அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் , இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .
அன்பன்
ARR
35 comments:
தங்கள் கருத்துக்கள் நியாயமானவையே! என்றுதான் இந்த அரசியல் வாதிகள் திருந்துவார்களோ!
இந்த பிடிவாதத்தை தமிழக அரசு, ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு பயன் படுத்தினால் நல்லது.
செமயான சாடல்....!!!
எப்படியோ இந்தப் பிரச்சனை முடிந்தால் சரி
என்ற நிலைக்கு எல்லோரும் வந்து விட்டோம்
எல்லா பிரச்சனைிகளையும் நீதி மன்றங்கள்தான்
தீர்க்கவேண்டும் என்பதுவும்
எல்லா போராட்டங்களையும் அடக்க
இராணுவம் தான் வர வேண்டும் என்பதுவும்
ஜன நாயகம் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு
அடையாளம்.நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல தீர்ப்பு.இனியாவது அரசு சரியான வழியில் செயல்பட வேண்டும்.நல்ல பகிர்வு.
மாணவர்கள் தங்களது பாடங்களை கவனமாக தெளிவாக வாழ்க்கைக்குப் பயன் படும் வகையில் படித்தேற மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Your statement is correct
இன்னும் போகப் போக என்னெல்லாம் நடக்க போகுதோ ....
இந்தியா அரசின் சின்னமான அசோக சக்கர சிங்கங்கள் மற்றும் இந்திய தேசியக் கொடியினை பயன் படுத்துவதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது..
விதிமுறைகள் சரியாகத் தெரியாமல், முடிந்தவரை அந்தப் படங்களை பிரசுரம் செய்யாமல் இருப்பது நலம்.
மனதில் தோணியது.. எழுதினேன்.
All is well that ends well.
இந்தத் தீர்ப்பையும் ’தோல்வி’ என்று எண்ணி, காயப்பட்டு விட்டதாய் உணராமல், பொதுநோக்குடன் அணுகினால், இழந்த நற்பெயரை ஓரளவு மீட்க முடியும். செய்வார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை.
நல்லது..
இதை ஒரு தோல்வியாக கருதாமல்
அரசு இனி ஆகவேண்டியவற்றை
பார்க்கவேண்டும்..
இனியாவது திருந்தினால் சரி.... பார்க்கலாம்....
நெளிய வைக்கும் பிடிவாதம். சங்கடப் பட வைக்கும் ஈகோ...ம்...ஹூம்...
மாணவர்கள் வாழ்கையில் விளையாடுவதே இவர்கள் வழக்கம்
இன்று என் வலையில்
உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?
உங்கள் பதிவின் கடைசி மூன்று வரிகள்தான் எனது பின்னூட்டம்!
நல்ல தீர்ப்பு. இதற்கு பின்பாவது சரியாக நடப்பார்களா?
நாட்டாமை தீர்ப்ப சரியா சொன்னீங்க... வாழ்த்துக்கள்
சகோ!
சாட்டை அடிகளை விட
தங்கள் சொல்லடி மிகவும் வலிமை வாய்த்தது
நன்றி!நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஜெயலலிதா திருந்தி விட்டார் என்று நாம் எதிர்பார்த்ததெல்லாம் மிகப்பெரிய முட்டாள்தனம்.தனி ஒரு பெண்ணின் கர்வத்தால், அகங்காரத்தால், ஏற்பட்ட இழப்புக்கு அவர்களை தேர்ந்தெடுத்த நாம் தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். கோடி கோடியாய் கொள்ளை அடித்த்திருந்தால் கூட நேரடி பாதிப்பு தெரிந்திருக்காது. எத்தனை கோடி பிள்ளைகளின் எதிர்காலம் இது.
இன்னும் எவ்வளவு அனுபவிக்கப் போகிறோமோ தெரியவில்லை.
வணக்கம் பாஸ், ஒரு சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.
பல ஏழை மாணவர்களின் வாழ்விற்கு மீண்டும் ஒளியூட்டும் வண்ணம் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது.
வரவேற்று நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய விடயம்.
பாவம், பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது! எதைச் சொல்லிக்கொடுப்பது என்ற பிரச்சினையில் ஆசிரியர்கள் தவிக்கிறார்கள்!
நல்ல பதிவு!
ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
எல்லாமே கதிரையில் அமர மட்டும் தான் ..
பின் தங்கள் ஆட்டத்தைத்தான் ஆட தொடங்குவார்கள்..
நல்ல பகிர்வு,,
வாழ்த்துக்கள்..
தங்களுக்குள்ள நேர நெருக்கடியிலும்
என் பதிவைப் பார்வையிட்டமைக்கும்
வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும்
என் மனமார்ந்த நன்றி
ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் //
காலமும் கடலலையும் திரும்பவராதே!!
இந்த பிடிவாதத்தை தமிழக அரசு, ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு பயன் படுத்தினால் நல்லது.
இதில் என்ன ஆச்சரியம்
அம்மாவின் பிடிவாதம் உலகறிந்தது தானே,
வவ்வாலுக்கு வாக்கப்பட்டா தலைகீழா தொங்கித்தானே ஆகணும் பாஸ்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா...!
நல்ல பதிவு ங்கோ தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை..
கடிதங்கள் தொடர்பான என்னுடைய 'மறக்க முடியாத நினைவுகள்' வலைத்தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன்.
உங்கள் வலைத்தளத்தை இன்றுதான் பார்க்க நேர்ந்தது. நல்ல பதிவுகள் இருக்கிறது. இனிதான் படிக்க வேண்டும். இன்று முதல் நானும் உங்கள் வாசகன்.
Post a Comment