Tuesday 25 October 2011

சென்னை மழை





2 நாள் மழைக்கே சென்னை தொன்னை போல் தண்ணீரை தேக்கி 
நிற்கிறது.

இண்டு இடுக்கு சந்து பொந்து

பிரதான சாலை குறுக்கு சாலை

புது ரோடு பழைய ரோடு

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது

நீர், நம் நாட்டு ஊழலைப் போலே


இந்த லட்சணத்தில்

வார்டு உறுப்பினராம்

சட்டமன்ற உறுப்பினராம்

மாநகர மேயராம்

நாடாளுமன்ற உறுப்பினராம்

ஆனால் யாருமே இல்லை நல்லது செய்ய


நல்லரசு அமைக்க முடியாத இவர்களா

வல்லரசு ஆக்கப் போகிறார்கள்

அல்லாடும் மக்களை

பந்தாடும் பாவிகளே

கொள்கை எல்லாம் போதும்டா

கொள்ளை அடிச்சிட்டு போங்கடா...........







அனைவருக்கும் இனிய தீபாவளி நல் 


வாழ்த்துக்கள் 

அன்பன்

ARR

29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் காட்டில் நல்ல மழை போலத் தெரிகிறது.

ஒருவேளை வெள்ள நிவாரணம் தருவார்களோ என்னவோ!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.vgk

Saravanan MASS said...

ஆட்சியாளர்கள் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. தனக்கென்ன வந்துச்சுன்னு பொறுப்பற்ற மக்கள் பலர் குப்பைகளை கண்டகண்ட இடங்களில் வீசுவதை தவிர்த்தாலே இப்படி தண்ணீர் தேங்குவது குறையும்

இரத்த கரை படிந்த நாப்கின், குண்டுகுண்டா கருப்பு பிளாஸ்டிக் பைகள், எச்சில் இலைகள் இவை அனைத்தும் இன்று சேப்பாக்கம் கிருஷ்ணப்பா தெருவில் முழங்கால் அளவு தண்ணீரில் மிதந்து சென்றன.

குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை எடுக்காமல் இருந்தால் அது ஆட்சியாளர்கள் தவறு

குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் பக்கத்து வீட்டுக்காரன் வாசல் தான் குப்பை தொட்டின்னு நினச்சு ஒவ்வொருவரும் வீசிட்டுபோனா

இந்த கொடுமையை தவிர்க்க முடியாது என்பது என் கருத்து!

RVS said...

தீபாவளி நல்வாழ்த்துகள் கோப்லி! :-)

ஸ்ரீராம். said...

தீபாவளி நல் வாழ்த்துகள் A R ரா.கோ...

கடைசி வரிகள் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தன. பயங்கர வெறுப்பில் இருக்கீங்க போல!

settaikkaran said...

சென்னைவாசிகளின் இப்போதைய ஆதங்கத்தைப் பொரிந்து தள்ளியிருக்கிறீர்கள்.

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!முன்பெல்லாம் ஐப்பசி அடை மழை தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற் போல கொட்டும்.தண்ணீர் வழிந்தோடிவிடும்.இப்போது ஒரு நாள் மழைக்கே எந்த ஊரும் தாங்கமுடியவில்லை.காரணம்.நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு.நீங்கள் கொட்டி விட்டீர்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@ Saravanan MASS
மிக நல்ல கருத்து தான் மறுப்பதற்கு இல்லை - ஆயினும்
மக்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று
திருட்டு, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்களையும்
அனுமதிக்குமா இந்த அரசு

இது மாதிரியான செயல்களையும் அது போல் கருதி
முறைப்படுத்தி , நெறிப் படுத்துவதும்
அரசாங்கத்தின் கடமை என்றே கருதுகிறேன் .


இதே மக்கள் தானே வெளிநாட்டில்
ஒழுக்கமாய் வாழ்கின்றனர்

SURYAJEEVA said...

ஒவ்வொரு அஞ்சு வருஷமும் யோசிக்காமல் ஓட்ட போட்டுட்டு, அஞ்சு வருஷத்துக்கு யோசிச்சிகிட்டு இருக்கிற குறைய போக்கினாலே போதுமே

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே....

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்

மிக்க நன்றி சார்
கருத்திற்க்கும்
வாழ்த்திற்க்கும்

A.R.ராஜகோபாலன் said...

@ RVS
நன்றி வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@ ஸ்ரீராம்.

மிக்க நன்றி சார்
கருத்திற்க்கும்
வாழ்த்திற்க்கும்

A.R.ராஜகோபாலன் said...

@சேட்டைக்காரன்

மிக்க நன்றி சார்
கருத்திற்க்கும்
வாழ்த்திற்க்கும்

A.R.ராஜகோபாலன் said...

@ தி.தமிழ் இளங்கோ
மிக்க நன்றி சார்
கருத்திற்க்கும்
வாழ்த்திற்க்கும்

A.R.ராஜகோபாலன் said...

@ suryajeeva

மிக்க நன்றி சார்
கருத்திற்க்கும்
வாழ்த்திற்க்கும்

A.R.ராஜகோபாலன் said...
This comment has been removed by the author.
A.R.ராஜகோபாலன் said...

@Saravanan MASS

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
உங்களின் வாழ்த்திற்கும் கனிவான கவனத்திற்கும் பணிவான நன்றி நண்பரே

உஙளுக்கும் உங்களின் குடும்பத்திற்கும்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

வலைக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்ததற்கும், தீபாவளிக்கும் நல் வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@"G.M Balasubramaniam"
உங்களின் வாழ்த்திற்கும்
வருகைக்கும் மிக்க நன்றி ஐயா

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க பதிவை பார்க்கிறோம்.எப்படி இருக்கீங்க?

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@RAMVI
நன்றி நண்பரே
நலம் நாடுவதும் நலமே
நன்றி உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்

இராஜராஜேஸ்வரி said...

நல்லரசு அமைக்க முடியாத இவர்களா

வல்லரசு ஆக்கப் போகிறார்கள்

நல்ல கருத்து !!

சென்னை பித்தன் said...

வாங்க ஏ.ஆர்.ஆர்.
நல்ல பகிர்வு.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அந்த மழையையே உலர வைக்கும் அளவுக்கு சூடு உங்கள் வரிகளில்.

இராஜராஜேஸ்வரி said...

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது

நீர், நம் நாட்டு ஊழலைப் போலே

நிறைந்த கருத்து!

மனோ சாமிநாதன் said...

//இண்டு இடுக்கு சந்து பொந்து

பிரதான சாலை குறுக்கு சாலை

புது ரோடு பழைய ரோடு

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது

நீர், நம் நாட்டு ஊழலைப் போலே//
அட்டகாசமான வரிகள்!!

ரசிகன் said...

எல்லா தேர்தல்களிலுமே தரமான சாலை, சுத்தமான குடிநீர் என ஒரே வாக்குறுதியே அளிக்கப்படுகிறது.

வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கின்றன அடுத்த தேர்தலுக்காக.

உங்கள் வரிகளில் இருக்கும் கோபம் நியாயமானது.

Unknown said...

நலமா நண்பரே!
நீண்ட நாள் ஆயிற்றே!
தீபாவளி முதல் பத்து நாட்கள்
மருத்துவ மனையில் அனுமதிக்கப்
பட்டு வீடு திரும்பினேன்
இன்றுதான் தங்கள் வலையத்
தட்டினேன்
வெளுத்துக்கட்டிய மழையை விட அரசை வெளுத்துக்கட்டியுள்ளீர்
தங்கள் வருகைக் கண்டு மகிழ்சி
அடைகிறேன்

புலவர் சா இராமாநுசம்