Sunday 22 May 2011

நெடுந்தொடர் என்னும் கொடுந்தொடர்கள்

        இப்போதெல்லாம் எல்லா சேனல்களிலும் நெடுந்தொடர் என்பது மிக முக்கியமான ஒன்றாகி போய்விட்டது , அதை யாரும் குறை சொல்லவில்லை, ஆனால் அதற்கு அவர்கள் எடுத்துகொள்ளும் கதை கருவும் அதை அவர்கள் (திரைக்கதை)கொண்டுசெல்லும் விதமும்தான் என்னை கொதிப்படைய செய்கிறது. இன்று தொடர்ந்துவரும் எல்லா தொடர்களிலுமே உள்ள முக்கிய கரு



  1. அடுத்தவள் கணவன் மேல் ஆசைப்படுவது 
  2. பில்லி சூன்யம் 
  3. இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டவன் 

   மேற்கண்ட இவை  இல்லாத தொடர்களை நாம் பார்ப்பது என்பது மிக அரிது. இது போன்ற தொடர்கள் டி ஆர் பி ரேட்டிங்கில் உயரே வருவதால் இது மாதிரியான தொடர்களே அதிகம் வருகின்றது , ஆனால் இதை பார்க்கும் இளம் தலைமுறையினர் இதெல்லாம் சரிதான் என்று நினைத்து விட மாட்டார்களா , அவர்களும் அதே மாதிரி செயல்களில் ஈடுபட்டால் நம் கலாச்சாரம் என்ன ஆவது. அதிலும் அதிகம் அதில் வரும் வசனங்கள்

  • எனக்கு நீதான் வேணும் மாமா உன்னை எப்படியும் அடைஞ்சே தீருவேன்
  • உன் புருஷனை எனதாக்கி காட்டுறேண்டி 
  • இது ஆண்டவனுக்கும்  மீறின செயல்  
  இப்படியான வசனங்கள் இளந்தலைமுறையினரிடம்   மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஏன் இந்த தொடர் தயாரிப்பாளர்கள் உணருவதேயில்லை. அதையும் விட கொடுமை இதையெல்லாம் நாம்  குழந்தைகளுடம் பார்ப்பது .

அடுத்து குழந்தைகளுக்கான கார்டூன் சேனல்கள் , 


இதில் வருபவை அருவருப்பின் உச்சம். சின்ன குழந்தைகளே காதலையும்,டேட்டிங்கை பற்றியும் பேசுவதை என்னவென்று சொல்லுவது, நம் நாட்டிற்கே சம்பந்தம் இல்லாத எதாவது ஒரு நாட்டின் கார்டூனை தமிழ்படுத்துவதால் வரும் வினை இது, கோடி கோடியாய் பணம் சம்பாதிப்பவர்கள் குழந்தைகளுக்காக இந்திய கலாச்சாரம் சார்ந்த ஒரு தொடரை தயாரிக்க முடியாதா?.  இல்லாவிட்டால் அடிதடி இப்படியான தொடர்களை பார்த்து வளரும் குழந்தைகளின் மனநிலையும் எதிர்காலமும்   எப்படி இருக்கும். முன்பு போல நீதி கதைகளையும், போதனை கதைகளையும் சொல்ல இன்றைய தனி குடும்பங்களில் வழியே இல்லை. அப்படியே இருந்தாலும் பெரும்பாலான பாட்டிகள் தவமிருப்பது தொலைகாட்சி பெட்டிகளின் முன்னால்தான், இதில் விதிவிலக்கான தாத்தா பாட்டிகளும் உண்டு .இதனால் குழந்தைகளும் கண்ணும் கெட்டு  மனமும் கெட்டு போகின்றது. நாமும் குழந்தைகள் வால்தனம் பண்ணாமல் அமைதியாய் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர்களை டி வி முன்னாள் அமரவைத்து  விடுகிறோம்.அதுவும் இல்லாமல் தொடர்ந்து டி வி பார்க்கும் குழந்தைகளுக்கு இருதய நோய் வர அதிக சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானம் சொல்லுகிறது.  

          வீட்டிற்கே வில்லங்கத்தை அழைத்து வரும் இந்த நெடுந்தொடர்களுக்கும்,
கார்டூன் சேனல்களுக்கும் தீர்வு என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அன்பன்
ARR  

28 comments:

Madhavan Srinivasagopalan said...

எனக்கு இதே கவலைகள் உண்டு..
விடை தருவார் யாரோ..?

Unknown said...

டிவி சீரியல் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து ,அதே நேரத்தில் பயனுள்ள கருத்துள்ள டிவி நிகழ்சிகளை பார்த்து பயன் பெறலாம் .கருத்துள்ள நிகழ்சிகளின் டி ஆர் பீ ரேட்டிங் உயர்ந்தால் எல்லோரும் நல்ல நிகழ்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு தருவார்கள் ,,, மொதல்ல நம்ம ஆதங்கங்கள் நம்ம வீட்டுல கேப்பால்லுகளா .. no chance

மங்குனி அமைச்சர் said...

தீர்வு என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.///

ஹி.ஹி.ஹி.......... நான் சொல்லுறேன் சார் ...

இப்போ நாம இதுக்கு தீர்வு கானவுமின்னா , முதல்ல ..............

"விளம்பர இடைவேளை "

இம்ம்ம் ..... முதல்ல என்ன பன்னனுமின்னா ???? அந்த டீ.வி ........

"விளம்பர இடைவேளை "

அந்த டீ.வி தோடர்கள.........

(தொடரும் )

மீண்டும் நாளை காலை பதினோரு மணிக்கு

MANO நாஞ்சில் மனோ said...

இதுல தேவயானி கொடுக்குற விளம்பர டார்ச்சர் இருக்கே ராஜ் நியூஸ் சானல்ல முடியலைடா....!!!!

கிழவியை போயி இப்பமும் அழகு தேவதை அழகு தேவதைன்னு சொல்லி கடுப்பேத்துராணுக....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தொலைக்காட்சியையே தவிர்ப்பதுதான் ஒரே வழி.

விஷத்தைப் பருகுவதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அதைக் கைக்கெட்டா தொலைவில் வைப்பதோ அல்லது கிடைக்காமலோ இருக்கச் செய்வதுதான் ராஜு.

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
உண்மையான கருத்து மாதவன்
வருகைக்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
சரியான கருத்து ரியாஸ்
நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@மங்குனி அமைச்சர்
சரிதான் ஹ ஹ்ஹா ஹா
மங்குனி அமைச்சர்
சியான குசும்புனி அமைச்சர்தான்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ MANO நாஞ்சில் மனோ
உண்மை உண்மை மிக உண்மை
நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நிதர்சனமான கருத்து அண்ணா
நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தொலைக்காட்சியின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரே வழி... அதிலிருந்து விலகுவது தான்.

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
உண்மையான கருத்து நண்பரே

தினேஷ்குமார் said...

எங்க வீட்டை பொருத்தவரையில் யாரும் டிவி சீரியல் பார்க்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கோம் அண்ணே ..

சீரியலை பார்த்து பல குடும்பங்கள் வீணாகின்றன என்பது என் கருத்து ....

அதை விடுத்து நல்ல நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கு அதைச் செய்யலாம் சரியா அண்ணே....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வீட்டிற்கே வில்லங்கத்தை அழைத்து வரும் இந்த நெடுந்தொடர்களுக்கும்,
கார்டூன் சேனல்களுக்கும் தீர்வு என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

தீர்வே கிடையாது. இவற்றை எப்போதும் ரசித்துப்பார்ப்பவர்களுக்கே ஒருவித அலுப்போ, எரிச்சலோ அல்லது கண்பார்வைக்கோளாறுகளோ ஏற்பட்டால் தான் ஒதுங்குவார்கள்.

வில்லங்கத்தை நிறுத்த முயற்சித்த எனக்கு பலவித வில்லங்கங்கள் வீட்டில் உள்ளவர்களாலேயே ஏற்பட்டதால், நான் மட்டும் இவற்றைப்பார்ப்பதிலிருந்து ஒதுங்கிக்கொண்டுள்ளேன்.

வேறு எதுவுமே செய்வதற்கு இல்லை.

A.R.ராஜகோபாலன் said...

@தினேஷ்குமார்
மிகச்சரியான முடிவு
அதுசரி கல்யாணம் ஆனா உடனேயே கண்டிஷனா ???
தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
எனக்கும் நீங்கள் சொல்லுவதே நல்ல தீர்வாக படுகிறது ஐயா
தவிர்க்க சொன்னால் , அது தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை. தங்களின் கவனத்திற்கும் கருத்திற்கும் நன்றி

Matangi Mawley said...

படிச்சத use பண்ணனும். நாம பாக்கறது நம்ம கொழந்தைகளுக்கும் உகந்ததா-ன்னு parents தான் சிந்திக்கணும்... வளர்க்கும் போதே 'cultural inputs' கொடுத்து குழந்தைகள வளக்கணும்... அப்பா அம்மா வுக்கு படிக்கற பழக்கம்... டிவி பாக்காத பழக்கம் இருந்தா- கொழந்தைகளுக்கும் அது கண்டிப்பா வரும்... எத்தனையோ வழிகள் சொல்லலாம்... யார் கேட்பாராம்?

A.R.ராஜகோபாலன் said...

@ Matangi Mawley
பெற்றோர்களின் பொறுப்பையும்
விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்
என்பதையும் சரியாக சொன்னீர்கள்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி தோழி

Srividya said...

என்னதான் சொன்னாலும் டி வி பாக்காம இருக்க முடியலையே , அதுக்கு என்ன பண்ணலாம் ???

A.R.ராஜகோபாலன் said...

@Srividya
ஒண்ணுமே பண்ண முடியாது
கருத்துக்கு நன்றி ஸ்ரீ

Unknown said...

கிணற்று நீரில் நஞ்சு கலந்தால்
நீரை அகற்றி விடலாம் ஊற்றே
நஞ்சானால்---?

என்ன செய்யலாம் கிணற்றைத்தான மூடவேண்டும் ---மெகாத் தொடர்
இல்லென்னா நம்ம மகாஜெனமே
சண்டைக்கு வருமே
ஆண்டவன் தான காப்பத்தனும்

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

இந்தக் கொடுந் தொடர்களைப் புறக்கணிப்பது தொடர்பாக நான் சொல்லப் போகும் தீர்வு உங்களுக்கு நகைச்சுவையாகத் தோன்றலாம்.
ஆனாலும் சொல்லுறேன். ஒரே வழி, டீவிப் பெட்டியை ஆப் பண்ணி வைத்தல். அல்லது பயனுள்ள டிஸ்கவரி சனலைப் பார்த்தல்.

A.R.ராஜகோபாலன் said...

@ புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
மனம் நிறைந்த நன்றி சகோ உங்கள் ஆலோசனைப்படி தமிழ் மனத்தில் இணைத்து விட்டேன்

bandhu said...

இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்களை 1970-80 களில் அமெரிக்கர்கள் அனுபவித்திருப்பார்கள் போல் உள்ளது. அதில் ஒன்று நெடுந்தொடர். இப்போதெல்லாம் அமெரிக்க தொலை காட்சிகளில் நம் ஊரில் வருவது போன்ற தொடர்கள் அதிகம் காணோம். அதே போல் நம்ம ஊரிலும் அது போல் காணாமல் போகும் என்று நம்புவோம்!

A.R.ராஜகோபாலன் said...

@ bandhu
நல்ல நம்பிக்கையை தரும் கருத்து
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

வெட்டிபையன் said...

makkal tv paarungo...