Monday 30 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 4


           நினைவு வந்து பார்த்த போது நாகலாபுரம் கோவில் எதிரே  உள்ள  நாங்கள் தங்க வேண்டிய மண்டபத்தில் இருந்தேன் சுற்றி என் நண்பன் ஐயப்பன் , பிரேம்குமார் சார் , திரு.ரமேஷ் எல்லோரும் இருந்தார்கள்,நினைவிழந்த என்னை திரு பிரேம்குமார் அமைப்பாளர்களின் வேனில் அழைத்து வந்திருக்கிறார் . எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது , அப்போது ஐயப்பன் வேண்டாம் ராஜகோபால் நீ நடக்கவேண்டாம், எங்க கூட வேன்லேயே வந்திடு என்றார், என் யாத்ரீக நண்பர்களும் அதையே ஆமோதிக்க சங்கடத்தில் நான், சரி காலையிலே பாத்துக்கலாம் என்றபடியே நான் தூங்கிபோனேன்.

           மறுநாள்  விடிகாலையிலேயே முழிப்புவந்துவிட்டது,உடனே என் இரு நண்பர்களையும் எழுப்பினேன் , சார் போலாமா ? என்ற என்னை இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள் , உங்களால் நடக்க முடியுமா என்று கேட்ட அவர்களிடம் ,முடியும் வாங்க போகலாம் என்றழைத்தேன், இருவரும் என்னுடன் கிளம்ப வெளியே வந்த நான் கோவில் கோபுரத்தை பார்த்து வணங்கி நடக்க தொடங்கினேன். நேற்று நடக்க தொடங்கியபோது இருந்த வலி கூட இப்போது இல்லை , அந்த உள்ளங்கால் கட்டிகளை தவிர்க்காமல் அவைகளை பதிய வைத்தே நடந்தேன், ஏதோ பலுன்  மீது நடப்பதை  போன்ற உணர்வு, அன்று என்னுளே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வந்ததை போன்ற உணர்வு வெகு வேகமாய் நடந்து ராமகிரியை அடைந்தோம் , அங்குதான் காலை உணவு.

         
             ராமகிரியை பற்றி என் நண்பன் ஐயப்பன் சொல்லி நான் கேட்டது 

                       இராம பிரானின் கட்டளைப்படி சேதுவில் பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் வடக்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அதைத் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள பைரவர் எண்ணி அதற்கோர் வழியை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தைத் தரையில் வைக்கக் கூடாதென்று எண்ணி, சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு நீர்ப் பருகச் சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள், பளுவாக உள்ளதென்று சொல்லிச் சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். கோபமுற்ற ஆஞ்சநேயர் அச்சிவலிங்கத்தைத் தன் வாலால் சுற்றிப் பலமாக இழுத்தார் - பயனில்லை. சிவலிங்கம் சற்று சாய்ந்ததே தவிர அதைப் பெயர்த் தெடுக்கமுடியவில்லை.ஆதலின் சிவனும் இங்கேயேபிரதிஷ்டையானார்.வாலால்சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையே இதற்கு முன்பு இங்கிருந்த 'காளிங்கமடு' என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலையழிந்து மலையேற்பட்டது.இராமரின் பூசைக்காக எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டையானதால் "ராம்" என்பதும்; நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் "கிரி" என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் "ராமகிரி" என்று வழங்கலாயிற்று.

                       மூலவர் - வாலீஸ்வரர்; சுயம்பு மூர்த்தி; சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன. இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது.



       அந்த நந்தி தீர்த்ததிலேயே குளித்து நல்ல மனதிற்கு நிறைந்த தரிசனம் முடிந்து, உணவால் வயிறை நிரப்பி மீண்டும் முன்னிலும்  வேகமாய் நடக்க தொடங்கினேன், அந்த ஆண்டவன் அருளால்.மதியம் சாப்பாடு கோனே என்ற இடத்தில் அங்குதான் புகழ்பெற்ற கோனே பால்ஸ் உள்ளது , மதியம் உணவை முடித்து நாங்கள் மாலையில் சென்ற இடம் நாராயணவனம்.

        
       இங்குதான் தாமரை மத்தில் பத்மாவதி தாயாரை ஆகாசராஜன் கண்டெடுத்ததும் ,  பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் உதைக்கச் சென்றதால் கோபம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம் அவர் வேட்டைக்குச் சென்றபோது, ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம், நாராயணவனத்தில் நடந்தது. அற்புதமான கோவில் மனதை அப்படியே ஆட்கொள்ளும், இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் , பத்மாவதி தாயாருக்கும் திருமணம் ஆனபோது உபயோகப்படுத்திய மஞ்சள் அரைக்கும் எந்திரத்தை இன்னும் வைத்திருக்கிறார்கள். மாலையில் மனம் நிறைந்த தரிசனம் முடித்து நாங்கள் சென்ற இடம் புத்தூர், இங்குதான் இரவு தங்கினோம் , இந்த நாள் எனக்கு எப்பபடி போனதென்றே தெரியாமல் என்னை ஆண்டவன் அழைத்து வந்த நாள், இன்னும் சொல்வேதேன்றால் என் பிராத்தனையை , என் கண்ணீரை அவன் ஏற்று கொண்ட நாளாகவே கருதினேன், மனதில் அப்படி ஒரு திருப்தி.

     இரவு புத்தூரில் நல்ல உணவு தந்தார்கள், சாப்பிட்டுவிட்டு படுக்க எத்தனிக்கையில் என் மனைவியிடம் இருந்து மறுபடியும் போன், என்னை அறியாமல் என் கைகள் நடுங்க தொடங்க 
                   கோபாலா கோவிந்தா 
என்றபடியே போனை எடுக்கபோனேன் .............................        

22 comments:

Unknown said...

//என் மனைவியிடம் இருந்து மறுபடியும் போன், என்னை அறியாமல் என் கைகள் நடுங்க தொடங்க ///

நல்ல செய்திக்கு அனைவரும் காத்து இருக்கிறோம்

A.R.ராஜகோபாலன் said...

எல்லாமே நல்ல செய்திதான் நண்பரே
உங்களை தொடர் வாசிப்பிற்கும், கருத்திற்கும்
மனம் மகிழ்ந்த நன்றி

எல் கே said...

நேற்று உங்கள் யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை. இன்று வந்துவிட்டேன். சுருட்டப் பள்ளி கேள்வி பட்டிருக்கிறேன். போனதில்லை. மற்ற ஊர்கள் இப்பதான் கேள்வியே படறேன். தொடருங்கள் நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
எனக்கும் அப்போது அவை புது ஊர்களாகத்தான் தெரிந்தன, பின் அதே ரூட்டில் என் குடும்பத்தார் அனைவரயும் அழைத்து சென்று தரிசனம் செய்வித்து வந்தோம் , எங்கள் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது நாராயணவனம் தான் தங்களின் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி திரு எல் கே

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, உங்கள் புனிதப்பயணம் மிக அருமையாகவே செல்கிறது.

இடையில் தாங்கள் தங்கிய ராமகிரி போன்ற இடங்களின் ஸ்தல புராணம் கேட்க சுவையாகவே உள்ளன.

//என் மனைவியிடம் இருந்து மறுபடியும் போன், என்னை அறியாமல் என் கைகள் நடுங்க தொடங்க //

தங்கள் பிரார்த்தனையும், காலில் ஏற்பட்ட கட்டியுடன் தாங்கள் மேற்கொண்ட புனித நடைப்பயணமும், அந்த ஆண்டவன் அருளால் நல்ல செய்தியாகவே வந்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தொடருங்கள். நாங்களும் உங்கள் பயணப்பதிவைத் தொடர்ந்து வர ஆவலுடன் உள்ளோம்.

Anonymous said...

யாத்திரை அனுபவம் ......, சில வாழ்வில் மறக்க முடியாத பயணங்களாக அமைந்துவிடும். தொடருங்கள் பாஸ்..

Anonymous said...

///சிவனும் இங்கேயேபிரதிஷ்டையானார்.வாலால்சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்....// இந்த புராண கதை நானும் கேள்விப்பட்டிருக்கிறான் .

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்

மிக்க நன்றி ஐயா
"இடையில் தாங்கள் தங்கிய ராமகிரி போன்ற இடங்களின் ஸ்தல புராணம் கேட்க சுவையாகவே உள்ளன"

இது போன்ற பாக்கியத்தை ஆண்டவன் எனக்களித்த வரமாகவே கருதுகிறேன் ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@ கந்தசாமி.
தங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றி அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ கந்தசாமி.
///சிவனும் இங்கேயேபிரதிஷ்டையானார்.வாலால்சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்....// இந்த புராண கதை நானும் கேள்விப்பட்டிருக்கிறான் .


நன்றி உங்களின் அடுத்த கருத்திற்கு

வெங்கட் நாகராஜ் said...

புதிய விஷயங்கள், இடங்கள் என்று உங்கள் ஆன்மீகப் பயணம் அறிமுகப்படுத்துகிறது. தொடருங்கள். நல்ல செய்திக்கு காத்திருக்கிறேன்...

Yaathoramani.blogspot.com said...

தெரிந்து எழுதுவதற்கும்
அனுபவித்து தெளிந்து
எழுவதற்குமான வித்தியாசம்
தங்கள் பதிவின் மூலம்
உணர்ந்துகொள்ள முடிகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது நண்பரே
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மனம் மகிழ்ந்த நன்றி ரமணி சார்

மாலதி said...

ஆஹா, உங்கள் புனிதப்பயணம் மிக அருமையாகவே செல்கிறது

A.R.ராஜகோபாலன் said...

@மாலதி
மிக்க நன்றி மேடம்

நிரூபன் said...

அடியேன், தாமதமாக வந்துவிட்டேன். ஆன்மீகப் பயணக் கட்டுரையினையும் சஸ்பென்ஸாக நகர்த்துகிறீர்களே. அருமை சகோ.

Madhavan Srinivasagopalan said...

// இந்த நாள் எனக்கு எப்பபடி போனதென்றே தெரியாமல் என்னை ஆண்டவன் அழைத்து வந்த நாள், இன்னும் சொல்வேதேன்றால் என் பிராத்தனையை , என் கண்ணீரை அவன் ஏற்று கொண்ட நாளாகவே கருதினேன், மனதில் அப்படி ஒரு திருப்தி. //

பொன்னாலும் பொருளாலும் கொடுக்க முடியாத திருப்தி..
மனத்திருப்தி.

Madhavan Srinivasagopalan said...

//என் மனைவியிடம் இருந்து மறுபடியும் போன், என்னை அறியாமல் என் கைகள் நடுங்க தொடங்க ///

ஹி.. ஹி.. என்ன
ஏதாவது மெகாத் தொடர் கதை எழுத உத்தேசமா ?
இங்கிட்டு டிவிஸ்டு வெச்சாப்புல தெரியுது !!

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
மாதவன் நானே ரசிக்காத என் எழுத்து அது , நிறைவு பகுதியில் துணை செய்தியை பதிவிட்டிருப்பேன்

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
பொன்னாலும் பொருளாலும் கொடுக்க முடியாத திருப்தி..
மனத்திருப்தி.

மிக உண்மை , உணர்ந்த உண்மை

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
அப்படியெல்லாம் இல்லை சகோ, நிறைவு பகுதியில் துணை செய்தியை பதிவிட்டிருப்பேன்