Monday 16 May 2011

கருணாநிதியின் தோல்வியும் ஜெயலலிதாவின் வெற்றியும்


   மீண்டும்  மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள  செல்வி.ஜெ.ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . இந்த ஆட்சி காலத்தில் அவர் என்ன செய்யவேண்டும் என்ன செய்யகூடாது என்று நான் இங்கே எழுத போவதில்லை. ஒரு சராசரி மனிதனாய் இன்னும் ஒரு நடுநிலையானவனாய் நின்று என் அரசியல் பார்வையை இங்கே பதிவிடுகிறேன்

ஏன் இந்த தோல்வி கருணாநிதிக்கு ?    



          இதற்கு பலபேர் பல காரணங்கள் கூறினாலும் நான் காரணங்களாய்  பார்ப்பது 

  • கட்சியும் ஆட்சியும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது
  • தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தனித்தனியாக குறுநில மன்னர்களாய் செயல்பட்டது 
  • கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் தொண்டர்கள் அந்நிய படுத்தப்பட்டு  தனிமை படுத்தப்பட்டது 
  • கட்சிக்காக செய்த தியாகங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு துதிபாடிகளுக்கு முக்கியத்துவம்   தரப்பட்டது
  • கட்சியில் முக்கிய தலைவர்களே தனக்கென ஒரு கோஷ்டியை எல்லா மட்டத்திலும் வளர்த்தது  
  • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் அராஜகம் மற்றும் அட்டுழியம் 
  • பகுதி செயலாளர் முதல் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் அசுர வளர்ச்சி 
  • மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்க்காதது 
  • இலங்கை தமிழர் பிரச்சனையில் தி மு க வின் தவறான நிலைப்பாடு (இந்த முறை)
  • காங்கிரஸ் உடனான கூட்டணி குழப்பம் , மற்றும் காங்கிரசார் தேர்தல்  வேலை செய்யாமல் போனது 
  • தி மு கவின் கட்சி கட்டுப்பாடு மீறி பல இடங்களில் தி மு க வினரே சுயேட்ச்சையாக நின்றது 
  • ஊடகங்களின் அபரிதமான எதிர்ப்பு   
  •  ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதை தி மு க கையாண்டவிதமும்.
  • தி மு க ஒரு கார்பொரேட் கம்பனி போல் செயல்பட்டது   
  • கட்சியில் ஒரு குறிப்பிட்ட வர்களே தொடர்ந்து கட்சி பதவிகளில் இருப்பது , இது அந்த கட்சிக்கு புது ரத்தம் உள்ளே வர தடையாக இருந்துவிட்டது .
  • எத்தனையோ பல நல்ல திட்டங்களை உருவாக்கி அதை செயல் படுத்தியபோதும் அதை பயன்பெற மக்களிடம் தி மு க வினரே பணம் பெற்றது , அதன் பயனை விட வெறுப்பையே மிக அதிகமாய் உருவாக்கியது.
  • இயற்கை வளங்களை அழிக்கும் படியான மணல் கொள்ளை.
  • மின் வெட்டும் அதனை கையாண்ட விதமும்.
  • மதிய அரசில் பங்கேற்று அதன் தவறான செயல்பாடுகளுக்கு பங்குதாரராய் ஆனது .      
  • நிறைவாய் ஒரு பெரிய கட்சியின் தலைவராக, தமிழக முதல்வராக இல்லாமல் ஒரு குடும்ப தலைவராக கருணாநிதி சுருங்கிப்போனது 


ஜெயலலிதாவின் வெற்றியின் காரணங்கள் 


  • மேலே சொன்ன அத்தனை தி மு க வின் செயல்பாடுகள்
  • இரட்டை இலை சின்னம் 
  • கருணாநிதியின் மாற்று ஜெயலலிதாதான் என்ற மக்களின் நம்பிக்கை 
  • ஊடகங்கள் 
  • அவரின் தைரியமான செயல்பாடுகளில் மக்கள் கொண்டுள்ள அபரிதமான நம்பிக்கை. 
அன்பன் 
ARR

29 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மிகச் சரியான காரணங்கள். கருணாநிதியை ஏற்பவர்கள் கூட ஏற்கும்படியான காரணங்கள்.

ஜெயலலிதா மற்றத் தேர்தல்களை விட மிகவும் பொறுப்பான முறையில் திமுக வின் குறைகளை ஓய்வின்றிப் பிரச்சாரம் செய்ததும் ஒரு முக்கியக் காரணம்.

அது தவிர ஜாதி அடிப்படையில் மக்கள் இந்த முறை தேர்தலைப் பார்க்கவில்லை என்பது தேமுதிக- பாமக-மற்றும் விசி-க்குக் கிடைத்த முடிவிலிருந்து அறியலாம்.

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை

MANO நாஞ்சில் மனோ said...

நீங்கள் சொன்னது மிக மிக சரியே...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைப்பு குடுங்க...

A.R.ராஜகோபாலன் said...

@ MANO நாஞ்சில் மனோ
மிக்க நன்றி மனோ
தமிழ்மணம் இணைப்பு கொடுத்தாச்சு
உங்களுக்கு வரலையா ??

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை//

மிகச் சரி.

RVS said...

நல்ல அலசல் கோப்லி! கலைஞரே ஒத்துக்கொள்வார்! ;-)

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி & RVS
மிக்க நன்றி தங்களின் மேலான கருத்துகளுக்கு

Madhavan Srinivasagopalan said...

// @ சுந்தர்ஜி
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை //

உண்மைதான்..

மக்களுக்கு ஓரளவிற்காவது சேவை செய்தால்தான் நல்லது..
உணர்ந்து நல்லது செய்வார் என எதிர்பார்க்கும் உங்களைப் போன்ற ஒருவன்..

இல்லையென்றால் 1996 (போல்) மீண்டும் வராமலா போய்விடும்..

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
மிக உண்மை மாதவன்
ஆனால் அதை போல ஒரு மோசமான ஆட்சியை ஜெயலலிதா இந்தமுறை தரமாட்டார் என்ற எண்ணுகிறேன், நம்புகிறேன்

அமைதி அப்பா said...

நல்ல அலசல்.

//ஒரு நடுநிலையானவனாய் நின்று என் அரசியல் பார்வையை இங்கே பதிவிடுகிறேன்//

நிச்சயமாக நடுநிலையோடு எழுதியிருகிறீர்கள். பாராட்டுக்கள்.

********************
நேரம் கிடைத்தால் நண்பர்கள் இந்தப் பதிவையும் படித்துப் பாருங்களேன்.

ஏமாற்றிப் பெற்ற வெற்றி!

நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
உங்களின் எல்லா பதிவையும் படித்துவிடுவேன்
இதையும் படித்திருக்கிறேன்
உங்களின் யூகம் குறித்த பதிவு அது சரிதானே

இராஜராஜேஸ்வரி said...

நடுநிலையாய் அலசி ஆராய்ந்து எழுதிய பதிவுக்குப் பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
தங்களின் மேலான கருத்துக்கு
மனம் நிறைந்த நன்றி மேடம்

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியான அலசல்
கலைஞரும் தனது குடும்பப் பிரச்சனையில்
மற்றும் துதிபாடிகளின் பாடல்களில்
தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு
யதார்த்த நிலையை உணரத் தவறிவிட்டார்
எப்படியோ அண்ணா தம்பி என ஆரம்பித்த கட்சி
மனைவிகள் பிள்ளைகளால் அதள பாதாலத்தில்
தள்ளப்பட்டுவிட்டது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
தங்களின் விரிவான கருத்துக்கு
கனிவான நன்றி ரமணி சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகத்துல்லியமாக தராசில் தங்கம் எடைபோடுவது போல மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

சுந்தர்ஜி சார் சொன்னவைகளும் அதற்குத் தாங்கள் பதில் அளித்ததும், தங்கத்தை மேலும் ஜொலிக்க வைப்பதாக இருந்தது.

பாராட்டுக்கள். அன்புடன் vgk

நிரூபன் said...

உங்கள் அலசல் அருமை சகோ, அதுவும், ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பதிவில் கூற மாட்டேன் என எழுதி விட்டு,
கலைஞரின் தோல்விக்கான காரணங்களைக் கூறியிருக்கிறீர்களே! அவை தான் ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலினைத் தீர்மானிக்கும்/ தக்க வைக்கும் காரணிகள் என்பதை நாசுக்காக உரைப்பது போல உள்ளது,

நிரூபன் said...

உங்கள் அலசல் அருமை சகோ, அதுவும், ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பதிவில் கூற மாட்டேன் என எழுதி விட்டு,
கலைஞரின் தோல்விக்கான காரணங்களைக் கூறியிருக்கிறீர்களே! அவை தான் ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலினைத் தீர்மானிக்கும்/ தக்க வைக்கும் காரணிகள் என்பதை நாசுக்காக உரைப்பது போல உள்ளது.

நிரூபன் said...

கலைஞரின் சறுக்கல்கள், தோல்விக்கான காரணிகளைச் சரிவரப் புரிந்து கொண்டவராய் ஜெயலலிதா நடந்தால் தமிழகத்தினைப் பல வழிகளிலும் முன்னேற்ற முடியும்.
இல்லையேல் ஆட்சிக்கு வந்த பின், ஓட்டு வாங்கியாச்சு, நாம என்ன பண்ணினாலும் கேட்பார் இல்லையே எனும் நிலைக்கு ஜெ சென்றால்,
மீண்டும் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக் காட்டாய் அமைந்து கொள்ளும்.

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
அன்பு ஐயா
உங்களின் பண்பான பாராட்டு
என் எழுத்தை மேலும் மெருகூட்டும்

A.R.ராஜகோபாலன் said...

@ நிரூபன்
பிரியமான சகோ
உங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு
மனம் மகிழ்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல் நண்பரே.

A.R.ராஜகோபாலன் said...

@ வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி நண்பரே !

G.M Balasubramaniam said...

ஜெயலலிதாவின் வெற்றி என்று சொல்லுவதைவிட, தி. மு. கவுக்கும் ,கருணாநிதிக்கும் கிடைத்த எதிர்மறைக் கருத்துக்களே இந்த தேர்தலின் முடிவு. அப்படி அல்ல என்று ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மலிவான ,மாயமான காட்சிகள் அரங்கேற்றப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். முரட்டு மெஜாரிடி, ஜெயலலிதாவின் கண்களை மறைக்கக் கூடாது.

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
மிகவும் நிதர்சனமான கருத்து ஐயா
தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
சிரம் தாழ்ந்த நன்றி ஐயா

Radhan @ Venkatesh said...

வடமொழிக்கும் (ஸ்ரீரங்கம்)
தென்மொழிக்கும் (திருவாரூர்)
நடந்த இத்தேர்தலில் .............

மக்கள்!!!!
"கருணா"நிதிக்கு ஓய்வெடுக்க "கருணை" காட்டினர் (அதலால் தோல்வி)
"ஜெய"லலிதாவுக்கு வாய்பளிக்க "ஜெயத்தை" காட்டினர் (அதலால் வெற்றி)

A.R.ராஜகோபாலன் said...

@Venkatesh
உங்களின் மொழி திசை ஆராய்ச்சிக்கு நன்றி மாப்புளே