என் சுவை நகைச்சுவை,
கண்டக்டர் : திருச்சி மட்டும் ஏறு ......... திருச்சி மட்டும் ஏறு .........
நான் : சார் நான் ராஜகோபால் ஏறலாமா ????
------------------------------------------------------------------------------------------
கண்டக்டர் : ஏர்போர்ட் இருக்கா ..........???????
நான் : சார் வண்டிய கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க பாத்து சொல்லுறேன் ........
---------------------------------------------------------------------------------------------
நான் : மச்சி சொல்ல மறந்துட்டேண்டா..........
நண்பன் : என்னடா மாப்புளே ??????
நான் : அதான் மறந்துட்டேன்னு சொல்லுறனே ........
---------------------------------------------------------------------------------------------
நான் : மாப்புளே இவ்வளவு தூரம் பழகுறோம் எங்கிட்ட சொல்லவே இல்ல பத்தியா??????????
நண்பன் :என்னடா மச்சி சொல்லலே ??????/
நான் : அதான் நீ சொல்லலேயே எனக்கு எப்பிடி தெரியும் ??
-----------------------------------------------------------------------------------------------------
நான் : நீ டுவல்துல தமிழ்ல எத்தனை மார்க்கு
ஜுனியர் : ஒன் பிப்டி த்ரீ சார்
நான் : டேய் நான் தமிழ்ல தானே கேட்டேன் தமிழ்ல சொல்லு
ஜுனியர் : சாரி சார் நூத்தி அம்பத்தி மூணு சார்
நான் : இங்க்லீஷ் ல ...................
ஜுனியர் : (ரொம்ப விவரமாய் ) ஒன் எய்ட்டி டூ சார் .........
நான் : டேய் தமிழ்ல நூத்தி அம்பத்தி மூணு நா ... இங்க்லீஷ் ல ஒன் எய்ட்டி டூ வா , எப்படிடா அது ....நான் கேக்குறது புரியுதா இல்லையா ???? சரி இப்போ சொல்லு நீ இங்க்லீஷ் ல எத்தனை மார்க்கு
ஜுனியர் : ஒன் எய்ட்டி டூ சார் .........
நான் : தமிழ்ல
ஜுனியர் : நூத்தி எண்பத்தி ரெண்டு சார்
நான் : அப்ப நீ தமிழ்ல யும் ,இங்க்லீஷ் ல யும் ஒரே மார்க்கா ?
ஜுனியர் : இல்ல சார்
நான் : நீதானடா சொன்ன இங்க்லீஷ் ல ஒன் எய்ட்டி டூ, தமிழ்ல நூத்தி எண்பத்தி ரெண்டு ன்னு ? நான் கேக்கறது புரியலையா ??இப்ப சொல்லு நீ தமிழ்ல எத்தனை மார்க்கு ??????
ஜுனியர் : சார் .................என்ன உட்டுடுங்க ................
----------------------------------------------------------------------------------------------
நான் : ( கையில் ஒரு குச்சியுடன்) உனக்கு பரத நாட்டியம் தெரியுமா ??
மாணவி : தெரியாது சார் ....
நான் : குச்சிபுடி ........
மாணவி : அதுவும் தெரியாது சார் ........
நான் : ஹலோ என் கைல இருக்குற குச்சை புடிக்க தெரியாது உனக்கு
மோகனா : ஹி ஹி ஹி (ரொம்ப அழகாவே சிரித்தாள் ... ஹி ஹி ஹி )
---------------------------------------------------------------------------------------------------
காலேஜ் டே பங்க்ஷனில் ............ ரிசப்ஷன் டேபிளில் அமர்ந்திருக்கும் ஜுனியர் பெண்ணிடம் (எங்க காலேஜ் ல ஜூனியர் பொண்ணுகளிடம் தான் நம்ம பாச்சா பலிக்கும் ) MAY I HELP YOU BOARD ஐ காட்டி ....
நான் : இது என்ன மேடம்
ஜுனியர் : MAY I HELP YOU
நான் : அப்படின்னா ?
ஜுனியர் : என் உதவி உங்களுக்கு தேவையான்னு அர்த்தம் .......
நான் : அப்படியா , கைல காசில்ல ஒரு நூறு ரூபாய் கிடைக்குமா ???
ஜுனியர் :......................................
(எப்படி கேட்டாலும் நம்மள நம்பி ஒரு நயா பைசா கொடுக்கல )
----------------------------------------------------------------------------------------------------
இந்த நினைவுகள் தொடரும் ...................
அன்பன்
ARR.
9 comments:
தெருவிலேயே இதுபோல உன்னுடைய அட்டகாசங்கள் அதிகம் தானே கோப்லி. ;-)))
//கண்டக்டர் : திருச்சி மட்டும் ஏறு .. திருச்சி மட்டும் ஏறு ...
நான் : சார் நான் ராஜகோபால் ஏறலாமா ????//
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை ?
-------------------
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் சமமாக மதிப்பெண் பெற்ற ஆள் மாட்டி இருந்தால் (ஆளிடம் நீங்கள் மாட்டி இருந்தால் ) ?
தெருவிலேயே இதுபோல உன்னுடைய அட்டகாசங்கள் அதிகம் தானே கோப்லி. ;-)))
நாம ஸ்கூல் போயிட்டு வரும் போது ஐஸ் வித்துகிட்டே வருவேனே ............ அற்புதமான காலங்கள்
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் சமமாக மதிப்பெண் பெற்ற ஆள் மாட்டி இருந்தால் (ஆளிடம் நீங்கள் மாட்டி இருந்தால் ) ?
மாட்டியிருந்தால் .......... கொஞ்சம் கஷ்டம் தான்,
அந்த ஸ்டேஜ் காமெடி..இன்னும் மறக்கல..எல்லா ஸ்டாஃப்பும் விழுந்து விழுந்து சிரிச்சது இன்னும் பசுமையாக நினைவுகளில்..
இத மறந்துட்டியே .........
கண்டக்டர்:டிக்கட்..டிக்கட்..டிக்கட்..
நான்:சார் நீங்கதான் அவ்வளவு டிக்கட் வச்சிருக்கீங்கல்ல..அப்புறம் எதுக்கு சார் என்னுட்ட கேக்குறீங்க..?
********
கண்டக்டர்:டிக்கட்லாம் பத்திரமா வச்சிக்கோங்க..
நான்:சார் இறங்குனோன்ன தூக்கி போட்ருலாமா?
அந்த ஸ்டேஜ் காமெடி..இன்னும் மறக்கல....
ஆமாம் ஜான்சன் என் ரவுசு தாங்காம V.G நம்ம HOD ஸ்டேஜூல எறக்கூடாதுன்னு சொல்லியும் நம்ம பசங்க we want Rajagopal ன்னு கத்தி மேல ஏற வச்சாங்க , அதுக்கு அப்புறம் அவரும் , நம்ம ப்ரின்சியும் சேந்து கண்ணுல தனி வர சிரிச்சது தனிக்கதை ............
Still i'm Laughing :))
thanks for the appreciation Mr.Irshath.
Post a Comment