறாக
தவறவிட்டுருந்தால்
தவறாக நினைக்க வேண்டாம்
நன்றி உங்களின்
பெருந்தன்மையான கருத்துக்கு

ADHI VENKAT said...

பரதனுக்காக அவன் சகோதர பாசத்துக்காக எழுதப்பட்ட கவிதை அருமை சகோ.

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
நன்றி சகோதரி
உங்களின் கனிவான கருத்திற்கு

ஸ்ரீராம். said...

பரதனின் பெருமை பாரதப் பெருமை.

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
உண்மையான கருத்து
நன்றி உங்களின் கருத்துக்கு

சாகம்பரி said...

ராமாயணத்தை மனோவியல் காவியமாக ஆராயும்போது விரதம் காத்த பரதனின் பெருமை ஆழ்கடல் முத்தென தெரியும். கவிதை அருமையை புரிய வைக்கிறது.

A.R.ராஜகோபாலன் said...

@சாகம்பரி
மிக்க நன்றி சகோதரி
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே... பரதனுக்காய் இப்படி அருமையான கவிதை... மகிழ்ச்சி...

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பரே
உங்களின் கனிவான கருத்திற்கு

vetha (kovaikkavi) said...

அண்ணன் மேல்கொண்ட விசுவாசம்....
நல்ல வார்த்தைக் கட்டுடைய கவிதை.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

Ganapathy said...

அருமையான கவிதை. சகோதரம் போற்றுவோம்.

கணபதி
http://valmikiramayanam.in/