Wednesday, 18 May 2011

இனி..... கலைஞர் செய்ய வேண்டியது

                                         ஒருவர் தோற்று போனதனாலேயே அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தவறு, அவரை வெற்றி கொண்டவர் தவறே செய்யாதவர் என்ற கோணத்தில் நான் இதை  இங்கு எழுதவில்லை, அதுவும் இல்லாமல் கலைஞருக்கோ அவரின் தி மு கழகத்திற்கோ இது போன்ற தோல்விகள் ஒன்றும் புதிதல்ல , சாம்பலில் இருந்து மீண்டு வந்த பீனிக்ஸ் பறவை போல் பல முறை மீண்டு வந்திருக்கிறார் கருணாநிதி , ஆயினும் அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தோன்றுவதை உண்மையாய் இங்கே பதிவிடுகிறேன். 

     இனி கலைஞருக்கு .......


  •  நீங்கள் சொன்னபடியே மக்கள் உங்களுக்கு ஓய்வு அளித்திருக்கிறார்கள், தயவு செய்து ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் , நீங்கள் இந்த தள்ளாத வயதிலும் எங்களுக்கு உழைக்க நினைத்தாலும், எங்களுக்கு நீங்கள் இந்த வயதான காலத்திலும் பதவிக்கு ஆசைபடுவதாகவே தெரிகிறது. இந்த முடியாத வயதில் நீங்கள் எங்களுக்கு முடிந்ததை செய்தாலும் எங்களுக்கு எதுவுமே முடியாததை போலவே இருக்கிறது. 
  • போதும்  நீங்கள் தொண்டாற்றியது , உங்களின் சேவைகளின் சாட்சியாய் பல நல்ல திட்டங்களும் , கட்டடங்களும் உங்கள் பெயர் தாங்கி காலத்திற்கும் நிற்கும்
  • உங்களின் இடம் உங்களுக்கு பிறகு யாராலுமே நிரப்ப முடியாததாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை 
  • தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்கே பல முன்னோடி திட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தவர் நீங்கள்தான் என்பதயும் யாரும் மறுப்பதற்கு இல்லை   
  • சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் கூறியது போல் தலைவன் எப்போதும் தலைவனாகவே இருக்க வேண்டும் நண்பனாய் , தகப்பனாய், கணவனாய் இருக்க கூடாது ஆனால் நீங்கள் இப்போது தலைவனாக  இல்லை , தகப்பனாய் , தாத்தாவாய், கணவனாய் மாறி விட்டீர்கள் அதுவாகவே தொடருங்கள்.
  • கட்சியின் நுரையீரலை அழித்த புல்லுருவிகளை அடையாளம் காணுங்கள் , களைஎடுங்கள்
  • கட்சியின் உண்மையான தொண்டனுக்கு மதிப்பும் பொறுப்பும் அளியுங்கள் 

  • பல காலமாய் பதவிகளில் அட்டை போல் ஒட்டியிருக்கும் பழம் பெருமை பேசும் ஊழல்வாதிகளை ஓரம்கட்டுங்கள்.நீங்கள் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உங்களின் அமைச்சரவையை வெகு இலகுவாக யூகிக்கலாம் , ஆனால் அது ஜெயலலிதாவிடம் கிடையாது, அதிரடி அமைச்சரவைதான். 
  • இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள், கழகத்தில் புது ரத்தம் பாயட்டும் 
  • மக்களின் நியாயமான தேவைகளுக்கு போராடுங்கள், மத உணர்வாளர்களை புண்படுத்தி பேசுவதை நிறுத்துங்கள் 
  • இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பை தாருங்கள் 
  • ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நியாயமான ஒத்துழைப்பை தந்து விசாரணை விரைவாய் நடந்திட உதவிடுங்கள்.என்ன மாதிரியான தீர்ப்பு வந்தாலும் கவலைபடாதீர்கள் , ஏனெனில் இதற்கு மக்கள் உங்களுக்கு தண்டனை வழங்கி விட்டார்கள், ஒரே தவறுக்கு இரண்டு முறை தண்டிக்கும் பழக்கம் நம் தமிழக மக்களுக்கு இல்லை.உதாரணம், நீங்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் , இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும்.
  • கட்சியின் அடிமட்ட தொண்டனே கட்சியின் ஆணிவேர் , அவனை தவிர்த்தது மிகப்பெரிய தவறு, அவனை கட்சியின் சமீபமாக்குங்கள், இந்த முறை நான் அறிந்தே பல தீவிர தொண்டர்கள் கழகத்திற்கு வாக்களிக்கவில்லை.      

  •      கட்சியில் தொடரும் குழப்பங்களை நீக்க ஸ்டாலின் ஐ தலைவராக்குங்கள் , உங்கள் மகன் என்பதால் மட்டுமல்ல கடந்த காலங்களில் தலைமைக்கான தகுதிகளை நிரம்ப வளர்த்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.      

  • கட்சியில் ஆதரவு இருக்குமா என்று யோசிப்பதை தவிர்த்து மக்களிடம் ஆதரவு இருக்குமா என்று எண்ணுங்கள், உங்களுக்கு பின் அவரே சரியான தலைவர் கழகத்திற்கு.

  • இதனால் கட்சியில் குழப்பம், சச்சரவு வரலாம் எல்லாவற்றையும் விட்டு தள்ளுங்கள் இனி நீங்கள் இழக்க போவதற்கு ஒன்றும் இல்லை , அப்படியே எதிர்ப்பவர்களால் எதுவும்  செய்ய முடியாது ,ஒரு வெற்றியை கூட தரமுடியாதவர்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை.

  • இந்த குழப்பங்கள் கழகத்தை பலவீனப்படுத்தினாலும் வெகு விரைவில் பலப்படுத்தும், ஒற்றை தலைமை எந்த ஒரு செயலுக்கும் மிக முக்கியம் என்பதை அறியாதவர் இல்லை நீங்கள் .
நன்றி 
இன்னனம் 

திருவாரூர் முத்துவேலர் ருணாநிதியின்  தொண்டன்  

28 comments:

Madhavan Srinivasagopalan said...

//நீங்கள் இந்த தள்ளாத வயதிலும் எங்களுக்கு உழைக்க நினைத்தாலும், எங்களுக்கு நீங்கள் இந்த வயதான காலத்திலும் பதவிக்கு ஆசைபடுவதாகவே தெரிகிறது //

மிகவும் இயல்பாக இருக்கிறது இந்த வரிகள்.. Very good

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ராஜு!என்னைக் கேட்டால் கருணாநிதியே சொன்னது போல் நிரந்தரமாக ஓய்வெடுப்பதுதான். அவரின் சிந்தனைகள் காலத்துக்குப் பொருந்தாது விலகி நிற்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

//சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் கூறியது போல் தலைவன் எப்போதும் தலைவனாகவே இருக்க வேண்டும் நண்பனாய் , தகப்பனாய், கணவனாய் இருக்க கூடாது ஆனால் நீங்கள் இப்போது தலைவனாக இல்லை , தகப்பனாய் , தாத்தாவாய், கணவனாய் மாறி விட்டீர்கள் அதுவாகவே தொடருங்கள்.//

சரியாக சொன்னீர்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//கட்சியில் தொடரும் குழப்பங்களை நீக்க ஸ்டாலின் ஐ தலைவராக்குங்கள் , உங்கள் மகன் என்பதால் மட்டுமல்ல கடந்த காலங்களில் தலைமைக்கான தகுதிகளை நிரம்ப வளர்த்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். //

அவருக்கு அந்த தகுதி இருப்பது என்னமோ உண்மைதான்...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல நியாயமான பதிவு...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைப்பு கொடுங்கள்...

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி மாதவன்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
மிகச்சரியாக சொன்னீர்கள் அண்ணா

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
உங்களின் இந்த தொடர் கருத்துகளுக்கு நன்றி மனோ
இந்த போட்டோ நல்ல இருக்கு
தமிழ்மணம் இனநிப்பு கொடுத்தாச்சி ஆனாலும் சரியா வரல

test said...

NICE POST! :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நியாயமான காலத்துக்கு ஏற்ற கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

நிரூபன் said...

திமுகதொ....
அவ்............ஹா..ஹா...

நிரூபன் said...

சகோ, கலைஞரின் அரசியல் வாழ்வில் அவரது எதிர்கால முடிவுகள், நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அலசியிருக்கிறீர்கள்.

இளைஞர் அணிக்கு முன்னுரிமை கொடுக்க்கப்பட்டால் கலைஞரின் கட்சியில் புதுமைகள் நிகழும், மாற்றங்கள் உருவாகும்.


இளைஞர்களின்
அபிவிருத்தியினை நோக்கிய தொலை நோக்குப் பார்வியின் காரணத்தினால் தமிழகம் நிச்சயமாக அனைத்துத் துறைகளிலும் முன்னேறும் சகோ.

உங்களது அலசல், கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
தி மு க தொ .............. அவ்
சகோ மீண்டு வருவோம் .............
மீண்டும் வருவோம்.
தமிழர் நலன் காக்க

A.R.ராஜகோபாலன் said...

@ ஜீ...
thank you Ji

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
மனம் நிறைந்த நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
மனம் நிறைந்த நன்றிசகோ

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு நண்பரே… புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி…

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...
This comment has been removed by the author.
A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
no sago that is not my mail id
my mail id is
arrgopalan@gmail.com

சிவகுமாரன் said...

ஒரு காலத்தில் திமுக அபிமானியாக இரந்தேன். என் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள். யாராவது இதை கலைஞருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்களேன்.

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
மனம் நிறைந்த நன்றி சிவகுமாரன்

Anonymous said...

//உங்களின் சேவைகளின் சாட்சியாய் பல நல்ல திட்டங்களும் , கட்டடங்களும் உங்கள் பெயர் தாங்கி காலத்திற்கும் நிற்கும்
உங்களின் இடம் உங்களுக்கு பிறகு யாராலுமே நிரப்ப முடியாததாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்கே பல முன்னோடி திட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தவர் நீங்கள்தான் என்பதயும் யாரும் மறுப்பதற்கு இல்லை////


ponga boss, comedy pannikittu.... athenna karuna mathiri ilavasama kuduppeenga pola

Athellam oru jenmaminnu....

- Sekar

அமைதி அப்பா said...

மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.
உங்களோடு ஒத்துப் போகிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
நம்முடைய பல கருத்துக்கள் ஒத்து போகின்றன,மிக்க நன்றி அமைதி அப்பா

காஞ்சி முரளி said...

உண்மை...!
உண்மை.....!
உண்மை............!