கடந்த பத்து நாட்களில் வேலூர் , சேலம் , தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் கட்சியின் பெயரையும் ஆளுமையையும் சொல்லி மக்களிடமும், வியாபாரிகளிடமும், ஏன் அவர்கள் கட்சியினரிடமே பணம் சம்பாதிக்க முயன்ற அல்லது சம்பாதித்த கட்சி உறுப்பினர்களை அதிரடியாய் கட்சியை விட்டு நீக்கியும் காவல் துறையினரால் கைதும் செய்ய உத்தவிட்டு இருக்கிறார்.
இது தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம், பாராட்டுக்கு உரிய செயலும் கூட ,நன்றாக நடக்கும் ஆட்சியையும் தங்களது தவறான நடவடிக்கைகளால் கெடுப்பது கட்சியின் இடைப்பட்ட தொண்டர்கள்தான், ஒன்றியம், நகரம் என பதவிகளை பெற்று கொண்டு இவர்கள் நடத்தும் தர்பார் மக்களை முகம் சுழிக்க செய்யும் என்பதில் ஐயமில்லை , இவர்களால் அரசாங்கமே நடப்பது போல இவர்கள் செய்யும் பந்தாக்களும் , எங்கோ எவரோ வருவதற்கு அவரிடம் நல்ல பெயர் வாங்க இந்த அரசியல் அல்லக்கைகள் செய்யும் அட்டூழியங்களும் எல்லா ஆட்சியிலும் நடக்கும் தொடர்கதை, அந்த மாதிரியான செயல்களுக்கு தடை போடும் வகையில் இருக்கிறது முதல்வரின் நடவடிக்கைகள் .
அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், எந்த கட்சியின் தொண்டர்களாலும் எந்த கட்சியும் ஆட்சியை பிடிப்பதில்லை , மக்களால்தான் அவர்களால் ஆட்சியில் அமரமுடியும் , முடிகிறது , ஆளும் கட்சிக்கு விழும் ஓட்டுகளில் முப்பது சதவீதம் மட்டுமே கட்சியின் தொண்டர்களில் ஓட்டுக்கள் மற்றவை எல்லாம் நடுநிலையாளர்களின் ஓட்டுதான் , அதை மனதில் வைத்து இது மாதிரியான அரசியல் ரௌடிகளின் அராஜகங்களை இரும்பு கரம் கொண்டு நசுக்கவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.
இந்த விஷயத்தில் நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்க படக்கூடாது என்ற சித்தாந்தம் எல்லாம் சரிப்பட்டு வராது, நூறு குற்றங்கள் நடக்காமல் இருக்க இரண்டு நிரபராதிகள் தண்டிக்க பட்டாலும் பரவாயில்லை ஏனெனில் இது மக்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயம், கட்சியின் வளர்ச்சி பாதிக்கும் விஷயம் .
இது மாதிரியான ஆரோக்கியமான நடவடிக்கைகளை ஜெயலலிதா இத்தோடு நிறுத்திவிடக்கூடாது , அவரை நம்பி வாக்களித்த தமிழக நலனை பாதிக்கும் எந்த செயலையும் அவர் அனுமதிக்ககூடாது என்பதே எல்லோரின் விருப்பமும்.இந்த நல்ல மாற்றம் தொடரட்டும் , மக்கள் நலன் காக்கட்டும்
அன்பன்
ARR
31 comments:
VOTED 4 TO 5 IN INDLI & 1 TO 2 IN TAMILMANAM.
//இந்த விஷயத்தில் நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்க படக்கூடாது என்ற சித்தாந்தம் எல்லாம் சரிப்பட்டு வராது, நூறு குற்றங்கள் நடக்காமல் இருக்க இரண்டு நிரபராதிகள் தண்டிக்க பட்டாலும் பரவாயில்லை ஏனெனில் இது மக்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயம், கட்சியின் வளர்ச்சி பாதிக்கும் விஷயம்//
மிகவும் அருமையான கருத்துக்களைத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.
முதல் முறை மட்டுமே ஜெ பலத் தவறுகள் செய்தார்.அது அனுபவமின்மையை காட்டியது. போன முறையே ஓரளவு நல்ல ஆட்சிதான். இப்பொழுதும் கூட தவறு செய்த மூன்று அரசு டாக்டர்கள் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. இந்த மாதிரி நடவடிக்கைகள் அய்யாகிட்ட எதிர்பார்க்க முடியாது
அன்பு வணக்கங்கள்,
வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
நன்றி !
//இது மாதிரியான அரசியல் ரௌடிகளின் அராஜகங்களை இரும்பு கரம் கொண்டு நசுக்கவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.//
சரியா சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்!
//ஆளும் கட்சிக்கு விழும் ஓட்டுகளில் முப்பது சதவீதம் மட்டுமே கட்சியின் தொண்டர்களில் ஓட்டுக்கள் மற்றவை எல்லாம் நடுநிலையாளர்களின் ஓட்டுதான் , //
வெளிப்படை உண்மை பாஸ்!!
//இந்த விஷயத்தில் நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்க படக்கூடாது என்ற சித்தாந்தம் எல்லாம் சரிப்பட்டு வராது, நூறு குற்றங்கள் நடக்காமல் இருக்க இரண்டு நிரபராதிகள் தண்டிக்க பட்டாலும் பரவாயில்லை ///புது தத்துவம்??ஹிஹி
ஆல்ரெடி நூத்துக்கு அரைவாசி நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்!
///
இது மாதிரியான ஆரோக்கியமான நடவடிக்கைகளை ஜெயலலிதா இத்தோடு நிறுத்திவிடக்கூடாது , அவரை நம்பி வாக்களித்த தமிழக நலனை பாதிக்கும் எந்த செயலையும் அவர் அனுமதிக்ககூடாது என்பதே எல்லோரின் விருப்பமும்
///
எனது விருப்பமும் இதுதான்
இன்று என் வலையில்
வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23
வரவேற்கப்பட வேண்டிய விடயம், இதே போன்ற பல செயற்பாடுகளை ஜெயலலிதா முன்னெடுத்துத் தமிழகத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது தான் எல்லோரது விருப்பமும்.
கொஞ்சம் வேலையாக போய்விட்டது ,,,தாமதமாக வந்தேன் ..நல்ல வேளை ஒரு சவுக்கடியான பதிவை மிஸ் பண்ணி இருப்பேன் ...நம்ம ஊர் பத்திரிக்கைகளை விட நம்ம பதிவுகள் ஆரோக்கியமாக இருக்கு ...சந்தோசம் சந்தோசம் இப்படியே நடுநிலையுடன் பலர் நல்லதை பாராட்டி தீயதை விமர்சித்தால் நல்ல ஆட்சி கிடைக்கும் இல்லன்னா நான் அரசியலில் இறங்க வேண்டிவரும் ஹி ஹி (ஒரு finishing kku சொன்னேன் ) நல்ல பதிவு tq
@வை.கோபாலகிருஷ்ணன்
மதி நிறை ஐயா
உங்களின் வாக்கிற்கும் கருத்திற்கும்
பணிவான நன்றிகள்
@எல் கே
உண்மையான கருத்து சார்
நல்லதோ கேட்டதோ அதிரடி தான் ஜெ விடம்
நன்றி உங்களை கருத்துக்கு
@RISHAN SHERIF
அன்பான நண்பருக்கு என் மனமார்த்த வரவேற்புகளும் வாழ்த்துக்களும்
நிறைய எழுதுங்கள் நிறைவாய் எழுதுங்கள்
நன்றி தங்களின்
முதல் வருகைக்கு
@அமைதி அப்பா
தங்களின் உற்சாகம் தரும் கருத்திற்கு நன்றி சார்
@மைந்தன் சிவா
மிக்க நன்றி பாஸ்
ஹன்சிகா எப்படி இருக்காங்க ??
@மைந்தன் சிவா
நீங்கள் நகைச்சுவையாக சொன்னாலும் அது உண்மைதான் பாஸ்
நன்றி உங்களின் கருத்திற்கு
@"என் ராஜபாட்டை"- ராஜா
எல்லோரின் விருப்பமும் அதுதான் நண்பரே
நன்றி உங்களின் கருத்துக்கு
@@"என் ராஜபாட்டை"- ராஜா
வந்து உங்களின் படைப்பின் ருசி அறிகிறேன் நண்பரே
@நிரூபன்
நன்றி சகோ தங்களின் கருத்திற்கு
@ரியாஸ் அஹமது
நன்றி தங்களின் கருத்துக்கு நண்பா
நீங்கள் அரசியலில் இறங்குறீன்களோ இல்லையோ,
இனி இது போல் நீங்கள் தாமதமாக வந்தால்
நான் தீயில் இறங்க வேண்டி வரும்
தேவையான மாற்றம்.
@ தமிழ் உதயம்
நன்றி தங்களின் கருத்திற்கு
நல்லது செய்தல் இயலாவிட்டாலும்
அல்லது செய்தலை தடுப்பது நன்றே
என்ற தங்கள் கருத்து மிகவும் போற்றத்
தக்கதாகும்
அம்மையாரின் ஆட்சி இப்படியே
தொடருமானால் செம்மையாக நடக்கும்
செய்த அம்மையாருக்கும் எடுத்து
செப்பிய உமக்கும் என வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
@புலவர் சா இராமாநுசம்
தங்களின் நிறைவான கருத்துக்கு நன்றி ஐயா
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் என்று இலங்கை தமிழர்களை துன்பபடுத்தும் நடவடிக்கையான இலங்கை மீது பொருளாதார தடை என்பதை கூறிவிடுவீர்களோ என்று முதலில் நினைத்தேன்.
நீங்கள் உண்மையிலேயே இலங்கை தமிழர்களில் அக்கறை உள்ள இந்திய தமிழர். நன்றி.
@thequickfox
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
முழு நன்றி
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், என்றே வேண்டுவோம்.
@G.M Balasubramaniam
உண்மை ஐயா
இனி எல்லாம் மாறட்டும்
மக்கள் நலன் மலரட்டும்
// இந்த விஷயத்தில் நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்க படக்கூடாது என்ற சித்தாந்தம் எல்லாம் சரிப்பட்டு வராது, நூறு குற்றங்கள் நடக்காமல் இருக்க இரண்டு நிரபராதிகள் தண்டிக்க பட்டாலும் பரவாயில்லை ஏனெனில் இது மக்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயம், கட்சியின் வளர்ச்சி பாதிக்கும் விஷயம் .//
I agree with this..
@Madhavan Srinivasagopalan
நன்றி உங்களின் கருத்திற்கு மாதவன்
Post a Comment