Friday 29 April 2011

காதலிக்காக காத்திருக்கிறேன்..



கதிரவன் களைத்து 
கரை தொடும் வேளையில் 
புன்னகை பூவிழியாளுக்காக 
பூக்களுடன் 
காத்திருக்கிறேன் ............

தென்புற தென்றல் 
தேகம் தொட்டு செல்ல 
எழிலாள் என்னவளுக்காக 
எதிர் பார்ப்புடன் 
காத்திருக்கிறேன் ............

தாயும் சேயும்  
பாசம் பேசி கொள்ள 
அன்னநடை அவளுக்காக 
ஆர்வமாய் 
காத்திருக்கிறேன் ............

முதுமையில் மூழ்கிய
முதியவர்கள் நட்புடன் நகர 
தேன்மொழி தேவதைக்காக 
தேரைப்போல் 
காத்திருக்கிறேன் ............

கண்கவர் காற்றாடிகள் 
பறவைபோல் பறக்க 
ஒளிவெள்ள ஓவியத்திற்காக 
ஒலியின்றி
காத்திருக்கிறேன் ............

சிங்கார சிறுமியர் 
மான்போல் துள்ளியாட 
மனம்கவர் மன்னவளுக்காக  
மரம்போல்
காத்திருக்கிறேன் ............

வருவோர் போவோர் 
எல்லாம் எள்ளி எனைப்பார்க்க 
அந்த அற்புதத்திற்காக 
அமைதியாய்
காத்திருக்கிறேன் ............

தேங்கிய  நீரில்
கன்னியர்கள் முகம் திருத்த 
உன்னத உயிராளுக்காக 
உரிமையாய்
காத்திருக்கிறேன் ............
  
வசீகர வண்ணங்கள்
கலவையாய் கலந்தாட 
நளினமான நல்லவளுக்காக 
நகராமல் 
காத்திருக்கிறேன் ............


அன்பன் 
ARR

   







14 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காதலி வந்தாளா?இல்லை இறுதிவரை காத்திருப்பு மட்டுமே மிஞ்சியதா ராஜகோபாலன்?

இனிமையான மொழி சொல்லும் அழகான கவிதை.

RVS said...

அன்பு கோப்லி!
கவிதை அற்புதம். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

யாருக்காக... இது யாருக்காக... ;-))

Yaathoramani.blogspot.com said...

நல்லனவற்றைத்தானே எதிர்பார்கிறீர்கள்
உறுதியாய் நல்லது நடக்கும்
எளிய சொற்களைக்கொண்டு செய்த
அருமையான பாமாலை
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
திரு சுந்தர்ஜி.. உங்களின் கவிதைகளுக்குத்தான் என் முதல் நன்றி!
உங்களின் கவிதைகளை இன்று படித்ததன் தாக்கம் , என்னிலிருந்து வந்த கவிதை இது
இன்னும் காத்திருக்கிறேன் காதலிக்காக ,
ஆனால் கிடைத்தது என்னவோ மனைவி .........

A.R.ராஜகோபாலன் said...

@RVS
பிரியமான வெங்கட்
பாராட்டை
பகிர்ந்ததற்கு
பல நன்றி
இது இல்லாத என் கண்மணிக்காக .............

A.R.ராஜகோபாலன் said...

@ Ramani
திரு ரமணி சார்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வளமான நன்றி
உங்களின் கருத்துக்களை பல முறை படித்திருக்கிறேன்
நீங்கள் என் பதிவை படித்ததும் ,
உங்கள் கருத்தை பதிந்ததும் ................ பாக்கியம்

Srividya said...

காதலில் காத்திருப்பது ஒரு சுகானுபவம்
அதை சொன்னதற்கு நன்றி .............

A.R.ராஜகோபாலன் said...

மிக்க நன்றி ஸ்ரீ ........
அந்த சுகானுபவம் சொந்த அனுபவமா ??

Madhavan Srinivasagopalan said...

ம்ம்
காத்திருந்து.. காத்திருந்து... காலங்கள் போகுதா..?

சற்று பிசியாக உள்ளதால் தாமதமாக கமெண்ட் போடுகிறேன்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே. காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா!

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
தங்களின் கமண்டுகள்தான் நான் காத்திருக்கும் காதலி
அறியவில்லையா நீங்கள் ..........

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நட்பான நண்பரே
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் சிரம் தாழ்ந்த , கரம் கூப்பிய நன்றிகள் ....

உண்மைதான் , நீங்கள் சொல்வது போல் காத்திருப்பது ஒரு சுகமான சுமைதான் .

சுதா SJ said...

காத்திருப்பின் சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும், சூப்பர் பாஸ்

A.R.ராஜகோபாலன் said...

@ துஷ்யந்தன்
மிக்க நன்றி நண்பரே