Friday, 10 June 2011

விபச்சாரம்



பூக்களின்
வாசத்தைப்போலே 
எங்கெங்கும் 
வீசிக்கொண்டே 
இருக்கிறது அன்னியம் 

மேகத்தின் 
உருவங்களைப்போலே
நிலை இல்லாமல் 
மாறிக்கொண்டே 
இருக்கிறது துணை 

கடலின் 
அலையினைப்போலே 
ஓய்வில்லாமல் 
மோதிக்கொண்டே
இருக்கிறது நினைவுகள் 

உருவத்தின்
நிழலைப்போலே 
பின்னாலே 
தொடர்ந்துகொண்டே 
இருக்கிறது வெறுமை 


இருதயத்தின் 
துடிதுடிப்பினைப்போல
அசராமல் 
இயங்கிக்கொண்டே 
இருக்கிறது சுயநலம் 

காற்றின் 
தன்மைப்போலே 
நீக்கமற 
இருந்துகொண்டே 
இருக்கிறது வலி 


ஜீவநதியின்
ஊற்றைப்போலே 
வற்றாமல் 
வந்துகொண்டே 
இருக்கிறது கண்ணீர்

வறுமை 
தீயைப்போலே 
எங்களை 
எரித்துக்கொண்டே 
இருக்கிறது விபச்சாரத்தில் ........................



   





40 comments:

Yaathoramani.blogspot.com said...

ஒவ்வொரு பத்தியும் அருமை அருமை
செயற்கையாக நாம் உருவாக்கி வைத்திருக்கிற
விபச்சார உலகை
இயற்கையைக் கொண்டு விளக்கியிருப்பது
அருமையிலும் அருமை

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மிக்க நன்றி ரமணி சார்
உங்கள் கருத்து என் படைப்புக்கு
பெருமை சேர்க்கும்

rajamelaiyur said...

வலிமிகுந்த கவிதை

rajamelaiyur said...

அற்புதமான கவிதை சார்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜீவநதியின்
ஊற்றைப்போலே
வற்றாமல்
வந்துகொண்டே
இருக்கிறது கண்ணீர்

ஒவ்வொருவரும் அருவருப்பாக பார்க்கும் ஒரு விஷயத்தை, பாசிட்டிவாக பார்த்திருப்பது அருமை சகோதரா!

Unknown said...

///இருதயத்தின்
துடிதுடிப்பினைப்போல
அசராமல்
இயங்கிக்கொண்டே
இருக்கிறது சுயநலம் ///
நண்பரே இனி நான் உங்களை பாராட்டுவதும் கூட சுயநலமே ..
எனவே அடக்கி வாசிக்கிறேன் அருமை நண்பரே

Unknown said...

மூணாவது ஒட்டு

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அடிக்கடி யாரும் பார்க்காத விஷயத்தை யாரும் பார்க்காத கோணத்தில் பார்த்திருக்கிறது கவிதை.

மிஞ்சுவது வலியும் வேதனையும்தான்.

A.R.ராஜகோபாலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா
மிக்க நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தி
யோசி

உங்களின் அருமையான கருத்துக்கு நன்றி சகோதரரே

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
உங்களின் சுயநலம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது அன்பரே
நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
மிக்க நன்றி உங்களின் வாக்குக்கு

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
மனம் நிறைந்த நன்றி அண்ணா

Unknown said...

அருமை நண்பரே அருமை-கவிதை
அழகால் வந்ததே பெருமை
தருக நண்பரே தருக-மேலும்
தமிழுக்கு வந்திட பெருமை
உருக வைத்தீர் உள்ளம்-இதய
உணர்வில் பொங்கிய வெள்ளம்
பெருக வைத்தது துயரம்-அந்த
பேதைக்கு காரணம் வயிரும்
புலவர் சா இராமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
தங்களின்
அருமையான
கருத்துக்கு நான்
பாத்தியமானது என்
பாக்கியம் ஐயா

சென்னை பித்தன் said...

//மேகத்தின்
உருவங்களைப்போலே
நிலை இல்லாமல்
மாறிக்கொண்டே
இருக்கிறது துணை //

//வறுமை
தீயைப்போலே
எங்களை
எரித்துக்கொண்டே
இருக்கிறது விபச்சாரத்தில் ...//

அருமையான வரிகள்!
வலிக்கும் உண்மை!

RVS said...

கவிஞர் கோப்லிக்கு வாழ்த்துக்கள். ;-))

A.R.ராஜகோபாலன் said...

@ சென்னை பித்தன்
உங்களின் இந்த அற்புதமான
கருத்து
என் எழுத்தை மேலும்
பண்படுத்தும்
மிக்க நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@RVS
என் வலைப்பூவுக்கு
மட்டுமின்றி
என் பள்ளி கணக்குப் பாட
வழிகாட்டிக்கு
மனம் நிறைந்த நன்றி

ஷர்புதீன் said...

5th vottu ennuthu

( vote is my comment)

தமிழ் உதயம் said...

நன்றாக உள்ளது சார் கவிதை.

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
Thanks for your vote friend'

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
உதயத்திடமிருந்து
உற்சாகமூட்டும்
கருத்து
நன்றி நண்பரே

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நீக்கமற இருந்துகொண்டே இருக்கிறது வலி

வற்றாமல் வந்துகொண்டே இருக்கிறது
கண்ணீர்

தீயைப்போலே எங்களை எரித்துக் கொண்டே இருக்கிறது
வறுமை//

மிகவும் கொடுமையான வாழ்க்கை தான் அவர்களுடையது.

யாரோ செய்யும் தவறுகளுக்கு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அப்பாவிகள் தான் அவர்கள்.

பற்றிய நெருப்பை
பரந்த நோக்குடன்
பகிர்ந்த கவிதை.
பதைபதைப்புடன்
படிக்க முடிந்தது.

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
உண்மையான வார்த்தைகள் ஐயா
உங்களின் உணர்வுகள் உங்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது
மிக்க நன்றி

சுதா SJ said...

விரக்தியின் உச்சக்கட்ட வரிகள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆதரவாக பின்னூட்டமிட்டவரில் எத்தனை பேர் அப்படி ஒருத்தியை அழைத்து பேசுவார்கள்.?. உணவிடுவார்கள். சக மனுஷியாக மதிப்பார்கள்..

எளுதுவது எளிது..

பாலியல் தொழிலாளிகள் விரும்புவது நம் பரிதாபத்தையல்ல...என புரியணும்..

அவர்களை சக தோழியாக பார்க்கும்போது மட்டுமே நாம் மனிதர்கள்..

அல்லது அவர்களை விட பன்மடங்கு வக்கிரம் நிறைந்தவர்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சினிமாவில் காட்டப்படும் அந்தரங்க காட்சியை கள்ளத்தனமாக ரசிக்கும் நாம் அனைவருமே பாலியல் தொழிலாளியே என உணர்ந்தாலே போதுமானது..,

நமக்காக ஒரு பெண் அரைகுறையாக் ஆடினாலும் பரவாயில்லை ..அவள் உடல் தேவை ரசிக்க. ஆனால் அவள் மனதை பற்றி கவலைப்படாமல் அவள் மீது அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் உலகம்..

ஹிப்போக்ரைட்ஸ் நாம்..:)

http://selventhiran.blogspot.com/2009/08/blog-post_23.html

சில கருத்துகள் இங்கே நன்று ..

நிரூபன் said...

இருதயத்தின்
துடிதுடிப்பினைப்போல
அசராமல்
இயங்கிக்கொண்டே
இருக்கிறது சுயநலம்//

சபாஷ்...அருமையான குறியீட்டு வர்ணனைக் கையாடல்.

ஒரு நாட்டினது இயல்பு நிலையினையும், பொருளாதார மாற்றங்களையும் உணர்த்த இங்கே விபச்சாரத்தை குறியீட்டு வடிவாக்கி. அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

வறுமை
தீயைப்போலே
எங்களை
எரித்துக்கொண்டே
இருக்கிறது விபச்சாரத்தில்//

எங்கள் நாடுகளின் யதார்த்தத்தை இங்கே விபச்சாரத்திற்கு ஒப்பிட்டு விளக்கியுள்ளீர்கள். அருமையான கவி சகோ

G.M Balasubramaniam said...

கவிதை மிக அழகு.விபசாரத்துக்கு வரும் அனைவரும் வறுமை துடைக்க என்று ஏற்ற தொழில் என்பது ஏற்புடையதல்ல. அதை ஒரு மகிழ்ச்சிக்காகவும் பணம் பண்ணவும் வேண்டிச் செய்கிறார்கள் பலர் என்பதும் உண்மை.

A.R.ராஜகோபாலன் said...

@ துஷ்யந்தன்
நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ எண்ணங்கள் 13189034291840215795
"பாலியல் தொழிலாளிகள் விரும்புவது நம் பரிதாபத்தையல்ல...என புரியணும்.."

மிக உண்மை
நன்றி நண்பரே
உங்களின் முதல் வருகைக்கும்
கருத்துக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@ எண்ணங்கள் 13189034291840215795

நமக்காக ஒரு பெண் அரைகுறையாக் ஆடினாலும் பரவாயில்லை ..அவள் உடல் தேவை ரசிக்க. ஆனால் அவள் மனதை பற்றி கவலைப்படாமல் அவள் மீது அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் உலகம்..

சரியான கருத்துதான் நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்


சபாஷ்...அருமையான குறியீட்டு வர்ணனைக் கையாடல்.

நன்றி சகோ உங்களின் அருமையான
பாராட்டுக்கும் கருத்துக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன் said...

"எங்கள் நாடுகளின் யதார்த்தத்தை இங்கே விபச்சாரத்திற்கு ஒப்பிட்டு விளக்கியுள்ளீர்கள்"

உங்களின் மனம் திறத்த பாராட்டுக்கு பாத்தியமானது
என் பாக்கியம் சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ G.M Balasubramaniam
உங்களின் வலிமையான உண்மையான கருத்திற்கு நன்றி ஐயா

நகைச்சுவை-அரசர் said...

ஊரோடு சேர்ந்திசையும் செம்மறியாகாமல், எதையும் ஆய்ந்தறிந்து அதன் செம்மை அறியும் ஒருவன் அறிஞனென அறியப்படுகிறான்.. பொது மகளிரின் வலிமிக்க மறுமுகத்தை கவிதை வாயிலாக அறிமுகம் செய்த நீவிரும் ஓர் அறிஞரே..

A.R.ராஜகோபாலன் said...

@நகைச்சுவை-அரசர்
கவிதைக்கு கருத்திவோர்
மத்தியில்
கருத்தையே
கவிதையாக தந்தமைக்கு
மனம் மகிழ்ந்த நன்றி