Saturday, 21 May 2011

மன்னித்துவிடு மன்னவளே



வேதனையில் வெந்து 
வெதும்புகிறேன் ......
நான் செய்த தவறு 
இன்று என்னவளை 
பாதிக்க ............
கண்ணீர் இன்றி 
அழுகிறேன் 
மன்னியடி 
பாவி எனை 
என உன் கரம்
பற்றி குரல் உடைந்து 
தொழுகிறேன் 
ஆயினும் நீ 
என்னால் வந்த 
வலி தாங்கி முகத்தில் 
அன்பின் அற்புத 
ஒளி தாங்கி 
"இதில் மன்னிக்க 
ஏதுமில்லையே 
நான் யார் 
உங்களவள் இல்லையா?"
என பாசமாய் வினவுகிறாய்  
தீயாய் தகிக்கிறது 
என் மனம் 
தண்டிப்பதை விட 
அதை மன்னிப்பதும்
மறப்பதும் தான் 
பெரிய தண்டனை 
கோடாரியால் வெட்டியவனை 
பார்த்து , கவனம் 
கையில் பட்டுவிட போகிறது 
என்கிறாய், 
குழந்தையை போல 
நான் அழ 
தாயை போல 
தேற்றுகிறாய்
என்னுடைய 
குற்றஉணர்வு 
நெருப்பில் இட்ட புழுவாய் 
என்னை துடி துடிக்க  செய்ய 
அன்பே என்னை 
கோபமாய் அடிக்கவாவது 
செய்யேன் 
என நான் மன்றாட 
வேகமாய் 
என்னை இழுத்து
முத்தமிடுகிறாய்  
 இது  நான் பெற்ற
பாக்கியமா? 
இல்லை 
பொக்கிஷமா?

மன்னிக்கவேண்டி
உன்னவன் 
உன் 
உயிரானவன்  
    

  

22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அன்பே என்னை
கோபமாய் அடிக்கவாவது
செய்யேன்
என நான் மன்றாட
வேகமாய்
என்னை இழுத்து
முத்தமிடுகிறாய் //

பாக்கியமோ பொக்கிஷமோ கல்யாணமான புதுசு என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகவே உணர முடிகிறது. ENJOY. ALL THE BEST.

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
ஹாஹ்ஹா
இல்லை ஐயா
கல்யாணம் ஆகி ஆச்சி வருடம் ஒன்பது
ஆயினும் உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

Unknown said...

குற்றஉணர்வு மரண தண்டனையை விட கொடியது ....இல்லையா ?

மன்னிப்பை ஏற்றும் மன்னித்தும் மனமுவந்து நீடுடி வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க அசத்துங்க கோபாலன்...

Yaathoramani.blogspot.com said...

ஆக்ரோஷமான அன்பின் வெளிப்பாட்டை
அருமையாக உணர்த்திச் செல்லும்
அழகிய கவிதை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
மிக உண்மை ரியாஸ்
தங்களின் கருத்துக்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ MANO நாஞ்சில் மனோ
எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் மனோ சார்

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மிக்க நன்றி சார்

மனோவி said...

அடிக்காவது செய்யேன்..

கொஞ்ச நாள் பொறும் விரும்பியது தானாக கிடைக்கும்..

A.R.ராஜகோபாலன் said...

@மனோவி
ஹஹ்ஹா
அனுபவமா அன்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே…

//கொஞ்ச நாள் பொறும் விரும்பியது தானாக கிடைக்கும்.. //

அதானே…. யார் யாருக்கு என்னென்ன அனுபவமோ :)

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பரே தங்களின் நல்ல கருத்துக்கு

இராஜராஜேஸ்வரி said...

தண்டிப்பதை விட
அதை மன்னிப்பதும்
மறப்பதும் தான்
பெரிய தண்டனை//
மிக உண்மை!!

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி மேடம்

மனோ சாமிநாதன் said...

இதயத்து அன்பெல்லாம் பொங்கி வழிவது போன்ற கவிதை! அருமை!

இராஜராஜேஸ்வரி said...

இது நான் பெற்ற
பாக்கியமா?
இல்லை
பொக்கிஷமா?
அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@ மனோ சாமிநாதன்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி மேடம்

A.R.ராஜகோபாலன் said...

@ இராஜராஜேஸ்வரி
தங்களின்
இரண்டாவது கருத்துக்கும்
பாத்தியமாகியது என்
பாக்கியம் மேடம்
மனம் நிறைந்த நன்றி

குணசேகரன்... said...

என்ன தப்பு செஞ்சீங்க?
மனதின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்..

A.R.ராஜகோபாலன் said...

யாருமே கேட்காத கேள்வி
அது என் கோபம் என்னை கொடுரனாக்கிய கோரம்
மேலே வேண்டாமே ....
தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

நிரூபன் said...

கோடாரியால் வெட்டியவனை
பார்த்து , கவனம்
கையில் பட்டுவிட போகிறது
என்கிறாய்,//

நேரில் சொல்லி, பதில் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் கவிதையில் சொல்லுகிறீர்களோ;
என நினைக்கிறேன். காரணம் அந்தளவிற்கு உணர்வுகள் ஒருங்கிணைய மனதில் இரக்கமும், பாசமும் பொங்கும் வண்ணம்
மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் கவிதையாகப் படைத்திருக்கிறீர்கள் சகோ.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மிக்க நன்றி சகோ
நேரில் இல்லாததால் கவிதையில் எழுதினேன்
மன்னிக்க வேண்டியவள் இன்னும் படிக்கவில்லை
உள்ளத்தில் உறுத்தியதை எழுதினேன் சகோ