Friday, 6 May 2011

நட்சத்திர கொலை - 2

முடிக்க முடியாமல் விழித்து தொடரும்  என பதுங்கி பதிந்த இந்த கிரைம் (??) கதையின் முதல் பாகம் படிக்க (ணுமா?)  இங்கே  கிளிக்கவும் 

     பிரமாண்டமாய் கட்டப்பட்டு இருந்த அந்த வீட்டின் பெரிய கதவு பகாசுரன் போல வாய் பிளக்க உள்ளே நுழைந்தது ஜீப் . வெளியே ரசிகர்களும் பத்திரிகை காரர்களும் காத்திருக்க யாருக்கும் அனுமதியில்லை என கூறியபடியே உள்ளே நுழைந்தார் கபாலி.  படுக்கை அறையில் ரத்தவெள்ளத்தில் கண் திறந்து உயிர் துறந்து கிடந்தாள் யாழினி . அவளின் உடல் இருந்த இடத்திலிருந்து பத்து அடி தூரத்திற்கு அவளின் உடல் நகர்ந்ததற்கான ரத்தகோடுகள் காணப்பட்டன. வலது  மார்பில் சுடப்பட்டு இறந்திருக்கிறாள் , குறைந்தது ஐந்து குண்டுகளாவது பாய்ந்திருக்கும்,கோபம் தலைகேறி அவள் துவளும் வரை சுட்டிருக்கிறான்/ள் கொலையாளி , யார் அவன்/ள்.ஏட்டையா வை அழைத்து எல்லா போலிஸ் காரர்களும் கேக்கும் அதே கேள்வியை கேட்டார் கபாலி," யார் முதல்ல பாத்தது? தகவல் கொடுத்தது?". வீட்டு வேலைகாரி ஐயா  என கூறினார் ஏட்டையா. கூப்புடுங்க அந்த அம்மாவை என்றார் கபாலி .

   பயத்தில் உடல் நடுங்கிய படியே தன் முன்னே நின்றவளை பார்த்து "உன் பேர் என்ன" என கண்ணீர் குரலில் கேட்டார் ஆய்வாளர். மரகதமுங்கய்யா என மெல்லிய குரலில் பதில் வர ," என்னம்மா நடந்துச்சி நேத்திக்கு" என்றார் ," எனக்கு ஒண்ணும் தெரியாதுங்கய்யா , காலைல வந்து பாத்தப்போ அம்மா இப்படி கிடந்தாங்க நான்தானுங்க ஒடனே போலிசுக்கு போன் பண்ணினேன்" என்றாள். உடனே "ஏன் நீங்க யாரும் அவங்க கூட இருக்கறதில்லையா " இது கபாலி. "கூடத்தான் இருப்போம் அம்மா ஷுட்டிங் போனதுனால எல்லாம் வீட்டுக்கு போய்ட்டோம் , இன்னைக்கு வரதா அம்மா சொன்னதுனால நான் சீக்கரமே வீட்டுலேந்து கிளம்பிய் இங்க வந்து பாத்தா அம்மா இப்படி கிடக்காக, இந்த பாவத்த பன்ன படு பாவிய சும்மா உடாதிங்க அய்யா என கண்ணீருடன் பேசினாள் மரகதம்.

"ஏட்டையா எல்லா பார்மாலிடியையும் முடிச்சு பாடியை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்புங்க, பாடி திரும்ப வந்தவுடன், பாக்க வர அத்தனை பேரயும் விடாம வீடியோ  எடுங்க, மறைவா நின்னு எடுங்க. பத்திரிக்கை காரங்க போட்டோ எடுக்கும் போது எதுவும் மாறாம பாத்துக்குங்க. நான் போய் வெளியே விசாரிச்சிட்டு வந்துடுறேன்" , என்று சொல்லி ஜீப்பை நோக்கி நடந்தார் கபாலி . 

மறுநாள் காலையில் நேற்று நடந்ததை இணை ஆணையரிடம் விளக்கிவிட்டு ஏட்டையா கொடுத்து சென்ற போஸ்ட் மார்டம் ரிபோர்ட்டை படிக்க தொடங்கினார் .அதிக ரத்தம் வெளியேறி இருந்தததால் மரணம் என்றும் நடிகை மூன்று மாதம் கர்ப்பம் என்றும், சுடப்படுவதற்கு முன் ஏற்பட்ட போராட்டத்தில் அவளின் நக இடுக்குகளில் கிடைத்த சதை துணுக்குகள் DNA சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. இதுவே அந்த அறிக்கையின் சாராம்சம்.அடுத்து வந்த நாட்களில் அவரின் சராசரி வேலைகளுக்கு நடுவே இந்த கொலை சம்பந்தமான விசாரணைகளும் நடந்து கொண்டிருந்தன. இப்பொழுது அவளுடன் வெகு நெருக்கமாய் இருப்பதாக சொல்லப்படும்  தமிழ் புயல் புவனும் , கடைசியாக நடித்து கொண்டிருந்த படத்தின் கதாநாயகன் ராக்கிங் ஸ்டார் ரூபனும் அவரின் விசாரணை வளையத்திற்குள் வந்தனர். விசாரணை என்றதும் துள்ளி குதித்த தமிழ் புயல் புவன் கபாலியின் கட்டுகோப்பில் கட்டுண்டு விசாரணைக்கு வந்து பதில் சொல்லி திரும்பினான். அதற்க்கு நேர் மாறாக ராக்கிங் ஸ்டார் ரூபன் தானாகவே முன்வந்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி , கொலையாளி பிடிபட தன் முழு ஒத்துழைப்பை தருவதாக சொல்லி சென்றான் , மூன்றாவதாக மிக சமீபத்தில் யாழினியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவளின் மேக் அப் உதவியாளினி உஷாவும் விசாரணை வளையத்திக்குள் வந்தாள்.ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாது எனக்கூறியவள், பல கட்ட விசாரணையில் உண்மையை சொல்ல தொடங்கினாள்.       

 யாழினி கொலை நடந்து ஆறாவது நாள் இணை ஆணையருக்கு போன் செய்த கபாலி "ஐயா வணக்கம் , இந்த நடிகை யாழினி கொலை வழக்கில் கொலையாளியை கண்டு  பிடிச்சிட்டேன் ஐயா , நீங்க அனுமதி கொடுத்த இப்பவே கைது பண்ணிடலாம்" எனக்கூறினார் , உடனே DC "அப்படியா வெரி குட் யார் கொலையாளி" என்றார் ஆர்வமாய் ,
அதற்கு கபாலி.........................................

தொடரும் 
அடுத்த பாகத்தில் நிறைவு பெறும்

அன்பன்
ARR    

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

முதல் பகுதியை விட இது பெட்டர்…. நல்ல இடத்தில் தொடரும் போட்டாச்சே… :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

விறுவிறுப்பாகச்சென்று சடர்ன் ப்ரேக் போடபட்டுள்ளது. இறுதிப்பகுதியைப் படிக்க மிகுந்த ஆவலுடன்....vgk

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உயிரெழுத்தை விறுவிறுப்பாய்த் தொடர்ந்து வந்தால் ஃ வைத்து மெய்யெழுத்துக்காக அடுத்த பகுதிக்குக் காக்க வைத்துவிட்டீர்களே ராஜகோபாலன்? நியாய்மா?

Yaathoramani.blogspot.com said...

தொடர் மிகச் சிறப்பாகப் போகிறது
இன்ஸ்பெக்டரின் பரபரப்பு
எழுத்திலும் இருப்பதால்
ரசித்துப் படிக்க முடிகிறது
நல்ல தொடர்
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
உங்களின் உற்சாக பாராட்டுக்கள்
எனக்கு உத்வேகம் தருகிறது வெங்கட்
தங்களின் கருத்துக்கு கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மதிப்புமிக்க ஐயா
தங்களின் ஆர்வம் என்னை பெருமை கொள்ளசெய்கிறது
இது இன்னும் என் திறமையின் திறன் கூட்டும்
நல் நன்றிகள்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நியாயம் இல்லைதான் சுந்தர்ஜி ,
நிறைவு பகுதி நிறைவாய் முடிய முடிந்த மட்டும் முயற்சிக்கிறேன்.
தூண்டவேண்டிய விளக்கு நான்
தூண்டா மணிவிளக்கு நீங்கள் நீங்கள்.............
நான் நிறுத்தியதால் உங்களால் யூகிக்க முடியாதா என்ன ???

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
புதிதாய் நடக்க தொடங்கியிருக்கும் எனக்கு
உங்களின் வார்த்தைகளும் வாழ்த்துக்களும் தான் நடைவண்டி
உங்களின் பாராட்டு நடை , என் நடையை சீராக்கும், நேராக்கும்
நன்றிகள் பல ரமணி சார்

இராஜராஜேஸ்வரி said...

அழகான நடையுடன் அருமையாய் கதை. பாராட்டுக்கள்,

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
என்னை பெருமை படுத்தும்
உங்களின் பெரிய பாராட்டுக்கு
மனம் மகிழ் நன்றிகள் தோழி