Friday 24 June 2011

அடுத்த பிறவி...


நீ பாடியதுபோலான
தாலாட்டை எங்கோ 
கேக்கும் போதெல்லாம்
மனதை வந்து
சூழ்ந்து கொ(ல்)ள்கிறது
துக்கம்...


உன்னை போன்ற
தாய்மாரெல்லாம்  குழந்தையை
கொஞ்சும் போதெல்லாம்
மனதை வந்து
சேர்ந்து கொ(ல்)ள்கிறது
துயரம்... 


நீயில்லாத    
நம்முடைய வீட்டில் 
இருக்கும் போதெல்லாம்
மனதை வந்து
ஆக்கிரமித்து கொ(ல்)ள்கிறது
வெறுமை... 


உனக்கு 
பிடித்த மாம்பழத்தை 
பார்க்கும் போதெல்லாம்
மனதை வந்து
அப்பிக்கொ(ல்)ள்கிறது
சோகம் ...


இந்த மாதிரியான 
துக்கமும் துயரமும்
வெறுமையும் சோகமும்
நீ சொல்லிச் சென்ற 
அடுத்த பிறவியின் மீதான 
ஆசையை
வேண்டுதலை
நம்பிக்கையை 
அதிகரிக்க செய்கிறது
அம்மா ........................



உன்மகன்
கோப்லி. 


பட உதவி :eegarai.net 


45 comments:

rajamelaiyur said...

Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .

rajamelaiyur said...

Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
Thank you Thank youThank youThank youThank youThank youThank youThank youThank you Raja

rajamelaiyur said...

Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .Super . .

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பந்தங்களைத் துறக்கச் சொன்னாலும் துறக்கவியலாத மேன்மை தாயின் பந்தம்தான்.

அருமை ராஜு.

Anonymous said...

அருமையான கவிதை நெகிழ வைத்தது

Anonymous said...

உனக்கு
பிடித்த மாம்பழத்தை
பார்க்கும் போதெல்லாம்
மனதை வந்து
அப்பிக்கொ(ல்)ள்கிறது
சோக//
எனக்கு பிடித்த வரிகள்

சென்னை பித்தன் said...

உறவுகளில் மிக உன்னதமான உறவு அம்மா.அது ஒரு வரம்.அந்த உறவைப் பற்றிய நெகிழ வைத்த கவிதை, கோப்லி.

குறையொன்றுமில்லை. said...

இந்தக்கவிதை படிக்குபோது சந்தோஷம் மனதை
அப்பிக்கொ(ல்)ள்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மா மேல் ஒரு அழகுக்கவிதை. ரோஜாப்பூவில் அம்மா, அம்மாக்கையில் ரோஜக்குவியல். படமும் அருமை, பாடலும் அருமை, வேண்டுதலும் அருமை. எல்லாமே அம்மா போல அருமையோ அருமை.

VOTED 4 TO 5 IN INDLI & 2 TO 3 IN TAMILMANAM

Madhavan Srinivasagopalan said...

அருமையான கவிதை..

நிற்க... உங்கள் அம்மாவின் நினைவு தினமோ ?
(நினைவு தினம் மட்டுமே நீங்கள் அவரை நினைப்பவரல்ல என்பது தெரியும்.. இருந்தாலும்..)

தமிழ் உதயம் said...

அருமை. கவிதையின் சிறப்பை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

பிரமாதம்
கொள்வதையும் கொல்வதையும்
மிகப் பிரமாதமாக கையாண்டு
உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டீர்கள்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

அருமை பாஸ்...கலக்கல் கவிதை.

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
மனம் நெகிழ்ந்த நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
ரசித்த ரசனைக்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
உன்னத கருத்துக்கு
உயர்ந்த நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@Lakshmi
தங்களிம்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
உங்களின் இந்த பாராட்டு என் எழுத்தை பண்படுத்தும்

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
என் அன்னையை போல்
என்னை ரசிக்கும்
மதி நிறை அய்யாவுக்கு
நன்றி வணக்கம்

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
இல்லை மாதவன்
அன்னையின் பிரிவை இன்று அதிகமாக உணர்ந்தேன் அதனால் தான்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்

மனம் மகிழ்ந்த நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
உங்களின் பாராட்டுக்கு
மனப்பூர்வமான நன்றி ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
கலக்கலான கருத்துக்கு
கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நன்றி அண்ணா
உங்களின் கருத்து
என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது

நிரூபன் said...

அடுத்த பிறவி...//

அன்னையின் அரவணைப்பில் அனுதினமு இருக்க நினைக்கும் ஒரு ஜீவனின் உள்ளத்து உணர்வின் வெளிப்பாடாய்,
பாசத்தினைத் தேடுகின்ற ஆதங்கம் கலந்த மன உணர்வின் கவிதையாய் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது.

எல் கே said...

arumai rajaa

ஸ்ரீராம். said...

அருமை...இந்த நிலை, துக்கம் எனக்கு இரண்டாயிரத்து ரெண்டில் வந்தது.

Unknown said...

arumai nanbaa

இராஜராஜேஸ்வரி said...

முற்றும் துறந்த முனிவராலும் துறக்க
முடியாத தாய்பாசம் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

தினேஷ்குமார் said...

தாலாட்டு கேட்குதம்மா ....

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
Thank you LK

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்

நானும் இரண்டாயிரத்து ஐந்திலிருந்து தாய்ப் பாசத்தை இழந்து வாழ்கிறேன் நண்பரே
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
Thank you Nanbha

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
முற்றும் முழு உண்மை மேடம்
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@தினேஷ்குமார்
நன்றி உங்களின் கருத்திற்கு
வாழ்த்துக்கள் உங்களை கவிதை முதல் பரிசு பெற்றதற்கு

ADHI VENKAT said...

அருமையான கவிதை. தாயன்புக்கு ஈடு இணையே இல்லை.

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழுநன்றி

ராஜ நடராஜன் said...

உரைநடைக்கவிதையா!தலைப்பும் வரிகளும் இணைந்து பயணிக்கின்றன.

G.M Balasubramaniam said...

யாராவது தாயைப் பற்றி எழுதினால் என் மனம் வெறுமை அடைகிறது, இந்த வயதிலும். அதன் வெளிப்பாடு என் பதிவுகள் சிலவற்றில் காணலாம்.

பல முயற்சிகளுக்குப் பிறகு உங்கள் பதிவுகள் என் டாஷ் போர்டில் வருமாறு இணைத்துக் கொண்டேன்.

A.R.ராஜகோபாலன் said...

@ராஜ நடராஜன்

இது எந்த மாதிரியான வகை என்று தெரியாது சார்
நன்றி உங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@G.M பாலசுப்ரமணியம்
அருமையான கருத்து ஐயா ,இந்த வயதிலும் உங்களுக்கு தாயின் மேலுள்ள பாசம் வார்த்தைகளாக வெளிப்படுகிறது , நன்றி உங்களின் கருத்துக்கு,
என் பதிவுகளைப் பெற உங்களின் முயர்ச்சிகளுக்கும் மனம் மகிழ்ந்த நன்றி ஐயா

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது பதிவைக் கண்டேன். இன்று திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/