சிதறிய உடல்கள்
பதறிய உள்ளங்கள்
நடுங்கிய தேகம்
ஒடுங்கிய தேசம்
சத்தமிடும் ஓலம்
சகித்திடும் காலம்
அழித்திடும் முடிகொண்டு
வெடித்திடும் வெடிகுண்டு
நிலையில்லா சித்தம்
நிலமெல்லாம் ரத்தம்
மானம் மறைக்கிறது ஒரு கை
கண்ணீர் துடைக்கிறது மறு கை
துண்டாகி கிடக்கிறது ஒரு கை
துடிதுடித்து தவிக்கிறது மறு கை
மண்ணுமில்லை இழக்க ஒன்றுமில்லை
உறவுமில்லை காக்க எவருமில்லை
துக்கம் துடைக்க யாருமில்லை
உயிரை துறக்க வழியுமில்லை
புத்தனும் இங்கே புனிதமில்லை
மறந்தும் அங்கே மனிதமில்லை
காமம் கழிக்க எங்குலப் பெண்டீரா
ஐக்கிய சபையே இந்நிலை கண்டீரா
இவர்களின் நிலையாவும் சர்வநாசம்
இனியாவது களைஎடுக்குமா சர்வதேசம்
புயலென தாக்கி அழித்த குண்டுகள்
புல்லென வீழ்ந்தன மழலை செண்டுகள்
நெருப்பென தகிக்கிறது தமிழர் நெஞ்சம்
கடவுளுக்கும் கருணையில் ஏனிந்த கஞ்சம்
சொந்தத்தை இழந்து நிற்கின்றனர்
துன்பத்தை தொடர்ந்து கற்கின்றனர்
அடிமைத்தனமே அவர்கள் நிலையானது
அழுதழுது கண்ணீரே கடலலையானது
தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரே
இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே
நேற்று சேனல் 4 இல் பார்த்த வீடியோவின் விளைவு இந்த கவிதை
மனம் கனமாகிப்போன கணம் அது, இப்படி கேட்ப்பாரற்று கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை தடுக்க முடியாத கோழையாக , கையாலாகாதவனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .
அன்பன்
ARR
21 comments:
வணக்கம் ராஜகோபாலன் சார்!
எந்தக்காலத்திலும் எம் நெஞ்சைவிட்டு அகலப்போவதில்லை இந்தத் துயரம்! அந்த வலிகளின் நிஜத்தை கவிதை ஆக்கியிருக்கிறீர்கள்!
இப்போது நெஞ்சில் கொஞ்சம் பாரம் குறைந்த உணர்வு!
நன்றி சகோதரரே/
மனக் கனக்கச் செய்து போகுது
படங்களும் பதிவும்
தமிழக மக்களை சரித்திரம்
நிச்சயம் மன்னிக்காது
வலி நிறைந்த எழுத்துக்கள் நண்பரே... படங்களும் கவிதையும் கனக்கச் செய்தது நெஞ்சை....
சிந்தை மொத்தமும் கலங்கிய வேளை இது
வீடியோ பார்த்ததில் இறுதி இன்னும் மீளவில்லை
தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரே
இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே
வருவார் நிச்சயம் வருவார்
ஈழம் - மரணித்துப் போன மனிதம்//
பதிவின் தலைப்பே மனித உயிர்களுக்கு இலங்கையில் உள்ள மதிப்பினை ஆணித்தரமாகச் சொல்லி நிற்கிறது.
தொடர்ந்து படிப்போம்.
அழித்திடும் முடிகொண்டு
வெடித்திடும் வெடிகுண்டு
நிலையில்லா சித்தம்
நிலமெல்லாம் ரத்தம்//
எங்களின் கடந்த காலங்கள். தூரத்தே நின்று பார்க்கும் உங்களின் பார்வையூடாக இக் கவிதைகளில் வந்திருக்கிறது.
போரின் வலியினை நீங்கள் அனுபவிக்கா விட்டாலும், எங்களின்,
எம் தாய்த் தேசத்தின் உணர்வுகள் எப்போதும் ஒரே திசையில் இருக்கிறது என்பதற்குச் சாட்சியாய் இக் கவிதை வந்திருக்கிறது.
மானம் மறைக்கிறது ஒரு கை
கண்ணீர் துடைக்கிறது மறு கை
துண்டாகி கிடக்கிறது ஒரு கை
துடிதுடித்து தவிக்கிறது மறு கை-
இவ் இடத்தில்,
மறைவாய் உதவி வழங்குகிறது இன்னோர் கை....
என்று சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோ.
அந்த இன்னோர் கை..காங்கிரஸ்...
காமம் கழிக்க எங்குலப் பெண்டீரா
ஐக்கிய சபையே இந்நிலை கண்டீரா
இவர்களின் நிலையாவும் சர்வநாசம்
இனியாவது களைஎடுக்குமா சர்வதேசம்//
பாஸ்...உயிரோடு காமம் கழித்தால் குறைபாடு என்று சொல்லலாம், ஆனால் இறந்த பிணங்களைப் புணர்ந்தால்...அதனை எப்படி வர்ணிப்பது?
யுத்த தர்மங்களையெல்லாம் மீறி இறந்த போராளிகளை, பெண்களைப் புணர்ந்த நிலைக்கு....என்ன தீர்ப்புச் சொல்லப் போகிறார்கள்?
தமிழர்களின் நிலையை தடுக்க முடியாத கோழையாக , கையாலாகாதவனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்//
சகோ, உங்களில் எந்தத் தவறும் இல்லை சகோ,
கால மாற்றத்தில் எம் இனம் தங்களது ஒற்றுமையை வேரறுத்து வேற்றுமையில் இறங்கிப் பல பிரிவினைகளைப் பூண்டது தான் இதற்கான காரணம்.
கவிதை உணர்வுகளின் வெளிப்பாடாக வந்திருக்கிறது.
யோவ் இப்பிடி படங்களை போடாதீங்கப்பா பார்க்க மனம் தாங்குதில்லை...
சொற்களால் அந்தச் சோகத்தைப் படம் பிடித்துக் காட்டி மனதில் ரத்தக் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்.
//இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே //
ஒரு புதிய அவதாரம் வரவேண்டும்!
மிகவும் துயரமான சம்பவங்கள்.
வேதனை அளிக்கிறது.
கண்ணீரைக் கவிதையாய் வடித்துள்ளீர்கள்.
தங்களுடன் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
Voted
3 to 4 in Tamilmanam
8 to 9 in Indli
ஒவ்வொரு வரியும் மனதில் பாரத்தை ஏற்றுகிறது. படிக்கும்பொதே இப்படியாயின் அனுபவித்தவர் துயர் நினைக்க முடியவில்லை. தூர இருந்து ஊச் கொட்ட முடிவதுதன் நம் கையாலாகாத்தனதின் உச்சம். இந்த அழிவுக்குப்பிறகாவது அவர்களுக்கு விடிகிறதா பார்ப்போம், பிரார்த்திப்போம்.
அப்பாவி தமிழன் பாவம் சும்மா விடாது
இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் அறுப்பான் ,ஈழத்தில் விதைத்ததை காஷ்மீரிலும் .வட இந்தியாவிலும் அறுக்கிறது இந்திய அரசு .தேசிய இனம் என்பதன் பொருளை இந்தியா அறியும் காலம் வரும் . உங்கள் வீட்டு கதவையும் ஒரு நாள்
வல்லாண்மையின் கொடும் கரங்கள் தட்டும்.அப்போது அறிவீர்கள் நாம் பட்ட துயரை .தமிழ் எனும் மொழி பேசியதற்காக எம் இனம் அழிக்கப்பட்டதை .காலம் நிச்சயம் உணர்த்தி விடும் .
நாளை வரலாறு கூறட்டும் போ
ஏடா தமிழா இன்னும் உறங்குகிறாய்
தெற்கிருந்து கேட்கின்ற கதறல் உன் காதில் விழவில்லை
ஈழத்து சோதரியர் மானம் அழிவதுந்தன் மண்டைக்குள் ஏறவில்லை
இனமானம் இல்லாத பிணமாகிப் போனாயோ
நன்றி கெட்டு நக்கி திரிகின்ற நாயினும் கீழ் ஆனாயோ
புறநானுற்று வீரமெல்லாம் புனைகதையா
வெறும் சோற்றுக்கும் சில நூற்றுக்கும்
வாழ்வதா வாழ்க்கை
மொழி என்றால் 'விழி' என்று வாழ்ந்திருந்த
முன்னோனின் பிள்ளையா நீ
தன் இனம் காக்க மொழி காக்க
தன் இன்னுயிரை தந்த
எம் மறவர் இறந்தாலும் வாழ்கின்றார்
அனால் நீ
ச்சீ ....... நானென்ன சொல்ல
நாளை வரலாறு கூறட்டும் போ
@bala
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் ...வாழ்த்துக்கள் !
வணக்கம்
கவிதையை படித்த போது மனம் கனத்துப்போனது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment