Monday, 11 July 2011

தமிழ்மணம் பதிவுப்பட்டை அறிவிப்புகள் (TOOL BAR)


தமிழ் மணம் காணாது தவிக்கும் தமிழ் மனங்களுக்கு ஓர்  அறிவிப்பு, நான் பெற்ற  இன்பம் பெருக இவ் வையகம் (நன்றி நாற்று நிரூபன் , அவர் செய்தியாக சொன்னதை நான் பதிவாக போட்டுட்டேன் )

வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உடனுக்குடன் தமிழ்மணத்திற்கு அளிக்கவும், மறுமொழிகளை உடனுக்குடன் திரட்டவும், வாசகர் பரிந்துரைக்காக வாசகர்களிடம் இருந்து வாக்குகளை திரட்டவும் பதிவுப்பட்டைச்சேவையை தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளோம். உடனுக்குடன் மறுமொழிகளும், இடுகைகளும் வலைப்பதிவுகளில் இருந்தே ஒரு சொடுக்கிலே தமிழ்மணத்தின் முகப்பிற்கு வந்தடையும் தொழில்நுட்பம் தமிழ்மணத்தின் சிறப்பம்சமாகவும் இருந்து வந்துள்ளது.
ஆனால், இன்றைக்கு வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வலைப்பதிவும் வாசிக்கப்படும் பொழுதும் பதிவுப்பட்டை சேவை தமிழ்மணத்தின் வழங்கிக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அது தவிர வலைப்பதிவுகளிலே தரவிறக்கமும் தாமதமாகிறது. இப்பிரச்சனை தமிழ்மணம், வலைப்பதிவர்கள் என அனைவரையும் பாதிக்கும் நிலையில், இச்சேவையை இடைநிறுத்தத் தமிழ்மணம் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இச்சேவையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட சேவை வரும் வரையில் வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் திரட்டுதல் போன்ற சேவைகள் இயங்காதெனத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்த சேவைகள் மீண்டும் செயற்படத் தொடங்கும்.
இதனால், பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்

27 comments:

Unknown said...

TQ TQ TQ FRIEND....
ITS VERY IMPORTANT NEWS AND NEEDED NEWS ...

ஷர்புதீன் said...

//வர வர உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டுது நண்பரே , இன்று இதையே ஒரு பதிவா போட்டிருக்கேன் , செய்திகளாக கட் அண்ட் பேஸ்ட் //

ஹ ஹ ஹ ஹா, என்னன்னே பண்ண சொல்றீங்க, அந்த அறிவிப்பை பார்த்ததும் நமக்கு குசும்புதான் முதல்ல வேலை செய்யுது!

வெங்கட் நாகராஜ் said...

இதற்காகவே நான் தமிழ்மண ஓட்டுப் பட்டையையே எடுத்து விட்டேன் எனது வலைப்பூவிலிருந்து. நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றி நண்பரே....

சுதா SJ said...

தகவலுக்கு நன்றி பாஸ்

valaiyakam said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்... http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:

http://www.valaiyakam.com/page.php?page=about

Anonymous said...

தமிழ் மணம் மீண்டும் பொலிவுடன் வரும் என்ற நம்பிக்கையுடன் ...

iniyavan said...

http://blog.thamizmanam.com/archives/309

தமிழ் உதயம் said...

தகவலுக்கு நன்றி சார்.

Anonymous said...

எனக்கு இப்பதான் தெரியும்.நன்றி

Madhavan Srinivasagopalan said...

நாங்கலாம் தமிழ்மணப் பட்டைய எடுத்து ரெண்டு வாரம் ஆகுது..
அவ்ளோ அட்வான்ஸ் நாங்கலாம்..

kavimani said...

பின்னே எப்படி தமிழ்மணத்தில் இணைக்கிறீங்க?

iniyavan said...

//பின்னே எப்படி தமிழ்மணத்தில் இணைக்கிறீங்க?//

'இடுகைகளை புதுப்பிக்க' அப்படின்னு முதல் பக்கம் டாப்புல இருக்குல்ல அதுல உங்க வலைப்பூ முகவரியை கொடுங்க. அதுவா கடைசி கட்டுரையை திரட்டிக்கொள்ளும்

kavimani said...

அதுபோல் பலமுறை முயற்சித்தேன், இடுகை ஏற்கவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி. நன்றி உலகநாதன் சார்.

ஸ்ரீராம். said...

தகவலுக்கு நன்றிகள்....

ஒ.நூருல் அமீன் said...

//பின்னே எப்படி தமிழ்மணத்தில் இணைக்கிறீங்க?//

'இடுகைகளை புதுப்பிக்க' அப்படின்னு முதல் பக்கம் டாப்புல இருக்குல்ல அதுல உங்க வலைப்பூ முகவரியை கொடுங்க. அதுவா கடைசி கட்டுரையை திரட்டிக்கொள்ளும்

நீ லிஸ்டுலே இல்லேன்னு சொல்லுது சகோ.

சென்னை பித்தன் said...

நானும் பார்த்தேன்!ஆனால் இந்த யோசனை வரவில்லையே!

Mathuran said...

தகவலுக்கு நன்றி பாஸ்

Unknown said...

ஹிஹிஹி நிருபன் சொல்லிட்டாரா??அப்போ சரி!!!

குணசேகரன்... said...

இப்பதான் தெரிஞ்சுது . என் பதிவு ஏன் அதில வெளியிட முடியலனு....

Yaathoramani.blogspot.com said...

தகவலுக்கு நன்றி

ரிஷபன் said...

அட.. அதான் காரணமா..

நிரூபன் said...

தமிழ் மணத்தை ட்ராக் பண்ணுவோர், உபயோகிப்போர் தொகை அதிகமாகியமையே இந்த லோடிங்கிற்கான காரணம் என்று தமிழ் மண அறிவிப்பு பகுதியிலும் போட்டிருக்கிறார்கள்.

உங்கள் வலையில் இருந்தும் தமிழ் மண ஓட்டுப் பட்டையினை நீக்கி விடுங்கள் சகோ. அப்போது தான் லோடிங் இல்லாமல் ப்ளாக் இலகுவாக ஓப்பின் ஆகும்,

முனைவர் இரா.குணசீலன் said...

ஓடினா மட்டும் விட்டுவிடுவோமா?

முகப்புக்கே சென்று புதுப்பிப்போம்ல..!!

:)

vidivelli said...

அப்படியா சங்கதி....
நாங்க ஓடுப்பட்டு திரியுறோம்...
hahaha!!!

மாய உலகம் said...

நல்லதோர் சேதி....பட்டையை எடுத்தோர் பாதி...எனது ப்லாக்கில் பேசுகிறேன் மீதி
rajeshnedveera

www.maayaulagam-4u.blogspot.com

Naseem said...

என்னை போன்ற புதியவர்களுக்கு பயனுள்ள தகவல்... மிக்க நன்றி !!!

M.R said...

பயனுள்ள தகவல் நண்பரே ,நன்றி