Thursday, 7 July 2011

வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம்

Eclipse

என் உருவை பார்க்கும் 
போதெல்லாம் 
நீயே தெரிந்தாய் 
என்  எழுத்தை எழுதும்
போதெல்லாம்
உன் எழுத்தின் பிம்பங்கள் 

விரல்களுக்குள்ளே 
விரோதம் வந்த 
வினோதம் நம்
பிரிவு 
தண்ணீர் போல
பிரிந்தாலும் 
தன்மை மாறாதது நம்
உறவு 

ஒன்றோடொன்று 
சம்பந்தம் இல்லாமல்
தனித் தனி 
தீவுகளாக இருந்தாலும்
நாம் வாழ்ந்த 
பிரபஞ்சம் ஒன்றுதான் 

உருவானதும் 
கருவானதும் 
ஒரே கருவறைதான் 
வாழ்வதும் 
வகுப்பதும் 
ஒரே வழிமுறைதான்


சின்ன மிதிவண்டிகளைப்
பார்க்கும் போதெல்லாம் - உன்
செல்ல பிறந்தநாள் 
பரிசு இன்றும்
ஞாபகம் வராமல் இல்லை 

ஒருமுறை நான் 
வெளியூர் செல்கையிலே
வழியனுப்ப வந்த நீ
மறைந்து மறைந்து 
கண்ணீர் மறைத்தது 
இன்னும் 
மறையாதிருக்கிறது

துரோகங்களை  
தொட்டுவிடவில்லை 
நாம்
உறவின் உரிமைகளை 
விட்டுவிடவில்லை 
நாம்

ரயில் சினேகங்களையும்
மதிக்கும் நாம் - நம்
உயிர் சினேகத்தை 
மறுத்தது துளியும் 
நியாயமில்லை

நம் 
தவறுகளை விட 
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா 
நம் சகோதரத்துவம்.

காலத்தின்
களத்தில்
சூழ்நிலையால் 
சுருங்கிப்போனது 
நம் உணர்வு  
காலத்தின்
மாற்றத்தில் 
சந்தோஷத்தில் 
மலரட்டும்
நம் உறவு 

அன்புடன்
சகோதரன் 
ARR 


61 comments:

சென்னை பித்தன் said...

first?

நிரூபன் said...

வணக்கம் சகோ,

காலவோட்ட மாற்றங்களினால் எம் அருகாமையினை விட்டு விலகி- தொலைவிற்குப் போன சகோதரத்துவப் பாசத்தினை மீட்டிப் பார்க்க வைக்கிறது உங்கள் கவிதை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
ஒன்றோடொன்று
சம்பந்தம் இல்லாமல்
தனித் தனி
தீவுகளாக இருந்தாலும்
நாம் வாழ்ந்த
பிரபஞ்சம் ஒன்றுதான் /////

அழகிய வரிகள்...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நம்
தவறுகளை விட
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா
நம் சகோதரத்துவம்.

உண்மையான வரிகள்..
உணர்ந்தால் இல்லை வலிகள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வரிகள் அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்..

ஷர்புதீன் said...

மரமண்டைக்கு புரியலே,


இது எது குறித்து??

இராஜராஜேஸ்வரி said...

காலத்தின்
மாற்றத்தில்
சந்தோஷத்தில்
மலரட்டும்
நம் உறவு //

வாழ்த்துகள் .. உறவுக்ள் மலர..

வெங்கட் நாகராஜ் said...

உறவுகள் மலரட்டும்.... நல்ல கவிதை நண்பரே....

ADHI VENKAT said...

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

அருமைஅருமை
விரல்களுக்குள்ளே விரோதம் வந்தது வினோதம்தான்
அருமையான புதியதான உவமை
மனக் கசப்பு கூட சில நொடிகளுக்கானது எனக் காட்டத்தான்
கிரகண படத்தை போட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
மனங்கவர்ந்த படைப்பு வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

மின் இனைப்பு இல்லாததால்
என் நினைப்பு தடைபட்டது!
மன்னிக்க!

வேதனை புரிகிறது; வாழ்க்கையில்
சோதனை பலவற்றில் இதுவும் ஒன்று.
குறைகளைத் தூக்கி வீசி
நிறைகளை மட்டும் கொண்டால்
நிறைவடையாதோ உறவு!
என்றாலும் இரு கை தட்டினால்
அன்றோ எழுந்திடும் ஓசை அங்கு?

அருமை கோப்லி!

சுதா SJ said...

உணர்ந்து திருந்த வேண்டி நிக்கும் கவி இது
வாழ்த்துக்கள் பாஸ்

சுதா SJ said...

//ரயில் சினேகங்களையும்
மதிக்கும் நாம் - நம்
உயிர் சினேகத்தை
மறுத்தது துளியும்
நியாயமில்லை//

உண்மைதான் பாஸ்

அமைதி அப்பா said...

//ரயில் சினேகங்களையும்
மதிக்கும் நாம் - நம்
உயிர் சினேகத்தை
மறுத்தது துளியும்
நியாயமில்லை//

இந்த வரிகளும் சரி, மற்றவைகளும் சரி சிந்தனையைத் தூண்டுபவையே.

நல்ல கவிதை. கவிதையிலும் முத்திரைப் பதிக்கிறீங்க சார்.

********************

நான் எழுதி பலராலும் பாராட்டப்பட்ட பதிவு...


எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?

நேரம் கிடைத்தால் நண்பர்கள் படித்து கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கவிதை. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

//ஒருமுறை நான் வெளியூர் செல்கையிலே வழியனுப்ப வந்த நீ
மறைந்து மறைந்து கண்ணீர் மறைத்தது இன்னும்
மறையாதிருக்கிறது//

//சின்ன மிதிவண்டிகளைப்
பார்க்கும் போதெல்லாம்//

//ரயில் சினேகங்களையும் மதிக்கும் நாம் - நம் உயிர் சினேகத்தை
மறுத்தது துளியும் நியாயமில்லை//

வாழ்த்துகள் .. உறவுக்ள் மலர.. vgk

Voted 6 to 7 in Indli

A.R.ராஜகோபாலன் said...

@ சென்னை பித்தன்
Yes Sir

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
அன்பான சகோ நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
கவிதையே என் கவிதையை பாராட்டியது நான் செய்த பாக்கியம்
நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@சிவ.சி.மா. ஜானகிராமன்
ஆஹா அமர்க்களமாய்
கவிதையை தொடர்ந்ததர்க்கு
நன்றிகள் பல, அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ # கவிதை வீதி # சௌந்தர்
நன்றி உங்களின் கருத்திற்கு, வாழ்த்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
பல்வேறு பிரச்சனைகளால்
பிரிந்திருக்கும்
சகோதரர்கள் பற்றியது நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
உறவுகள் மலர் வாழ்திட்டமைக்கு நன்றி மேடம்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
மனம் நிறைந்த நன்றி அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
மனம் மகிழ்ந்த நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
உண்மைதான் சார்
அந்த விட்டுக்கொடுக்க முடியாத
கிரகண இருளில்
மூழ்கி தவிக்கும் நிலையை தான் சொல்லி உள்ளேன்
நன்றி தங்களின் கவனத்திற்கு
கருத்திற்கு

தமிழ் உதயம் said...

மலரும் உறவு. மகிழும் மனது.

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
கருத்தையே
கருத்தான கவிதையாய்
தந்த கவிஞர் அய்யாவுக்கு
நன்றிகள் பலப்பல

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நன்றி தலைவரே உங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நன்றி தலைவரே உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ அமைதி அப்பா

முத்திரை பதித்த கருத்திற்கு நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்

தங்களின் தனித்துவமான கருத்துக்களை என் எழுத்துகளை கொண்டு
பண்படுத்தியதற்கும், பலப்படுத்தியதர்க்கும் நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
மகிழும் கருத்து
நன்றி பகிரும் மனது

Unknown said...

//நம்
தவறுகளை விட
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா
நம் சகோதரத்துவம்.///

super super

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நன்றி.
நன்றி..
நன்றி...

Unknown said...

very good presentation,
voted..
wonderful
different thought gr8 gr8 gr8

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நன்றி நண்பா உங்களின்
பாராட்டு என்னை பெருமை அடையச் செய்யும்

RVS said...

கோப்லி! யாரது?
நான் நினைத்ததாக இருந்தால் ரொம்ப சந்தோஷம். ;-))

A.R.ராஜகோபாலன் said...

@RVS
உண்மைதான் வெங்கட்
நீயறியாதது எது?

குணசேகரன்... said...

அழகான கவிதையில் உண்மைகள்

Mathuran said...

அருமையான வரிகளில் சகோதரத்துவத்தை எடுத்தியமியிருக்கிறீர்கள்.. அருமை


பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்

ஸ்ரீராம். said...

"ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்....." இது ஒரு பழைய திரைப் படப் பாடல். உங்கள் கவிதை அருமை. கவிதை மட்டும்தான் என்று நினைத்தால் ஆர் வி எஸ் கேட்டது மர்மம் ஆகி விட்டது. எனக்கும் சந்தோஷம்...அதேதானே...!

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அருமையான கவிதை ராஜகோபால்,உறவுகள் மறுபடியும் மலர வாழ்த்துகிறேன்...

vidivelli said...

நம்
தவறுகளை விட
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா
நம் சகோதரத்துவம்.


என்ன அற்புதமான கவிதை....
வாழ்க,,,,உங்கள் கவித்துவம்....
வாழ்த்துக்கள்,,,,,

தமிழ் ஜோக்ஸ் ARR said...

மேலே இருக்கும் மறுமொழிகள் யாவும் படித்து மட்டுமே உணர்ந்ததின் பாதிப்புகள்.. என்னுடையது அப்படியல்ல என நீ அறிந்திருப்பாய் என நம்புகிறேன்..

ஒரு பெரிய ஆளுமைக்கு எதிரில், ( எதிராக அல்ல..) தான் புதிதாகத் துவக்கிய வாழ்க்கையில் ஜீவிக்க (சர்வைவலுக்காக), மனம் ஒப்பியோ ஒப்பாமலோ சில நிகழ்வுகளை நடத்தித்தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒருவனின் மனப்போராட்டங்களை எல்லோராலும் அறிய இயலாது..

அதுவும் வளர்பருவத்திலேயே பிஞ்சு மனங்களில் ஒரு கொடியவனாக, துரோகியாக சித்தரிக்கப்பட்ட ஒருவனின் மறுபக்க நியாயத்தை அப்பிஞ்சுகள் (தற்போது அவர்கள் முதிர்ந்துவிட்டாலும்கூட..) உணர்ந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை..

எனினும் இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் என்மீதான உன் இதய மென்பக்கம் மகிழ்வைத்தருகிறது..

ஒரு மூன்றாவது மனிதனாக, கடந்த நிகழ்வுகளை மீள்பார்வை செய்துபார்.. இன்னும் சில விஷயங்கள் புலப்படும்.. பொதுப்பார்வைத்தளத்தில் இதனினும் அதிகமான செய்திகளை நான் தருவது சரியல்ல..

கவிதையைப் படிக்கும்போதும் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.. கூடவே இந்த மகிழ்வு இன்னொரு குறுக்குவெடியால் தகர்ந்து போய்விடக்கூடாதென்ற பயமும் வருகிறது..

இன்னும் என்னென்னவோ சொல்ல மனம் துடிக்கிறது.. காலம் வரட்டும்..


வருமா..?

RVS said...

@தமிழ் ஜோக்ஸ் ARR
அண்ணே! வரும்.. நிச்சயம் வரும்..

உங்களின் மறுமொழி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. இந்தச் சின்னத் தம்பி சொல்வதற்கு எதுவுமில்லை இருந்தாலும்... ifs and buts ஐ விட்டுவிட்டு பார்ப்போம்.. சேர்ந்து பார்க்க ஆசைப்படுகிறேன்... கோப்லி வாழ்த்துக்கள். நன்றி. ;-))

A.R.ராஜகோபாலன் said...

@@குணசேகரன்...
நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்
நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு
அதேதான் ,

A.R.ராஜகோபாலன் said...

@ RAMVI
நன்றி சார், உங்கள் வாழ்த்து என்னை பெருமை அடைய செய்கிறது

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் ஜோக்ஸ் ARR

////எனினும் இவற்றையெல்லாம் தாண்டி இன்னும் என்மீதான உன் இதய மென்பக்கம் மகிழ்வைத்தருகிறது.. ////

உன்மீதான என் பாசம் என் சித்தமல்ல , என்னுள்ளே ஓடும் ரத்தம். என் சித்தம் கலங்கினாலும் என் ரத்தம் கலங்காது . வேறென்ன நான் சொல்ல ....................

A.R.ராஜகோபாலன் said...

@RVS
நண்பனே உன் வாழ்த்திற்கும் கனிவிற்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

கிரகணம் தோன்றினாலும் சீக்கிரமே மறைந்து விடுவது போல, அன்பிற்குரியவர்களின் விலகல் ரொம்ப நாட்களுக்கு நிலைக்காது! கவிதை அழகு!

A.R.ராஜகோபாலன் said...

@மனோ சாமிநாதன்
உங்களின் கனிவான கருத்திற்கு நன்றி அம்மா

Unknown said...

சகோ
// விரல்களுக்குள்ளே
விரோதம் வந்த
வினோதம் நம்
பிரிவு
தண்ணீர் போல
பிரிந்தாலும்
தன்மை மாறாதது நம்
உறவு//

நயமிகு கவிதை
நல்கினீர் சகோ
பயமிகு வருதே
படித்திட தருதே

வாரி நாளும்
வழங்கி டுவீரே
மாரி போல
மகிழ்ந்திட சால
புலவர் சா இராமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
மனம் நிறைந்தது
மதியானவரின்
மணியான கருத்தை
மகிழக் கேட்டு
நன்றி ஐயா

vetha (kovaikkavi) said...

தண்ணீர் போல
பிரிந்தாலும்
தன்மை மாறாதது நம்
உறவு
உறவின் பெருமை இங்கு புரிகிறது....good..
உறவின் பெருமை இங்கு புரிகிறது....etha.langathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

நெல்லி. மூர்த்தி said...

"வழியனுப்ப வந்த நீ
மறைந்து மறைந்து
கண்ணீர் மறைத்தது..."

நெகிழ வைத்த உறவின் ஒரு சிறு நிகழ்வு! ஒரு தாய் மக்களாக நாம் இருக்கும் வரை சிக்கலில்லை. ஆனால், தனக்கென்று குடும்பம் அமையும் போது, அமைந்த உறவுகளை திருப்தி செய்ய முயன்று சமரசத்திற்க்கு செல்ல நேரிடுவதால் எழுகின்றது இச் சிக்கல். ஒரு தாயால் தந்தை அடைந்த சிற்சில சங்கடங்களை, தனக்கென்று ஒரு தாரம் அமையும் போது மட்டுமே புலப்படுகின்றது. உணர்வு பூர்வமாக நோக்காமல், மூன்றாம் நபராகவும் இருந்து ஒவ்வொரு நிகழ்வினையும் நோக்கும் போது தான் பல உண்மைகள் தெரியவருகின்றது. நம்மை சுற்றியுள்ளோரிடமும் பக்குவமுள்ள மனமிருப்பின் சிக்கல் என்பதில்லையே!? அன்பும் ஒரு அவஸ்தை தான் பல தருணங்களில்!

அம்பாளடியாள் said...

நம்
தவறுகளை விட
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா
நம் சகோதரத்துவம்.

உண்மையான வைர வரிகள்.
தங்கள் கவிதை அருமையாக
இருந்தது வாழ்த்துக்கள்.என்
தளத்திலும் பெண்ணடிமைத்தனத்துக்கு
எதிரான என் முதல்ப்பாடல் ஒலிபரப்பு
செய்துள்ளேன்.கேட்க்க தளத்தில் சுணக்கம்
ஏற்ப்பட்டால் youtupe ல் aathi sakthi எனக்
கொடுத்துக் கேளுங்கள்.உங்கள் கருத்தினைக்
காண ஆவலுடன் காத்திருக்கின்றேன் உங்கள்
வரவு நல்வரவாகட்டும். மிக்க நன்றி உறவுகளே.

vetha (kovaikkavi) said...

விரல்களுக்குள்ளே
விரோதம் வந்த
வினோதம் நம்
பிரிவு
தண்ணீர் போல
பிரிந்தாலும்
தன்மை மாறாதது நம்
உறவு
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ராஜகோபால்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தி இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.