இதற்கு என்ன தீர்வு என்றே தெரியாத பிரச்சனை இந்த பெட்ரோலிய விலை உயர்வு , நடுத்தர மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இன்று மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாயும் , மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் சிகரமாய் சமையல் கேசுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் உயர்த்தி தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி கடன் ஆற்றியிருக்கிறது , மன்மோகன் அரசு.
பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் (கடந்த ஆறு மாதங்களாக ) பெட்ரோல் விலை உயர்வுக்கு பெட்ரோலிய நிறுவனங்களே காரணம் என்று கூறிவந்த வந்த இந்த கையாலாகாத அரசு இன்று தன கட்டுப் பாட்டில் உள்ள டீசல் ,மண்ணெண்ணெய் , சமையல் கேஸ் விலையை தடாலடியாக உயர்த்தி , மக்களை பற்றிய அக்கறை ஏதும் எமக்கில்லை என்று மற்றுமொருமுறை நிதர்சனமாய் நிரூபித்திருக்கிறது .
ஏன் இந்த மாதிரியான விலை உயர்வு என்று கேட்டால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, அவர்களின் நஷ்டத்திற்கு ஈடாக மத்திய அரசுதான் மானியம் கொடுக்கிறது என்று கதை அளக்கிறார்கள் , ஆனால் உண்மை என்னவென்றால், இந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்காக தரும் மான்யத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக வரியாக சம்பாதிக்கிறது மத்திய அரசு இந்த பெட்ரோலிய வர்த்தகத்தில் , எப்படிப் பார்த்தாலும் அது மக்கள் பணம்தான் , இதில் மக்களுக்கு ஏதோ இவர்கள் தியாகம் செய்வதைப்போல் நாடகம் ஆடுகிறார்கள்.ஏழை பங்காளர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் யாருக்கு வேலையாளாக இருக்கிறார்கள் தெரியுமா , பெரும் பணக்காரர்களுக்குதான் , அதனால் தான் ஏழை எளிய மக்கள் உபயோகப்படுத்தும் டீசலின் விலையை ஏற்றி , பணக்காரர்கள் பயணிக்கும் விமானத்தின் எரிபொருளை டீசலில் மூன்றில் ஒரு பங்காக விலை வைத்து கொடுக்கின்றனர் , என்ன கொடுமையான செய்தி இது , இன்னும் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்களோ.......
குறு நகரத்தில் இருப்பவர்களும், கிராமத்திலிருப்பவர்களும் கூட மாற்று எரிபொருளாக பழங்காலத்திற்கு திரும்பி விறகோ, ராட்டியோ, வைத்து எரித்து சமைத்து கொள்ளலாம் ஆனால் இன்று நகரத்தில் இருப்பவர்களின் கதி சமையல் கேசை தவிர எந்த வழியும் கிடையாது , இதில் இந்த கேஸ் ஏஜென்சி நடத்துபவர்கள் செய்யும் கொடுமை அதை விட அதிகம், போன் செய்தால் பாதி நாட்கள் எடுப்பதே இல்லை , அப்படியே எடுத்தாலும் நாம் கேக்காத வரையில் புக்கிங் நம்பர் தருவதும் கிடையாது , டெலிவரி செய்யும் போது கேசை கொண்டு வருபவருக்கு பத்து முதல் இருபது வரை தெண்டம் அழவேண்டும், இது மாதிரியான சகிப்பு தன்மைகள் இருந்தால் தான் சிலண்டர் வீடு வந்து சேரும் இல்லாவிடில் அதவும் இல்லை , இப்படி பிரச்சனைகளுக்கு பயந்தே நம்மில் பலர் அமைதியாகவே இருந்து விடுகிறோம் .
ஏற்கனவே விண்ணை தொடும் விலைவாசிக்கு உரம் இட்டது போல அமைந்துவிட்டது இந்த விலையேற்றம், இந்த விலையேற்றத்தால் இன்னும் அனைத்து பொருட்களும் விலையேறும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த காய்கறியின் விலை தற்போது 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை உயர்வு, வரலாறு காணாத அளவில் 18 சதவீதத்தைத் தொட்டு நிற்கிறது.ஆனால் அரசாங்கம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விலைவாசி விரைவில் குறையும் என்று அறிக்கை விடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. விலை உயர்வின் நுகத்தடியில் மக்கள் உழன்று கொண்டிருக்கும்போது, விலை உயர்வுக்கு ஒரு காரணமான பெட்ரோலியப் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டம்போல் கடுமையாக உயர்த்தி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.
நம் நாட்டில் எத்தனையோ இடங்களில் பெட்ரோலிய வளம் இருக்கிறது அதையெல்லாம் கண்டுபிடித்து பயன்படுத்த தொடங்கினால் இது மாதிரியான பிரச்சனைகள் தடுக்க படலாம் , ஆனால் இந்திய அரசு இது மாதிரியான இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து ஊழலில் திளைக்கிறது, இதற்கு என்ன தீர்வென்றே இது வரையில் தெரியவில்லை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும் , ஏனென்றால் இது தான் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய ஏதுவான தளம் . இவர்களின் ஆட்சியில் நம்முடைய வீட்டில் அடுப்பெரிய முதலில் நமுடைய வயிறு எரியவேண்டும் போல இருக்கிறது.
அன்பன்
ARR
34 comments:
theervu nalla irukku.. vaalththukkal
மக்கள் போராட்டமாக மாறாதவரை இதற்கு விடிவில்லை.
ஏழை மக்களும் நடுத்தர மக்களும் கஷ்டப்பட்டுத்தான்
தீரவேண்டுமா.? ஆமாம், ஆமாம்.இவர்களுக்கு வேறு நாதி இல்லையா.? இல்லை. இல்லை. பின்னே எழுதியும் பகிர்ந்தும் என்ன லாபம். !!!!!!!!!!!!!
@மதுரை சரவணன்
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான வாழ்த்திற்கும்
முழு நன்றி அன்பரே
@தமிழ் உதயம்
மக்களின் மனதில் மாற்றம் வரவேண்டும் நண்பா
நன்றி உங்களின் கருத்துக்கு
@G.M Balasubramaniam
தங்களின் நியாமான கருத்திற்கும் கேள்விக்கும் நன்றி ஐயா
அருமையான பதிவு பாஸ்!
விறகு அடுப்பு ,குமுட்டி அடுப்பு என்று போக வேண்டியதுதான்!---ஆனால் விறகும்,கரியும் என்ன விலை விக்குதோ!
எவ்வளவு வருடங்களாக இந்த மானியம் கொடுக்கிறோம்.. நஷ்டத்தில் நடக்கிறது.. என்ற புளுகு! வயறு எரிகிறது! உலகில் எந்த ஊரிலும் இல்லை இந்த கொடுமை! உலகத்திலேயே பெட்ரோல் அதிக விலை உள்ள இடங்களில் ஒன்று இந்தியா என்பது பெரிய அநியாயம். உலகில் பெட்ரோல் விலை ஏறினால் நம் ஊரிலும் ஏறுகிறது. ஆனால் உலக மார்கெட்டில் விலை இறங்கினால், நம் ஊரில் இறங்குவதில்லை. சென்ற மாதத்தை விட கிட்ட தட்ட பத்து சதவிகிதம் உலக மார்க்கெட்டில் விலை குறைந்துள்ளபோது நம் ஊரில் விலை ஏறி இருக்கிறது!
@ஜீ...
அருமையான நன்றி தலைவா உங்களின் கருத்துக்கு
@சென்னை பித்தன்
சரியாக சொன்னீர்கள் ஐயா , நன்றி தங்களின் கருத்துக்கு
@bandhu
இதே மாதிரியான கோபம் எல்லார் மனதிலும் வரவேண்டும் சார், இல்லாவிடில் இந்த கொடுமையும் அடிமை வாழ்வும் தொடரும்
இது ஒரு புறமிருக்க என் அனுபவம்.... புதிய நடைமுறையான அலைபேசி மூலம் பதிவு செய்யும் முறையில் சிலிண்டருக்கு இந்த மாதம் பதினாலாம் தேதி பதிவு செய்து, பதினைந்தாம் தேதி கேஷ் சலான் போடப்பட்டு விட்ட செய்தியும் அலைபேசியில் கிடைக்கப் பெற்றேன். இந்த முறையும் இன்று வரை சிலிண்டர் வராத நிலையில் நெட்டிலும் நேரிலும் போராடி இன்று சிலிண்டர் வந்தது. கொடுமை என்னவென்றால் பதினைந்தாம் தேதி கேஷ் சலான் போடப்பட்ட அந்த சிலிண்டருக்கு இன்றைய விலை உயர்வைக் காரணம் காட்டி ஐம்பது ரூபாய் கூட வாங்கிக் கொண்டனர்.என்ன சொல்ல...?
@"ஸ்ரீராம்
மக்களை மாக்களாக நினைக்கும் இந்த மாதிரியான செயலுக்கு யார் என்ன தண்டனை தரமுடியும் ????, நீங்கள் அந்த ஐம்பதை தராவிட்டால் இன்றும் சிலிண்டர் வந்திருக்காது எடுத்து கொண்டு போயிருப்பார்கள்
நன்றி உங்களின் அனுபவத்தை கருத்தாய் பதிந்ததற்கு
அரசாங்கமும் அதன் கொண்டாட்டமும் தொடரும் ஒவ்வொரு முறையும் பாஸ்!
இன்றைய ச்மையலறையும் பாத்திரங்களும் விறகு போன்ற எரிபொருள்கள் பயன்படுத்தத் தக்கதல்லவே...
nalla pathivu....
nalla mudivukaL eppo varum???
நானெல்லாம் எப்பவோ நடுத்தெருவுக்கு வந்தாச்சு. கார் வாங்க கனவு கண்டு கொண்டிருக்கையில் , ஓட்டி வந்த டூ வீலரையும் உருட்டிச் செல்ல வச்சிட்டாங்க.
மேரா பாரத் மகான்
We need to wipe out congress and and the behind the scene PM (Mrs Rajvi Gandhe) and his son rahul gandhe from india . then only indi will develeop
பிரமித்தேன் சகோ ...உங்கள் சமுதாய அக்கறை கொண்ட பார்வை ,தீர்வு சொன்ன தீர்க்க தரிசனம் கண்டு பிரமித்தேன் சகோ.... தொடருங்கள் சகோ .இன்னும் பலர் கண் விழிக்கட்டும் நன்றி
விழிப்புணர்வோடு சமுதாய அக்கரைகொண்ட பதிவி. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப்பற்றி யார் அண்ணா கவலைபடபோகிறாங்க. எதுவென்றாலும் மேல்தட்டுமக்களுக்கு மேலும் மேலும் கிடைத்துவிடும்.
விடிவென்று ஒன்று உண்டு என நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். நம்பிக்கை பலிக்கட்டும்..
@மைந்தன் சிவா
மிக உண்மை பாஸ்
நன்றி உங்களின் கருத்துக்கு
@இராஜராஜேஸ்வரி
உண்மைதான் மேடம்
ஆனால் அப்படி ஒரு நிலை வராமல் விடாமல் மாட்டார்கள்
போலிருக்கிறதே,,,,,,,,,,,,,
நன்றி உங்களின் கருத்துக்கு
@vidivelli
மாற்றம் விரைவில் வரவேண்டும்
நன்றி உங்களின் கருத்துக்கு
@அன்புடன் மலிக்கா
நம்பிக்கை பலிக்க வேண்டும் சகோதரி
நன்றி தங்களின் கருத்துக்கு
@அன்புடன் மலிக்கா
நம்பிக்கை பலிக்க வேண்டும் சகோதரி
நன்றி தங்களின் கருத்துக்கு
@சிவகுமாரன்
மிக உண்மையான கருத்து நண்பரே
அப்படித்தான் நிலைமை மாறிவிட்டது
நன்றி உங்களின் கருத்துக்கு
@எல் கே
மிக உண்மையான கருத்து நண்பரே
உங்களின் கருத்தை நான் முழுவதும் ஆமோதிக்கிறேன் நன்றி தங்களின் கருத்துக்கு
@ரியாஸ் அஹமது
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே
உங்களின் தொடர் ஊக்கம் என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது
மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது சகோ
நடுத்தர மக்கள்தான் எல்லாவற்றையும் சுமக்க
வேண்டும் இது ஆண்டவன் கட்டளை அல்ல
நம்மை ஆள்பவர் கட்டளை
என்ன செய்வது....?
புலவர் சா இராமாநுசம்
@புலவர் சா இராமாநுசம்
உண்மையை சொன்னீர்கள் ஐயா
நன்றி உங்களின் கருத்துக்கு
மக்களின் வயிற்றில் அடித்துப் பிழைக்கும், மக்களின் பிரச்சினைகளை, பொருளாதார நிலமையினை உணராதோர் இருக்கும் வரை
தொடர்ந்தும் எரிபொருள் விலையினை அரசாங்கம் அதிகரிக்கும் என்பதற்குச் சான்றாக இந்தச் செயற்பாடுகள்.
இதனை விட வேறு என்ன செய்ய முடியும்?
வயிற்றில் அடித்துப் பிழைக்கும் பிழைப்பு.
@நிரூபன்
நாட்களின் நகருதலில்
இவர்களின் கொட்டம் அடங்கும்
ஆயினும் இதை உணரா
அடுத்த அரசும்
இதையே தொடரும்
இதில்
மக்களின் நிலையே பரிதாபம்
நன்றி சகோ உங்களின் கருத்துக்கு
நல்ல பகிர்வு.... :)
Post a Comment