Saturday, 9 July 2011

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்




           சமீப  காலங்களில் என் மனதை பாதித்த பல செயல்களில் இந்த சவ ஊர்வல அநாகரீகங்களும் ஒன்று, மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன, அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை .இதை அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே. 

               அவர்களின் சோகம் சம்பந்த்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு      நம் நிம்மதியை, நேரத்தை  கெடுக்கும்  இதுமாதிரியான செயல்களை மக்களாகிய நாம் அனுமதிக்கவே கூடாது என்பது என் விருப்பம். குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவசரமாக பல வேலைகளுக்காக செல்ல இருக்கும் சாமான்யர்களை தடுப்பது , இவர்களை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை தாக்குவது, திட்டுவது, வழி விட மறுப்பது போன்ற செயல்களை செய்யும் இவர்களை  என்ன செய்தாலும் தகும்.   

                 போகும் வழியில் அந்த சவத்திற்கு போட்ட மலர்களை வீதியெங்கும் வீசி எறிவது,( இது என்ன மாதிரியான அல்லது எதற்கான வழக்கம் என தெரிவதில்லை) நடு ரோட்டிலேயே பயங்கர ஓசையுடன் வெடி வைப்பது மாதிரியான அத்து மீறல்களை செய்வது எந்த விதத்தில் நியாயம் . இதைவிட மோசமான செயல் அந்த மாலைகளையும், மலர்களையும் போவோர் மீதும் வருவோர் மீதும் எறிவது, இதையும் விட கொடுமை இரு சக்கர வாகனங்களில் வரும் பெண்களின் மீதும்  பேருந்தில்  ஜன்னலோரம் அமர்ந்திருக்கும்  பெண்களின்  மீதும் ஒருவிதமான வக்கிர எண்ணத்துடன் அந்த பூக்களை வீசி எறிவதை என்னவென்று சொல்லுவது , அராஜகத்தின் உச்சம் அல்லவா இது .

                 ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம், இதிலும் கொடுமை இதையெல்லாம் காவல்துறையினரும் அமைதியாய் வேடிக்கைப் பார்ப்பது , கேட்டால் சட்டம் ஒழுங்கு என்ற உப்பு பெறாத காரணம் , ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.

அன்பன்
ARR  

60 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முகவரியற்றவன் இறந்தாலும் மிக முக்கியமானவன் இறந்தாலும் தொந்தரவின் அளவு மாறுபடுகிறது.

செத்த பின் சிலையானால் தொடர்கிறது வருடத்திற்கு இருமுறை அபத்தமான ஊர்வலங்கள்.

இவற்றால் யாருக்கும் நன்மையில்லை.தொந்தரவுதான்.

ஷர்புதீன் said...

சார், இன்னுமா இதையெல்லாம் எழுதுறீங்க... சரி சரி...உங்களிடம் ஒரு கேள்வி, டைரக்ட் விளைவுகள், இண்டைரக்ட் விளைவுகள் குறித்து விளக்கமா ஒரு பதிவு எழுதலாமா? ( linear , non-linear effects) ,

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நன்றி அண்ணா உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
ஏன் இதெல்லாம் இப்போது நடை பெறுவதில்லையா?? சார் , எனக்கு பிடித்ததை , பாதித்ததை எழுதுகிறேன் அதற்கு உங்கள் அனுமதியும் தேவை இல்லை என நம்புகிறேன் , அது போல உங்களுக்கும் என் அனுமதி தேவை இல்லை எழுதுங்கள். நன்றி உங்களின் வருகைக்கு

Unknown said...

சகோ
பலநாளாய் என் உள்ளத்தை
உறுத்திக்கொண்டிருந்த செய்தி
தாங்கள் குறிப்பிட்டவாறு
ஆடிப் பாடிச் செல்வதும் யார் மீது
வேண்டுமானாலும் பூ மாலைகளை
வீசுவதும் அது சவ ஊர்வலம்
என்பதையே கேவலப்படுதுவ தாகும்
திருந்தும் நிலை வரும் என்பது
சந்தேகமே

புலவர் சா இராமாநுசம்

A.R.ராஜகோபாலன் said...

@ புலவர் சா இராமாநுசம்
நன்றி ஐயா உங்களின் கருத்திற்கு

RVS said...

சுந்தர்ஜி அண்ணாவின் கருத்துக்களை வழிமொழிகிறேன். ;-)

தருமி said...

கொசுறு: 1 என்ற பகுதியை இப்பதிவில் படித்துப் பாருங்களேன் ...

A.R.ராஜகோபாலன் said...

@RVS
இனிய நண்பனின் கருத்துக்கும்
வழிமொழிதளுக்கும் நன்றிகள்

ஷர்புதீன் said...

அன்புள்ள ராஜகோபாலன் சார்!

//ஏன் இதெல்லாம் இப்போது நடை பெறுவதில்லையா?? சார் , எனக்கு பிடித்ததை , பாதித்ததை எழுதுகிறேன் அதற்கு உங்கள் அனுமதியும் தேவை இல்லை என நம்புகிறேன் //,

சரியா போச்சு, ... விளைச்சல் குறைந்தால் தக்காளி விலை ஏறும் - இது linear ., பெட்ரோல் விலை உயர்ந்தா தக்காளி விலை ஏறுமே ( டிரான்ஸ்போர்ட் கூலி அதிகமாவதன் மூலம் - non-linear ) , அது போல் இந்த மாதிரி "கொண்டாட்டங்களுக்கு " தீர்வு வேற எடத்துல இருக்கு சார், அது பற்றி எழுதினா மத பிரச்சனை வரும் - இதைதான் அப்படி நாசூக்க சொல்ல வந்தேன், சரியான முறையில் பின்னூட்டம் இடாமல் என் ஸ்டைலில் விட்டது என் தவறே...இத மாதிர் வாங்கி கட்டிகிட்டது ஏராளம் இருக்கு, அதனால் நான்தான் திருத்திக்கனும்., ! ! !

A.R.ராஜகோபாலன் said...

@தருமி
//இப்ப எல்லா வேலையும் முடிச்சிட்டுத் திரும்பி வந்துகிட்டு இருந்தது. இப்போ ஒரே கூட்டமா வரலை. அஞ்சாறு பேரா வந்துகிட்டு இருந்தாங்க. அதில அந்தப் பயலும் ஒண்ணு. ஆனா இப்போ பூனக்குட்டி மாதிரி அலம்பல் இல்லாம ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தான். அரை மணி நேரத்துக்கு முந்தி இவந்தான் அப்படி ஆடினான்னு சொன்னாக்கூட நம்ப முடியாது; அப்படி ஒரு நல்ல பிள்ளையாய் அந்த **./////

படித்தேன் ரசித்தேன் ஐயா
அருமையான நடை , உணர்வுகளை நகைச்சுவையின் வழியே எழுதியிருப்பது இன்னும் சிறப்பு

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
நன்றி உங்களின் விளக்கத்திற்கு.....

நிரூபன் said...

வணக்கம் சகோ,

இறந்தவர்களை அமைதியான முறையில் அடக்கம் செய்வதற்கு ஏன் இப்படியான ஆரவாரம்.

ஆகவே வீதியோரங்களில் பூக்களைப் பிய்த்து எறிவதும், ஒலியெழுப்புவதும் வேண்டத்தகாத விடயமாகத் தான் இருக்கிறது.

இது தொடர்பாக மாநகர, நகர கவுன்சில்கள் தான் சட்டங்களை அமுல்படுத்தி, வீதியோரங்களில் சவத்தினைக் கொண்டு செல்லும் போது ஒலி எழுப்புவதைத் தடுக்க ஆவண செய்ய வேண்டும்.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மிகவும் பயனுள்ள தீர்வான கருத்து சகோ
நன்றி உங்களின் கருத்துக்கு

சென்னை பித்தன் said...

அநேகர் மனதில் தோன்றும் எண்ணங்களைப் படம் பிடித்துக்காட்டி விட்டீர்கள்!

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
மனம் நிறைந்த நன்றி ஐயா உங்களின் கருத்திற்கு

test said...

இது எல்லா இடமும் நம்மாளுகளுக்கு இருக்கிற பிரச்சினைதான்! கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததுமே ஒரு குரங்குப் புத்தி வந்துவிடுகிறது!

Yaathoramani.blogspot.com said...

தனி மனிதனுக்குள் அடக்கிவைக்கப் பட்டிருந்த அ நாகரீகம்
கூட்டத்தில் அவிழ்த்து விடப்படுகிறது
இறுதி ஊர்வலம் என்பதால் இவர்களது அட்டகாசங்களை
சகித்துக்கொள்கிறோம்.அவ்வளவே
இது விஷயத்தில் தங்கள் கருத்தே என் கருத்தும்...

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப சரியாக சொல்லியிருக்கிரீர்கள் ராஜகோபலன், நான் இரு சக்கர வாகனத்தில் என் பெண்களை பள்ளியில் கொண்டு விட அழைத்துவர செல்லும்போது ரொம்பகஷ்டம் அனுபவித்திருக்கிறேன்.இதை சட்டதால் ஏதாவது செய்யமுடியுமா என்று தெரியவில்லை. அவர்களாக திருந்தினால்தான் உண்டு.

Unknown said...

நண்பரே ....
உங்கள் பிரச்னை புரிகிறது இது கல்வி அறிவு பெருகி தலைவர்கள் இரண்டாம் தர அரசியல் செய்யாமல் நிறுத்தும் வரை ஓயாது என்பது என்கருத்து ... கியாஸ் தியரி சரியா நண்பா

துளசி கோபால் said...

இந்த ஒன்னுக்காகவே இந்தியாவில் இருக்குபோது செத்துடக்கூடாதுன்னு வேண்டிக்குவேன்.

எனக்குத் தேவை வெரி கொயட் எக்ஸிட்.

சவ ஊர்வலத்தில் குடிச்சுட்டு ஆடுவதைப் பார்த்தாலே...... :(

A.R.ராஜகோபாலன் said...

@ஜீ...
உண்மைதான் சார் அந்த புத்தி மாறவேண்டும் சார்
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@@ Ramani
//தனி மனிதனுக்குள் அடக்கிவைக்கப் பட்டிருந்த அ நாகரீகம்
கூட்டத்தில் அவிழ்த்து விடப்படுகிறது//

மிகச் சரியாக சொன்னிர்கள் சார்
இதுதான் எதார்த்தமான உண்மை
நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@ RAMVI
சட்டத்தால் செய்ய முடியாதது எதுமே இல்லை சார்
இது மாதிரியான அத்துமீறலை பார்த்த இடத்திலேயே இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்
நன்றி உங்களின் கருத்துக்கு

வெங்கட் நாகராஜ் said...

சோகத்தில் இருக்கும் போது கூட அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வது.... என்ன சொல்வது நண்பரே.... :(

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
///கியாஸ் தியரி சரியா நண்பா///

ஹி ஹி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் நண்பா (ஆமா அது என்ன தியரி) நன்றி உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@துளசி கோபால்
உங்களின் கருத்துக்கு நன்றி டீச்சர்,
ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டுகிறேன்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
அதுதானே அன்பரே நம்மவர்களின் சிறப்பே , ஆனாலும் சோகத்தில் இருப்பவர்கள் எதுவும் செய்வதில்லை , சில அல்லக்கைகள் ஆட்டம் தான்
நன்றி உங்களின் கருத்துக்கு

ஷர்புதீன் said...

@ ரியாஸ்
நீங்க என்கிட்டேயா கேட்குறீங்க ? ( கேயாஸ் மேட்டர்) , விளக்கிடுவோமா?

Amudhavan said...

சரியான கருத்தை சரியானமுறையிலேயே சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் குடித்துவிட்டு லுங்கியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாய் வழித்துக்கட்டிக்கொண்டு மோசமான அங்க அசைவுகளுடன் ஆடுவது ஆபாசத்தின் உச்சம். பெங்களூரில் இந்த ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவருடன் போய்க்கொண்டிருந்தபோது எதிரேவந்த ஒரு ஊர்வலத்தைப் பார்த்ததும் "சவ ஊர்வலங்களில் இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்பவர்கள் தமிழர்களைத்தவிர யாரும் இல்லை" என்றார். அவர் கருத்து உண்மையோ பொய்யோ ஆனால் அன்றைக்கு பதில் சொல்லமுடியாமல் மௌனித்துப்போனது இப்போதும் வலிக்கிறது.

A.R.ராஜகோபாலன் said...

@Amudhavan
மிக்க நன்றி சார் , அந்த மாதிரியான இழிநிலை மாறவேண்டும் என்பதே என் எண்ணம் சார்

வல்லிசிம்ஹன் said...

Sri.Rajagopalan,
we all are going todie someday. But for that policy alone bearing this boorish behaviour indicates our vulnerability.
We were proceeding to of our children's wedding. and this oorvalam came. the chaos,smell,the crackers right across our car was so nerve racking.
It totally unnerved me. Thanks for writing abt this.

A.R.ராஜகோபாலன் said...

@வல்லிசிம்ஹன்
உங்களின் கருத்தை முழுதாய் ஏற்றுக் கொள்கிறேன் சார்
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

அமைதி அப்பா said...

இவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

இது மாதிரி நிறைய எழுதுங்கள் சார். இதெல்லாம் தவறு என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா?

அதிகளவில் மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் இந்த மாதிரி விஷயத்தில் கவனம் செலுத்த, உங்களைப் போன்றவர்களின் இந்த மாதிரியான எழுத்துத் தூண்டுகோலாக அமையும்.

நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
உங்களின் உற்சாகமான ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றி சார்

Madhavan Srinivasagopalan said...

நியாமான கேள்விகள்..

ம்ம்ம்ம்.. நம்மிடம்தான் எத்தனை கேள்விகள், விடை தெரியாமல்..

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
உங்களின் கருத்துக்கு மனம் மகிழ்ந்த நன்றி மாதவன்

baleno said...

எனது சில நண்பர்கள் தமிழ்நாட்டு கல்லூரியில் படித்தவர்கள். அவர்கள் சொல்வார்கள் தமிழ்நாட்டில் இறந்தவர்களின் அடக்க நிகழ்வின் போது நடனம் எல்லாம் ஆடி அநாகரீகமாக நடப்பார்கள் என்று. நாங்கள் அவர்கள் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டு கொண்டிருந்தோம். இப்போ நீங்கள் எழுதியதை புரிந்து கொள்ள முடிகிறது.

suvanappiriyan said...

சிந்திக்க வைக்கும் பதிவு!

சுதா SJ said...

பாஸ் நாம் யோசித்து நடக்க வேண்டியது,
உங்கள் ஆதங்கத்தை சொல்லி விட்டீர்கள்

ஸ்ரீராம். said...

வருத்தப் பட வைக்கும், சங்கடப் படவைக்கும், மாற்றப் பட வேண்டிய நிகழ்வுகள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.//

சாட்டை சாட்டை மக்கா சாட்டையடி சரியான சவுக்கடி....!!!

மாலதி said...

இறந்தவர்களை அமைதியான முறையில் அடக்கம் செய்வதற்கு ஏன் இப்படியான ஆரவாரம்.

vidivelli said...

arumaiyaana pathivu...
valththukkal anna,,,,,

A.R.ராஜகோபாலன் said...

@baleno
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@சுவனப்பிரியன்
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
மனம் நிறைந்த நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
மனம் நிறைந்த நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ ஸ்ரீராம்.

மனம் நிறைந்த நன்றி நண்பரே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@மாலதி
மனம் நிறைந்த நன்றி சகோதரி
உங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
மனம் நிறைந்த நன்றி சகோ

settaikkaran said...

//மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன,//

சென்னையில் இந்தப் பிரச்சினை நிறையவே இருக்கிறது. சில சமயங்களில் நெல்சன் மாணிக்கம் சாலையிலும், லயோலா கல்லூரி அருகிலும் இது போன்ற சவ ஊர்வலங்கள் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதைப் பலமுறை பார்த்து நொந்திருக்கிறேன். (கண்ணம்மாபேட்டை காரணமாய் உஸ்மான் ரோட்டில் ஏற்படுகிற நெரிசல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!)

//அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை.//

இந்த விஷயத்தில் சென்னைவாசிகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! சில நாட்களுக்கு முன்னர் ஜாக்கி சேகர் அண்ணன் எழுதிய பதிவிலும் எழுதியிருந்தேன். ஆம்புலன்ஸுகளுக்கு வழிகொடுக்காததோடு, அவற்றை முந்திச் செல்ல முயன்று மேலும் சிக்கலாக்கும் வாகன ஓட்டிகளை தினமும் சென்னை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

//குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்//

ஊஹும்! யாரும் தண்டிக்க மாட்டார்கள். கண்டிக்கவே துணிச்சல் இல்லாதவர்கள்! காரணங்களை ஆராயத்தொடங்கினால் சர்ச்சைகள் வரும்.

குடித்துவிட்டு ஆடுவது, பெண்களின் மீது பூக்களை வீசுவது, ஆட்சேபித்தால் வசைமாரி பொழிவது என இவையெல்லாம் தங்களது பிறப்புரிமை என்று எண்ணுகிறவர்களை என்னவென்று சொல்வது?

//ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம்,//

அதே தான்! எவனுக்கும் சட்டத்தின் மீது பயமில்லை என்பதற்கு இது போன்ற சவ ஊர்வலங்களில் நிகழும் அசிங்கங்களே உதாரணம்.

அருமையான இடுகை! உங்களது ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@சேட்டைக்காரன்

உங்களின் கருத்தாயிந்த பின்னூட்டத்திக்கு மனம் நிறைந்த நன்றி நண்பரே

Unknown said...

உங்கள் பார்வையும் நியாயமானதே நண்பா!!

A.R.ராஜகோபாலன் said...

@மைந்தன் சிவா
நன்றி தலைவா உங்களின் கருத்துக்கு

ரிஷபன் said...

பஸ்ஸுக்குள்ளலாம் தூக்கிப் போடுவாங்க.. ஒரு பக்கம் அவங்க துக்கம் கூட ஷோ மாதிரி தெரியும்.. நிஜமா இழப்பின் வலி புரிஞ்சு ஊர்வலம் போகிற மாதிரி இல்லை பெரும்பாலான சவ ஊர்வலங்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@ரிஷபன்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி சார்

G.M Balasubramaniam said...

இறப்பு என்பது ஒரு இழப்பு என்று கருதாமல் போகிறவரை சந்தோஷமாக வழியனுப்பும் சில முறைகள் பல முறை அருவருக்கத்தக்கதே. என்ன செய்ய. ?இதற்கு ஏதாவது கலாச்சாரப் பின்னணி இருக்கும். !!!!

துளசி கோபால் said...

எங்க ஊரிலும் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் ரொம்பப் பண்ணுவதில்லை.

ஆனால் அடுத்தவங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்காது.

நேரம் இருந்தால் இந்த மரண நிகழ்ச்சியைப் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2005/06/blog-post_03.html

C handra said...

இது அனைத்துக்கும் மூலாதாரக்காரணம் ~டாஸ்மாக்~ என்ற சனியன். அந்த மூத்திரத்தை குடித்தவுடன்.,அத்வும் கூட 4 நாய் சேர்ந்து இருந்தால் போதும். ஏதோ இவனுங்களே செத்துட்ட மாதிரி ஆடுறதும், சே, கேவலமான ஜென்மங்கள்