கனவில் தின்ற
பண்டத்தை
விழித்தவுடன்
தேடும்
குழந்தையைப்போல்
அறியாமையில் அமிழ்ந்து
பாலை கறந்தவுடன்
மீதம் மிஞ்சியதை
தன் கன்றுக்கு
தரத்துடிக்கும்
பசுவினைப்போல்
பாசத்தில் பதிந்து
இரு கை கால்களாலும்
இறுகப்பிடித்து
தன் தாயின் உடலோடு
இணைத்திருக்கும்
குரங்கினைப்போல்
நம்பிக்கையில் நெகிழ்ந்து
வேண்டியது
கிடைத்து , துக்கம்
தொலைத்த
கணத்திலிருக்கும்
பக்தனைப்போல்
மனமெல்லாம் மகிழ்ந்து
பாடுபட்டு விதைத்த
பயிர் தந்த முழு
விளைச்சலில்
படியளக்கும்
விவசாயியைப்போல்
நிம்மதியில் நிறைந்து
புரியாத மொழிபேசும்
அறியாத ஊரில்
தெரியாத வழியில்
பேத்தியின் பிஞ்சு போன்ற
ஒரு விரலை சுற்றி
தன் மொத்த விரல்களை பற்றி
செல்லும்
பாட்டி..................
முதுமையின் அழகு
முதுமையின் அழகு
அன்பன்
ARR
44 comments:
உங்களை வாசித்தவரையிலும் மிகச் சிறப்பான கவிதை ராஜு.
சபாஷ்.சபாஷ்.
படத்துக்குத் தனியா ஒரு சபாஷ்.
முதுமையின் மொத்த அழகையும்
அருமை பெருமைகளையும்
ஒரு கவிதையில் மிக அழகாக
சொல்லிவிட்டீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
கவிதையும் கவிதைக்கேற்ற அற்புதமான கருப்பு-வெள்ளை படமும் முதலிடத்திற்குப் போட்டி போடுகின்றன நண்பரே…. நல்ல கருத்துள்ள கவிதை.
பேத்தியின் பிஞ்சு போன்ற
ஒரு விரலை சுற்றி
தன் மொத்த விரல்களை பற்றி
செல்லும்
பாட்டி..................
முதுமையின் அழகு//
முதிர்ந்த கன்னல்
முற்றிய கனியின் சாறாய்
தித்தித்த கவிதைக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
ஒப்பீடுகள் அருமையாக உள்ளது பாஸ் ...
ம்ம் ரசனை பாஸ்!!
//புரியாத மொழிபேசும்
அறியாத ஊரில்
தெரியாத வழியில்
பேத்தியின் பிஞ்சு போன்ற
ஒரு விரலை சுற்றி
தன் மொத்த விரல்களை பற்றி
செல்லும்
பாட்டி..................
முதுமையின் அழகு//
பாராட்ட வார்த்தைகளில்லை!
பாலை கறந்தவுடன் மீதம் மிஞ்சியதை...
நெகிழ்ச்சியை தந்த வரிகள். உங்கள் கவி வளத்துக்கு வாழ்த்துகள்.
பாட்டி .....
நான் பியுட்டி என்று கொஞ்சி மகிழ்ந்த
அந்த குழந்தை மறைந்துவிட்டது ...
நல்ல கவிதை நண்பா பாட்டியின் மீண்டும் நினைக்க வைத்த கவிதை
Very sentimental kavithai
பாலை கறந்தவுடன்
மீதம் மிஞ்சியதை
தன் கன்றுக்கு
தரத்துடிக்கும்
பசுவினைப்போல்
பாசத்தில் பதிந்து//
அற்புதமான ஒப்புவமையினைக் கையாண்டுள்ளீர்கள்.
பாட்டியின் பாசப் பிணைப்பினையும், இக் காலத்தில் தனிமையினை மறக்கும் வண்ணம் பேத்தியின் பிஞ்சு விரலோடு பேசி மகிழும் பல பாட்டிகளின் உணர்வுகளையும் உங்கள் கவிதை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது.
@சுந்தர்ஜி
மிக்க நன்றி அண்ணா
@ Ramani
மிக்க நன்றி ரமணி சார்
@ வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி நண்பரே
@ இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி மேடம்
@ கந்தசாமி.
மிக்க நன்றி பாஸ்
@ மைந்தன் சிவா
மிக்க நன்றி பாஸ்
@ சென்னை பித்தன்
மிக்க நன்றி ஐயா
@ தமிழ் உதயம்
மிக்க நன்றி நண்பரே
@"என் ராஜபாட்டை"- ராஜா
Thankyou verymuch Mr.Raja
@ ரியாஸ் அஹமது
மிக்க நன்றி நண்பரே
@நிரூபன்
மிக்க நன்றி சகோ
படிக்கப்படிக்க ஒவ்வொரு வரியும், அடுத்தடுத்து வந்த அடுக்கு மொழியும், அப்பப்பா .. அருமையோ அருமை!
அறியாமையில் அமிழ்ந்து
பாசத்தில் பதிந்து
நம்பிக்கையில் நெகிழ்ந்து
மனமெல்லாம் மகிழ்ந்து
நிம்மதியில் நிறைந்து
ஒவ்வொரு ஒப்புவமையும் தேர்ந்தெடுத்துக் கையாண்டுள்ளது அபாரம்!
இறுதியாக
//புரியாத மொழிபேசும், அறியாத ஊரில், தெரியாத வழியில், பேத்தியின் பிஞ்சு போன்ற ஒரு விரலை சுற்றிதன் மொத்த விரல்களை பற்றி செல்லும் பாட்டி....முதுமையின் அழகு//
பாட்டியின் அனுபவச்சுருக்கங்களுடன் கூடிய முகம் போன்றே அழகோ அழகு!
தங்களின் ஒட்டு மொத்த கவிதாஞானமும் இந்த ஒரே கவிதையில் கொடிமின்னல் போல பளிச்சிடுகிறது.
மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk
அடேங்கப்பா.... கவிதை அடுத்த தளத்திற்கு போகிறது... அம்சமாக இருக்கிறது கோப்லி. ;-))
@ வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி ஐயா
@RVS
மிக்க நன்றி வெங்கட்
முதுமையின் அழகைபோலவே அழகாக இருக்கு உங்க கவிதையும்
//புரியாத மொழிபேசும்
அறியாத ஊரில்
தெரியாத வழியில்//
அழகிய அசத்தல்
கவிதை ரியலி சூப்பர் பாஸ்
நடக்கக் கற்றுக்கொடுத்தவளே இன்று நடக்கிறாள் பேத்தியின் கைப்பிடித்து. உவமைகள் ஒவ்வொன்றும் பிரமாதம். நெகிழ்த்தும் வரிகள், மிக அருமை.
சூப்பர்
ஆமாம்.வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள். கவிதை..இதம்.. நன்றி எனது பதிவை படித்து கருத்திட்டதற்க்கு.
@ துஷ்யந்தன்
மிக்க நன்றி நண்பரே
பின்னூட்டமிட்ட அனைவரது கருத்துக்களும் என் மனதில் ஓடியதால் நான் தனியாகக் கூற வார்த்தைகள் ஏதும் இல்லை. மிக அருமை ராஜகோபால். வாழ்த்துக்கள்.
@ துஷ்யந்தன்
//புரியாத மொழிபேசும்
அறியாத ஊரில்
தெரியாத வழியில்//
அழகிய அசத்தல்
ரொம்ப நன்றி அன்பரே
@ துஷ்யந்தன்
ரொம்ப நன்றி பாஸ்
@ கீதா
ரொம்ப நன்றி சகோதரி
@ எல் கே
ரொம்ப நன்றி சார்
@குணசேகரன்...
ரொம்ப நன்றி சார்
@ G.M Balasubramaniam
ரொம்ப நன்றி ஐயா
முதுமையின் முழுஅழகு. பாட்டி அழகு.
பாட்டிக்கான கவிதை அதைவிட அழகு.
@அன்புடன் மலிக்கா
மிக்க நன்றி சகோதரி
பாட்டியோ முதுமையின் அழகு-உம்
பாடலோ பலவகை அழகு
போட்டியா என்னிடம் வந்தீர்-சண்டை
போடவா இதனைத் தந்தீர்
காட்டிய அன்பு எல்லாம்-அந்தோ
கானலே ஆன சொல்லாம்
தீட்டினேன் கவிதை சும்மா-சகோ
திட்டினேன் சும்மா சும்மா
புலவர் சா இராமாநுசம்
@புலவர் சா இராமாநுசம்
என்னை
பெருமையும்
பெருமிதமும்
கொள்ள
அள்ள வைத்த
கவிதை வரிகள்
நன்றி ஐயா
Post a Comment