Tuesday 3 May 2011

காமக் குமிழ் பேசும் தேகத் தமிழ்




கண்ணாளனே ! காதலனே! 
நன்றி ! 
நலமாய் !
நல்லவைகளை !
நாசூக்காய்!
நவின்றதர்க்கு !! 



நேற்று சூரியன் மேற்கே சாய்ந்த வேளையில்
நான் உன் மேலே மெல்ல.. மெல்ல..  சாய்ந்த வேளையில்!
கொல்லை புறத்தில் உன்னுடன் நான் ! உன்னிடம் நான் !!
கொள்ளை போனது.......................
இன்னும் என்னுளே, பச்சையாய், பசுமையாய்,
பதிந்து இருக்கின்றது!  இனிக்கின்றது !!


உன் ஒவ்வொரு ஓற்றை விரல்களிலும் 
கற்றை கற்றையாய் ....................   
இத்தனை வித்தைகளா?


உருவிய உடையில் இறுகிய என் கைகள் - நான் 
உருகிய நொடியில் நெகிழ்ந்த என் விரல்கள்

உன்னிடம் வீணையாய் மீட்ட பட்ட நான்
அதிலிருந்து மீட்கப்படாமலேயே  இருந்திருக்கலாம் !


இங்கீதம் தெரிந்தும் .....தெரியாததை போல்
இசைக்கும் சங்கீதம் இது........ 
இன்னும் சந்தோஷ சங்கமம் , 
இது சலிக்காத சம்பூர்ணம்!


காதலில் காமம் புரியாத கணிதம்
புரிந்தால் பூவாய் பூஜிக்கும் புனிதம் .......


என் கண்களை மூடவைத்தல்லவா ,என்னுள்ளே 
புதிய உலகத்தை ஓடவைத்தாய் !

அந்த கணங்களை தேடவைத்தல்லவா , என்னுள்ளே 
உன் பெயரை ஓதவைத்தாய் !


என்னுள்ளே என்னை தேடி என்னையே 
எனக்கு அறியச்  செய்தாய்
உன்னுள்ளே என்னை நூலாய் வைத்து 
நம்மையே தறியாய் நெய்தாய்

என்னில் நீ இறங்கியதும் ,உடனே நான் இளகியதும் 
 இளமையாய்,இனிமையாய் நீ இயங்கியதும் 
இதயத்தில் இசையாய் இணைந்திருக்கின்றது 
பாறை போல் பலமாய் இறுகியிருக்கிறது 

உன் வன்மையில் மென்மையாய் எழுந்த என் குரல்கள் 
வான் புகழ் வள்ளுவனின் முன்றாம் பால் குறள்கள்

உன் சீரான சீண்டல்களிலும் சில்லான சில்மிஷங்களிலும் 
என் வேரான வெட்கம் என்னை வேறாக்கிய விந்தை இது  

என் உணர்சிகளுக்கு உயிர் ஊட்டியது நீ..
என் உணர்வுகளுக்கு உரம் ஊட்டியது நீ..  



இது தீயை  தீயாய் தின்ற தருணம் ....
அது மீண்டும் மீண்டும் வரணும் !

இவ்வரம் என்று இனிவரும் 
அதுவரை நான் தனிமரம் ......

இன்னனம் 
உன்னவள் ......

அன்பன்
ARR

இந்த கவிதை என்னால் 1995 ஆம் ஆண்டு என் 21 வயதில் எழுதப்பட்டது  . இது என் மறு பதிப்பு.  

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் வன்மையில் மென்மையாய் எழுந்த என் குரல்கள்
வான் புகழ் வள்ளுவனின் முன்றாம் பால் குறள்கள்//

//இவ்வரம் என்று இனிவரும் அதுவரை நான் தனிமரம் ......//

// என் 21 வயதில் எழுதப்பட்டது //

அதனால் தான் இன்றும் இளமையோடு உள்ளது இந்தக்கவிதை. பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

மதிப்பு மிக்க ஐயா
உங்களின்
இனிய இளமை பாராட்டுக்கு
இதயம் இனிக்கும் நன்றி !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

21 வயது கவிதையில் தெரிகிறது ராஜகோபாலன்.

ஆனால் வெகுதூரம் வந்துவிட்டீர்கள் அடுத்த 15 வருடங்களில்.

உங்கள் டெம்ப்ளேட்டை மாற்றிவிடுங்களேன்.கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது அதன் பின்னணி வண்ணமும் எழுத்தும்.

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி பிரியமான சுந்தர்ஜி ,
தங்களின் கருத்துக்கும்,
தனி கவனத்திற்கும் ,
மிக்க நன்றி,
விரைவில் மாற்றி
விடுகிறேன்