Tuesday 24 May 2011

சமச்சீர் கல்வியும் சில சந்தேகங்களும்

இன்று எல்லோராலும் உச்சரிக்க படுகின்ற ஒரு வார்த்தை சமச்சீர் கல்வி




        சமச்சீர் கல்விக்கு தமிழக அமைச்சரவை தடை ,சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பழைய பாடப் புத்தகங்களே பயன்படுத்தப்பட உள்ளன. பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதை பற்றி பேசுவதற்கு முன் நாம் சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று பார்ப்போம்.

சமச்சீர் கல்வி முறை

சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்குகிறது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளையும் ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் சமச்சீர் கல்வி முறையின் திட்டம்.

                   இது சென்ற ஆண்டு முதல் தவணையாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டது , இந்த ஆண்டு அது பத்தாம் வகுப்பு வரை செயல்பாட்டுக்கு வருவதாக சொல்லி அதற்கான ஆயத்த வேலைகளையும் தொடங்கிவிட்டது சென்ற அரசு.இதுவரை இந்தப் பாடத்திட்டத்திற்காக  ரூ.200 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டங்கள்  சமச்சீர் கல்விக்காக கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத்திட்டம் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்டது. வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறு ஆய்வுக் குழு ஆகிய மூன்றுக் குழுக்களால் பாடநூல்கள் எழுதப்பட்டன.

                          ஆனால் உண்மையில் இப்போது அறிமுகப்படுத்தப்பட இருந்தது பொதுப்பாடத்திட்டம் மட்டுமே. சமச்சீர் கல்வி அல்ல. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே சமச்சீர் கல்வி அளிக்க முடியும்.



சந்தேகங்கள்
  •  சமசீர் கல்வி முறை உண்மையிலேயே தரம் இன்றி இருப்பதால்தான் தடை செய்யப்பட்டதா , இல்லை அதில் உள்ள முன்னாள் முதல்வர் எழுதிய செம்மொழி பாடலால் நிறுத்தப்பட்டதா ?
  • உண்மையான  காரணம் எழுத்து, கருத்துப் பிழைகள்தான் எனில், அதில் உள்ள குறைகளை, எழுத்து, கருத்துப் பிழைகள் இருக்குமானால் சுற்றறிக்கைகள் மூலம் அதை நீக்கலாம், அதற்காக பாடத்திட்டத்தையே மாற்றுவது மாணவர்களைப் பாதிக்காதா ?
  • இந்த சமச்சீர்பாடத்திட்டம் அமலில் இருக்கும்போதே, கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசு வல்லுநர் குழு நியமித்து ஆராயமுடியாதா?
  • பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்பது சரி, ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் , நிலவும் மின்தடையில் எல்லா வகுப்பிற்கான பாட புத்தகங்களை அச்சிடமுடியுமா , முடிந்தாலும் அது பிழை இன்றி இருக்குமா ?
  • இந்தப் பாடத்திட்டத்திற்காக ரூ.200 கோடி செலவில் அச்சிடப்பட்டுள்ள 6.5 கோடி புத்தகங்கள் என்னவாகும் ?
  • இந்த மறு பதிப்பிற்கான செலவு மற்றும் கால விரயத்திற்கு யார் பொறுப்பாவது? 
  • சட்டசபையை பழைய ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றும் செயல் பெரிய பாதிப்பை உருவாக்க போவதில்லை , ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை  நிர்ணயிக்கும் கல்வியில் இது போன்ற அதிரடி அவசர முடிவுகள் தேவையா ?
  • சென்ற அரசு தவறு செய்வதாக சொல்லி மீண்டும் இவர்கள் தவறான செயலை செய்வது போல் ஆகிவிடாதா ?
  • இதற்கு  இதை தவிர வேறு நல்ல தீர்வே கிடையாதா 
அன்பன்
ARR

21 comments:

Yaathoramani.blogspot.com said...

தங்கள் எழுப்பிய கேள்விகள்
அனைவரின் மனத்திலும் உள்ளவையே
இதற்கு தெளிவான விடை கிடைக்குமா?
அரசு எடுத்துள்ளது நல்ல முடிவா?
அல்லது வரட்டு அரசியலா?
குழப்பமாகத்தான் உள்ளது
மிகச் சரியான பிரச்சனையை
மிகச் சரியாக எடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

சரியான சமயத்தில் சரியான பகிர்வு. திடீரென இப்படி மாற்றியதால் பாதிக்கப்படுவது மாணவர்களே.. நண்பரின் மகள் பத்தாவது இந்த வருடம். ஒன்றரை மாதமாக வகுப்புகளில் இந்த புதிய புத்தகங்கள் வைத்து பாடம் எடுத்து விட்டார்கள், இப்போது எல்லாமே மாறிவிடுமே என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாள்…. எங்கே முடியப்போகிறது இது புரியவில்லை…..

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
தங்களின் இந்த அக்கறையான பார்வைக்கும்
உடனடி கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
உண்மையை சொல்வதென்றால் உங்களின் கருத்து ,எனக்கு இது ஒரு புது பக்கத்தின் நியாயத்தை சொல்கிறது, தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

வை.கோபாலகிருஷ்ணன் said...

தற்சமயம் என் வீட்டில் யாரும் தமிழகப்பள்ளிகளில் படிக்காததால், இந்தப்பிரச்சனையின் ஆழம் அறியாமல் இருந்து விட்டேன்.

கடந்த 10 நாட்களாகவே இது சம்பந்தமான பல்வேறு செய்திகளை/யூகங்களைப் படித்து வருகிறேன்.

உங்கள் பதிவைப்படித்தபிறகு தான் பிரச்சனையின் ஆழத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

வெங்கட் சுட்டிக்காட்டியிருப்பதுபோல யார்யார் இன்னும் எந்தெந்த விதங்களில் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகப் போகிறார்களோ!

ஈஸ்வரோ ரக்ஷது !

காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
உங்களின் கருத்து என் பதிவிற்கு வலு சேர்க்கும்

Unknown said...

நமது ஊடகங்கள் பொறுப்புடன் எழுப்ப வேண்டிய கேள்வியை நீங்கள் ஆழமாக பதிவு செய்து எங்கள் மனம் கவர்ந்து விட்டீர்கள் .நன்றி

நிரூபன் said...

சமச்சீர் கல்வி பற்றிய தங்களின் கேள்விகள் நியாயமானவை. இது பற்றிய ஆழ்ந்த அறிவோ, அல்லது தமிழ்கக் கல்வி முறமைகள் பற்றிய ஆழ்ந்த அறிவோ எனக்கு இல்லை என்பதால் அதிகமாக கருத்திட முடியவில்லை

நிரூபன் said...

சம கால கல்விச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் புதிய பாட நூல்களைப் புறக்கணித்துப் பழைய பாடப் புத்தகங்களை மீண்டும் கொண்டு வருவதென்பது மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் விடயம்,
பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் வகையில் புதிய பாடப் புத்தங்களை மீண்டும் அமுல்படுத்துவதே சமச்சீர் கல்விக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சான்று பயக்கும்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கல்வியின் தரம் பெரிதாக மாறிவிடும் என்று எனக்குப் படவில்லை.

ஆனாலும் ஒரு நீண்டகாலத் திட்டத்தை அணுகும்போது அதற்கேற்ற பொறுப்பும் பொறுமையும் கண்டிப்பாகத் தேவை.

மாணவர்கள்தான் எப்போதும் தங்களை சரி(அட்ஜஸ்ட்) செய்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பரே நான் இன்றுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பூ வருகிறேன்! சமச்ச்சீர் கல்வி தொடர்பான உங்கள் கேள்விகள் ஞாயமானவை! - நண்பர் நிருபன் சொன்னது எனக்கும் பொருந்தும் !!

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
தங்களின் கருத்துக்கு மிக நன்றி ரியாஸ்

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
மிக்க நன்றி சகோ தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
கல்வியில் அரசியல் இருக்கட்டும் , அரசியல் கல்வியில் இருக்க வேண்டாமே அண்ணா

A.R.ராஜகோபாலன் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
தங்களிம் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
நம்பர் ஒன் பதிவர் என் வலைப்பூவை பார்வை இட்டதும் கருத்து வழங்கியதும் என் பாக்கியம்

Anonymous said...

நியாயமான கேள்விகள் ஐயா, இதிலும் அரசியல் புகுத்தப்பட்டால் அது வேதனைக்குரியதே ...

A.R.ராஜகோபாலன் said...

@கந்தசாமி.
மிக்க நன்றி ஐயா

அமைதி அப்பா said...

எனக்கு ஒன்றும் புரியவில்லை.....

G.M Balasubramaniam said...

நிகழ்வுகளை செய்திகளிலும் தொலைக்காட்சியிலும் தொடர்கிறேன் இப்போது ஒரு கேஸ் வேறு பதிவாயிருக்கிறது. செம்மொழிப் பாடலை வேண்டுமானால் அகற்றலாம் என்று கலைஞரே கூறியதாகத் தகவல். இவர்களின் ஆட்டங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
என் பதிவு புரியவில்லையா???

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
எது எப்படி இருப்பினும் மாணவர்களின் நலன் பாதுகாக்க படவேண்டும் ஐயா