Saturday, 14 May 2011

மனைவி இல்லாத வீடுகோடை விடுமுறையில் 
கூடை சந்தோஷம் கொண்டது 
துள்ளி விளையாண்ட 
பள்ளி பருவத்திலே !

கோடை விடுமுறையில்
கூடியிருந்த சந்தோஷம் 
தாய்வீடு போக
நோய்கொண்டவன் உருவத்திலே !

செல்லமவ சின்ன சிரிப்புல 
கொண்ட துக்கமெல்லாம் தூரபோகும் 
வெல்லமவ சொல்லி புட்டா 
கண்ட துன்பமெல்லாம் தூசாபோகும்!

குழப்பமான நேரத்திலெல்லாம் துணியாய் 
துவண்டு போகும் எம்மனசு 
குழந்தையாய் என்னவ தோளில்
சாய்ந்திட்டா பூத்துபோவது புதுதினுசு!

சமைச்ச பாத்திரத்தை எல்லாம்
நானே நின்னு அலம்புறேன் 
எனக்காக இவ்வளவு கஷ்டமாபட்டேன்னு 
எனக்கு நானே புலம்புறேன் !

தேன்மொழி பேச்சை கேக்காம
உடம்பில் இல்ல சக்கரை
அவளில்லாம அழகிழந்து கிடக்குது

என் வீட்டு அடுக்கரை !       

என்னபுள்ள மாதிரி பாத்துகிற
அவஎன் அம்மாவின் மறுதோன்றல்
எந்த தெச நின்னாலும்
அவவந்தா எம்மேல்வீசும் ஒருத்தென்றல்!  

நான் கொண்ட சோகத்திற்கெல்லாம்
சொந்தமவ பரிவா மருந்திடுவா
நான் கொண்ட கோபத்தையெல்லாம்
பந்தமவ உடனே மறந்திடுவா !!

என் இதயத்தை இயக்குற
அவளே என் சுவாசம்
படுக்கையில புரண்டு படுக்கையில
மெத்தையெல்லாம் அவ வாசம் !  

நீயிருந்த நாளெல்லாம்
நான்  உன்ன தேடல
நீயில்லாத நாளெல்லாம்
எனக்கு கையும்காலும் ஓடல!


ஒருத்தி கூடஇல்லாமல் போனால்
மொத்த உலகமே காலியா கிடக்குது 
எப்பவருவா எந்தேவதை என 
எம்மனசு கிடந்தது தவியா தவிக்குது !

அன்பன்
ARR

பட உதவி :cinemaanma.wordpress.com

25 comments:

Ramani said...

ஒருத்தி-கூட இல்லாமல் போனால்
மொத்த உலகமே காலியாகக் கிடக்குது..
இல்லாள் இல்லா வெறுமையை
மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

A.R.RAJAGOPALAN said...

தங்களின்
தனி கவனத்திற்கு
பணிவான நன்றி ரமணி சார்
முதல் பதிவு தொலைந்து போனதில்
கவலை ஆட்கொள்ள கிடந்தேன்
உங்கள் கருத்து கண்டு மனம் மகிழ்ந்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

//குழப்பமான நேரத்திலெல்லாம் துணியாய்
துவண்டு போகும் எம்மனசு
குழந்தையாய் என்னவ தோளில்
சாய்ந்திட்டா பூத்துபோவது புதுதினுசு!//

ரசித்தேன் ரசித்தேன்...

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி, தமிழ்மணம் இணைப்பு குடுங்க...

A.R.RAJAGOPALAN said...

தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான வாழ்த்திற்கும்
முழு நன்றி மனோ

A.R.RAJAGOPALAN said...

@ MANO நாஞ்சில் மனோ
உங்களின் ஆலோசனைக்கு நன்றி
விரைவில் இணைத்துவிடுகிறேன்

சுந்தர்ஜி said...

அவளின் இல்லாமையையும் இருப்பையும் இயல்பாய்ச் சொன்ன வரிகள் ராஜு.

என் முந்தையப் பின்னூட்டமும் அழிந்துபோனதோ?

A.R.RAJAGOPALAN said...

@சுந்தர்ஜி
ஆமாம் அண்ணா
மனம் நொந்து போனேன்
என்னிடம் வேறு பிரதியும் இல்லை
மறுபடியும் யோசித்து எழுதினேன்
நன்றி உங்களின்
தொடர் பின்னூட்டத்திற்கு

Srividya said...

மனசார சொல்லுறேன் உங்க மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க
பொறாமையா இருக்கு
நல்ல கவிதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

எது எப்படியோ சார், மனைவி என்பவளிடம் நமக்கு SOMEசாரம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அவர்கள் சம்சாரம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சமயத்தில் மின்சாரம் போல அதிர்ச்சி தருவதும் உண்டு தான். அதிர்ச்சிக்கு பயந்து மின்சாரத்தைப்பயன் படுத்தாமல் போனால் நம் உலகமே இருண்டு விடுமே!

What is LIFE
without WIFE, even though
She is a KNIFE.

மனைவியை நேசிக்கும் தங்களின் இந்தப்பதிவை நான் மிகவும் நேசிக்கிறேன்.

அன்புடன் vgk

A.R.RAJAGOPALAN said...

@ Srividya
உங்களின் இந்த கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீ வித்யா

A.R.RAJAGOPALAN said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி ஐயா,
உங்களின் இந்த மறு பின்னூட்டம்
என்னை பெருமையடைய செய்கிறது

நிரூபன் said...

சகோ நான் ஏற்கனவே இந்தக் கவியைப் படித்து, பின்னூட்டமிட்டேன், கூகிள் என் கமெண்டை விழுங்கி விட்டது சகோ.

தங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்,

Lakshminarayanan said...

//நீயிருந்த நாளெல்லாம்
நான் உன்ன தேடல
நீயில்லாத நாளெல்லாம்
எனக்கு கையும்காலும் ஓடல!//

இந்த feelingதான் சிறப்பான இல்லறத்தின் அடையாளம். வாழ்க!!

A.R.RAJAGOPALAN said...

@நிரூபன்
அதை அன்புடன் நானறிவேன் சகோ
இன்னும் உங்களின் பின்னூட்டமும் எனக்கு
இந்த கவிதையை மீட்க உதவியது
மனம் நிறைந்த நன்றி சகோ

A.R.RAJAGOPALAN said...

@ Lakshminarayanan
தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி எல்லென் சார்

எல் கே said...

கோடை வந்தா இது ஒரு பிரச்சனை எல்லார் வீட்டிலும். என் மனநிலையும் இப்படிதான்

A.R.RAJAGOPALAN said...

@எல் கே
உண்மையான கருத்து எல் கே

இராஜராஜேஸ்வரி said...

மனைவிக்காய் உருகிய உருகல் மனைவியைப் பெருமிதம் கொள்ள வைக்கும் அன்புக்கடல்.

A.R.RAJAGOPALAN said...

@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி மேடம்

venkatesh said...

"சமைச்ச பாத்திரத்தை எல்லாம்
நானே நின்னு அலம்புறேன்
எனக்காக இவ்வளவு கஷ்டமாபட்டேன்னு
எனக்கு நானே புலம்புறேன் !"

என்னை கவர்ந்த உண்மையான வரிகள்.................................!

A.R.RAJAGOPALAN said...

@ venkatesh
மிக்க நன்றி மாப்புளே
தொடர்ந்து வர வேண்டுகிறேன்

goventhan9943698222 said...

சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டும்!!!!

goventhan9943698222 said...

சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டும்!!!!

goventhan9943698222 said...

சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டும்!!!!