Tuesday, 31 May 2011

"திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - நிறைவுப்பகுதி


துணை செய்தி : சென்ற முறை நானிந்த தொடரை முடித்த விதம் எனக்கே பிடிக்கவில்லை , இந்த ஆன்மீக அனுபவத்தை தொடர்கதை போல பாவித்து முடித்திருந்ததை மாதிரி உணர்கிறேன், தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.


         போனை எடுத்த எனக்கு என் மனைவியிடம் இருந்து நல்ல செய்தியே வந்தது , என் மகள் இன்று வெயிட் ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை, அதை கேட்ட நான் சற்றே நிம்மதி அடைந்தேன், காலையில் எழுந்த நாங்கள் நடக்க தொடங்கினோம், காலையில் வடமால்பேட்டில் உணவு , பின் அங்கிருந்து நடக்க தொடங்கினோம், நடக்க தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் கண்களில் திருச்சானூர் கோபுரம் பட , ஆஹா என்னே ஒரு நிம்மதி மனதில், வாழ்க்கையில் அதுவரை அனுபவித்திராத திருப்தி எத்தனையோ முறை அந்த கோபுரத்தை பாத்திருந்தாலும் இந்த முறை இருகரம் கொண்டு என்னை அழைப்பதாகவே தெரிந்தது , என் கவலையெல்லாம் பறந்தது போன மாதிரி ஒரு இன்பம் ,தாய்பசுவை நோக்கி ஓடும் கன்றினைப்போல் எனை அறியாமல் வேகமாக நடந்தேன் , என் நண்பர்கள் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக வந்தனர்.               



அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, “அலமேலு’ என்பர். “அலர்மேலு’ என்பதே சரியான வார்த்தை. “அலர்’ என்றால், “தாமரை!’ “மேலு’ என்றால், “வீற்றிருப்பவள்!’ இதையே, “பத்மாவதி’ என்கின்றனர். “பத்மம்’ என்றாலும், “தாமரை!’ “வதி’ என்றால், “வசிப்பவள்!’ ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள்.என் மகளின் பெயரும் அதே அர்த்தம் கொண்டதுதான் "கமலாத்மிகா"
கமலத்தில் வீற்றிருப்பவள் என பொருள்படும்.  


                                         தாயே என் துணை நீயே 

  கோவிலில் நுழைந்த எனக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி, என் துயர் துடைக்க காத்திருக்கும் அந்த தெய்வ தாயாரை கண்குளிர பாக்க போகிறேன் , என் துயரையெல்லாம் கொட்டி தீர்க்க போகிறேன் என்ற ஆவல் என்னை அப்படியே அள்ளிச்சென்றது,வரிசையில் நின்று அன்னையை கண்குளிர,மனம்நிறைய,கண்ணீருடன் சேவித்தேன் என் மகளை அவளிடம் ஒப்புவித்தேன், தாயாரின் அந்த பார்வையில் நானிருக்கிறேன் உனக்கு என சொல்லாமல் சொல்லியது போன்றதொரு தெய்வீகப்பார்வை,  தாயாரின் திவ்ய தரிசனம் முடித்து வெளியே வந்தேன், மனமெல்லாம் அப்படி ஒரு திருப்தி, அதை என்னால் சொல்லில் சொல்ல முடியாத  ஒரு உன்னதம், என் சோகத்தையெல்லாம் துடைத்து எடுத்தது போன்றதொரு எண்ணம் , அந்த கணம் கவலையெல்லாம் என்னை விட்டு பறந்தோடி பிறந்த குழந்தையை போலே உணர்ந்தேன் , ஒன்றுமே இல்லாத நிசப்தம் அதில் நீக்கமற நிரந்த நிதர்சனம்.

                                       கோவிலைவிட்டு வெளியே வந்த நான் முழு உற்சாகத்துடன் திருமலையை நோக்கி நடக்க தொடங்கினேன் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில்  உள்ள அலிப்பிரி அங்கிருந்து தான் ஏழுமலையானின் தெய்வீக திருமலைக்கு நடக்க தொடங்க வேண்டும் 

      இங்கிருந்து ஒன்பது கிலோமேட்டார் தொலைவில் 3900 படிக்கட்டுகளை கொண்டதுதான் திருமலை, 

"ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"   
           "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"
                       "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"
          
என்ற கோஷங்கள் விண்ணை எட்ட , நாங்களும் அந்த உயிர் உருக்கும் 
"ஓம் நமோ நாராயணாய"   "ஓம் நமோ நாராயணாய" என்ற கோஷத்தை சொல்லியபடியே மலை ஏற தொடங்கினோம், ஒவ்வொரு  படி ஏறும் போதும் "ஓம் நமோ நாராயணாய" என நாங்கள் மூவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டே ஏறினோம் , ஏறியதே தெரியவில்லை கோவிந்தன் கோஷம் குறை நீக்கி , வலி நீக்கி , துயர் துடைத்து , துன்பம் அழித்து அழைத்து சென்றது எங்களை. வேங்கடவன் அருளாட்சி செய்யும் தெய்வீக திருமலையை , திக்கு தெரியாத என்னிலையை சொல்லி வேண்ட அடைந்தேன் . அந்த கோவிந்தன் என்னை ஆட்கொள்ளுவான் , என் துயரை தூளக்குவான் என்றபடியே அவன் சன்னதியை அடைந்தேன், உள்ளே நுழைந்த எனக்கு ,இந்த அகில லோகத்தையும் காக்கும் அந்த பரந்தாமன் , பரலோக நாயகன் , வாசுதேவன் , கோவர்த்தன் , அச்சுதன் , முகுந்தன் ,ஜகந்நாதன் பரப்ரஹ்மன், ஆஹா திவ்ய தெய்வீக திருமேனி தரிசனம் 


         என் குறையை எல்லாம் அவனிடத்தில் கொட்டினேன்,நீயே எல்லாம் உன்னிடமே நான் சரணாகதி மும்மூர்த்திகளில் காப்பவனே ,கமலபாதா, ஆதி மத்தியாந்த ரஹிதா, அநாத ரக்ஷகா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, பரமானந்தாஎன் மகளை உன்னிடத்தில் இருந்தே பெற்றேன் , இவள் உன் உடமை அவளை காப்பது உன் கடமை , இனி நீயே பொறுப்பு அவளுக்கு நீயே காப்பு .

 கராரவிந்தேந பதாரவிந்தம்
முகாரவிந்தே விநிவேசயந்தம்!
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம்

பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!   

          எங்கள் ஊர் மன்னார்குடி ஸ்ரீவித்யாராஜகோபாலன் சன்னதியில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான கோபாலனை கையில் ஏளை பண்ணி இந்த சுலோகத்தை தீட்ஷதர் சொல்லுவர் , அது நினைவுக்கு வந்து அதை சொல்லியபடியே வெளியே வந்தேன் . தரிசனம் முடிந்து வெளியே வந்த நான் என் அறைக்கு சென்று என் மனைவிக்கு போன் செய்து குட்டிம்மா எப்படி இருக்கிறாள் என கேட்டபோது, நல்லா  இருக்கிறாள் நேற்றைவிட இன்றைக்கு 70 கிராம் வெயிட் அதிகமாயிருக்கிறாள் என்றாள் என் மனைவி , இதை விட என்ன பெரிதாய் தரமுடியும் எனக்கு அந்த தயாநிதி .............................   

                  
              திருமலை இந்த பூமியில் ஒரு தெய்வீக திருத்தலம் , அந்த இடம் நம்மை தெய்வீகத்தை உணரவைக்கும் , நம்வாழ்வை உயரவைக்கும் . கோடானு கோடி மக்களின் துயர் துடைக்கும் வேங்கடரமணன்  என்னை மட்டும் கைவிடவா போகிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அவன் அருளால் என்னை இதுவரை அழைத்து வந்திருக்கிறது , இன்னும் என் வாழ்க்கை பாதை முழுவதும் அவன் சித்தம் தான் ,நான் வாழ்ந்தாலும்  வீழ்ந்தாலும் சகலமும் அவனுக்கே சமர்ப்பணம் , இது வரை என்னுடன் இந்த தொடரில் தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த அத்தனை பேரின் பாதம் தொட்டு  , இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை பொறுத்து கொள்ள வேண்டி வணங்குகிறேன் நன்றி   

                       

                        "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"   

அன்பன்
ARR
     

41 comments:

வெங்கட் நாகராஜ் said...

வேங்கடவன் அருளால் உங்கள் மகள் உடல் நலம் பெற்று நன்றாக இருக்கிறாள் என்ற விஷயமும், உங்கள் ஆன்மீகப் பயணம் முழுவதும் நாங்களும் வந்தாற்போல இருந்த உணர்வும் மகிழ்ச்சியைத் தருகிறது நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எனக்கும் திருமலையானை ஒருமுறை தரிசிக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்திய தொடர் இது ராஜு.

எல்லாம் நன்றாகவே தொடங்கி நன்றாகவே முடிந்தது.

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
உங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே

Unknown said...

இறைவனிடம் மன குறைகள் சமர்ப்பித்துவிட்டால் யாருக்கும் எந்த குறையும் வாராது .. இதை உங்கள் அனுபவம் மீண்டும் நீருபிதுவிட்டது . நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
அது என் பாக்கியம் அண்ணா
மிக்க நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
மிக உண்மை ரியாஸ் , சரணாகதியின் தத்துவமே அதுதானே
நன்றி உங்களின் தொடர் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும்

G.M Balasubramaniam said...

திருமலை வேங்கடவன் திருக்கோவிலில் ஒரு சாந்நித்தியம் நிலவும். ஆயிரக்கணக்கானவர்களின் நம்பிக்கையின் அடிநாதம் உணரப்படும் இடம் அங்கிருக்கும் AURA போல் வெகு சில கொவில்களே உள்ளன. வேங்கட முடையானை பலமுறை தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்க வளமுடன்.

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
மிக்க நன்றி ஐயா
உங்கள் வாழ்த்து என்னை வளம் பெற வைக்கும்

துளசி கோபால் said...

அருமை.

மீண்டும் மீண்டும் வாசிச்சேன்.

மனசுக்கு நிறைவா இருந்தது. குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

நானும் அடுத்தவாரம் திருமலைக்குப் போகிறேன். 12 வருசங்களுக்குப்பின் கூப்பிட்டு இருக்கான்.

பக்தி ததும்பும் பதிவு. இனிய பாராட்டுகள்.

என் மகள் பெயர் அலர்மேல் மங்கை. எல்லாம் அவன் அருளால் கிடைச்ச குழந்தை.

30 வருசத்துக்கு முன்னே திருப்பதிக்கு போன என் அனுபவப் பதிவுக்கு சுட்டி இது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_03.html

மரத்தடியில் எழுதியது. அது ஆச்சு 6 வருசங்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@துளசி கோபால்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா

30 வருசத்துக்கு முன்னே திருப்பதிக்கு

உங்களின் இந்த பதிவை படித்து பிரம்மித்தேன் , அற்புதமான நடை

"குழந்தைக்கு எங்கள் ஆசிகள்".

தன்யனானேன் உங்களின் ஆசி என் மகளை காக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

ஆன்மீகம் ஆன்மீகம்...!!

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்த ஆன்மீக பயணப்பதிவு மிகவும் நிறைவாகவும், மனதுக்கு சந்தோஷம் அளிப்பதாகவும் இருந்தது. எல்லாம் அவன் செயல் என்று நம் கவலைகளை பகவானிடம் ஒப்படைத்துவிட்டால், முழு மனதுடன் சரணாகதி அடைந்துவிட்டால், பகவான் நம்மை கட்டாயம் கைவிடவே மாட்டார்.

பக்திக்கு குரங்குக்குட்டியையும், பூனைக்குட்டியையும் வைத்து ஒரு சிறிய கதை சொல்லுவார்கள்.

குரங்குக்குட்டிகள் தன் தாயை இறுக்கிக்கட்டிக்கொண்டுவிடும். நான்கு கால்களுக்கும் இடையே தூளிபோல தொங்கும். பிடியை விடவே விடாது. குட்டியுடனேயே அந்தத்தாய்க்குரங்கு இங்குமங்கும் தாவும். நாம் நமது பக்தியில் குரங்குக்குட்டிபோல பகவான் மேல் உள்ள பிடியை எப்போதும் விட்டுவிடக்கூடாது என்பார்கள்.

பூனை தன் குட்டிகளை வாயால் கவ்விக்கொண்டு செல்லும். பகவான் நம்மைக்கரைசேர்ப்பதை இந்தப்பூனை+பூனைக்குட்டி உதாரணம் போல சொல்லுவார்கள்.

பத்மாசனி என்றும் சிலருக்கு பெயர்கள் வைத்துள்ளார்கள். அதாவது பத்மம்=தாமரை; ஆசனி: தாமரை மலரை ஆசனமாகக்கொண்டவள்; தாமரையில் வீற்றிருப்பவள் என்று பொருள்.

//திருமலை இந்த பூமியில் ஒரு தெய்வீக திருத்தலம், அந்த இடம் நம்மை தெய்வீகத்தை உணரவைக்கும் நம்வாழ்வை உயரவைக்கும்//

சத்யமான வாக்கு. இதுவரை நான் 2 முறைகள் மட்டும் தரிஸிக்கும் பாக்யம் பெற்றேன்.

"ஓம் நமோ நாராயணாய" "ஓம் நமோ நாராயணாய"


அனுபவத்தை அழகாகப் பகிர்ந்ததற்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

தங்கள் பெண்குழந்தை தங்களைப்போலவே, மிகவும் நல்லவளாகவும், நல்ல அறிவாளியாகவும், நல்ல ஆரோக்யமும், அதிர்ஷ்டமும் வாய்ந்தவளாகவும் பல்லாண்டு வாழ ப்ரார்த்திக்கிறேன்.

அன்புடன் vgk

A.R.ராஜகோபாலன் said...

வை.கோபாலகிருஷ்ணன்
மதிப்புக்கு மிகஉரிய உயரிய ஐயா
தங்களின் இந்த நீண்ட கருத்து என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது
தங்களின் குறு கதைகளும் மிக அருமை ,
உங்களை போன்ற நல்லோர்களின் ஆசியால் என் மகள் பெருதலுக்கரிய பேரு பெறுவாள் என்பது திண்ணம், இந்த தொடரை எழுதிய போது கிடைத்த திருப்தியை விட உங்களால் அங்கீகரிக்க படும் போதும் , உங்கள் நல் ஆசிகள் என் மகளை அடையும் போது மிக்க மகிழ்ச்சியுறுகிறேன்.
மனம் நிறைந்த மகிழ் நன்றி

RVS said...

கோப்லி! மெய் சிலிர்க்கிறது. எழுபது கிராம் உடனடியாக கூட்டிக் காண்பித்த ஏழுமலையானின் கருணையை என்ன சொல்வது? படிக்கும் எல்லோரையும் ஒரு முறை பாதயாத்திரையாக உனது சொல்லாட்சியால் அழைத்து சென்றுவிட்டாய். அற்புதம். ;-))

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மிக்க நன்றி வெங்கட்
அடுத்த 5 மாதத்தில் 5 கிலோ வரை என் மகளின் எடை கூடியதும் அவன் செயல்தான்.

ஷர்புதீன் said...

கடந்த மாதம் தொழில் விசயமாக திருப்தி சென்று திருமலையும் சென்று வந்தேன்., பொதுவாக எனக்கு பக்தர்களிடம் ஒரு மனக்குறை உண்டு., அடியேன் இஸ்லாமிய ( அடிப்படையில் agnostic ) பெயருடையவன் என்பதால் கொஞ்சம் யோசிக்கிறேன்., கவனிக்கவும் பக்தர்களிடம் எனக்கு மனக்குறை உண்டு என்றுதான் சொல்ல வந்தேன் )

Anonymous said...

அருமையான யாத்திரை..மூன்று பகுதியையும் தொகுபாக படிக்கிறேன்

Anonymous said...

வேங்கடவன் அருளால் உங்கள் மகள் உடல் நலம் பெற்று நன்றாக இருக்கிறாள் //
ரொம்ப சந்தோசம்

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
மனம் நிறைந்த நன்றி நண்பரே
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
வேங்கடவன் அருளால் உங்கள் மகள் உடல் நலம் பெற்று நன்றாக இருக்கிறாள் //
ரொம்ப சந்தோசம்

எல்லாம் உங்களைப்போன்றோர்களின் நல்லாசிகளினால்தான் அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்
கருத்துக்களை கூற எந்த ஒரு தடையும் கிடையாது நண்பரே , அதை மற்றவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு , தயவு செய்து உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்

ஷர்புதீன் said...

தனி பதிவு ஒன்னு போட்டுடுறேன்னே ., சின்னதா எழுத போய், அது ஏற்கனவே நான் யோசிச்சு வச்சதெல்லாம் வெளியே வந்து பெருசா போச்சு!

:)

துளசி கோபால் said...

பதிவு போட்டபிறகு சுட்டி அனுப்புங்க ஷர்புதீன்.

ஷர்புதீன் said...

கண்டிப்பாக மேடம், தற்பொழுது அதனைத்தான் திருத்தங்களும், விருத்தங்களும் செய்து வருகிறேன்., எனது கவலை எனது இஸ்லாமிய நண்பர்களை பற்றிதான். அதனால்தான் இந்த பின்நூடத்தையே எனது இடுக்கையில் இடுகையாக பதிவிட எண்ணி உள்ளேன்

A.R.ராஜகோபாலன் said...

உங்களின் அந்த பதிவிற்காக
காத்திருக்கிறேன் அன்பரே

நிரூபன் said...

தங்களின் ஆன்மீகப் பயணத்தின் நோக்கம் ஈடேறியிருக்கிறது, மிக்க மகிழ்ச்சி சகோ. சுவையாகவும், கட்டுரையினைச் சலிப்பின்றிப் படிக்கும் வண்ணமும் தொகுத்திருக்கிறீர்கள்.

நன்றிகள் சகோ.

Madhavan Srinivasagopalan said...

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
(685)

அனுபவித்தல்லவோ பாடியுள்ளார், குலசேகர ஆழ்வார்.

ஒன்று நிச்சயம்.. அவனிடம் முழுப் பொறுப்பினை விட்டுவிட்டு, சரணாகதி அடைந்து.. நமக்கென இட்ட பணியை (கடமையை) செய்வெனச் செய்தாலே வாழ்வில் துன்பம் தொலைதொடுமே..

அனுபவப் பகிர்விற்கு நன்றிகள், கோப்லி..

மாதேவி said...

"கோடானு கோடி மக்களின் துயர் துடைக்கும் வேங்கடரமணன்" பாதயாத்திரையில் பங்குகோண்டேன்.

கமலாத்மிகா சகல செல்வமும் பெற்று இனிது வாழ்க!.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மிக்க நன்றி சகோ உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி மாதவன் உங்களின் கருத்து மனம் நிறையச் செய்தது

A.R.ராஜகோபாலன் said...

@மாதேவி
கமலாத்மிகா சகல செல்வமும் பெற்று இனிது வாழ்க!.

மிக்க நன்றி மேடம் உங்களின் கருத்துக்கும் ஆசிக்கும்

Yaathoramani.blogspot.com said...

.உண்மையில் ஒரு ஆன்மீக பயணம் போய்வந்ததை
படங்களுடன் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில்
பதிவாக படங்களுடன் கொடுத்தமைக்கு
நன்றி வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
அது என பாக்கியம் ரமணி சார்

அமுதா கிருஷ்ணா said...

எந்த வேண்டுதலும் இல்லாமல் திருமலை பாதயாத்திரை செல்ல பிடித்து என் கணவர் தொடர்ந்து 8 வருடங்கள் சென்னையிலிருந்து தன் நண்பர்களுடன் சென்று வந்தார்.

உங்கள் அனுபவம் நேராக நாங்களே வந்தது போல் இருக்கின்றது.

A.R.ராஜகோபாலன் said...

@அமுதா கிருஷ்ணா
ஆஹா அவரின் பாதங்களை பணிகிறேன், வேண்டுகோளின்றி வேங்கடவனை இத்தனை சிரமம் கொண்டு பார்ப்பது உயர் உன்னதம்
நன்றி உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்

ஷர்புதீன் said...

மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்

naveen said...

NAMO NARAYANA.....

Anonymous said...

Serendipity !

Means, chanced upon this pilgrimage.

U cd hav summed up ur serial posts, with the following data:

Time started
Routes
Stay en route and time taken
Arrival time at Tirupathi
Time taken from Tirupati to Tirumala climbing uphill
Time of final arrival at the Sacred Aboard.

This cd help others 2 know how much time it wd take for the whole yatra by foot. No doubt, the data r scattered across ur posts; but by summing up, v can get a conspectus.

Although u r not writing a travelogue n' it is a personal yatra, such tips cd help prospective pilgrims.

Govt shd interfere with such long yatras. Dont mistake me: if some diabetic or BP/ heart patient r adamant to join, wd the pilgrimage committee at Perambur permit ? If they do, it s wrong.

So, they shd not allow whoever joins them. Allow only those who can undertake this arduous yatra and that shd be certified by a doctor. Imagine. dear AR, if a pilgrim had died on the way, how wd it be taken by all of u? People wd naturally put the Lord of 7 Hills in the dock !

Manasarover yatra s controlled by central govt: the no of yatris s retricted; all those allowed shd register months b4 and with medical certificate. Only 1 yatra s allowed. They shd insure themselves; and give the details all relatives at home. The pilgrims have to encounter avalanches, dangerous weather, and climbing rough tracks on many a hill.

No such things happen en route to Thirupathi; yet, it sd b controlled. If not by govt, at least by those who conduct the yatras.

Jo Amalan Rayen Fernando

A.R.ராஜகோபாலன் said...

@ naveen
நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@simmakkal said...

U cd hav summed up ur serial posts, with the following data:

Time started
Routes
Stay en route and time taken
Arrival time at Tirupathi
Time taken from Tirupati to Tirumala climbing uphill

நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கு

if some diabetic or BP/ heart patient r adamant to join, wd the pilgrimage committee at Perambur permit ? If they do, it s wrong.

இது மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைப்பாளர்கள் எடுத்தே வருகிறார்கள்,
இருப்பினும் எனக்கு அப்போது வயது 29 நான் கடந்த அதாவது எனது இருபது வயதிலிருந்து சர்க்கரை நோயால் பாதிக்க பாட்டு வந்தேன் ஆயினும் என் காலில் ஏற்பட்ட கொப்பளங்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஆறிப்போனது , இது நம்பிக்கை சம்பந்தமானது நண்பரே

Jo Amalan Rayen Fernando
இது உங்களின் பெயரா நண்பரே ??