Thursday, 26 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 1

  

                              கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இரவு எட்டு மணி பத்து நிமிடத்திற்கு சதய நட்சத்திரத்தில் என் மனைவியின் வயிற்றில் ஏழு மாதமும் இரண்டு நாட்கள்  மட்டுமே இருந்த என் மகள் கமலாத்மிகா பிறந்தாள்.


பிறந்த போது எடை தொள்ளாயிரம் கிராம் உயரம் 37 செமீ. எனக்கு மகள் பிறந்தாள் என்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாத தினமாக அது அமைந்தது. குழந்தை பிறந்தவுடன் மனைவியையும் குழந்தையும் ஒருங்கே காணுபவர்கள் மத்தியில் மனைவியை தனியாகவும் என் குழந்தையை நானடோலோஜி வார்டிலும் பார்த்தேன். என்னதான் கஷ்டமாக இருந்தாலும் நான் பெற்ற குழந்தையை பார்த்த போது நான் பெற்ற இன்பம் சொல்லி விளங்காது.

   குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில்  டாக்டர் என்னையும் என் மனைவியையும் கூப்பிட அவர் அறைக்கு சென்றோம்,இனி டாக்டர் "கொஞ்சம் கிரிடிகலாதான் இருக்கு பாக்கலாம் பேபி வெயிட் குறையாம இருக்கணும் அது ரொம்ப முக்கியம் இதுமாதிரி ஆயிரத்தில் ஒரு குழந்தைதான் வெயிட் கெயின் பண்ணும் பாக்கலாம் என்றார்", எனக்கு பூமி அப்படியே பிளந்து என்னை உள்ளிழுப்பது மாதிரி ஆனது, மனைவிநிலை சொல்லவே வேண்டாம், அறையில் இருந்து வெளியே வந்த என்னை எதிர்கொண்ட என் அம்மா, டாக்டர் என்னப்பா சொன்னார் என்றபோது பீறிட்டு கிளம்பிய அழுகையை  அடக்கிய படியே ஒண்ணும் இல்லமா, குழந்தை ஆரோக்கியமாதான் இருக்காம் என்றேன். ரொம்ப சந்தோசம் நான் கும்புடுற ஏழுமலையான் என்னை கைவிடமாட்டான் , முகம் டல்லா வந்தியா அதான் கொஞ்சம் பயந்துட்டேன் என்ற அம்மாவின் பார்வை தவிர்த்து மனைவியின் முகம் நோக்கினேன்.

    (இது என் மகளின் புகைப்படம் இல்லை மாதிரிக்காக )  


              அடுத்த இரண்டு நாட்களில் என் மகளின் எடை 70 கிராம் குறைந்து போனது, நிலையில்லாமல் நானும் என் மனைவியும், அப்போது என் அம்மாவின் வார்த்தைகளும்    என் அலுவலக நண்பன் திரு.ஐயப்பன் என்னிடம்  ரொம்ப நாளாக சொல்லிவந்த திருமலை பாத யாத்திரை என் நினைவிற்கு வந்தது(சென்னை பெரம்பூரிலிருந்து திருமலை வரை)  அவருக்கு போன் செய்த நான் அய்யப்பா இந்த வருஷம் எந்த தேதி பாத யாத்திரை போறீங்க என்றேன் உடனே அவர் இந்த மாதம் 26 ஆம் தேதி நாளை மறுநாள் கிளம்புறோம் என்றார், அப்படியா நானும் வரேன் இந்த முறை என்றேன், ரொம்ப சந்தோசம் ராஜகோபால் நான் உங்க பேரை பதிவு பண்ணிடுறேன் என்றார்.

என் மனைவியிடம் நான் போகப்போகும் பாத யாத்திரையை பற்றி சொன்னேன், ஏங்க இதெல்லாம் உங்க உடம்புக்கு ஆகுமா, வேண்டாம் என்றாள் இல்லை நான் போகப்போறேன் என்றேன், என் அம்மாவிடம் சொன்னேன் இப்படி உடம்ப வருத்திகிறதேல்லாம் வேண்டாம்பா, சின்ன வயசுலேயே நீ இங்க பத்து வீடு தள்ளி இருக்குற கடைக்கு போனால் கூட லூனாவை எடுத்துட்டுதான் போவ உன்னாலஎல்லாம் அவ்வளவு தூரம் போக முடியுமா யோசிச்சு பண்ணுடா என்றார். எது எப்படி இருந்தாலும் பாத யாத்திரை செல்வது என முடிவேடுத்துவிட்டேன்.மறுநாள் காலை ஐந்து மணிக்கு பெரம்பூர் BB ரோட்டில்\உள்ளவெங்கடேசபெருமாள் கோவிலில் இருந்து தொடங்கியது பாத யாத்திரை...............................  

        
        
    (இதுவும் மாதிரிப்படமே ) 

                    இந்த நான்கு நாட்கள் பாத யாத்திரையில் ஆண்டவனை ,மிக  அருகில் உணர்ந்த அனுபவத்தை, வரும் பதிவுகளில் சொல்கிறேன் 

அன்பன் 
ARR 

22 comments:

Unknown said...

நானும் உங்கள் குடும்பிதினர் அனைவரின் நலத்திற்கும் நானும் எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்குறைன்... நிச்சயம் உங்கள் பிரத்தைனைகள் கை கூடும்

ஷர்புதீன் said...

உங்களின் இந்த பயணத்தின் தொடர்ச்சியை சீக்கிரமே எதிர்பார்கிறேன்.

அநேகமாக உங்களின் ரசனையும் / உத்தியோகமும் நிறையவே ஒத்துபோவதாக தெரிகிறது, ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் பாத யாத்திரையிலும்
பதிவு யாத்திரையிலும்
உள்ளன்போடு மானசீகமாக
நாங்களும் பங்கேற்கிறோம்

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் குடும்பிதினர் அனைவரின் நலத்திற்கும் எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கிறேன்..

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
தங்கள் கவனத்திற்கும் கனிவான பண்பிற்கும் மிக்க நன்றி ரியாஸ்

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்
மனம் நிறைந்த நன்றி ஷர்புதீன்
எனக்கும் ஒரு நல்ல நண்பர் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி
தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மிக்க நன்றி ரமணி சார்
உங்களை போன்றவர்களின் ஆதரவும் உற்சாகமும் தான் என்னை வழிநடத்துகிறது ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@ இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றி மேடம்
இதைப்போன்ற என் முயற்சிக்கு உங்களின் பதிவுகளை படித்ததே முதல் காரணமும் முழு காரணமும்
என்னை எழுத தூண்டிய உங்களின் எழுத்துக்கு என் நன்றி

Madhavan Srinivasagopalan said...

உணர்ச்சி பூர்வமாய் இருக்கிறது..
அடுத்த பகுதி படிக்க ஆர்வமாய் உள்ளேன்..

RVS said...

நம்பினோர் கெடுவதில்லை ..... நான்குமறை தீர்ப்பு... நாங்கள் கீழ் திருப்பதியிலிருந்து திருமலா நடந்து செல்வோம். பெரம்பூரிலிருந்து என்பது நெடிய பயணம் தான்... அடுத்த பாகத்தை எதிர்நோக்கி... ;-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் அந்த அனுபவம் மிகவும் சோதனையான காலமாகவே இருந்திருக்கும்.

தன்னம்பிக்கையுடன், திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட உங்களுக்கு அதுவே திருப்புமுனையாக அமைந்து உங்கள் குழந்தைக்கு, படிப்படியாக எடை கூடுதல் ஆகி, மற்ற குழந்தைகள் போல ஆகியிருப்பாள் என்று நம்புகிறேன்.

தங்களின் அந்த தெய்வீக அருளுடன் கூடிய பாதயாத்திரை அனுபவத்தை தங்கள் எழுத்துக்களின் மூலம் அறிய மிகுந்த ஆவலுடன் உள்ளோம்.

அன்புடன் vgk

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி மாதவன்
விரைவில் பதிவேன்

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மிக்க நன்றி வெங்கட்
நெடிய பயணம்தான்

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி ஐயா
என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் என்மகள் பூரண நலத்துடன் உள்ளாள்
அந்த கட்டம் மிகவும் சோதனையான கட்டம் தான் ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கையே என்னை அப்போது வழி நடத்தியது

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பயணத்தின் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன். “நம்பினோர் கெடுவதில்லை....” என்பதை தங்கள் பதிவுகள் திரும்பவும் நிரூபிக்கும் என்பதில் எனக்கு அய்யமில்லை...

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தாமதத்துக்கு வருந்துகிறேன் ராஜு.

எல்லாமே கைவிட்டுப் போகும் நிலையில் பகிர்வதற்கும் நம் நிலையைக் கேட்பதற்கும் கடவுளைத் தவிர வேறேது கதி?

கடவுளைத் தேர்வு செய்பவர்கள் புடமிட்ட தங்கமாக மீள்கிறார்கள்.

அல்லாதவர்கள் மீளமுடியாத பாதைகளில் பயணிக்கிறார்கள்.

இரண்டாம் பகுதியையும் படித்துவிட்டே இதை எழுத முடிகிறது.

வாழ்த்துக்கள் ராஜு.

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
தங்களின் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன் நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ MANO நாஞ்சில் மனோ
மிக்க நன்றி மனோ சார்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
அதனால் என்ன அண்ணா
உங்களின் கருத்தே முக்கியம் காலம் அல்ல
மிக்க நன்றி

Unknown said...

உடம்பும் உளமும்
ஒருங்கே சிலிர்கவேங்
கடவன் புகழைப்
பாடிய என்னை
தேடியே வாழதும்
தெரிவித் தீரே
கோடியாம் நன்றி
கும்பிட கரமே

புலவர் சா இராமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
தன்யனானேன் ஐயா
உங்களின் கருத்துக்கு
மனம் மகிழ்ந்த நன்றி