-----------------------------------------------------------------------------------------
நண்பன் : ஏன்டா இப்படி லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கே , சரியான ஓட்ட வாய்டா உனக்கு.......
நான் : ஓட்டையா இருந்தாதாண்டா அது வாய், இல்லன்னா அது கன்னம் இல்ல ????
--------------------------------------------------------------------------------------
கல்யாண பந்தியில்
பரிமாறுபவர் : சார் சாம்பாரா ?????
நான் : என்ன சார் கொண்டு வந்தது நீங்க என்ன கேக்குறிங்க சாம்பாரான்னு ..........
----------------------------------------------------------------------------------------------------------
திருச்சி NSB ரோட்டில் , துணி வாங்கி கொண்டு வெளியே வரும்போது ,
ஒரு தையல் கடை பையன் : சார் தைக்கிறின்களா???????
நான் : எனக்கு தையல் தெரியாதே தம்பி ..........
-----------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------
சத்திரம் பஸ் நிறுத்தத்தில் .........
நான் : ஹலோ மிஸ் உங்க பேர் என்ன ???????
அந்த அழகான பெண் : ஹும் சீ போ.........
நான் : ஓ சீன பெண்ணா ?????
( இது ஜூ.வி இல் டயலாக் பகுதியில் வந்தது )
-----------------------------------------------------------------------------------------------என் பிறந்த நாளின் போது...........
நான் : மச்சி இன்னைக்கு என் பர்த்டே சுவீட் எடுத்துக்கோ .....
நண்பன் : தேங்க்ஸ் .... விஷ் யு தி சேம்டா மச்சி
நான் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
நான்: மச்சி உன் உடம்பு அரிச்சா என்ன செய்வ
நண்பன்: இது என்னடா கேள்வி , சொறிஞ்சிக்குவேன்
நான்: சரி , அந்த அறிப்பே வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா ?
நண்பன் : ஒழுங்கா டெய்லி குளிக்கணும்
நான்: இல்ல மச்சி உடம்புல ஒரு நம நமப்பு வருமே ... அது வந்த அப்புறம் தானே சொரிஞ்சிப்பே , அந்த நம நமப்பு வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா ?
நண்பன் : தெரியலடா மச்சி நீயே சொல்லு
நான்: அரிக்கிரதுக்கு முன்னாடியே சொறிய ஆரம்பிச்சிடணும் .......
---------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன்
ARR.
பட உதவி :imageenvision.com /
4 comments:
நீ நேர்ல நின்னு பேசறாப்ல இருக்கு. அறிக்கரதுக்கு முன்னாடிய சொரிய ஆரம்பிக்கணும்.... தனியா குபுக்குன்னு சிரிச்சுட்டேன். ;-))
நன்றி வெங்கட் .., நம்ம அடிக்காத கூத்தா. நீ எல்லாருக்கும் மேத்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது ரகளை பண்ணுவோமே உன் வீட்டில் ...........
//அறிக்கரதுக்கு முன்னாடிய சொரிய ஆரம்பிக்கணும்...//
அட இது தெரியாம நானு, நாலஞ்சு தடவை ஏமாந்திட்டேனே.. !!
இனிமே எமாறாதிங்க ............
அறிக்கரதுக்கு முன்னாடியே சொரிய ஆரம்பிச்சுடுங்க
Post a Comment