Friday, 22 April 2011

நியாய வாதிகளா நாம் ??



                                இன்று ஊழலை பற்றியும் அரசியல்வாதிகளின் அடாவடிகளை பற்றியும் , வாய் கிழிய நரம்பு புடைக்க பேசி, பேசி காலத்தை கழிக்கும் நான் /நாம் ஊழலற்ற அரசாங்கத்தை வேண்டும், கேக்கும் , தகுதி உள்ளவர்களா ..............இது யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது பொத்தாம் பொதுவில்  குற்றம் சாட்டும் நோக்கில் எழுத பட்டதோ அல்லது புனைய பட்டதோ இல்லை,  என்மீதான ஒரு சுய பரிசோதனையின் தொடக்கத்தின் தொடர்வும், அதன் நிறைவுமே காரணி .....

                                 இதை பற்றி சிந்திக்க தொடங்கினால் பின் அதை பற்றி எழுத தொடங்கினால் மிக நீளமான தொடராகவே அது இருக்கும் , அதில் எனக்கு உடன்பாடில்லாததால் என் தமிழுக்கு உறுதியில்லாததால் சிறு குறிப்பு போலவே தொடங்கி முடிக்கிறேன் . 

                                 இன்று நம்மிடையே பெரும் விவாத பொருளாக இருக்கும் , நம்மை ஆளப்போகிறவர்களின் பற்றியதான கருத்து, அரசியல்வாதிகள் எவருமே நல்லவர்கள் இல்லை அவர்கள் நல்லது செய்யபோவதும் இல்லை. இதை கேட்கும் முன் நாம்/நான் நல்லவர்களா , இதுவரை சட்டத்தை மீறி 
எதுவுமே செய்ததில்லையா?, லஞ்சம் கொடுத்ததில்லையா? , லஞ்சம் பெற்றதில்லையா? ,நம்மில் யாராவது லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளோமா?,நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதில்லையா?, சிக்னலில் ஆரஞ்சு விளக்கு எரிந்த பின்னும் வண்டியை நிறுத்தாமல் போனதில்லையா ?, வழி மறித்த போக்குவரத்து காவலருக்கு தண்டம் கட்டியதே இல்லையா ? வீடு பதிவு செய்யும் போது சரியான தொகை கட்டியிருக்கிறோமா? இது போன்ற பல கேள்விகளுக்கு நாம் அனைவருமே சில கேள்விகளுக்காவது ஆம் என்று சொல்லுவதை தவிர்க்க முடியாது .

                                   இப்படி யார் என்ன செய்தாலும் பாதிக்கும் மத்திய வர்க்கமான நாமே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறுகளை துணிந்து செய்யும் போது , மத்தவர்களை சொல்லி பயன் என்ன ??. தெருவில் குப்பை தொட்டியை தவிர அதை சுற்றியே எல்லா குப்பைகளும் கிடக்கிறது , குப்பை அள்ளுபவர் தொட்டியுள் உள்ள குப்பையை மட்டும் அள்ளி செல்கிறார் , அவரின் செயலில் குறை சொல்ல முடியாது , குப்பையை தொட்டியில் சரியாக போடுவதற்கே நேரம் அல்லது கவனம் இன்னும் பொறுப்பு இல்லாத நான்/ நாம் எப்படி மற்றவர்களின் செயலில் நேர்மையை எதிர்பார்க்க முடியும் .

                                   அடுத்தது பிளாஸ்டிக் உபயோகம் , எதிலும் எல்லாவற்றிலும் இந்த பிளாஸ்டிக் இன் ஆளுமைதான், இதை நம்மில் எத்தனை பேர் தவிர்த்திருக்கிறோம் , இன்று மதியம் சாப்பாடு பார்சல் வங்கி சாப்பிட்ட நான் உபயோக படுத்திய பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 21 , ஒருநாளைக்கு என் ஒருவனுக்கே இத்தனை என்றால் , எத்தனை மனிதர்கள், எத்தனை சாப்பாடு, எத்தனை உணவகங்கள், உண்மையாய் எண்ணி பார்த்தோமானால் நாளையிலிருந்து நம்மிலிருந்து பிளாஸ்டிக் விலக தொடங்கும் , பிளாஸ்டிக் பை அழிய அல்லது மக்கி போக 100 - 1000  ஆண்டுகள் ஆகுமாம். மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பை மழை நீரை பூமி தாய் உள்ளே இழுக்க அனுமதிப்பதில்லை , அதனால் நிலத்தடி நீர் பாதிக்கபடுகின்றது, இன்று நாம் பல வழிகளில் பிளாஸ்டிக்கை சமீபமாக கொண்டுவிட்டோம், முன்பெல்லாம் இட்லி வாங்க சென்றால் கூட கையில் ஒரு தம்ளரோ அலது தூக்கோ கொண்டுசெல்வோம், வாழை இலையோ. தாமரை  இலையோ வைத்து கட்டி அதோடு சட்னியும் வைத்து கொண்டு செல்லும் பாத்திரத்தில் சாம்பார் தருவார்கள் ,ஆனால் இன்று அப்படியே தலைகீழ் இட்லி வைத்து கட்டுவதிலிருந்து சட்னி சாம்பார் வரை எல்லாமே பிளாஸ்டிக் பைகள்தான், இன்னும் இவை எல்லாம் இல்லாவிட்டால் அந்த மாதிரியான கடைகளின் தரம் பற்றிய சந்தேகம் வந்துவிடும் நமக்கு. 




                                   அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


   
                                                             இதை எல்லாவற்றையும் விட கொடுமையான சேதி என்னவென்றால் ஒரு பிளாஸ்டிக் பையை நான் /நாம் பயன்படுத்தும் நேரம் இருபது நிமிடங்கள் மட்டுமே.

                                                                 அடுத்து ஆலய தரிசனம், இப்போதெல்லாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் சிறப்பு தரிசனம் , பணம் இருந்தால் எல்லாமே நடக்கும் , நம் தேவைகளை தீர்க்கும் ஆண்டவனை பார்க்கவே லஞ்சம் கொடுக்கிறோம் , அரசாங்கமும் , அறநிலையத்துறையும் நம்மை தவறாக வழி நடத்தினாலும் நாம் / நான் தடம் மாறலாமா ? நாம் குறுக்கு வழியில் சென்று ஆண்டவனை தரிசிக்கும் நேரம் பொது வழியில்  வந்து காத்து கிடக்கும் இல்லாதவனின் நேரம் அல்லவா ? அவனுக்காக ஒதுக்க பட்ட நேரத்தை நான்/ நாம் உபயோக படுத்தலாமா? நமக்கு/எனக்கு வசதிஎன்றால் யார் பாதிக்க படுவதை பற்றியும் கவலை இல்லை நமக்கு, இந்த மாதிரியான சுய நலமே நம்மையும் நம் நாட்டையும் இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.


                            அதன் தொடர்ச்சியே ஊழல்வாதிகள ஓட்டுக்கு பணம் கொடுப்பதன் மூலம் நம்மையும் ஊழலை செய்ய தூண்டுகிறார்கள். என்ன செய்தாலும் நம்மை கேள்வி கேப்பான் இல்லை என்ற தைரியம் அவர்களுக்கு , நியாமான எந்த செயலுக்கும் நம்மிடையே ஆதரவு இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.நம்மில் யாருக்குமே அநீதியை எதிர்த்து போராட தைரியம் / நேரம் /அக்கறை இல்லை , அதே அநீதி நமக்கு நடக்கும் போது நமக்காக போராட யாரும் இருக்க போவதில்லை. ஏன் இந்த நிலை நமக்கு ஐயாயிரம் ஆண்டு வரலாறுக்கு சொந்த மாணவர்கள் நாம் , இன்று முன்னேறிய நாடுகளெல்லாம் காட்டு மனிதர்களாக சுற்றி திரிந்த போது, அரசியல் அமைப்பு, அரசியல் வரையறை , இலக்கியம் , வாணிபம் , கலை , கட்டிடம் , ஆன்மிகம்,வானவியல் , மருத்துவம் ,சட்டம் என பல துறைகளில் கொடி கட்டி வாழ்தவர்தான், ஆனால் இன்று நம்மிடயே தனி மனித ஒழுக்கமும் , நியாய அநியாயங்களை பற்றிய விழிப்புணர்வும், ஒற்றுமையும் இல்லாமல் போனது தான் .

                                                           ஒரு நடை பாதை வியாபாரி தொடங்கி , பெரிய வணிகர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் எவ்வளவு , இன்று தெருவில் நடை பாதைகளே இல்லை எங்கும் ஆக்கிரமிப்பு , அதையும் தாண்டி அங்கு வாங்கும் நான்/நாம் ரோட்டிலேயே வண்டியை நிறுத்தி மற்றவர்களுக்கு பாதிப்பு அளிக்கும் வகையில் செயல்படுகிறோம். என்று மாறும் இந்த நிலை,இது போல் எத்தனையோ வகைகளில் எத்தனையோ அத்து மீறல்கள் , சொன்னால் பத்தி பத்தாது .



                     இதை சாதகமாக கொண்டே அரசியல் வாதிகள் நம்மை , நம் வளத்தை கொள்ளை கொ(ல்) ள்கிறார்கள். எதிர்த்து கேட்க யாருக்கும் தைரியமும்  தகுதியும் இல்லை என்ற நினைப்பு அவர்களுக்கு,  எல்லோரும் மாற்றத்திற்கு காத்திருக்கிறோம் , ஆனால் நம்மில் மாறுவதர்க்குதான் யாரும் தயாரில்லை. ஓட்டு போடுவதுடன் நம் ஜனநாயக கடமை முடிந்துவிடுவதில்லை நம்மை தன்னொழுக்க மனிதனாய் ஒவ்வொரு நிலையிலும் நிலை நிறுத்திகொள்வதிலும் தான் இருக்கிறது நம் ஜனநாயகம் .

                       நிறைவாய் , நம்மில் எதை மாற்றி கொள்கிறோமோ இல்லையோ குறைந்த பட்சம் பிளாஸ்டிக்கிற்காவது இன்று முதல் தடை சொல்வோம் .செய்வோம்.

அன்பன்
ARR 

பட உதவி :thehindu.com / viswanathan.in / shop.easystorehosting.com


11 comments:

Unknown said...

அவசர உலகத்தின் நியாயங்களை அலசி இருக்கிறாய்....பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு தடை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்..

A.R.ராஜகோபாலன் said...

உண்மை தான் ஜான்சன்
நாம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே பாதி கேடு குறையும்

Anonymous said...

i am very much impressed with your thinking and style of your quotes.

Srividya said...

superb Raj.............

A.R.ராஜகோபாலன் said...

@ Srividya
Thanks for the appreciation Sri

A.R.ராஜகோபாலன் said...

@amiksha
Thank you Amiksha

Madhavan Srinivasagopalan said...

சிகரெட், மது, பிளாஸ்டிக் பை
இவையனைத்தையும் ஒழிக்க ஒரே வழி..
உற்பத்தி / விற்பனை இரண்டினையும் தடை செய்ய வேண்டும்..
மீறினால் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்..

ஆனால்.. நாம் இந்தியாவில் அல்லவோ இருக்கிறோம்..

A.R.ராஜகோபாலன் said...

மிகச்சரியான வலிமையான வார்த்தை மாதவன்
தங்களின் கருத்துக்கு நன்றி !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நியாயமான திசையில் எல்லோரையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தும் சிந்தனை ராஜகோபாலன்.

மாற்றத்தை நம்மிடம் இருந்து துவங்கினாலே மாற்றத்தை அடைந்துவிடமுடியும் என்பதுதான் உண்மை.

A.R.ராஜகோபாலன் said...

தங்களின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி திரு .சுந்தர்ஜி

உண்மைதான் மாற்றம் எங்கோ நடப்பதல்ல , நமக்குள்ளே தொடங்குவதுதான் ............

rajendran said...

ஊங்கள் கருத்து தவறான‌து என்று நான் நினைக்கின்றேன். இட்லி வாங்க கடைக்கு போகும்பொளுது சட்னி சாம்பார் வாங்க பாத்திரம் கொன்டுபொங்கள். மாறுதல் உங்களிடமிருந்து தொடங்கட்டும்.