Saturday, 28 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 3

          முக்கிய செய்தி : என் மகள் இப்போது என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பூரண நலத்துடன் இருக்கிறாள்.தன் கருத்தை பதியும் போது இந்த செய்தியை பதிவிடச் சொன்ன GMB அய்யாவுக்கு நன்றி 

        மறுநாள் விடிகாலையிலேயே எழுந்தோம், காலையில் நடந்தால் களைப்பு தெரியாது என்ற அனுபவ வாக்கை தொடர்ந்து நடக்க தொடங்கினோம், நாங்கள் மூவரும் ஒரு குழுவாக ஆகி பேசி புரிந்து ஒருவர்மேல் ஒருவர் ஈடுபாடு கொண்டு அந்த ஆண்டவன்  பெயரால் ஒன்றானோம், அந்த மூவரில் நான்தான் கொஞ்சம்  தடிமனான உருவம் அப்போது என் எடை என்பது கிலோ இருந்தது, தொடைகள் ஒன்றோடொண்டு உரசி அதன் பாதிப்பும் என் நடையை தடை செய்தது, இருந்தாலும் தேங்காய் எண்ணெய் காலுக்கு கை கொடுக்க, கோவிந்த கோஷம் பாடி , பரந்தாமனின் பக்தியில் சகலமும் மறந்து காலை ஏழு மணியளவில் சூளைமேனி செங்காலம்மன் கோவில் வந்தடைதோம் , ஜிலு சிலுவென வீசும் தென்றல் காற்றில், பச்சை பசேலன இருக்கும் தோட்டங்களுக்கு நடுவே சாந்தமாய் அருள் தரும் வனதேவதை அவள், வரும் வழியிலேயே பம்ப்செட்டு குளியல் போட்டுவிட்டதால் அன்னையை மனம் உருகி வேண்டினேன், அங்குதான் காலை டிபன், திருப்பதியான உணவிற்குப்பின் மனமும் , காலும் வேண்ட அங்கேயே ஒரு மணிநேரம் ஓய்வு.

             ஓய்விற்கு பின் நடை யாத்திரை தொடங்கினேன்  என் இரு யாத்திரை நண்பர்களுடன், நடக்கும் நடையில் கால்கள் வலிக்க , பாண்டுரங்கனின் அருள்நாடி கோஷங்கள் ஒலிக்க மதியம் பனிரெண்டுமணிளவில் ஊத்துக்கோட்டை அடைந்தோம், அங்குதான் மதிய உணவு அற்புதமான உணவு,  இந்த போஜனம் எங்களுடன் யாத்திரை வரும் WS கம்பனி ஊழியர்களின்  கைகர்யம், அத்துணை தூரம் எங்களோடு நடந்து வந்து எங்களுக்கே அவர்கள் ஓடி யாடி பரிமாறிய பக்தியின் பரிமாணம் சொல்லில் அடங்காது.அங்கிருந்து மீண்டும் சிறு ஓய்வுக்கு பின் யாத்திரை தொடங்கியது 
அங்கிருந்து நாங்கள் சென்றஇடம் ஆந்திராவின் எல்லை பகுதியான சுருட்டப்பள்ளி 
                    
  எனக்கு இந்த தலத்தை பற்றிய வரலாறு அப்போது புதிதாக இருந்தது , பலருக்கு தெரிந்திருக்கலாம் , என்னை போல் அறியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு 





வரலாறு : துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.


திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்துமுக்கோடி தேவர்களும்,""சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்''என மன்றாரடினார்.உடனே சிவன் "விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது  வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது.பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம். 

பொது தகவல் : தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்
அன்னையின் மடியில் அய்யன் படுத்துறங்கும் அழகை காண கண் கோடி வேண்டும் அப்படி ஒரு அற்புத காட்சி, அந்த அதிசய மகோன்னத தரிசனத்தை முடித்து விட்டு நாங்கள் செல்லவேண்டிய இடம் வேதநாராயண பெருமாள் ஆட்சி செலுத்தும் நாகலாபுரம் இரவு தங்கலும் அங்கேதான்.

     
மாலை காபி குடித்து விட்டு நடக்க தொடங்கிய எனக்கு கால் வலி தாங்க முடியவில்லை இப்போது இரு உள்ளங்காலிலும் கொப்பளங்கள், அவை என் பாதங்களை பதியவிடமுடியாதபடி செய்துவிட்டதால் குதிகாலாலேயே நடக்கவேண்டிய நிர்பந்தம்,கால்களிலும் வீக்கம், உடல் மிக சோர்வடைந்து விட்டதால் அந்த ஆண்டவனின் துணைகொண்டு நடந்து கொண்டு இருந்தேன், அப்போது என் மனையாளிடமிருந்து போன், "என்னங்க எங்க இருக்கீங்க மத்தியானத்திலிருந்து உங்களுக்கு டிரை பண்ணுறேன் கிடைக்கவேயில்லை" என்றாள், சிக்னல் இருந்திருக்காது என்ன விஷயம் என்றேன் என் வலியை காட்டாமல், "பாப்பா வெயிட் குறைஞ்சிகிட்டே போறா,காலையிலிருந்து அம்பது கிராம் குறைஞ்சிட்டா என்ன பண்ணுறதுன்னே தெரியல என அழத்தொடங்கினாள், என்னில் பீறிட்ட அதிர்ச்சியை காட்டாமல் அம்பது கிராம் தானே பரவால்ல சரியாயிடும் நீ ஒண்ணும் கவலைபடாதே என்று கூறி அவளின் என்னை பற்றிய கவலைகளுக்கும் பதில் சொல்லி போனை வைத்தேன்.

 எனக்கு கண் இரண்டும் அப்படியே  இருண்டுகொண்டு வருவதைபோல ஒரு உணர்வு, அம்பது கிராம் என்றால் குறைவாகத்தெரியும் ஆனால் 850 கிராம் உள்ள  குழந்தை ஐம்பது கிராம் குறைகிறாள் என்றாள் , ஆண்டவா என்ன செய்ய போகிறாய் என்னை?, சொல்லி அழக்கூட யாருமில்லையே, கண்களில் கண்ணீர், பாசம் என்னை கோழை ஆக்கிய கணம் அது, என் அன்னை சொல்வது போல பாசம் உள்ளவர்கள் அனைவருமே கோழைகள்தான், பாசத்தின் முதல் படியே தைரியம் இழப்பதுதான்.அப்போதுவரை என் மகளை தொட்டது கூட கிடையாது நான். செப்டெம்பர் மாதம் பிறந்தவளை நான் தொட்டு தூக்கியது நவம்பர் இரண்டாம் தேதிதான்,  நானும் என்னுடன் திரு.பிரேம்குமாரும் நடந்து கொண்டிருக்கிறோம், அவரின் தோளை ஆதரவாய்பற்றியே நடக்கிறேன்,துக்கம் தொண்டையை கடந்து வாய்விட்டு அழுகிறேன், உடலும் மனமும் ஒருசேர சோர்வடைய 

         பரந்தாமா! பக்தவட்சலா!
                பாண்டுரங்கா! பாபவிமோசனா!
                     ஸ்ரீதரா! ஸ்ரீனிவாசா!!
                           கோபாலா! கோவிந்தா! 
            அழுதபடியே அவன் நாமம் சொல்லிய நான், மெல்ல நினைவிழக்க தொடங்கினேன் .................                               
                        
அன்பன் 
ARR

24 comments:

ஷர்புதீன் said...

ஆன்மிக பிரயாணம்,!!
இன்னும் போகட்டும்... மகளுக்கு வாழ்த்துக்களோடு...

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் மகள் நலமாக இருப்பது பற்றி முதலிலேயே குறிப்பிட்டது மனதிற்கு இதமளிக்கிறது.

உங்கள் பயணத்தில் நாங்களும் கூடவே வருகிறோம்… தொடருங்கள்…

திருப்பதி செல்லும் வழியிலேயே வந்து விட்டது போல இருக்கிறதே…

//திருப்பதியான உணவிற்குப்பின் மனமும் , காலும் வேண்ட அங்கேயே ஒரு மணிநேரம் ஓய்வு//

அமைதி அப்பா said...

//முக்கிய செய்தி : என் மகள் இப்போது என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பூரண நலத்துடன் இருக்கிறாள்.தன் கருத்தை பதியும் போது இந்த செய்தியை பதிவிடச் சொன்ன GMB அய்யாவுக்கு நன்றி //

நல்ல செய்தி. அன்று கமலாத்மிகாவின் புகைப்படத்தைப் பார்த்தப் பிறகுதான் நானும் புரிந்துக் கொண்டேன். கமலாத்மிகாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புகலிடம் தெரியாது வடியும் கண்ணீருக்கு அடைக்கலமில்லாது போனதில்லை என்பதற்கு உங்கள் செல்ல மகள் கமலாத்மிகாவே சாட்சி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நானும் தங்களுடன் என்னுடைய 100 கிலோ உடல் எடையுடன் மிகவும் கஷ்டப்பட்டு, நடைபயணம் மேற்கொள்வதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது, உங்களின் இந்தப்ப் பதிவைப்படிக்கையிலே.

உடலிலும், உள்ளத்திலும் ஏற்பட்ட களைப்பும், சோர்வும், அதைர்யமும் நன்றாக உணரமுடிகிறது.

சுருட்டப்பள்ளியின் தலவரலாறும், சிறப்புகளும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட அனுபவம் என்பதையும், தங்கள் குழந்தையின் தற்போதைய புகைப்படத்தையும் முதல்பதிவில் பார்த்து, படித்து புரிந்துகொண்டதால் சற்றே மனோதைர்யத்துடன், அந்த திருப்பதி பெருமாள் தான் காப்பாற்றி அருள் புரிந்துள்ளார் என புரிந்துகொண்டு விட்டேன்.

தாங்கள் அதை இந்தப்பகுதியில் தலைப்புச்செய்தியாக வெளியிட்டுள்ளதும் நல்லதே!

பயணம் தொடரட்டும். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம், தொடர்ந்து வருகிறோம்.

அன்புடன் vgk

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஷர்புதீன்

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நான் உணர்ந்த உண்மை , என் அன்னை மீட்டு தந்த உயிர் அவள்

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
உடலிலும், உள்ளத்திலும் ஏற்பட்ட களைப்பும், சோர்வும், அதைர்யமும் நன்றாக உணரமுடிகிறது.

அதைர்யம்
என் நிலை சொல்ல சரியான வார்த்தை

நிரூபன் said...

தல வரலாற்றோடு இணைத்து, உங்களின் ஆன்மீகப் பயணத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளும் விதம் சிறப்பாக இருக்கிறது சகோ.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
எல்லாம் இராஜராஜேஸ்வரி மேடத்திடம் கற்றதுதான் சகோ
தங்களின் கருத்துக்கு நன்றி

Bramhaputra said...

ungal magal ezhumalaian arulai vazhvil siranthavai anaithum petru seerudan vaazha prarthikkiraen.

ippodhu en kelvikal

pudhidhaga nadai payanam merkolvorukkku aalosanaikalai theriviyungal.

sirappaga erpadu seitha kuzhuvin thagavalkalai kodungal.

neengal kaalani edhavathu anindhu sendreergala illai verum kaalodu nadandeerghala?

இராஜராஜேஸ்வரி said...

என் மகள் இப்போது என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பூரண நலத்துடன் இருக்கிறாள்//
நல்ல செய்தி.
கமலாத்மிகாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கமலாத்மிகா --
அற்புதமாய் சொல்லச் சொல்ல இனிக்கும் பெயர்.வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@ Bramhaputra
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
பிரியமான பிராத்தனைக்கும்
மனம் நிறைந்த நன்றி
நான் முதல் நாள் காலில் காலனி அணிந்து தான் சென்றேன்
அடுத்த நாட்களில் காலனி அணியவில்லை
என்னை பொறுத்தவரை காலனி அணியாமல் நடந்து செல்லவதே நல்லது

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
உங்களின் கருணைக்கு மிக்க நன்றி மேடம்

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
ஆம் கமலாத்மிகா ..........
என் அம்மாவின் பெயர் கமலா அதனால் கமலாத்மிகா என பெயர் சூட்டினோம், நன்றி மேடம்

மாலதி said...

புகலிடம் தெரியாது வடியும் கண்ணீருக்கு அடைக்கலமில்லாது போனதில்லை என்பதற்கு உங்கள் செல்ல மகள் கமலாத்மிகாவே சாட்சி.

A.R.ராஜகோபாலன் said...

@மாலதி
மிக்க நன்றி
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

Madhavan Srinivasagopalan said...

// பரந்தாமா! பக்தவட்சலா!
பாண்டுரங்கா! பாபவிமோசனா!
ஸ்ரீதரா! ஸ்ரீனிவாசா!!
கோபாலா! கோவிந்தா!
அழுதபடியே அவன் நாமம் சொல்லிய நான், மெல்ல நினைவிழக்க தொடங்கினேன் ................. //

உணர்ச்சி வசப்பட வைக்கும் சப்தங்கள்.. எழுத்துக்கள்.. வார்த்தைகள்...

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவன்

நிலாமகள் said...

//பாசம் உள்ளவர்கள் அனைவருமே கோழைகள்தான், பாசத்தின் முதல் படியே தைரியம் இழப்பதுதான்//

அம்மா சொன்னா ச‌ரியாத்தானிருக்கும். க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதையை திரும்பிப் பார்க்கும் போதெல்லாம், 'நாம் தானா க‌ட‌ந்தோம்...?!' என்ற‌ விய‌ப்பும், 'இன்றென்றால் இய‌லுமா?' என்ற‌ திகைப்பும் எழுவ‌து இய‌ல்பு.

A.R.ராஜகோபாலன் said...

@ நிலாமகள்
மிக்க நன்றி சகோதரி