முதல் கோணல் முழுவதும் கோணல் என்பது போல அமைந்துள்ளது , தமிழக அரசின் அறிவிப்பு , சமச்சீர் கல்வி சட்ட திருத்தம் - 3க்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ள நிலையில், இந்த தீப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால்,தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இத சமச்சீர் கல்வியை எதிர்த்து போடப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சுயவிளம்பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து பாடபுத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிருபிக்க வில்லை. சமச்சீர் கல்வி பாடதிட்டம் குறைபாடு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்திருத்தம் அரசியல் சாசனம் அளிக்கும் உரிமையை பறிப்பதாக உள்ளதா? இந்த ஐகோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை செல்லாததாக மாற்றுகிறதா? என்பதை பரிசீலிக்க வேண்டும். இதற்கு விரிவாக அரசிடம் பதில் பெற வேண்டும். அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்த பிறகு வழக்கை விரிவாக விசாரித்தால் தான் முடிவு எடுக்க முடியும். இதற்கிடையில் என்ன செய்யலாம் என்பது தான் தற்போதைய கேள்வி எழுந்துள்ளது? எனவே தான் திருத்த சட்டத்திற்கு தடைவிதிகிறோம் என்று தீர்ப்பு வழங்கினர் .
ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு இதை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார், ஆனால் உச்ச நீதிமன்றம் இப்போது ஒரு மாதம் கோடை கால விடுமுறையில் இருப்பதால் (இந்த நாட்டில் இந்த கோடை காலத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா, நாட்டில் எத்தனையோ லட்சோப லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்க இந்த மாதிரியான விடுமுறைகள் தேவையா என்பது தனிக்கதை)இதை எப்படி மேல் முறையீடு செய்ய முடியும் என்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே எந்த பாடத்தை படிப்பது என்று தெரியாமல் பத்தாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் படு குழப்பத்தில் இருக்கிறார்கள் , இதில் இணையத்தில் பதிவிறக்கம் செய்து இத்தனை நாட்களாக படித்து வந்தவர்களின் நிலையை சொல்லி தெரிய வேண்டாம் , இத்தனை நாட்களாய் அவர்களின் உழைப்பும் நேரமும் வீண் .
இந்த தீப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு 4 கோடி அளவில் பழைய புத்தகங்களை மீண்டும் அச்சடிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் டெண்டர் விட்டு, தற்போது பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் புத்தகங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த மேல் முறையீட்டிலும் உச்ச நீதி மன்றம் தடை வழங்குமேயானால் இந்த புத்தகங்களின் நிலை என்னவாகும் என்பதும் இந்த வீண் விரயத்திற்கு யார் பொறுப்பாவார்கள் என்பது நூறு கோடி ரூபாய் கேள்வி.
இவை அனைத்திற்கும் உச்சமாய் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அவர்களின் இன்றைய அறிவிப்பு மாணவர்களையும் பெற்றோர்களையும் படு குழப்பத்தில் தள்ளியுள்ளது அந்த அறிவிப்பு "கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 15-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்." இந்த அறிவிப்பை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை , பள்ளிகள் ஜூன் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் ஆனால் எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், என்ன ஒரு தீர்க்கமான முடிவு.
அரசியல் காரணங்களுக்காக அள்ளி தெளித்த கோலத்தில் எடுக்கப்பட்ட இது மாதிரியான முடிவுகள் மாணவர்களிடையே என்ன மாதிரியான பாதிப்பை உருவாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்து இருக்கிறார்களா ?? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இருக்கிறது இந்த அரசின் வறட்டு கெளரவம்.
உடனடி இட்லி , தோசை மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது மாதிரியான இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்து என்ன விதமான பாடங்கள் குறையோடிருக்கிறதோ அந்த பாடங்களை நீக்கி , இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைத்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.
அதை செய்யுமா இந்த அரசு இல்லை அவர்களின் முடிவின்படியே மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடப்போகிறதா ???
காலம்தான் பதில் சொல்லவேண்டும்
எல்லாவற்றிர்க்கும்
எல்லோருக்கும்
அன்பன்
ARR
46 comments:
உங்கள் வலைப்பதிவ்க்கு template மாற்றவும். இடுகைகளை படிப்பதற்குள் கடுப்பாகி விடுகிறது.
வண்ணங்கள் கண்ணை உறுத்துகின்றன. எரிச்சலை தருகின்றன.
தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றினாலும் நாலு வரி படித்தவுடன் எஸ்கேப் ஆக வைக்கிறது உங்கள் தளத்தின் வண்ணங்களும் வடிவமைப்பும்.
@கவின்
என்ன செய்வது நண்பரே
என் ரசனை அப்படியானது
மாற்றிவிடுகிறேன்
உங்களின் கருத்துக்கு நன்றி
Very super analysis . . .
What we do . . All are our politician mistakes
//எல்லோருக்கும் ...எல்லாவற்றுக்கும் //
ஹை...... ஆசை தோசை அப்பளம் வடை!
@ "என் ராஜபாட்டை"- ராஜா
Thank you Raja
@"என் ராஜபாட்டை"- ராஜா
we need change
we have to change Raja
@ ஷர்புதீன்
""ஹை...... ஆசை தோசை அப்பளம் வடை!""
ரொம்ப ஆசைப்படுறேனோ ??
நன்றாக யோசித்து இந்த விஷயத்தில் அரசு செயல்பட்டிருக்கலாம்.
இந்த பதிவு அரசை கண் திறக்க வைக்க .....
ஆனால் திறக்குமா
சரியாய் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
பிள்ளைகளின் படிப்பை நினைத்தால் கவலை தருகிறது.
பள்ளிக்குழந்தைகளுக்கு குழப்பமில்லாமல் ஏதாவது ஒரு நல்ல முடிவு சீக்கரமாக எடுக்கப்பட வேண்டும். இதில் யாரும் வறட்டு கெளரவம் பார்ப்பது நல்லதில்லை தான். பார்ப்போம்!
சரியான கருத்துதான்..நன்றாக ஆராய்ந்தால் சமச்சீர் கல்வி தேவைதான் என்பது எல்லோருடைய கருத்து..
மேடம் தங்கதாரகை சர்ச்பார்க்கில் படித்தவர் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்..அவருக்கு எங்கே தெரிய போகுது அரசு பள்ளியை பற்றி :(
அடேங்கப்பா என்ன ஒரு அனாலிசிஸ். ;-))
ஆனாலும் அரசு மாற்றம் வந்தால் எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்....
ஆமாம்... சரியான .. சிந்தனை செய்ய வேண்டிய கேள்வி...
ஆனால்.. தற்போது எது செய்தாலும்.... ஆயிரக் கணக்கில் அடிக்கப் பட்ட புஸ்தகங்களின் செலவுகள்... காந்தி கணக்கா ?
@ தமிழ் உதயம்
அதுதானே நல்ல அரசின் கடமை நண்பரே
@ ரியாஸ் அஹமது
மக்கள் தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் நண்பரே
@ இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி மேடம்
@ அஹமது இர்ஷாத்
உண்மையான கருத்து அன்பரே
@ வை.கோபாலகிருஷ்ணன்
சரியான கருத்து ஐயா
நன்றி தன்களின் கருத்துக்கு
@RVS
மாற்றம் ஒன்றே மாறாதது
ஆனாலும்
இந்த மாதிரியான
மாற்றம் மாறவேண்டும்
நன்றி வெங்கட்
@ Madhavan Srinivasagopalan
காந்தி கணக்கல்லா மாதவன்
தமிழக மக்களின் கணக்கு
நன்றி தங்களின் கருத்துக்கு
ஜெயாவை அழிக்க திமுகா தேவை இல்லை அவரது வரட்டு கவுரவமே போதும்
இவர்களின் வறட்டு கவுரத்தில் பள்ளி சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் பாடுதான் திண்டாட்டம். மாற்றி மாற்றி நமது தமிழகத்தின் கல்வி நிலையை ஒரு வழி செய்யாமல் விடமாட்டார்கள் போல… காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
சமச்சீர் கல்வி விடயத்தில் நீதி மன்றத்தினது இடைக்காலத் தடை உத்தரவு வரவேற்றகப் பட வேண்டிய விடயம். மகிழ்ச்சிக்குரிய செய்தி,
ஆனாலும் மறு பக்கத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து அடிக்கப்படும் புத்தகங்களால் பண விரயம் ஏற்படுகிறது,
திறைசேரிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பாதகமான விடயம்,
ஆக மொத்தத்தில் அம்மா வறட்டு கௌரவத்தோடு நிற்பது தான் இதற்கெல்லாம் காரணம்,
இங்கே பாதிக்கப்படுவது மக்கள் வாழ்வு,
மக்கள் பணத்தைப் பற்றிக் கொஞ்சம் அதிமுக சிந்திக்குமானால்,
வளமான வாழ்விற்கு உறு துணையாக இருக்கும்.
மூர்கனும் முதலையும
கொண்டது விடாது
புலவர் சா இராமாநுசம்
தேர்தல் முடிவுகள் பற்றிய உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் நான் எழுதியது நினைவுக்கு வருகிறது நண்பரே.We find ourselves between the fire and the frying pan. What to do.? We had no choice. God save us all.
பிடிவாதத்தை கைவிட்டு எந்த பகுதி பிடிக்கவில்லையோ அதை மட்டும் நீக்கிவிட்டு தொடர்வதில் தப்பில்லை
பள்ளி திறப்பது இன்னும் தாமதிக்குமோ..
சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு தரும் என நம்புகிறேன்
உடனடி இட்லி , தோசை மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது மாதிரியான இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்து என்ன விதமான பாடங்கள் குறையோடிருக்கிறதோ அந்த பாடங்களை நீக்கி , இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைத்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.
இதுபத்தி ரெண்டு விதமான கருத்துக்கள் வலையுலகில உலாவுது! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!
ஆனா நீங்க சொல்லுறது சரின்னு படுது
@ துஷ்யந்தன்
மிக்க நன்றி அன்பரே
@வெங்கட் நாகராஜ்
வெங்கட் சார் உங்களின் கருத்தையும் இந்த பதிவில் உங்களின் மானசீக அனுமதிபெற்று பயன்படுத்தியுள்ளேன்
நன்றி உங்களின் கருத்திற்கு
@ நிரூபன்
ஆனால் சகோ எந்த எதிர்க்கட்சியும் இதை வலுவாய் எதிர்ப்பதாக தெரியவில்லை , ஒருவேளை மக்கள் அவதி படட்டும் என நினைக்கிறார்களோ என்னவோ ???
நன்றி சகோ உங்களின் கருத்துக்கு
@ புலவர் சா இராமாநுசம்
தங்களின் கவித்துவமான கருத்துக்கு நன்றி ஐயா
@G.M Balasubramaniam
வாஸ்த்தவமான கருத்து தான் ஐயா
போக்கிடம் தெரியால்தான் திரிகிறோம்
நன்றி உங்களின் கருத்துக்கு
@ ஆர்.கே.சதீஷ்குமார்
பிடிவாதத்தை கைவிட்டு எந்த பகுதி பிடிக்கவில்லையோ அதை மட்டும் நீக்கிவிட்டு தொடர்வதில் தப்பில்லை
உண்மை மிக உண்மை
நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கு
@ ஆர்.கே.சதீஷ்குமார்
பள்ளி திறப்பது இன்னும் தாமதிக்குமோ.
நானும் அப்படித்தான் நினைக்கிறன் ஆனால் பள்ளி கல்வி செயலரின் கருத்து வேறு விதமாக இருக்கிறதே
@ஆர்.கே.சதீஷ்குமார்
""சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு தரும் என நம்புகிறேன்""
என்னை பொறுத்த வரை நல்ல தீர்ப்பு என்பது குழப்பமில்லாதபாடமுறைதான்
நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கு
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தி
எந்தவிதமான கருத்தாக இருந்தாலும் மாணவர்களின் நலன் பாதிக்க படக்கூடாது என்பதே என் விருப்பம் சகோ
நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கு
//இது மாதிரியான முடிவுகள் மாணவர்களிடையே என்ன மாதிரியான பாதிப்பை உருவாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்து இருக்கிறார்களா ?? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இருக்கிறது இந்த அரசின் வறட்டு கெளரவம்.//
நல்லக்கருத்து
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திக்கொண்டுதான் செயல்படவேண்டும்;
ஏற்கனவே பள்ளி திறக்கவே 15 நாள் தள்ளிபோய்விட்டது. இனி திறந்து பாடங்கள் தொடங்கவே இன்னும் 15 20 நாளாகிவிடும். அவர்களின் சின்னமூளையை சிரமப்படுத்தி சுமைகளை ஏற்படுத்தினால் தாங்காது. கல்விமேல் வெறுப்பு வந்திடாவண்ணம் செயல்படவேண்டும்..
அருமையான தேவையான பதிவு..
@ அன்புடன் மலிக்கா
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி
அரசியல் வியாதிகளுக்கு எல்லாரும் பலியாக வேண்டியதுதானா????
If one wants to improve the education just improve the facilities in corporation schools.
Samacheer kalvi will degrade every students..
Government has to take steps to improve the corporation schools quality standards.
Why everyone shouting without Knowledge about "samacheer kalvi "
I am asking a question to everyone
Will you ready to join your children in corporation school ?
Samacheer Kalvi is same like that..
Then Shut the ???????????????
Rengarajan S
@ தினேஷ்குமார்
அந்த அரசியல் வியாதிகளுக்கு மருந்திடவேண்டும் அன்பரே
@Anonymous
திரு. ரெங்கராஜன் உங்களின் கருத்துக்கு நன்றி
நீங்கள் என் பார்வையை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறன், என் கவலை எல்லாம் சமச்சீர் கல்வி தடை செய்யப்பட்டுள்ளதை நினைத்து அல்ல , ஆனால் அரசியல் காழ்ப்புனர்ச்சிக்காக மாணவர்களின் எதிர்காலமும், நேரமும் அரசின் மக்கள் பணமும் வீணாய் வீணடிக்க படுகின்றதே என்பதுதான், இத்தனை தெளிவாய் கருத்திட்ட நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாமல் போனதேன் என்று தெரியவில்லை.
உங்களிடம் நானொரு கேள்வி கேட்கிறேன், உங்களுக்கு ஒரு மகனோ மகளோ பத்தாம் வகுப்பு போகும் நிலையில் இருந்து கடந்த இரு மாதமாக பத்தாம் வகுப்புக்கு தயார்படுத்தி கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் உங்களின் நிலை எப்படி இருக்கும் ??
""then open the???????????????????? to clear your .......""
Post a Comment