
சந்தேகம் சங்கடங்களின் சங்கமம்
நம்பிக்கை நகர்தலின் நற்குணம்.
ஆனாலும்….
சந்தேகத்தின் மீதான நம்பிக்கையும்
நம்பிக்கையின் மீதான சந்தேகமுமே
நம்மை வழி நடத்துகிறது
சந்தேகம் சலனத்தின் குறியீடு
நம்பிக்கை அறியாமையின் அளவீடு
சந்தேகத்தின் முழுமையில்
நரகம் உருப்பெறுகிறது
நம்பிக்கையின் முழுமையில்
சொர்க்கம் விடைப்பெறுகிறது
குருடனுக்கு காட்சிகளில் சந்தேகம்
பார்வையில் நம்பிக்கை
பரிவறியாதவர்க்கு நட்பில் சந்தேகம்
காதலில் நம்பிக்கை
இரண்டுமே எரிகின்ற கொள்ளி
இதில் எந்த கொள்ளி
நல்ல கொள்ளி.
நம்பிக்கை
யோசிக்க விடுவதில்லை
சந்தேகம்
வாழவே விடுவதில்லை
ஆகவே
அனைத்தையும் அன்பால்
உணர்வோம்
உணர்த்துவோம்
அன்பே
சந்தேகத்திற்கும்
நம்பிக்கைக்கும்
அப்பாற்பட்டது – செயலில்
அளப்பறியது.
அன்பன்
ARR
16 comments:
அருமை....குறிப்பாக வழிநடத்து பாரா....இரண்டுமே அளவோடு இருந்தாள் வளமாக வாழலாம்!
//அனைத்தையும் அன்பால்
உணர்வோம்
உணர்த்துவோம்//
அன்பு கொள்வோம்.... நல்ல கவிதை நண்பரே.... வாழ்த்துகள்...
நம்பிக்கை
சந்தேகம்...
இது போன்ற எதிர் சொற்களை வைத்து கவிதை கட்டுவதற்கு என்ன பெயர் தோழரே?
முன்பு படித்த நினைவு..
மறந்து விட்டது...
BETWEEN THE LINES WERE WONDERFUL
//சந்தேகத்தின் முழுமையில்
நரகம் உருப்பெறுகிறது
//
100 % true
இன்றய பதிவில்
உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)
\\நம்பிக்கை யோசிக்கவிடுவதில்லை,
சந்தேகம் வாழவே விடுவதில்லை\\
அறியாமையில் அகப்பட்டுத்தானே அநேக வாழ்க்கை வீணாகின்றது. அன்பின் பிடிக்குள் அகப்பட்டுவிட்டால் வாழ்க்கை நம் வசமே... அழகாக உணர்த்திய வரிகள். பாராட்டுகள்.
அன்பு கொள்வோம் ! வாழ்த்துக்கள் !
//அன்பே
சந்தேகத்திற்கும்
நம்பிக்கைக்கும்
அப்பாற்பட்டது – செயலில்
அளப்பறியது.// முத்தாய்ப்பான முடிவு. வழ்த்துக்கள்.
சந்தேகமும் நம்பிக்கையும்
அழகான சொல்லாலும்
ஆழமான அர்த்தங்காலும்
கோர்க்கப்பட்ட அற்புத கவிதை தோழரே
//சந்தேகத்தின் மீதான நம்பிக்கையும்
நம்பிக்கையின் மீதான சந்தேகமுமே
நம்மை வழி நடத்துகிறது//
என்னைக் கவர்ந்த வரிகள்
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
Congratulations for getting another Award - Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
நம்பிக்கை யோசிக்கவிடுவதில்லை,
சந்தேகம் வாழவே விடுவதில்லை\\
அருமையான உண்மையான வரிகள்.
எங்கண்ணா ஆளையே காணோம் நலமா..
வணக்கம
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
Post a Comment