Sunday 12 June 2011

நான் ரசித்த முதலிரவுப் பாடல்கள் - உறவின் உன்னதம் உணர்ந்தவர்களுக்கு

  
                    இருமணம்  இணையும்  திருமண உறவின் தொடக்கம் முதலிரவு அந்த கணத்தில் கரையேறும் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு உண்டு , அன்று சொன்ன வார்த்தைகள் தான் நம் வாழ்க்கையின் அஸ்த்திவாரம், அப்போது பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளே கணவன் மற்றும் மனைவியரிடையே அதீத அன்னியோன்யத்தையும், புரிதலையும் உருவாக்கும் அப்படி உன்னத உறவைப்பற்றி சொல்லும் நான் ரசித்த முதலிரவுப் பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன், இனி பாடல்களின் அணிவரிசை.

1. படம் : பாகப்பிரிவினை  

    
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் 
தரத்தினில் குறைவதுண்டோ - உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ 

என்று சொல்லும் அந்த ஊனம் நீக்கி கணவன் வேதனைக்கு மருந்திடும் வார்த்தைகளின் அருமை என்ன சொன்னாலும் ஈடாகாது 

காலம் பகைத்தாலும் கணவன் பணிசெய்து 
காதல் உறவாடுவேன்  

என பெண்மையின் பெருமையையும் மனைவியின் கனிவையும்  ஆணித்தரமாய் எடுத்துரைக்கும் பாடல் வரிகள் என்னை அப்படியே ஆக்கிரமித்து ஆட்கொண்டது முழு உண்மை 

2. படம்: நிச்சயதாம்பூலம்


 பாவாடை தாவணியில் பார்த்த உருவாமா  இது
பூவாடை வீசி வர பூத்த பருவமா .

என்று தன் காதலி மனைவியானவுடன் அவள் அழகும், நாணமும் கூடிப்போனததை ஆச்சர்யமாய் ரசிக்கும் கணவனின் கவிதை வரிகளை என்னவென்று சொல்லுவேன்........... மேலும் 

இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் 
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும் 
மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் 
மறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்.....

என் இப்பிறவியன்றி எப்பிறவியிலும் நாமே இல்லறம் பகிரப்போகும் நல்லற துணைகள் என்பதையும் எனக்கு என்னவாகினும் மறு பிறப்பெடுத்து உன்னை மணப்பேன் என்ற ஆழமான காதலையும் சொல்லும் இந்த பாடலை ரசிக்க முடியாமல் இருக்க முடியுமா? 

3. படம்: தெய்வப்பிறவி 

அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
உடல் நான் அதில் உரம் நீ என 
உறவுக்கொண்டோம் நேர்மையாய் 

கடல் நிலவாய் காட்சியிலே 
கலந்து நின்றோம் பிரேமையாய்

நான் உடலாய் இருந்தால் நீ உயிராய் இருக்க வேண்டும் என்பதையும் , தன் காதலை நேராய் நேர்மையாய் அவளின் பெற்றோரிடம் சொல்லி மணம் முடித்ததையும், கணவனும் மனையியும் கடலும் நிலவுபோல் கலந்து இருக்க வேண்டியதையும் காதலாய் சொல்லும் இந்த பாடல் என் மனதை கவர்ந்ததற்கு காரணமும் வேண்டுமோ?

4.   கர்ணன் 

  கர்ணனின் தலைஎழுத்தான குல இழிவைச் சொல்லி தன் மாமனாராலேயே அவமானப்படுத்தப்பட்டு சோர்வாய் சோகமாய் அமர்ந்திருக்கும் தன் கணவனை தன் ஆதரவான வார்த்தைகளால் தன் அன்பைச் சொல்லும் அந்த காதல் மனைவியின் பாடல் வரிகள் 

கண்ணுக்கு குலமேது - கண்ணா 
கருணைக்கு இனமேது 
விண்ணுக்கு பிரிவேது -கண்ணா 
விளக்குக்கு இருளேது 
தருபவன் இல்லையோ - கண்ணா நீ
தர்மத்தின் தாயே கலங்காதே ...

கருணை, தர்மம் , வீரம் கலந்த ஒப்பற்றவன்   அல்லவா நீ என தன் கணவனின் சிறப்பை கூறி அவனின் துயர் துடைக்கும் உயர் உன்னதப் பாடல் இது.

அன்பன்
ARR
  

56 comments:

Madhavan Srinivasagopalan said...

முதலில் சொல்லிய பாடல்.. மிகவும் அருமையானது.. அர்த்தமுள்ளது.

இந்தப் படத்தினை பல வருடங்களுக்கு முன்னர், அண்ணன் ஏர்.ஆர்.ராஜா அவர்களின் இல்லத்தில் வீடியோ ப்ளேயரில் பார்த்ததாக ஞாபகம்.... அப்போது வி.சி.ஆர் தான் ரொம்ப பேமஸ்.. (நோ சி.டி)

Unknown said...

all r good songs,lyrics r excellant ,u miss paalum pazhamum song ,,,oh old songs r treasure friend

Yaathoramani.blogspot.com said...

அருமையான பாடல்களாகத் தேர்ந்தெடுத்துக்
கொடுத்தமைக்கு நன்றி
திரும்பத் திரும்ப கேட்டு ரசித்தேன்

எல் கே said...

எல்லாமே அருமையான பாடல்கள். நன்றி சார்

ஷர்புதீன் said...

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - என்ற பாடலை உருகி உருகி கேட்பேன் ...தெரியுமா? :-)

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையுமே அருமையான பாடல்கள். முடிந்தால் அதன் காணொளி சுட்டியையும் தந்து இருக்கலாமே…

தமிழ் உதயம் said...

நான்கும் சிறப்பான பாடல்கள் மட்டுமல்ல... சிவாஜியின் பாடல்களும் கூட. அருமையான பாடல் பகிர்வு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை!அருமை!! அருமை!!!
சார்!

Unknown said...

ஹிஹிஹி ரசனை சூ.......ப்பர் பாஸ்!!!

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி மாதவன்

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
yes u r right nanbare...
i missed paalum pazhamum
thanks for your comment

A.R.ராஜகோபாலன் said...

@ Ramani
மிக்க நன்றி ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@ எல் கே
தன்யனானேன் சார்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்

அப்படியா
அப்ப என்னமோ விஷயம் இருக்கு
என்ன நண்பரே அது
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ வெங்கட் நாகராஜ்
எல்ல இடத்திலேயும் அலசிப் பார்த்துட்டேன் சார் கிடைக்கல
எல்லாம் ராஜ் டி வி யின் வசம் உள்ளதால் திரட்ட முடிய வில்லை
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ தமிழ் உதயம்
குடும்பத்தின் உணர்வுகளை அதிகம் சொன்னவர் அவர்தானே நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி, நன்றி, நன்றி,
மிக்க நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
நன்றி உங்களின் கருத்துக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்தக்காலத்தில் தீவிர சிவாஜி ரசிகராக இருந்த எனக்கு. தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்களும், பாடல்களும் மிகவும் மகிழ்ச்சியளித்தன.நன்றி.

சவாலே சமாளி படத்தில்
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே

வியட்நாம் வீடு படத்தில்
பாலக்காட்டுப்பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா, அவர் பழக்கத்திலே குழந்தையைப்போல் ஒரு அம்மாஞ்சி ராஜா, யாரம்மா அது யாரம்மா ....

இவை இரண்டையும் கூட சேர்த்திருக்கலாமே, சார். அழகான முதலிரவு பாடல்கள் தானே சார்.

பாராட்டுக்கள்.

குணசேகரன்... said...

அருமையான பதிவு. அருமையான பாடல்கள்.

சுதா SJ said...

அத்தனையும் முத்தான பாடல்கள் பாஸ்

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
உண்மைதான் ஐயா
இது போலே பல பாடல்கள் உள்ளன , பதிவிட்டால் நீண்ட பதிவகிடுமே என்ற பயம் தான் காரணம் , ஆனாலும் சவாலே சமாளி பாடலை சேர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது
நன்றி ஐயா உங்கள் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ குணசேகரன்...
அருமையான கருத்து
அருமையான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ துஷ்யந்தன்

முத்தான முழு நன்றி பாஸ்

நிரூபன் said...

உறவின் உன்னதம் உணர்ந்தவர்களுக்கு//

அடிங்...அப்போ நமக்கெல்லாம் இந்தப் பாடலைப் படிக்க அனுமதி இல்லையா அண்ணாச்சி;-))

நிரூபன் said...

நான் ரசித்த முதலிரவுப் பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன், இனி பாடல்களின் அணிவரிசை//

அவ்.., பீலிங்ஸை மீட்டிப் பார்க்கிறார்...

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ!
இனிக்கும் இன்ப இரவே வா!

பாஸ்..நினைத்துப் பார்க்கப் பார்க்க சந்தோசம் வரும் என்பது இது தானோ..

ஹி...ஹி..

நம்மளை மாதிரிச் சின்னப் பசங்களுக்கு ஆசையைத் தூண்டி விடுறீங்களே!

நிரூபன் said...

சகோ உங்களின் பாடல் ரசனைப் பகிர்வு அருமை, கூடவே பாடலுக்குரிய லிங்கினைக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

எனக்கு இப் பாடல் பகிர்வில்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
மற்றும்
தங்கத்திலே ஒரு குறை...இரண்டும் ரொம்பப் பிடிக்க்கும்,

என் மனதைக் கவர்ந்த முதலிரவுப் பாடல் என்றால்...

முதல் இரவு படத்தில்
ஜெயச்சந்திரன், பீ.சுசிலா பாடிய
’மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்....

Anonymous said...

ஆஹா முதலிரவு பாடல்கள் எப்படியெல்லாம் அருமையான மேட்டரை பிடிக்கறாங்க!!

Anonymous said...

தலைவரே..சிவாஜியின் முதலிரவு பாடல்கள் கேட்டால் நமக்கே மூடு வந்துவிடும்..அந்த இசையும்,பாவனைகளும் அடேயப்பா..எப்போதும் தாலாட்டும் அருமையான ரொமாண்டிக்..

RVS said...

நல்ல ரசனை கோப்லி. ;-)))

சென்னை பித்தன் said...

அருமையான தேர்வு ஏ.ஆர்.ஆர்.!

Anonymous said...

முதலிரவு என்பது பெண்களுக்கும்தான். குறிப்பாக. ஏனெனில் பல ஆண்களுக்கு முதலிரவாக இருக்காது அவர்கள் 30க்கு மேல் மணம் செய்யின் பொதுவாகச்சொல்கிறேன்.

இங்கு பின்னூட்டம் போட்டவர்களும் பதிவாளர்களும் ஆண்கள். பெண்கள் எங்கே ?

முதல்பாடல் ஒரு பெண்ணைத் தாதியாகக் காட்டி மகிழ்கிறது.
மற்ற பாடல்கள் ஆண்-பெண் உறவில் தொன்றுதொட்டுவரும் பண்பாட்டு கட்டமைப்பை இறுக்குகிறது.

ஏனெனில் பாவலன் ஒரு ஆண். இப்பண்பாட்டை இறுக்குவதே தன் கடப்பாடு என நினைத்து அதைப்பாடல்களில் காட்டியவன். ஆனால் அஃதெல்லாம் ஒரு நாடகம். ஏனெனில் அவனும் தன் வாழ்க்கையில் பல பெண் உறவை வைத்துக்கொண்டு பெண் என்பவளை ஒரு உடலாகப்பார்த்தே வாழ்ந்தவன்.

என் கருத்துகள் கசப்பானவை. பாடல்களின் இனிமைக்கு என் கருத்துகள் பொருந்தா.

இருப்பினும் பின்னூட்டக்காரர்கள் சுட்டிக்காட்டிய சில பாடல்களுக்கு என் கருத்துகள் பொருந்தா.

சினிமா மற்றும் பல ஊடகங்கள் புதிய சிந்தனையயும் புதிய உலகத்தையும் காட்டுவதில்லை. அஃது அவர்கள் வேலையில்லை என்று நினைக்கிறார்கள் போலும்.

பெண், பெண்மை, கற்பு, முதலிரவு, தாய்மை - அடேங்கப்பா..இவனுக விரிக்கும் வலைகள்தான் எத்தனை ? எத்தனை ?

தமிழ்ப்பெண்கள் இப்படிப்பட்ட பாவலர்கள், ஊடகக்காரர்கள், பதிவாளர்கள் விரிக்கும் மாயவலையையிலிருந்து விடுபடவேண்டும்.

பாடலாம்..முதலிரவாம்..காதலாம்...புண்ணாக்காம்!

rajamelaiyur said...

///
தமிழ்ப்பெண்கள் இப்படிப்பட்ட பாவலர்கள், ஊடகக்காரர்கள், பதிவாளர்கள் விரிக்கும் மாயவலையையிலிருந்து விடுபடவேண்டும்.

பாடலாம்..முதலிரவாம்..காதலாம்...புண்ணாக்காம்!
//

ஏன் இந்த கோபம் ?

G.M Balasubramaniam said...

நல்ல வரிகளும் இசையும் கொண்ட பாடல்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அவையெல்லாம் முதலிரவுப் பாடல்கள் என்ற எண்ணமே இதுவரை தோன்றவில்லையே. காட்சி ஒன்றானாலும் காணும் முறை வேறாயிருந்திருக்கிறது

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
உறவின் உன்னதம் உணர்ந்தவர்களுக்கு//

அடிங்...அப்போ நமக்கெல்லாம் இந்தப் பாடலைப் படிக்க அனுமதி இல்லையா அண்ணாச்சி;-))

அப்படி அல்ல சகோ , முதலிரவுப் பாடல்கள் என்று தலைப்பிட்டதால், அது தவறான பார்வையில் அமைந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாகும்.
அம்பை தவித்து நாணேது?
உங்களை தவிர்த்து நானேது??

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்

ஹி...ஹி..

நம்மளை மாதிரிச் சின்னப் பசங்களுக்கு ஆசையைத் தூண்டி விடுறீங்களே!


நீங்கள் தான் தூண்டா மணிவிளக்காயிற்றே சகோ

A.R.ராஜகோபாலன் said...

@என் மனதைக் கவர்ந்த முதலிரவுப் பாடல் என்றால்...

முதல் இரவு படத்தில்
ஜெயச்சந்திரன், பீ.சுசிலா பாடிய
’மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்....

மிகவும் நல்லப்பாடல் சகோ
சிவக்குமார் , சுமித்ரா, இசை ஞானியின் இசைத்தாலாட்டு
நன்றி சகோ உங்களின் தொடர் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
ஆஹா முதலிரவு பாடல்கள் எப்படியெல்லாம் அருமையான மேட்டரை பிடிக்கறாங்க!!

ஹி ஹி
ரொம்ப நன்றி அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
தலைவரே..சிவாஜியின் முதலிரவு பாடல்கள் கேட்டால் நமக்கே மூடு வந்துவிடும்..அந்த இசையும்,பாவனைகளும் அடேயப்பா..எப்போதும் தாலாட்டும் அருமையான ரொமாண்டிக்..

உண்மை உண்மை
நடிகர் திலகம் அல்லவா அவர்
நன்றி தங்களின் கருத்துக்கு தலைவரே

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மிக்க நன்றி வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@ சென்னை பித்தன்
மனம் மகிழ்ந்த நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@simmakkal
""பாடலாம்..முதலிரவாம்..காதலாம்...புண்ணாக்காம்!""


சிம்ம கர்ஜனை இதில் நான் என்ன சொல்ல திரு.வீரபாண்டியன்
நன்றி தங்களின் கருத்துக்கு, கோபத்துக்கு, வாசிப்பிற்கு

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

கோபத்திற்கான காரணம் அறியேன் திரு ராஜா

A.R.ராஜகோபாலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா

விருது வழங்கிய உங்களுக்கும்
விருது பெற்ற சிபி சாருக்கும்
வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
""நல்ல வரிகளும் இசையும் கொண்ட பாடல்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அவையெல்லாம் முதலிரவுப் பாடல்கள் என்ற எண்ணமே இதுவரை தோன்றவில்லையே""

மிகச்சரியாக சொன்னிர்கள் ஐயா
இந்த மாதிரியான எண்ணம் தான் இந்த பாடல்களை வரிசை படுத்தவே தூண்டியது . நன்றி தங்களின் கருத்துக்கு

மாலதி said...

//தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ - உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ //மிகவும் அருமையானது.. அர்த்தமுள்ளது.

A.R.ராஜகோபாலன் said...

@ மாலதி
மிக்க நன்றி சகோதரி
உங்களின் கருத்து என் எழுத்தை பலப்படுத்தும்

துளசி கோபால் said...

இந்த நான்கு பாடல்களுமே எங்க ஃபேவரிட் லிஸ்டுலே இருக்குதே!!!!!!

இதுக்காகவே இந்தப் படங்களை வாங்கி வைத்துள்ளோம்.

A.R.ராஜகோபாலன் said...

@துளசி கோபால்

ரசனை திலகம் அல்லவா நீங்கள்
மிக்க நன்றி மேடம் தங்களின் கருத்துக்கு

Amudhavan said...

தங்களின் நல்ல ரசனைக்குப் பாராட்டுக்கள். நீங்கள் சொல்லியிருப்பதுபோல் இன்னமும் பல பாடல்களைக் குறிப்பிடலாம்.ஆனால் பட்டியல் மிகவும் நீளும். இத்தனை அருமையான பாடல்களைப் பகிர்ந்துகொண்ட நீங்கள் இத்தகு அற்புதமான பாடல்கள் கிட்டத்தட்ட 99 சதவீதம் எழுதியவர் கண்ணதாசன் என்ற பெயரையே குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே...இத்தகு தொகுப்புக்களை வெவ்வேறு தலைப்புக்களின் அவ்வப்போது எழுதுங்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@Amudhavan
உண்மைதான் நண்பரே
ஆனால் எனக்கு கர்ணனும், நிச்சய தாம்பூலமும் கண்ணா தாசன் வரிகள் என்று தெரியும் ஆனால் தெய்வப்பிறவியிலும்,பாகப்பிரிவினையிலும் சந்தேகம் இருந்ததால் விட்டுவிட்டேன் , இதைபற்றிய தேடல்களிலும் எனக்கு பதிலில்லை அதனால்தான்.

நான் ஒரு விரல் கொண்டு மறைத்ததாலா அந்த கவிச்சூரியன் மறைந்து விடப்போகிறது , ஆயினும் உங்கள் கேள்வி என்னை நெகிழவைத்தது.
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்துர்க்கும்
முழு நன்றி நண்பரே

Amudhavan said...

தெய்வப்பிறவியில் 'அன்பாலே தேடிய என் அறிவுசெல்வம்' பாடல் எழுதியவர் உடுமலை நாராயண கவி. பாகப்பிரிவினையில் 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடல் கவியரசரின் மிகப்புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றுதானே! தமிழக முதல்வர் ஜெயலலிதா கவியரசரின் 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' பாடல் பற்றி எழுப்பிய சர்ச்சை குறித்து என்னுடைய வலைத்தளத்தில் 'ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் கண்ணதாசனும்' என்றொரு பதிவு எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள், நன்றி.http://amudhavan.blogspot.com/2011/06/blog-post.html

A.R.ராஜகோபாலன் said...

@ Amudhavan
வணக்கம் சார்
இந்த பதிவை நான் மதியமே படித்து விட்டேன் , அதற்கு பின்னூட்டமும் இட்டுவிட்டேன் , அது உங்களின் அனுமதிக்காக காத்திருக்கிறது , மிக அருமையான பதிவு அது

கீதமஞ்சரி said...

பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்குப் பிடித்த மற்றுமொரு பாடல் இதோ...

மனைவி படித்தவள், கணவன் படிக்காதவன்,நாகரிகம் அறியாதவன். தாழ்வுமனப்பான்மையால் விலகி நிற்கிறான். மனைவி காதலும் கண்ணியமுமாய் அவனை அழைக்கும் பாடல் இது... வாராதிருப்பானோ... வண்ணமலர்க் கண்ணனவன்... சேராதிருப்பானோ சித்திரப்பூம்பாவைதனை! மிக நயமான வரிகளால் மனதைச் சுண்டும். படம் பச்சைவிளக்கு என்று நினைக்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@கீதா
ஆமாம் சகோதரி அருமையான பாடல்
பச்சை விளக்கு தான் , எஸ் எஸ் ஆர் மற்றும் விஜயகுமாரி நடித்தது
பாடல்களின் ஒவ்வொரு வரியும் அருமை
நன்றி தங்களின் பகிர்விர்க்கும் கருத்திற்கும்

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE