Thursday 16 June 2011

நண்பனின் தற்கொலை முயற்சி

   


                               அது ஒரு மார்கழி மாத ஞாயிற்று கிழமை,  மாலை அநேகமாக ஆறு மணி இருக்கும் லேசான மழைத் தூறல் தூறிக்கொண்டே  இருந்தது, அன்று வீட்டிலிருந்து வெளியே வந்த நான், எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி இருக்கும் கேபிள் ரூமில் என் நண்பர்களில் ஒருவனான சதா.ராஜாவை( இவனை நம் பதிவுலக நண்பர்கள் RVSM - தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் மன்னைமைந்தர்களில் ஒருவன் மாதவனுக்கும் தெரியும்)   பார்த்தேன், அருகில் சென்று பார்த்த போது அவன் கண்களில் கண்ணீர் எங்கள் ஹரித்திராநதியில் உள்ள பசங்க எல்லோருமே சிறுவயது முதல்  நண்பர்கள், நாங்கள் செய்யாத வேலைகள் கிடையாது அடிக்காத லூட்டிகள் இல்லை , நாங்கள் பகிர்ந்தது கொள்ளாத விஷயங்களும் இல்லை அதனால் ஒருவருக்கு  ஒன்று என்றால் மத்தவர்கள் துடித்து போய்விடுவோம் , அதனால் பதறியபடியே "என்னடா ஆச்சி ஏன் அழுவற" என்றேன் , அதற்கு அவன் மௌனமாய் தொடர்ந்து அழ இன்னும் குழப்பம் அடைந்த நான் "சொல்லு ராஜா என்னாச்சி ஏன் இப்படி அழற" என்று கேட்க்க , "ஒண்ணும் இல்ல கோப்லி எனக்கு வாழவே பிடிக்கல அதனால தூக்க  மாத்திரை சாப்பிட்டுட்டேன் என்றான்" அழுதவாறே ( எங்களுக்கு அப்போது பதினைந்து வயது தான் இருக்கும் ) நான் அப்படியே ஆடிப்போயிட்டேன் , இது மாதிரியான அனுபவம் எனக்கு புதிது, என்ன செய்வதென்றே தெரியவில்லை , பதறியபடியே நான் அங்கும் இங்கும் ஓடி என் அண்ணன் ரமேஷ், நண்பர்கள் R.ஸ்ரீராம் மற்றும் முரளி ஆகியோரை  அழைத்து வரவும் அவன் மயங்கி விழாவும் சரியாக இருந்தது , அப்போது மழையும் சற்று வலுக்க தொடங்கியது , நாங்கள் அவனை எழுப்ப முயற்சிக்க சற்றே நினைவுக்கு வந்தான் , உடனே அவனை சைக்கிளில் வைத்து எங்கள் குடும்ப டாக்டர் சந்திரசேகரிடம் (மன்னார்குடியில் தொண்ணூறு சதவீதம் அவரிடம் தான்) அழைத்து சென்றோம்.

  அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தவர் என்ன மாத்திரை , எத்தனை மாத்திரை  என்று கேட்க ஒன்றுக்கும் சரியான பதில்  இல்லை அவனிடம் , முழித்தான் , உடனே அவர் பல்ஸ் நல்லா இருக்கு அதனால வீட்டுக்கு அழைச்சிகிட்டு போய் உப்பு தண்ணி குடுங்க பார்க்கலாம் ஏதாவதுன்னா ஜி ஹெச் க்கு அழைச்சிக்கிட்டு போங்க என்று கூறிவிட , மீண்டும் அவனை அழைத்து கொண்டு (எங்க வீட்டுக்கும் அவரின் மருத்துவ மனைக்கும் நான்கு  கிலோமீட்டர் தூரம் இருக்கும்)  ஹரித்திராநதி வந்து இரண்டு படி உப்பை ஒரு வாளியில் கலந்து குடிக்க சொன்னால் அதை குடி குடியென குடித்து விட்டு வாந்தி எடுக்கிறான், அவன் கண்ணுலேந்து எல்லாம் தண்ணியா வருது வாந்தியின் வேகத்தில, ஒரு வழியா வயிறு சுத்தமாக சோர்ந்து போய் அமர்ந்துட்டான். எங்களுக்கோ ஒரு மிகப்பெரிய சாதனையை செய்த மாதிரியான உணர்வு .

 அந்த களேபரம் எல்லாம் முடிந்தவுடன் இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் எப்போதும் உக்காரும் படித்துறையில் அமர்ந்திருக்கும் போது இப்பவாவது சொல்லுடா எத்தனை மாத்திரை முழுங்கின என்று நான் கேட்ட போது அவன் சொன்ன பதில் .............................................................
அரை மாத்திர கோப்லி, உடனே விட்டார் என் அண்ணன் அவன் கன்னத்தில் ஒரு அறை, ஏண்டா  இந்த அரை மாத்திரைக்க்காகவா எங்களை இப்படி மழையில சைக்கிள்ள அலைய விட்ட என கேக்க, ஏன்டா இப்ப அடிக்கிறிங்க இதுக்கு தான் நான் அப்பவே சொல்லலே என்றானே பாக்கலாம் .......... அப்போது எங்களுக்கு கோவம் வந்தாலும் இப்போதும் நாங்கள் பேசி மகிழும் நினைவு அது .


அந்த அரை மாத்திரை  தற்கொலை  முயற்சிக்கான  காரணம்  என்ன  பாழப்போன காதல்தான் 

மன்னை  ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் ஏகாந்த சேவை செங்கமலத்தாயாருடன்    




அன்பன்
ARR
           



       

42 comments:

வெங்கட் நாகராஜ் said...

அதிர்ச்சியாக ஆரம்பித்தாலும், கடைசியில் நல்ல விஷயம் சொல்லி எங்களைக் காப்பாற்றி விட்டீர்கள்… இப்போது என்ன செய்கிறார் அந்த நண்பர்… கிடைத்த அடி அவரை இது போன்ற முயற்சிகள் மீண்டும் செய்யாமல் இருக்க வைத்திருக்கும் என நினைக்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

அவன் ஒரு சுவாரஸ்யமான மனிதன் இன்னும் அப்படியே இளமையாய் காதலுடன் தான் சுற்றி திரிகிறான் , அவனை பற்றிய நிறைய விஷயங்கள் இருக்கிறது , இந்த பதிவின் அதரவைப்பார்த்து தொடரலாம் என்றிருக்கிறேன் , நன்றி நண்பரே உங்களின் உடனடி கருத்துக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

அரை மாத்திரை சாப்பிட்டு எல்லோரையும் தவிக்க வைத்து விட்டாரே உங்கள் நண்பன். சரியான முன்ஜாக்கிரதையான ஆளு தான். உங்கள் நட்பின் ஆழத்தை பரிசோதித்திருப்பாரோ?

நல்ல பதிவு.

எல் கே said...

ஹ்ம்ம் அந்த வயசுக்கே உண்டான கிறுக்குத்தனங்கள் இது

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
நாங்கள் நட்பில் வெற்றி பெற்றுவிட்டோம் அதற்கான சரவெடி தான் அவன் கன்னத்திலும் முதுகிலும் விழுந்தது
நன்றி ஐயா உங்களை கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
உண்மைதான் அந்த வயது கிறுக்கு தனங்கள் அவனிடம் நிறைய உண்டு
நன்றி உங்களின் கருத்துக்கு

சென்னை பித்தன் said...

எதையுமே முழுமையாகச் செய்யத்தெரியாத நண்பன் போலிருக்கிறது!எவ்வளவு பதறியிருப்பீர்கள் முதலில்?

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
ரொம்ப பயந்து போயிட்டோம் ஐயா , அவன் நடிப்பு பாத்து
இருந்தாலும் எங்களுக்கு பயந்துகிட்டு ஒரு வாலி உப்பு தண்ணிய குடிச்சது இப்பவும் சிரிப்பை வரவழைக்கிறது
நன்றி உங்களை கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
:-)

Unknown said...

ரொம்ப நல்லா இருந்தது ...படபடப்புடன் தொடங்கி . நகைப்புடன் முடிட்தது அருமை

A.R.ராஜகோபாலன் said...

அன்று எங்க நிலையம் அதுதான் நண்பா
நன்றி உங்களின் கருத்திற்கு

குணசேகரன்... said...

சும்மா ஒரு டெஸ்ட் பண்ணியிருக்காரு

bandhu said...

நல்ல தமாஷ்!

தமிழ் உதயம் said...

அது அந்த வயது. நகைசுவையுடன் ஒரு ஞாபகம்.

Madhavan Srinivasagopalan said...

//"... மன்னைமைந்தர்களில் ஒருவன் மாதவனுக்கும் தெரியும்)"//

எம்மேல அவ்ளோ நம்பிக்கையா ... ம்ம்ம்.. சரி.. சரி..

கேபிள் (டிவி) சந்த புதுசுல..(1990 ?) நீங்கள் வயதினை குறைத்து சொல்லுவதாகத் தெரிகிறது..

// அரை மாத்திரை // ஆஹா.... ஆஹா.. அந்தக் காரக்டருக்கு வடிவேலு சரியா வருவாருன்னு நெனைக்கிறேன்..

A.R.ராஜகோபாலன் said...

@குணசேகரன்.
எங்களையா டெஸ்ட் பண்ணுறது அன்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@bandhu
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்

ஆமாம் மிக உண்மை நண்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan said...
//"... மன்னைமைந்தர்களில் ஒருவன் மாதவனுக்கும் தெரியும்)"//

//"எம்மேல அவ்ளோ நம்பிக்கையா ... ம்ம்ம்.. சரி.. சரி.."//
அவனை மறந்து விட்டீர்களா என்ன , கண்ணகி டீச்சர் பையன் , வாசுவின் அண்ணன் .



"//கேபிள் (டிவி) சந்த புதுசுல..(1990 ?) நீங்கள் வயதினை குறைத்து சொல்லுவதாகத் தெரிகிறது.."//

ஆமாம் மாதவன் இரண்டு வயதை குறைத்து விட்டேன் , மன்னிக்க வேண்டுகிறேன்



// அரை மாத்திரை // ஆஹா.... ஆஹா.. அந்தக் காரக்டருக்கு வடிவேலு சரியா வருவாருன்னு நெனைக்கிறேன்..

ஆனால் இது கேரக்டர் இல்லை மாதவன் நிஜம்
நன்றி தங்களின் கருத்திற்கு

Yaathoramani.blogspot.com said...

தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம்
பயந்து கொண்டே படிக்கத் துவங்கினேன்
நல்லவேளை சுபமாக முடித்தீர்கள்
சொல்லிச் செல்லும் விதமும்
முடித்த விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
தங்களின் தொடர் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும்
என் பணிவான வணக்கமும் நன்றிகளும் ரமணி சார்

அன்புடன் மலிக்கா said...

உயிர் மதிப்பை உணராதவர்கள் மட்டுமே தற்கொலைக்கு முயல்வார்கள்.
எக்காரணமாக இருக்கட்டும் உயிர் விடுவது தவறான செயல்.

உயிர் கொடுத்தவன் எடுக்கவேண்டுமே தவிர அதைக்கொண்டவன் எடுப்பதற்கு உரிமையில்லை..

முடிவு சுபம்..

இராஜராஜேஸ்வரி said...

மன்னை ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் ஏகாந்த சேவை செங்கமலத்தாயாருடன்
அற்புத தரினம்
ஆனந்த மயமாய்
இனிது தந்தமைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

பசங்களின் லூட்டி
பதற வைத்தது
பாங்காய் மருத்துவ உதவியும்
கன்னத்தில் சர வெடியுமாக மலரும் நினைவுகள்.

A.R.ராஜகோபாலன் said...

@அன்புடன் மலிக்கா
//உயிர் கொடுத்தவன் எடுக்கவேண்டுமே தவிர அதைக்கொண்டவன் எடுப்பதற்கு உரிமையில்லை//

சத்தியமான வார்த்தைகள் சகோதரி
நன்றி உங்களின் கருத்துக்களுக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி , ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் அருள்
உங்களை வந்தடையட்டும்

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
உண்மை அன்று அவன் சரியான அடி வாங்கினான்
அதை விட கொடுமை அவன் அந்த உப்பு தண்ணீரை சலிக்காமல் குடித்ததுதான்
நன்றி உங்களின் கருத்துக்கு

ஸ்ரீராம். said...

அரை மாத்திரை....ஹா..ஹா...எனக்கும் என் பதின்ம வயதில் ஒரு நண்பனின் தற்கொலை முயற்சி அனுபவம் உண்டு. ஏற்கெனவே எழுத எண்ணியிருந்தேன். ஆர்வத்தை அதிகமாக்கி விட்டீர்கள்.

நிரூபன் said...

மனித மனங்கள் உணர்ச்சிவசப்பட்டு அவசர அவசரமாக எடுக்கும் விபரீத முடிவு தான் தற்கொலை முயற்சி. காதலுக்காக தற்கொலை செய்ய முயன்ற உங்களின் நண்பனைக் காப்பாற்றிய- பொறுமை நிறைந்த உங்களின் குணத்திற்கு ஒரு சல்யூட்.

RVS said...

கோப்லி... சதா ராஜா இப்போது எப்படி இருக்கார்? நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ;-))

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
நன்றி சகோ உங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@RVS
இன்னும் அப்படியே
அதே சதா ராஜா தான் வெங்கட்
அதே ரமேஷ்ஷ்ஷ் ...........
ஷினிமா போலாமா
பஷ் வந்துடிச்சா என்கிற மாதிரியே

G.M Balasubramaniam said...

ALL IS WELL THAT ENDS WELL.

கிருபா said...

படிக்கும் போது சிரிப்பு வருகிறது ஆனால் அன்று எப்படி
துடித்திருப்பீகள் இதே போன்று சம்பவம் நான் கல்லூரியில் படித்தபோது தூக்கு போட்டு காப்பற்றிய சம்பவம் நடந்தது

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

கிருபா said...

அதே போல் லவ் ஃபெயிலியர் சொல்லி காம்பஸால
கால் தொடல குத்த்னவனையும் நல்லா திட்டி டோஸ்
குடுத்தேன்.லவ்னு சொல்லி இவனு அல்ப்ப்ற தாங்க முடிய சகோ.....

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
very true sir

A.R.ராஜகோபாலன் said...

@கிருபா
உண்மை நண்பரே
மனதில் ஒரு இனம் புரியாத பயம் பதட்டம்
நன்றி தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்

A.R.ராஜகோபாலன் said...

@கிருபா
இது மாதிரியான செயல்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே போது என்று நான் நினைப்பதுண்டு
நன்றி தங்களின் கருத்திற்கு

சிவகுமாரன் said...

படிக்க ஆரம்பித்ததும் வந்த பதைப்பு , முடிக்கையில் சிரிப்பாய் மாறியது.

சிவகுமாரன் said...

\\\அதே சதா ராஜா தான் வெங்கட்
அதே ரமேஷ்ஷ்ஷ் ...........
ஷினிமா போலாமா
பஷ் வந்துடிச்சா என்கிற மாதிரியே///

பின்னூட்டத்திலும் சிரிப்பு

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
மிக்க நன்றி நண்பரே
உங்களின்
மறு வருகைக்கும்
கருத்திற்கும்
ரசனைக்கும்